முதுமொழிக்காஞ்சியின் உருவம் :
- ஆசிரியர் - மதுரைக் கூடலூர்க்கிழார்.
- பாடல்கள் - 100.
- பாவகை - குறள் தாழிசை.
- திணை - காஞ்சித்திணை.
- காலம் - சங்க காலத்திற்கு பின்.
பெயர்க்காரணம் :
- முதுமொழி - மூத்தோர் சொல்.
- காஞ்சி - மகளிர் இடையணி (நிலையாமை பற்றியது).
- மூத்தோர் சொற்கள் பலவற்றைக் கோர்த்த கோவை முதுமொழிக்காஞ்சி எனப்படுகிறது.
வேறு பெயர்:
- அறவுரைக்கோவை
- ஆத்திச்சூடியின் முன்னோடி
பொதுவான குறிப்புகள் :
- பத்துப் பிரிவும், பிரிவுக்கு பத்து பாடலுமாக உள்ளது.
- சிறந்த பத்து, அறிவுப் பத்து, பழியாப்பத்து, துவ்வாப்பத்து, அல்லபத்து, இல்லை பத்து, பொய்யாப்பத்து, எளிய பத்து, நல்கூர்ந் பத்து, தாண்டாப்பத்து.
- ஒவ்வொரு பத்தும், “ஆர்கலி உலகத்து” என்று தொடங்குகிறது.
- இதன் பாடல்கள் குறள்வெண் செந்துறை என்ற யப்பால் ஆனவை.
- உரையாசிரியர் - செல்வ கேசவராய முதலியார்.
- அவர்தம் பாடல்களை நச்சினார்கினியார் முதலியோர் மேற்கோளாக கையாண்டனர்.
மேற்கோள் :
- ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம் ஓதலிற் சிறந்ததன்று ஒழுக்கம் உடைமை.
- வன்மையிற் சிறந்தன்று வாய்மை உடைமை.
- மேதையிற் சிறந்தன்று கற்றது மறவாமை.
- ஈரம் உடைமை ஈகையின் அறிப.
No comments:
Post a Comment