Sunday, October 09, 2022

TNPSC G.K - 194 | பொதுத்தமிழ் - பரிபாடல்.

பரிபாடலின் உருவம் :


  • திணை = அகமும் புறமும்
  • பாவகை = பரிபாட்டு
  • பாடல்கள் = 70( கிடைத்தவை 22 )
  • புலவர் = 13
  • அடி எல்லை = 25-400

பெயர்க்காரணம் :


  • பரிந்து வரும் இசையால் ஆன பாடல்கள்.
  • வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்களுக்கும் பல வகையான அடிகளுக்கும் பரிந்து இடம் கொடுக்கும் தன்மை உடையது பரிபாட்டு ஆகும்.
  • தொல்காப்பியர் காலம் வரை கலிப்பாவும், பரிபாட்டும் வழக்கில் இருந்தது.
நாடக வழக்கிலும் உலகியல் வழக்கிலும்
பாடல் சான்ற புலன்நெறி வழக்கம்
கலியே பரிபாட்டு ஆயிரு பாவினும்
உரிய தாகும் என்மனார் புலவர்.

வேறு பெயர்கள் :


  • பரிபாட்டு
  • ஓங்கு பரிபாடல்
  • இசைப்பாட்டு
  • பொருட்கலவை நூல்
  • தமிழின் முதல் இசை பாடல் நூல்

தொகுப்பு :


  • இந்நூலை தொகுத்தவர் தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.

உரை, பதிப்பு :


  • பரிமேலழகர் உரை உள்ளது.
  • நூலை முதலில் பதிப்பித்தவர் - உ.வே.சா

பாடல் பகிர்வு முறை :


திருமாற்கு இருநான்கு; செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டு காடுகாட்கு ஒன்று; - மருவினிய
வையை இரு பத்தாறு; மாமதுரை நான்கென்ப
செய்ய பரிபாடல் திறம்
 

பரிபாடல் கூறும் எண்ணுப்பெயர்கள் :


  • எண் எண்ணுப்பெயர்கள்
    • 0 பாழ்
    • 1/2 பாகு
    • 9 தொண்டு

பொதுவான குறிப்புகள் :


  • தொல்காப்பிய விதிப்பை பரிபாட்டு வகையில் அமைந்த ஒரே தொகை நூல் பரிபாடல் மட்டுமே.
  • தெய்வங்கள் அடிப்படையில் பகுப்பு முறை அமைந்த ஒரே தொகை நூல் இதுவே.
  • பாண்டிய நாட்டை மட்டுமே கூறுகிறது.
  • பாண்டிய நாட்டை மட்டும் கூறும் நூல்கள் = பரிபாடல், கலித்தொகை
  • இந்நூல் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கினையும் கூறுகிறது.
  • “கின்று” என்னும் காலம் காட்டும் இடைநிலை முதலில் பரிபாடலில் தான் வருகிறது.
  • இந்நூல் உலகின் தோற்றம் குறித்து கூறுகிறது.
  • இந்நூல் இசையோடு பாடப்பட்டது.

மு.வ கூற்று :


  • சங்க காலத்திற்குப் பிறகு பரிபாடல் என்ற செய்யுள் வடிவம் போற்றப்படாமல் போயிற்று.
  • விருதப்பாட்டு வளர்ந்த பிறகு கலிப்பாவும், பரிபாட்டும் போற்றப்படவில்லை
  • 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை,  சமூக உறவு, அறிவு ஆற்றல்,  புரிந்துகொள்ளும் திறன் போன்றவற்றை சங்க இலக்கியம் கூறுகிறது.
  • கீரந்தையார் பரிபாடலில் பாடல் எழுதியுள்ளார்.
  • இசை வல்லுனர் கொண்டு பண் வகுக்கப்பட்டுள்ளன.
  • ஒவ்வொரு பாடலின் கீழ் புலவர் இசை வகுத்தவர்,  பண் பெயரும்  தரப்பட்டுள்ளது.
  • கண்ணகனார் முதல் மருத்துவன் நல்லச்சுதனார் ஈறாக பத்து இசையறிஞர்கள் பண் வகுக்கப்பட்டுள்ளனர்.
  • குவளை,  நெய்தல்,  கமலம், ஆம்பல், வெள்ளம், சங்கம்  பேரெண்களை குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.

முக்கிய அடிகள் :


  • மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
  • பூவொடு புரையுந் சீறார் பூவின்
  • இதழகத்து அனைய தெருவம், இதழகத்து
  • அரும் பொகுட்டு அனைத்தே அண்ணல் கோயில்
  • தீயினுள் தெறல் நீ! பூவினுள் நாற்றம் நீ!
  • கல்லினுள் மணியும் நீ! சொல்லினுள் வாய்மை நீ!

No comments:

Popular Posts