Monday, October 10, 2022

TNPSC G.K - 210 | பொதுத்தமிழ் - பதினெண்மேற்கணக்கு நூல்கள்.

பதினெண்மேற்கணக்கு நூல் குறிப்புகள் :


  • சங்க இலக்கியங்கள் எனப்படுவது - எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
  • இவ்விரண்டையும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்பர்.
  • பதினெண்மேற்கணக்கு நூல்களின் இலக்கணம் கூறும் நூல் - பன்னிரு பாட்டியல்
ஐம்பது முதலா ஐந்நூறு ஈறா
ஐவகை பாவும் பொருள்நெறி மரபின்
மதுராபுரிச் சங்கம் வைத்தும்
மகாபாரதம் தமிழ்ப் படுத்தும்
தொகுக்கப் படுவது மேற்கணக் காகும்
- பன்னிரு பாட்டியல்
  • தொகை நூல்கள் என்ற வார்த்தையை கையாண்டவர் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய பேராசிரியர் ஆவார்.
  • சங்க இலக்கியங்களை சான்றோர் செய்யுட்கள் எனக் கூறியவர் தொல்காப்பிய உரையாசிரியர் பேராசிரியர் ஆவார்.

எட்டுத்தொகை (எண்பெருந்தொகை) :


  • அகம்  - நற்றிணை, குறுந்தொகை,  ஐங்குறுநூறு கலித்தொகை , அகநானூறு 
  • புறம் - பதிற்றுப்பத்து,  புறநானூறு 
  • அகம் புறம் - பரிபாடல் 

பத்துப்பாட்டு :


  •  அகம் - குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை
  •  புறம் - திருமுருகாற்றுப்படை , பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை,  பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் , மதுரைக்காஞ்சி
  •  அகம் புறம் -நெடுநல்வாடை

No comments:

Popular Posts