திணைமாலை நூற்றைம்பதின் உருவம் :
- ஆசிரியர் = கணிமேதாவியார்
- பாடல்கள் = 150(5*30=150)+ 3
- திணை = ஐந்து அகத்திணைகளும்
- திணை வைப்பு முறை = குறிஞ்சி(31), நெய்தல் (31), பாலை , முல்லை(31) , மருதம்
- பாவகை = வெண்பா
- உரையாசிரியர் = நடராச பிள்ளை
பெயர்க்காரணம்:
- திணைக்கு முப்பது பாடல்கள் வீதம் நூற்றைம்பது பாடல்கள் கொண்டதால் திணைமாலை நூற்றைம்பது எனப் பெயர் பெற்றது.
பொதுவான குறிப்புகள்:
- நூலாசிரியர் கணிமேதாவியார் சமண சமயத்தார். ஆனால் சமண சமயத்தார் வெறுத்து ஒதுக்கிய காதல், மணம், குடும்பம் போன்றவற்றின் மீது கொண்ட வெறுப்பு நீங்குமாறு இதனை படைத்துள்ளார்.
- இந்நூலின் ஆசிரியரே ஏலாதி என்னும் நூலையும் எழுதியுள்ளார்.
- இவர் பாண்டிய வேந்தன் ஒருவனால் ஆதரிக்கப்பட்டவர்.
- ஒவ்வொரு தினைக்கும் முப்பது பாடல்கள் வீதும் நூற்றைம்பது பாடல்கள் உடையது.
- பதினெண்கீழ்க்கணக்கு அகநூல்களில் இந்நூலே பெரியது.
- இப்பாடலின் சில கருத்துக்கள் சுந்தரர் தேவாரத்திலும், மாணிக்கவாசகரின் திருக்கோவையாரிலும் காணமுடிகிறது.
- நூலில் உள்ள மொதப் பாடல்கள் = 153
- மூன்று பாடல்கள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவை
- கலித்தொகை, சீவக சிந்தாமணி திருக்குறள் முதலியவற்றின் கருத்துக்களோடு ஒத்திருக்கிறது.
முக்கிய அடிகள்:
- ஒரு சுடரும் இன்றி உலகு பாழாக... இருகடரும் போந்தன என்றார்... பொருள் பொருள் என்றால் சொல் ... பொன்போலப் போற்றி
- அருள் பொருள் ஆகாமையாக – அருளால் ... வளமை கொணரும் வகையினால் மற்றோர் ... இளமை கொணர இசை
- நாள்வேங்கை பொன்விளையும் நன்மலை நன்நாட... கோள்வேங்கை போல்கொடியார் என்ஐயன்மார் – கோள்வேங்கை அன்னையால் நீயும், அருந்தழையாம் ஏலாமைக்கு... என்னையோ? நாளை எளிது
No comments:
Post a Comment