Sunday, October 16, 2022

TNPSC G.K - 219 | பொதுத்தமிழ் - இன்னா நாற்பது.

இன்னா நாற்பதின் உருவம் :


  • ஆசிரியர் = கபிலர்
  • பாடல்கள் = 1 + 40
  • பாவகை = வெண்பா

பெயர்க்காரணம் :


  • இன்னா = துன்பம். இன்னது இன்னது இன்னா என நாற்பது பாடல்களில் கூறுவதால்  இன்னா நாற்பது எனப்படுகிறது.

கடவுள் வாழ்த்து :


  • கடவுள் வாழ்த்தில் சிவன், பலராமன், திருமால், முருகன் என்னும் நான்கு கடவுளரையும் வணங்காமை துன்பம் எனக் கூறுகிறார்.

பொதுவான குறிப்புகள் :


  • இந்நூல் துன்பம் கொடுக்கும் செயல்களை தொகுத்துக் கூறும் நூல்.
  • இந்நூல் அம்மை என்ற வனப்பிற்கு உரியது.
  • கபிலரிடம் சைவவைணவ பேதம் இல்லை.
  • சங்க கால மட்டுவாய் சோறுண்ட  கபிலரும், இவரும் வேறு வேறு.
  • இந்நூலில் 164 இன்னாத செயல்கள் கூறப்பட்டுள்ளன.

ஐந்து கபிலர் :


  • பாரி மன்னனை பாடிய சங்கக் கபிலர்
  • இன்னா நாற்பது பாடிய கபிலர்
  • பதினொன்றாம் திருமுறையில் கூறப்படும் கபிலதேவநாயனார்
  • பன்னிரு பாட்டிலில் சில பாடல்களைப் பாடிய கபிலர்
  • அகவற்பா பாடிய கபிலர்.

முக்கிய அடிகள் :


  • உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்புஇன்னா
  • தீமையுடையார் அருகில் இருத்தல் இன்னா
  • ஊனைத் தின்று ஊனைப்பெருக்கல் முன்னின்னா
  • குழவிகள் உற்றபிணி இன்னா
  • இன்னா பொருள் இல்லார் வண்மை புரிவு

No comments:

Popular Posts