அறிவியல் ஆத்திசூடி :
- ஆத்திசூடி என்பது அகர வரிசையில் அறிவுரைகளைச் சொல்லும் இலக்கியம்.
- பாரதியார் - ’புதிய ஆத்திசூடி’
அறிவியல் சிந்தனை கொள்
ஆய்வில் மூழ்கு
இயன்றவரை புரிந்து கொள்
ஈடுபாட்டுடன் அணுகு
உண்மை கண்டறி
ஊக்கம் வெற்றிதரும்
என்றும் அறிவியலே வெல்லும்
ஏன் என்று கேள்
ஐயம் தெளிந்து சொல்
ஒருமித்துச் செயல்படு
ஓய்வற உழை
ஔடதமாம் அனுபவம்
- நெல்லை சு. முத்து
- தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் நெல்லை சு. முத்து.
- இவர் அறிவியல் அறிஞர் மற்றும் கவிஞர்.
- விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், சதீஷ்தவான் விண்வெளி மையம், இந்திய விண்வெளி மையம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.
- 80-க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார்.
அறிவியலால் ஆள்வோம் :
வானை அளப்போம் கடல் மீனையளப்போம்
சந்திர மண்டலத்தியல் கண்டுதெளிவோம்
சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.
- பாரதியார்
கணியன் நண்பன் :
- காரல் கபெக் (Karel Capek) என்பவர், ‘செக்’ நாட்டைச் சேர்ந்த நாடக ஆசிரியர். இவர் 1920ஆம் ஆண்டு நாடகம் ஒன்றை எழுதினார்.
- அதில் “ரோபோ” (Robot) என்னும் சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்தினார்.
- ரோபோ என்ற சொல்லுக்கு ’அடிமை’ என்பது பொருள்.
- நுண்ணுணர்வுக் கருவிகள் -Sensors
- கி . பி 1997- ஆம் ஆண்டு மே மாதம் சதுரங்கப் போட்டி - அதில் கேரி கேஸ்புரோவ்- ஐ.பி. எம் .(IBM) என்னும் நிறுவனத்தின் டீப் புளூ (Deep blue) என்னும் மீத்திறன் கணினி (Supercomputer) அவருடன் போட்டியிட்டு வெற்றி பெற்றது.
- உலகிலேயே முதன்முதலாகச் சவுதி அரேபியா ஒரு ரோபோவுக்குக் குடியுரிமை வழங்கியுள்ளது. அந்த ரோபோவின் பெயர் ‘சோபியா’.
- மேலும் ஐக்கிய நாடுகள் சபை ‘புதுமைகளின் வெற்றியாளர்’ என்னும் பட்டத்தைச் சோபியாவுக்கு வழங்கியுள்ளது. உயிரில்லாத ஒரு பொருளுக்கு ஐ.நா.சபை பட்டம் வழங்குவது இதுதான் முதல் முறை
ஒளி பிறந்தது :
- அப்துல் கலாமுடன் நேர்காணல்
- தமிழில் திருக்குறள் எனக்கு மிகவும் பிடித்த நூலாகும்.
- அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
- உள்ளழிக்கல் ஆகா அரண் என்னும் குறள் என் வாழ்க்கைக்கு வலுசேர்த்தது.
- லிலியன் வாட்சன் எழுதிய, விளக்குகள் பல தந்த ஒளி (Lights from many lamps) என்னும் நூலையும் எனக்கு மிகவும் பிடிக்கும்
இந்தியாவின் வெற்றிகள் :
- உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளோம்.
- தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகுதியான வளர்ச்சி பெற்றுள்ளோம்.
- எவ்வகையான செயற்கைக் கோளையும் ஏவும் திறன் நம்மிடம் உள்ளது.
- அணு உலைகள்மூலம் மின்சாரம் தயாரிப்பதில் முன்னணியில் உள்ளோம்.
- நவீன மருந்துகளும் பாரம்பரிய மருத்துவ முறைகளும் வளர்ச்சி பெற்றுள்ளன.
- பாதுகாப்புத் துறையைப் பொறுத்தவரை அக்னி மற்றும் பிரித்வி ஏவுகணைகளைச் செலுத்துவதில் வெற்றி பெற்றுள்ளோம்.
அப்துல் கலாமின் கனவு :
- ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நாளந்தா பல்கலைக்கழகத்தில் இருந்ததைப் போல வலுவான கல்வி முறை இருக்கும்.
- அனைத்து இயற்கை வளங்களும் தீர்ந்து போயிருக்கும். ஆயினும், நாம் தயாரித்து அனுப்பிய செயற்கைக்கோள்கள் சூரிய சக்தியைப் பெற்று நமக்கு அளிக்கும்.
- செவ்வாய்க்கோளில் மனித இனம் குடியேறி இருக்கும்.
மொழி முதல், இறுதி எழுத்துகள் :
மொழி முதல் எழுத்துகள் :
- மொழி என்பதற்குச் சொல் என்று பொருள்.
- சொல்லின் முதலில் வரும் எழுத்துகளை மொழி முதல் எழுத்துகள் என்பர்.
- உயிர் எழுத்துகள் 18ம் சொல்லின் முதலில் வரும்.
- க, ச, த, ந, ப, ம ஆகிய உயிர்மெய் எழுத்துக்கள் சொல்லின் முதலில் வரும்.
- ங, ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் எழுத்துகளில் சில எழுத்துகள் மட்டுமே சொல்லின் முதலில் வரும்.
- ங - வரிசையில் ‘ங’ என்னும் ஓர் எழுத்து மட்டுமே சொல்லில் முதல் எழுத்தாக வருகிறது. எ.கா- ஙனம் (இக்காலத்தில் ஙனம் என்னும் சொல் தனித்து இயங்காமல் அங்ஙனம், இங்ஙனம், எங்ஙனம் என்னும் சொற்களில் மட்டுமே வழங்கி வருகிறது.)
- ஞ -வரிசையில் ஞ, ஞா, ஞெ, ஞொ ஆகிய 4 எழுத்துகள் சொல்லின் முதலில் வரும்.
- ய - வரிசையில் ய, யா, யு, யூ, யோ, யௌ ஆகிய 6 எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
- வ - வரிசையில் வ, வா, வி, வீ, வெ, வே, வை, வெள ஆகிய 8 எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
மொழிக்கு முதலில் வராத எழுத்துகள் :
- மெய்யெழுத்துகள் 18 ம் சொல்லின் முதலில் வாரா.
- ட, ண, ர, ல, ழ, ள, ற, ன ஆகிய 8 உயிர்மெய் எழுத்துகள்.
- ஆய்த எழுத்து சொல்லின் முதலில் வராது.
- ங, ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் எழுத்து மொழி முதலில் வருவதாகக் குறிப்பிடப்பட்ட எழுத்துகள் தவிர பிற எழுத்துகள் சொல்லின் முதலில் வாரா.
மொழி இறுதி எழுத்துகள் :
- சொல்லின் இறுதியில் வரும் எழுத்துகளை மொழி இறுதி எழுத்துகள் என்பர்.
- உயிர் எழுத்துகள் 12 மெய்யுடன் இணைந்து உயிர்மெய்யாக மட்டுமே மொழி இறுதியில் வரும்.
- ஞ், ண், ந், ம், ய், ர், ல், வ், ழ், ள், ன் ஆகிய மெய்யெழுத்துகள் (11) பதினொன்றும் மொழியின் இறுதியில் வரும். (உரிஞ், வெரிந், அவ்)
மொழி இறுதியாகா எழுத்துகள் :
- சொல்லின் இறுதியில் உயிரெழுத்துகள் தனித்து வருவதில்லை
- உயிர் எழுத்துகள் மெய்யெழுத்துடன் இணைந்து உயிர்மெய்யாக மட்டுமே சொல்லின் இறுதியில் வரும்.
- அளபெடை எழுத்துகளில் இடம் பெறும்போது உயிர் எழுத்துகள் சொல்லின் இறுதியில் வரும்
- ஆய்த எழுத்து சொல்லின் இறுதியில் வராது.
- க், ங், ச், ட், த், ப், ற் ஆகிய ஏழு மெய் எழுத்துகளும் சொல்லின் இறுதியில் வருவதில்லை.
- உயிர்மெய் எழுத்துகளுள் ‘ங’ எழுத்து வரிசை சொல்லின் இறுதியில் வராது.
- எகர வரிசையில் கெ முதல் னெ முடிய எந்த உயிர்மெய் எழுத்தும் மொழி இறுதியில் வருவதில்லை.
- ஒகர வரிசையில் நொ தவிர பிற உயிர்மெய் எழுத்துகள் மொழி இறுதியில் வருவதில்லை.
- நொ என்னும் எழுத்து ஓரெழுத்து ஒரு மொழியாகத் துன்பம் என்னும் பொருளில் வரும்.
சொல்லின் இடையில் வரும் எழுத்துகள் :
- மெய் எழுத்துகள் (18)பதினெட்டும் சொல்லின் இடையில் வரும்.
- உயிர்மெய் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும்.
- ஆய்த எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
- அளபெடையில் மட்டுமே உயிர் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும்.
- சர். சி. வி. இராமன்.(பொதுவான குறிப்பு)
- 1921 ஆம் ஆண்டு மத்திய தரைக் கடலில், ஒரு கப்பல் இங்கிலாந்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
- 1928 பிப்ரவரி 28 ஆம் நாள் “இராமன் விளைவு” என்னும் தமது கண்டுபிடிப்பை வெளியிட்டார்.
- இக்கண்டுபிடிப்பு இந்தியாவிற்கு அறிவியலுக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது.
- அவர் தமது கண்டுபிடிப்பை வெளியிட்ட பிப்ரவரி 28 ஆம் நாளை நாம் ஆண்டுதோறும்“ தேசிய அறிவியல் நாள்” எனக் கொண்டாடி மகிழ்கிறோம்.
கலைச்சொல் அறிவோம் :
- செயற்கை நுண்ணறிவு - Artificial Intelligence.
- மீத்திறன் கணினி - Supercomputer.
- செயற்கைக் கோள் - Satellite.
- நுண்ணறிவு - Intelligence.
No comments:
Post a Comment