புறநானூற்றின் உருவம் :
- திணை - புறத்திணை
- பாவகை - ஆசிரியப்பா
- பாடல்கள் - 400
- புலவர்கள் - 157
- அடி எல்லை - 4-40
பெயர்க்காரணம் :
- புறம் + நான்கு + நூறு - புறநானூறு
- நூலின் பெயரிலேயே புறம் என்று புறத்திணைப் பாகுபாடு புலப்பட உள்ள நூல் இது மட்டுமே.
- புறத்திணை சார்ந்த நானூறு பாடல்கள் கொண்டதால் புறநானூறு எனப் பெயர் பெற்றது.
வேறு பெயர்கள் :
- புறம்
- புறப்பாட்டு
- புறம்பு நானூறு
- தமிழர் வரலாற்று பெட்டகம்
- தமிழர் களஞ்சியம்
- திருக்குறளின் முன்னோடி.
- தமிழ்க் கருவூலம்
தொகுப்பு :
- இந்நூலை தொகுத்தவர் தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.
உரை, பதிப்பு :
- முதல் 266 பாடல்களுக்கு பழைய உரை உள்ளது.
- 267-400 பாடல்களுக்கு உ.வே.சா உரை உள்ளது.
- நூலினை முதலில் பதிப்பித்தவர் - உ.வே.சா
கடவுள் வாழ்த்து :
- இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடியவர் - பாரதம் பாடிய பெருந்தேவனார்
- இந்நூலில் கடவுள் வாழ்த்து குறிப்பிடும் கடவுள் - சிவபெருமான்
- புறநானூறு பாடிய பெண்பாற் புலவர்கள் - 15 பேர்.
- ஔவையார் பாரி மகளிர்
- வெண்ணிக் குயத்தியார் ஒக்கூர் மாசாத்தியார்
- காவற்பெண்டு பெருங்கோப் பெண்டு
பொதுவான குறிப்புகள் :
- புறநானூற்றில் 11 திணைகளும், 65 துறைகளும் கூறப்பட்டுள்ளன.
- புறநானூற்றில் கூறப்படாத திணை - உழிஞைத் திணை.
- 244,282,289,323,355,361 ஆகிய என்னுடைய பாடல்களுக்கு திணைப் பெயர் தெரியவில்லை.
- ஆசிரியபாவால் அமைந்திருந்தாலும் வஞ்சி அடிகளும் உள்ளது.
- பெண்களின் வீரத்தைக் கூறும் துறை மூதின் முல்லை
- கரிகாலன் போர் செய்த இடம் - வெண்ணிப் பரந்தலை
- பாண்டியன் நெடுஞ்செழியன் போர் செய்த இடம் - தலையானங்கானம்
- சோழர்கள் மௌரியர்களைத் தோற்கடித இடம் - வல்லம்
- புறநானூற்றில் மிக அதிக பாடலை பாடியவர் - ஔவையார்.
- ஜி.யு.போப் அவர்களை கவர்ந்த நூல் புறநானூறு. இந்நூலின் சில பாடல்களை அவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
- 15 பாண்டியர்கள், 18 சோழர்கள், 18 சேரர்கள், 18 வேளிர்களைப் பற்றி கூறுகிறது புறநானூறு.
- புறநானூறில் 10 வகை ஆடைகள், 28 வகை அணிகலன்கள், 30 வகை படைக்கருவிகள், 67 வகை உணவுகள் கூறப்பட்டுள்ளன.
- மேல் சாதி கீழ் சாதிப் பாகுபாடு இருப்பினும் அதனை கல்வி நீக்கும் என கூறுகிறது.
- கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தமிழ் பேராசிரியர் ஜார்ஜ்.எல். ஹார்ட். "The four hundred songs of war and wisdom; An anthology of poems from classical tamil the purananuru" என்ற தலைப்பில் 1999இல் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.
- ஆசிரியர்கள் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி புறநானூறு புறநானூற்றில் ஒரு பாடல் பரிபாடலில் ஒரு பாடல் பிசிராந்தையார் பாண்டியநாடு மன்னன் மன்னன் அறிவுடைநம்பி.
- குமண வள்ளல் பற்றி புறநானூறு கூறுகிறது தமிழுக்கு தலை கொடுத்த குமணவள்ளல் என்று போற்றுகிறது பரணர் வையாவிக் கோப்பெரும் பேகன் என்னும் குறுநில மன்னனை பாடியுள்ளார் மயிலுக்குப் போர்வை அருளியவர் மலைநாட்டை உடையவர் ஊர் நல்லூர் என்பதாகும் இவன் ஆவியர் குடியில் பிறந்தவர்.
- கண்ணகனார் கோப்பெருஞ் சோழனின் அவைப் புலவர் கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து போது பிசிராந்தையார் உடன் இருந்தவர் நரிவெரூஉத்தலையாரால் பாடப்பட்டோன் சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை இவர் பாடல் குறுந்தொகை மற்றும் திருவள்ளுவமாலை உள்ளது.
முக்கிய அடிகள் :
- செல்வத்துப் பயனே ஈதல்.
- துய்ப்போம் எனினே தப்புந பலவே.
- யாதும் ஊரே யாவரும் கேளிர்.
- உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.
- உண்பது நாழி உடுப்பது இரண்டே.
- ஈயென இறத்தல் இழிந்தன்று, அதனெதிர்.
- ஈயோன் என்றல் அதனினும் இழிந்தன்று.
- நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே.
- மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்.
- நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்.
- அல்லது செய்தல் ஓம்புமின்.
No comments:
Post a Comment