Wednesday, October 05, 2022

TNPSC G.K - 177 | பொதுத்தமிழ் - ஆறாம் வகுப்பு - கண்ணெனத் தகும்.

மூதுரை :


மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனின் கற்றோன் சிறப்புடையன் – மன்னற்குத்

தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்

சென்ற இடமெல்லாம் சிறப்பு.

- ஒளவையார்

சொல்லும் பொருளும் :


  • மாசற - குறை இல்லாமல்
  • சீர்தூக்கின் - ஒப்பிட்டு ஆராய்ந்து
  • தேசம் - நாடு

ஒளவையார் :


  • கொன்றை வேந்தன், ஆத்திச்சூடி, நல்வழி ஆகிய நூல்களை எழுதியுள்ளார்
  • மூதுரை என்ற சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்று பொருள்
  • சிறந்த அறிவுரைகளைக் கொண்டதால் மூதுரை என்று பெயர்
  • மூதுரை 31 பாடல்கள் கொண்டது

துன்பம் வெல்லும் கல்வி :


ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே -நீ

ஏன் படித்தோம் என்பதையும் மறந்து விடாதே.....

பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும்

வற்றாமல் உன்னோடு வாழ்ந்திட வேண்டும்

- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்

சொல்லும் பொருளும் :


  • தூற்றும் படி - இகழும்படி
  • மூத்தோர் - பெரியோர்
  • மேதைகள் – அறிஞர்கள்
  • மாற்றார் - மற்றவர்
  • நெறி - வழி
  • வற்றாமல் - குறையாமல்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் :


  • மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படுபவர்.
  • திரை இசை பாடல்கள் உழைப்பாளிகளின் உயர்வைப் பாடியவர்.

கல்விக்கண் திறந்தவர் :


  • காமராஜர் -கல்விக்கண் திறந்தவர் எனப் பெரியாரால் பாராட்டப்பட்டார்

காமராசரின் சிறப்புப் பெயர்கள் :


  • பெருந்தலைவர்
  • கர்மவீரர்
  • ஏழை பங்காளர்
  • கறுப்பு காந்தி
  • தலைவர்களை உருவாக்குபவர்
  • படிக்காத மேதை

காமராசருக்கு அரசு செய்த சிறப்புகள் :


  • மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது
  • இந்திய அரசு 1976 இல், பாரத ரத்னா விருது வழங்கியது
  • காமராசரின் சென்னை மற்றும் விருதுநகர் இல்லம் அரசுடைமையாக்கப்பட்டு நினைவு இல்லமாக மாற்றப்பட்டது
  • மெரினா கடற்கரையில் சிலை அமைக்கப்பட்டுள்ளது
  • சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்பட்டுள்ளது
  • கன்னியாகுமரியில் காமராஜருக்கு மணிமண்டபம் (2 .10 .2000) கட்டப்பட்டது.

நூலகம் நோக்கி :


  • ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம்
  • ஆசியாவிலேயே பெரிய நூலகம் சீனாவில் உள்ளது
  • இந்திய நூலக அறிவியலின் தந்தை -முனைவர் இரா.அரங்கநாதன்
  • சிறந்த நூலகர்களுக்கு டாக்டர் எஸ் ஆர் அரங்கநாதன் விருது வழங்கப்படுகிறது.

அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தின் தளங்களும் அதன் பிரிவுகளும் :


  • தரைத்தளம் -சொந்த நூல் படிப்பகம், பிரெய்லி நூல்கள்
  • முதல் தளம் - குழந்தைகள் பிரிவு, பருவ இதழ்கள்
  • இரண்டாம் தளம் - தமிழ் நூல்கள்
  • மூன்றாம் தளம் -கணினி அறிவியல், தத்துவம், அரசியல் நூல்கள்
  • நான்காம் தளம் - பொருளியல், சட்டம், கல்வி, வணிகவியல்
  • ஐந்தாம் தளம் -கணிதம், அறிவியல், மருத்துவம்
  • ஆறாம் தளம் -பொறியியல், வேளாண்மை, திரைப்படக்கலை
  • ஏழாம் தளம் -வரலாறு, சுற்றுலா
  • எட்டாம் தளம் -நூலக நிர்வாகப் பிரிவு

இன எழுத்துக்கள் :


  • ஆறு வல்லின மெய் எழுத்துக்களுக்கும் ஆறு மெல்லின மெய் எழுத்துக்களும் இன எழுத்துக்கள் ஆகும் .எ.கா- திங்கள், மஞ்சள், சந்தனம், மண்டபம், தென்றல்
  • இடையின எழுத்துகள் ஆறும் ஓர் இனமாகும்=ய்-ர், ல்-வ், ழ்-ள்
  • உயிர் எழுத்துக்களின் இன எழுத்துக்கள் அ-ஆ, இ -ஈ, உ-ஊ, எ -ஏ, ஐ-இ, ஒ-ஓ, ஒள-உ.
  • உயிர் எழுத்துக்கள் (அளபெடையில் மட்டுமே நெடில் தொடர்ந்து அதன் இனமாகிய குறிலுடன் வரும்) இணைந்து வராது எ.கா ஓஒதல், தூஉம், தழீஇ
  • ஆய்த எழுத்துக்கு மட்டுமே இன எழுத்து இல்லை.

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

சாந்துணையும் கல்லாதா வாறு

- குறள்

ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்

நாற்றிசையும் இல்லாத நாடில்லை அந்நாடு

வேற்று நாடு ஆகவே ஆமா வாயினால்

ஆற்றுணா வேண்டுவது இல்

- பழமொழி நானூறு

கலைச்சொல் அறிவோம் :


  • கல்வி - education
  • நூலகம் - library
  • மின் படிக்கட்டு - escalator
  • மின்னஞ்சல் - email
  • மின் நூலகம் - e library
  • குறுந்தகடு - compact disc CD
  • மின் இதழ் - e magazine
  • மின்தூக்கி - lift
  • மின் நூல் - e-book
  • தொடக்கப்பள்ளி - primary school
  • மேல்நிலைப்பள்ளி - higher secondary school

No comments:

Popular Posts