Sunday, October 09, 2022

TNPSC G.K - 204 | பொதுத்தமிழ் - பத்துப்பாட்டு.

பத்துப்பாட்டு :


  • பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியத் தொகைநூல்களுள் ஒன்று.
  • இத்தொகைநூலுள் பத்துப்பாடல்கள் அடங்கியுள்ளன.
  • இவற்றில் பழந்தமிழ் நாட்டின் வாழ்க்கை முறை, பண்பாடு பற்றிய பல அரிய தகவல்கள் பொதிந்து கிடக்கின்றன.
  • வரலாற்றுச் சம்பவங்கள், அரசர்களினதும் வள்ளல்களினதும் இயல்புகள், பொது மக்களின் காதல் வாழ்க்கை, அக்காலக் கலைகள், நகரங்கள் பற்றிய தகவல்கள், இயற்கை பற்றிய வருணனைகள் போன்றவை தொடர்பான பல தகவல்களை இவற்றிலிருந்து பெற முடிகின்றது.
  • பத்துப் பாட்டு நூல்களில் இயற்கைக்கு முரண்பட கற்பனைகளோ பொருந்தா உவமைகளோ காணப்பெறவில்லை.

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி – மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.

  • சங்க இலக்கியம் எனப்படுவது தமிழில் கிறிஸ்துக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும்
  •  சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டது வரை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2302381 பாடல்களைக் கொண்டுள்ளது 
  • பத்துப்பாட்டு பாடல்களில் இயற்கைக்கு முரண்பட்ட கருத்துக்களையோ பொருந்தா உவமைகளாக காணப்பெறவில்லை
  • மயிலைநாதர் கிபி 15ஆம் நூற்றாண்டில் பத்துப்பாட்டு என பயன்படுத்தியுள்ளார் பத்துப்பாட்டில் சிற்றெல்லை 103 அடிகள்  பேரெல்லை 782 அடிகள்.
  • பத்துப்பாட்டில் மிகச்சிறிய நூல் முல்லைப்பாட்டு 103 அடிகள் .
  • பத்துப்பாட்டில் மிகப்பெரிய நூல் மதுரைக்காஞ்சி 782 அடிகள் .
  • ஆற்றுப்படை நூல்கள் மற்றும் மதுரைகாஞ்சி அனைத்தும் புற நூல்கள் ஆகும்.
  •  மற்றவை மூன்று  அகநூல்கள் அகப்பொருள் நூல் ஒன்று நெடுநல்வாடை.

புறப்பொருள் பற்றிய நூல்கள் :


  • திருமுருகாற்றுப்படை.
  • பொருநராற்றுப்படை.
  • சிறுபாணாற்றுப்படை.
  • பொரும்பாணாற்றுப்படை.
  • மலைபடுகடாம்.
  • மதுரைக்காஞ்சி.

அகப்பொருள் பற்றிய நூல்கள் :


  • குறிஞ்சிப்பாட்டு.
  • பட்டினப்பாலை.
  • முல்லைப்பாட்டு.

அகப்பொருள், புறப்பொருள் பற்றிய நூல்கள் :


    • நெடுநல்வாடை.

No comments:

Popular Posts