பட்டினப்பாலையின் உருவம் :
- திணை = நெய்தல் திணையும்பாலைத்திணையும்
- துறை=பொருள்வயின்பிரியக்கருதிய தலைவன் செலவழுங்குதல்(செலவழுங்குதல் = செல்லாது விடுதல்)
- பாவகை = இடையிடையே ஆசிரியப்பா அமைந்த வஞ்சி நெடும் பாட்டு
- அடி எல்லை = 301
பெயர்க்காரணம் :
- பாலைத்திணையையும், காவிரிப்பூம்பட்டினம்நகரின்வளத்தையும் ஒருங்கே கூறுவதால்பட்டினப்பாலைஎனப் பெயர் பெற்றது.
வேறு பெயர்கள் :
- வஞ்சி நெடும் பாட்டு(தமிழ் விடு தூது கூறுகிறது)
- பாலைபாட்டு
புலவர், தலைவன்:
- பாடிய புலவர் = கடியலூர்உருத்திரங்கண்ணனார்
- பாட்டுடைத் தலைவன் = சோழன் கரிகாலன்
உரை :
- மறைமலையடிகள் உரை
- ரா.இராகவையங்கார் உரை
பொதுவான குறிப்புகள் :
- பட்டினப்பாலைபாடியமைக்காககடியலூர்உருத்திரங்கண்ணனார்க்குகரிகாற் சோழன் பதினாறு நூறாயிரம் பொற்காசுகள்பரிசளித்தான் என கலிங்கத்துப்பரணி கூறுகிறது.
- இந்நூலுக்குவஞ்சிநெடும் பாட்டு என்ற பெயர் இருந்தமையை தமிழ் விடு தூது குறிப்பிடுகிறது
- பட்டினம் என்பது காவிரிப்பூம்பட்டினம் ஆகும். இந்நகரை புகார், பூம்புகார் எனவும் அழைப்பர்.
- இந்நூலில்163 அடிகள் வஞ்சிப்பாவல்அமைந்துள்ளது.
- இந்நூல்அரகேற்றப்பட்ட இடம் = பதினாறு கால் மண்டபம்
- பிற்காலப் பாண்டிய மன்னன் ஒருவன் சோழநாட்டை வென்று அதன் தலைநகரைஅழித்தபோது, அந்நகரில்இந்நூல்அரங்கேற்றப்பட்டபதினாறு கால் மண்டபத்தை அழிக்காதிருக்கஆணையிட்டான் என “திருவெள்ளரைக் கல்வெட்டு” கூறுகிறது.
- இந்நூலில்கிளவித்தலைவனின் பெயர் கூறப்படவில்லை.
முக்கிய அடிகள் :
- நீரின் வந்த நிமிர்பரிப்புரவியும்
காலின் வந்த கருங்கறிமூடையும்
வடமலை பிறந்த மணியும்பொன்னும்
குடமலை பிறந்த ஆரமும்அகிலும் - தமவும்பிறவும்ஒப்ப நாடி
கொள்வதுஉம் மிகை கொளாது
கொடுப்பதூஉம்குறைகொடாது
பல்பண்டம் பகர்ந்து வீசும் - முட்டாச்சிறப்பின்பட்டினம்பெறினும்
வார்இருங் கூந்தல் வயங்கு இழை ஒழிய
வாரேன்வாழியநெஞ்சே
No comments:
Post a Comment