Wednesday, October 05, 2022

TNPSC G.K - 182 | பொதுத்தமிழ் - ஆறாம் வகுப்பு - இன்னுயிர் காப்போம்

ஆசியஜோதி :


நின்றவர் கண்டு நடுங்கினாரே – ஐயன்

நேரிலே நிற்கவும் அஞ்சினாரே;

துன்று கருணை நிறைந்த வள்ளல்

 

ஆதலால் தீவினை செய்யவேண்டா – ஏழை

ஆட்டின் உயிரையும் வாங்கவேண்டா;

பூதலந் தன்னை நரகம் அது ஆக்கிடும்

புத்தியை விட்டுப் பிழையும்ஐயா!

- கவிமணி தேசிக விநாயகனார்

பொதுவான குறிப்புகள் :


  • தேசிக விநாயகனார் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர்.
  • முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்.
  • கவிமணி என்னும் பட்டம் பெற்றவர்.
  • ஆசிய ஜோதி, ஆங்கில மொழியில் எட்வின் அர்னால்டு என்பவர் எழுதிய லைட் ஆஃப் ஆசியா (Light of Asia) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது.
  • இந்நூல் புத்தரின் வரலாற்றைக் கூறுகிறது.

மனிதநேயம் :


  • மனிதநேயத்துடன் வாழ்பவர்களால்தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

தமக்கென முயலா நோன்றாள் - பிறர்க்கென

முயலுநர் உண்மையானே (புறம் - 182)

- புறநானூறு

வள்ளலார் :

  • வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்”- வள்ளலார்
  • பெருமுயற்சியால் வடலூரில் சத்திய தருமச்சாலையைத் தொடங்கி எல்லாருக்கும் உணவளித்தார்
  • அன்னை தெரசா
  • மக்களுக்குச் செய்யும் பணியே இறைவனுக்குச் செய்யும் பணி என்று வாழ்ந்தார்.
  • அதனால் அமைதிக்கான நோபல் பரிசு அவரைத் தேடி வந்தது
  • வாழ்க்கை என்பது சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை - அன்னை தெரசா

கைலாஷ் சத்யார்த்தி :

  • அன்னை தெரசாவிற்கு அடுத்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் கைலாஷ் சத்யார்த்தி.
  • குழந்தைகளைப் பாதுகாப்போம் என்னும் இயக்கத்தைத் தொடங்கி குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்கப் பாடுபட்டு வருகிறார்.
  • 30 ஆண்டுகளில் 80,000 குழந்தைத் தொழிலாளர்களை மீட்டுள்ளார். உலகக் குழந்தைகள் கல்வி உரிமைக்காக 103 நாடுகளில் 80,000 கி.மீ தூரம் நடைப்பயணம் சென்றுள்ளார்.குழந்தைகளைத் தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத் தன்மைக்கு எதிரான குற்றம்.
  • உலகத்தைக் குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள். உலகம் அழகானது.- கைலாஷ் சத்யார்த்தி

முடிவில் ஒரு தொடக்கம் :

  • இதயத்தையே கொடையாகத் தந்த வள்ளல்கள் தாம் அசோகன் – புஷ்பாஞ்சலி என்ற மருத்துவத் தம்பதியினர்.
  • இதயத்திற்குரிய அந்த இளைஞனின் பெயர் ஹிதேந்திரன்.

அணி இலக்கணம் :

  • அணி என்பதற்கு அழகு என்பது பொருள்.
  • கவிஞர் தமது கருத்தைச் சுவையோடு சொல்வதற்கு உதவுவது அணி.
  • மருந்தைத் தேனில் கலந்து கொடுப்பது போல் கருத்துகளைச் சுவைபடக் கூறுவது அணியாகும்.

இயல்பு நவிற்சி அணி :

  • ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது இயல்பு நவிற்சி அணி ஆகும்.
  • இதனைத் தன்மை நவிற்சி அணி என்றும் கூறுவர்.
  • தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு - அங்கே
  • துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி
  • அம்மா என்குது வெள்ளைப்பசு - உடன்
  • அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி
  • நாவால் நக்குது வெள்ளைப்பசு – பாலை
  • நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி - கவிமணி தேசிக விநாயகனார்உயர்வு நவிற்சி அணி
  • ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது உயர்வு நவிற்சி அணி ஆகும்.

குளிர்நீரில் குளித்தால்

கூதல் அடிக்குமென்று

வெந்நீரில் குளித்தால்

மேலே கருக்குமென்று

ஆகாச கங்கை

அனல் உறைக்குமென்று

பாதாள கங்கையைப்

பாடி அழைத்தார் உன் தாத்தா

- தாலாட்டு

கலைச்சொல் அறிவோம் :


  • மனிதநேயம் - Humanity
  • கருணை - Mercy
  • நோபல் பரிசு - Nobel Prize
  • சரக்குந்து - Lorry
  • உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை - Transplantation

No comments:

Popular Posts