ஆசாரக்கோவையின் உருவம்:
- ஆசிரியர் = பெருவாயின் முள்ளியார்
- இயற் பெயர் =முள்ளியார்
- தந்தை =பெருவாயின்
- பாடல்கள் = 100
- பாவகை = பல்வேறு வெண்பா வகைகள்
- உரையாசிரியர் = புன்னை வனநாத முதலியார்
- ஊர் = வண்கயத்தூர்
பெயர்க்காரணம்:
- கொள்ளத்தக்க ஆசாரம் என்றும் தள்ளத் தக்க ஆசாரம் என்றும் இரு நோக்கில் ஆசிரியர் அருளியுள்ளார்.
- நீராடல், ஆடல் அணிதல், உணவு முறைமை, உண்ணும் திசை போன்றவை கொள்ளத் தக்க ஆசாரங்கள்.
- எச்சிலுடன் செய்யத் தகாதவை, நின்று கிடந்தது உண்ணாமை ஆகியவை தள்ளத் தக்க ஆசாரங்கள்.
சிறப்பு பெயர் :
- பொது சுகாதார நூல்
பொதுவானகுறிப்புகள் :
- ஆசாரம் = ஒழுக்கம், கோவை = தொகுப்பு
- வட நூல்களான “(சுகர ஸ்மிருதி, போதாயான தர்ம சூத்திரம்) ஆரிடம்” போன்ற நூல்களின் சாரமே இந்நூல்.
- இந்நூல் தொல்காப்பியர் கூறும் "அம்மை"என்ற வனப்பு சார்ந்தது
- ஒழுக்கங்களை அடுக்கிக் கூறுகிறது.
- பல வெண்பாக்கள் கலந்து பாடப்பட்ட நூல் இது.
- “கயத்தார் பெருவாயின் முள்ளியார்” என அழைக்கப்படுபவர்.
- இவர் சைவ சமயத்தார் என கூறுவர்
- இந்நூலின் கடவுள்வாழ்த்து சிவபெருமானைப் பற்றியது.
- நாள்தோறும் செய்ய வேண்டிய கடமையை பற்றி கூறுகிறது
ஆசாரகட்கு வித்து :
- நன்றியறிதல்
- பொறையுடைமை
- இன்சொல்கூறல்
- எவ்வுயிர்க்கும் இன்னாதவற்றை செய்யாமை
- ஒப்புரவறிதல்
- அறிவுடைமை
- நல்லித்தாரோடு நட்டல்
- கல்வி
மேற்கோள்:
- விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளை
- இவர்க்கு ஊன் கொடுத்தல்லால் உண்ணாரே என்றும்
- ஒழுக்கம் பிழையா தவர்
- பகல் தெற்கு நோக்கார் இராவடக்கு நோக்கார்
- பகற்பொய்யார் தீயினுள் நீர்
- உமிழ்வும் உயர்ந்துழி ஏறலும் பாக்கும்
- வகையில் உறையும் வளர்ச்சியும் ஐந்தும்
- புணரார் பெரியார் அகத்து
No comments:
Post a Comment