சிலப்பதிகாரம் :
திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்றுஇவ்
அங்கண் உலகு அளித்த லான் ...
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளி போல்
மேல்நின்று தான் சுரந்தலான் -சிலப்பதிகாரம்...
சொல்லும் பொருளும் :
- திங்கள் - நிலவு
- பொற்கோட்டு - பொன்மயமான சிகரத்தில்
- திகிரி - ஆணைச் சக்கரம்
- நாமநீர் -அச்சம் தரும் கடல்
- கொங்கு - மகரந்தம்
- மேரு - இமயமலை
- அலர் - மலர்தல்
- அளி - கருணை
பொதுவானக்குறிப்புகள் :
- சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள்.
- சேர மரபைச் சேர்ந்தவர் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.
- இவர் காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டு.
- சிலப்பதிகாரம் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று.
- தமிழின் முதல் காப்பியம்.
- இது முத்தமிழ் காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்றெல்லாம் போற்றப்படுகிறது.
- சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டை காப்பியங்கள்.
- திங்கள், ஞாயிறு, மழை -என இயற்கை வாழ்த்துவதாக இந்நூல் தொடங்குகிறது.
காணி நிலம் :
காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும் - அங்குத்
தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் ……
சித்தம் மகிழ்ந்திடவே -நன்றாய் இளம்
தென்றல் வர வேணும்.
– பாரதியார்
சொல்லும் பொருளும் :
- காணி - நில அளவைக் குறிக்கும் சொல்.
- மாடங்கள் - மாளிகையின் அடுக்குகள்.
- சித்தம் - உள்ளம்.
பொதுவானக்குறிப்புகள் :
- இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் – பாரதியார்.
- சுப்ரமணியம் இயற்பெயர்.
- எட்டயபுர மன்னரால் பாரதி என்னும் பட்டம் பெற்றவர்.
- பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு இவரின் படைப்புகள்.
சிறகின் ஓசை :
- பறவைகள் இடம் பெயர்தல் வலசை போதல்
- நிலவு, விண்மீன், புவியீர்ப்பு விசை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பறவைகள் இடம்பெயர்கின்றன.
வலசையின்போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் :
- தலையில் சிறகு வளர்தல்.
- இறகுகளின் நிறம் மாறுதல்.
- உடலில் கற்றையாக முடி வளர்தல்.
டாக்டர் சலீம் அலி :
- இந்தியாவின் பறவை மனிதர் - டாக்டர் சலீம் அலி.
- தன் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு ‘சிட்டுக்குருவியின் வீழ்ச்சி’ எனப் பெயரிட்டார் (The fall of Sparrow).
- தற்கால பறவையியல் ஆய்வாளர்களின் முன்னோடி சலீம் அலி.
பொதுவானக்குறிப்புகள் :
- சிறகு அடிக்காமல் கடலையும் தாண்டிப் பறக்கும் பறவை - கப்பல் பறவை (Frigate Bird)
- இது தரையில் இறங்காமல் 400 கிலோமீட்டர் வரை பறக்கும் கப்பல் கூழைக்கடா - கடற்கொள்ளை பறவை என்றும் அழைக்கப்படும்
- நாராய் நாராய் செங்கால் நாராய் என்று சத்திமுத்தப் புலவர் வலசைபோதலை பற்றிப் பாடியுள்ளார்
- தென்திசை குமரி ஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்’ எனக் குறிப்பிட்டுள்ளார்
- காக்கை குருவி எங்கள் சாதி - என்று பாரதியார் பாடினார்
- உலகிலேயே நெடுந்தொலைவு 22 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்யும் பறவை இனம் ஆர்டிக் ஆலா
- பறவையைப் பற்றிய படிப்பு ஆர்னித்தாலஜி (ORNITHOLOGY)
- உலக சிட்டுக்குருவிகள் நாள் மார்ச் 20
கிழவனும் கடலும் :
- (The old man and the sea) எனும் ஆங்கில புதினம்.
- 1954 நோபல் பரிசு பெற்றது.
- இதன் ஆசிரியர் எர்னெஸ்ட் ஹெமிங்வே.
முதலெழுத்தும் சார்பெழுத்தும் :
எழுத்துக்கள் இரண்டு வகைப்படும்
- முதலெழுத்து
- சார்பெழுத்து
முதல் எழுத்து :
உயிர் மெய் எழுத்துக்கள் 12 மெய்யெழுத்துக்கள் 18 ஆகிய முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும்
பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக இவை இருக்கின்றன. எனவே முதல் எழுத்து என்பர்.
சார்பு எழுத்துக்கள் :
பத்து வகைப்படும்.
- உயிர்மெய்
- ஆயுதம்
- உயிரளபெடை
- ஒற்றளபெடை
- குற்றியலிகரம்
- குற்றியலுகரம்
- ஐகாரக்குறுக்கம்
- மகரக் குறுக்கம்
- ஔகாரக் குறுக்கம்
- ஆய்தக் குறுக்கம்
உயிர்மெய் :
- மெய் எழுத்துக்களும் உயிரெழுத்துக்களும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் தோன்றுபவை
- உயிர்மெய் எழுத்தின் ஒலிவடிவம் மெய்யும் உயிரும் சேர்ந்ததாக இருக்கும்
- வரிவடிவம் மெய்யெழுத்தை ஒத்திருக்கும். ஒலிக்கும் கால அளவு உயிரெழுத்தை ஒத்திருக்கும்.
ஆய்தம் :
- மூன்று புள்ளிகளை உடைய தனித்த வடிவம் பெற்றது.
- முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை , அஃகேனம் என்று வேறு பெயர்கள் உண்டு
- நுட்பமான ஒலிப்புமுறை உடையது.
- முன் ஒரு குறில் எழுத்தையும் பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்று சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
- தனித்து இயங்காது.
- முதலெழுத்துக்கள் ஆகிய உயிரையும் மெய்யையும் சார்ந்து வருவதால் ஆய்த எழுத்து சார்பெழுத்தாகும்.
திருக்குறள் :
- அறநூல்களில் ’உலகப்பொதுமறை’ எனப் போற்றப்படுவது .
- திருவள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவர்.
- வான்புகழ் வள்ளுவர், தெய்வப்புலவர், பொய்யில் புலவர் என்ற சிறப்புப் பெயர்கள் உண்டு.
- திருக்குறள்: அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் -என மூன்று பிரிவுகள் கொண்டது.
- 133-அதிகாரங்கள் 1330-குறட்பாக்கள் கொண்டது.
- உலகப்பொதுமறை, வாயுறைவாழ்த்து எனச் சிறப்புப் பெயர்கள் கொண்டது திருக்குறள்.
- நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
கலைச்சொல் அறிவோம் :
- கண்டம் - continent.
- வலசை - migration.
- தட்பவெப்ப நிலை - climate.
- புகலிடம் - sanctuary.
- வானிலை - weather.
- புவியீர்ப்பு புலம் - gravitational field.
No comments:
Post a Comment