கார் நாற்பது கார் நாற்பதின் உருவம் :
- ஆசிரியர் = மதுரைக் கன்னங் கூத்தனார்.
- பாடல்கள் = 40(அகநூல்களில் அளவில் சிறியது)
- திணை = அகத்திணை – முல்லைத்திணை
- பாவகை = வெண்பா
- உரையாசிரியர்= நா .மு. வேங்கடசாமி நாட்டார்
பெயர்க்காரணம் :
- கார் = கார் காலம், மழைக்காலம்
பொதுவான குறிப்புகள் :
- கார் நாற்பது நாடகப் பாங்கு கொண்டு அமைந்தவை.
- அகப்பொருள் கூறும் நூல்களுள் மிகவும் சிறியது.
- ஆசிரியரின் இயற்பெயர் = கூத்தன்
- இவர் தனது நூலில் திருமால், பலராமன், ஆகியோரை குறிப்பிடுவதால் இவரை வைணவர் என்பர்.
- சிவனுக்குரிய கார்த்திகை விளக்கிடுதல் பற்றியும் நூல் கூறுகிறது.
- நூலில் கூறப்படும் துறை = வினைமேற் சென்று திரும்பும் தலைவன் பாகனோடு பேசி விரைந்து வருதல்
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒருதிணையை(முல்லை) மட்டும் பாடிய நூல்.
- நன்னூல் உரையாசிரியர் மயிலைநாதர் இந்நூலில் மேற்கோள் சான்று காட்டியுள்ளார்.
- கடல் நீர் ஆவியாகி மேகமாவதை கூறுகிறது
முக்கிய அடிகள் :
- செல்வர் மனம்போல் கவின் ஈன்ற, நல்கூர்ந்தார் மேனிபோல் புல் என்ற காடு தூதோடு வந்த மழை.
- பாடுவண்டு ஊதும் பருவம் பனணத்தோளி வாடும் பசலை மருந்து.
No comments:
Post a Comment