காப்பியங்கள் :
- “பொருட் தொடர்நிலைச் செய்யுள்”, காப்பியம் எனப்படும்.
- காப்பிய இலக்கணம் குறித்துக் கூறும் நூல் = தண்டியலங்காரம்
- காப்பியம் பெருங்காப்பியம், சிறுங்காப்பியம் என இரு வகைப்படும்.
ஐம்பெரும்காப்பியங்கள் :
- ஐம்பெரும்காப்பியங்கள் என்ற முதன் முதலில் கூறியவர் = மயிலைநாதர்
- ஐம்பெரும்காப்பியங்களின் நூல் பெயர்களை முதன் முதலாகக் குறிப்பிட்டவர் = கந்தப்பதேசிகர்(திருத்தணிகைஉலா)
- சிலப்பதிகாரம் = இளங்கோவடிகள்
- மணிமேகலை = சீத்தலைச் சாத்தனார்
- சீவக சிந்தாமணி = திருத்தக்கதேவர்
- வளையாபதி = பெயர் தெரியவில்லை
- குண்டலகேசி = நாதகுத்தனார்
- சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டை காப்பியங்கள் எனப்படும்.
- சமணக் காப்பியங்கள் = சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி
- புத்தக் காப்பியங்கள் = மணிமேகலை, குண்டலகேசி
- சுத்தானந்த பாரதி:
- கவியோகி சுத்தானந்தபாரதி ஐம்பெரும்காப்பியங்களையும் அணிகலன்களாக உருவகிக்கிறார்.
"காதொளிரும் குண்டலமும் கைக்குவளையாபதியும்
கருணை மார்பின் மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில் மேகலையும் சிலம்பார் இன்பப்போது
ஒளிரும் திருவடியும்" ஐம்பெரும்காப்பியங்கள் அட்டவணை :
- ஐம்பெருங்காப்பியங்களின் வேறுபெயர்கள்:
- நூல் வேறுபெயர்கள்
- சிலப்பதிகாரம்
- மூவேந்தர் காப்பியம்
- மணிமேகலைத் துறவு
- முதல் சமயக் காப்பியம்
- அறக்காப்பியம்
- சீர்திருத்தக்காப்பியம்
- குறிக்கோள் காப்பியம்
- புரட்சிக்காப்பியம்
- சமயக் கலைச் சொல்லாக்க காப்பியம்
- கதை களஞ்சியக் காப்பியம்
- பசிப்பிணி மருத்துவக் காப்பியம்
- பசு போற்றும் காப்பியம்
- மணநூல்
- முக்திநூல்
- காமநூல்
- மறைநூல்
- முடிபொருள் தொடர்நிலைச் செய்யுள்(அடியார்க்கு நல்லார்)
- இயற்கை தவம்
- குண்டலகேசி விருத்தம்
- அகல கவி
- தமிழின் முதல் காப்பியம்
- உரையிடையிட்ட பாட்டைச் செய்யுள்
- முத்தமிழ்க்காப்பியம்
- முதன்மைக் காப்பியம்
- பத்தினிக் காப்பியம்
- நாடகப் காப்பியம்
- குடிமக்கள் காப்பியம்(தெ.பொ.மீ)
- புதுமைக் காப்பியம்
- பொதுமைக் காப்பியம்
- ஒற்றுமைக் காப்பியம்
- ஒருமைப்பாட்டுக் காப்பியம்
- தமிழ்த் தேசியக் காப்பியம்
- வரலாற்றுக் காப்பியம்
- போராட்ட காப்பியம்
- புரட்சிக்காப்பியம்
- சிறப்பதிகாரம்(உ.வே.சா)
- பைந்தமிழ் காப்பியம்
- மணிமேகலை
- சீவக சிந்தாமணி
- குண்டலகேசி
பொதுவான குறிப்புகள் :
- அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கு பொருளையும் கூறுவது பெருங்காப்பியம் அல்லது பேரிலக்கியம் எனப்படும்.
- அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கில் ஒன்றோ அல்லது பலவோ குறைத்து கூறுவது சிறுகாப்பியம் அல்லது சிற்றிலக்கியம் எனப்படும் .
- காப்பியத்தின் பெரும் பிரிவு காண்டம் ,இலம்பகம் மற்றும் பருவம் .
- காப்பியத்தின் உட்பிரிவு காதை ,சருக்கம் மற்றும் படலம்.
No comments:
Post a Comment