Wednesday, October 05, 2022

TNPSC G.K - 173 | வேதகாலம்.

வேதகாலம் :


  • ஆரியரின் வருகையால் வேத காலம் தொடங்கியது.
  • மொழி - இந்தோ-ஆரியம் .
  • கால்நடை மேய்ப்பவர்கள் .
  • இந்து குஷ் மலையில் உள்ள கைபர் கணவாய் வழியாக வந்தவர்கள்.
  • அழித்து எரித்துச் சாகுபடி செய்யும் முறை.
  • கருங்கடல் வடக்கே -பாக்ட்ரியா மார்ஜினா தொல்லியல் வளாகம் - ஆரியர் தாயகம்.
  • காலப்பகுதி - கிமு :1500-600 (இரும்பு காலம்).
  • ரிக்வேத கால ஆரியர்கள்- நாடோடிகள்.
  • வாழிடம் "சப்த சிந்து" - ஏழு ஆறுகள் ஓடும் நிலப்பகுதி.
  • கிமு 1000 ல் ஆரியர் கிழக்குநோக்கி கங்கைச் சமவெளிக்குப் பெயர்ந்தனர் .

வேதகால இலக்கியம் :


  • சுருதிகள்.
  • ஸ்மிருதிகள்.

சுருதிகள் :


  • நான்கு வேதங்கள்.
  • பிராமணங்கள் .
  • ஆரண்யங்கள் மற்றும் உபநிடதங்கள் சுருதிகள் ஆகும் .
  • சுருதி என்பது கேட்டல் .
  • இவைகள் எழுதப்படாதது,ஆனால் நிலையானது .
  • ரிக் வேதம் :
  • 10 காண்டங்கள் கொண்டது.
  • 7 முதலில் எழுதப்பட்டது.
  • 1, 8, 9 & 10 பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவை என்பர்.
  • முண்டா மற்றும் திராவிட மொழிச் சொற்கள் 300 சொற்கள் காணப்பட்டது.

ஸ்மிருதிகள் :


  • ஸ்மிருதிகள் இறுதியான எழுதப்பட்ட பிரதி .
  • ஆகமங்கள் ,தாந்திரீகங்கள் ,புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் ஸ்மிருதிகள் ஆகும் .
  • இவைகள் நிலையற்றது,ஆனால் எழுதப்பட்டது .

காலம், பரப்பு மற்றும் சான்று :


  • பரப்பு - வட இந்தியா.
  • காலம் - இரும்புக் காலம் (கிமு 1500 - 600 வரை) .
  • சான்று - வேதகால இலக்கியம் .

வேதகாலம் :


  • தொடக்க வேதகாலம் (கிமு1500 முதல் 1000 வரை).
  • பின் வேத காலம் (கிமு1000 முதல் 600 வரை ).

அரசியல் சமூகம் :


  • ரத்த உறவு கொண்டது .
  • குலம் அரசியலின் அடிப்படை .
  • தலைவர் - குலபதி .
  • ராஷ்டிரம் - ஜனா - விஸ் - கிராமம் .
  • ஜனா தலைவர் - ஜனஸ்யகோபா (மக்களின் பாதுகாவலன்).
  • விஸ் தலைவர்--விசயாபதி.
  • கிராமம் தலைவர்- கிராமணி.
  • விதாதா, சபா ,சமிதி மற்றும் கணா அமைப்புகள் அரசரைக் கட்டுப்படுத்தும் .
  • விதாதா --இனக்குழுவின் பொதுக்குழு மற்றும் பழமையானதாகும்.
  • சபா - மூத்தோர் மன்றம் .
  • சமிதி - மக்களின் பொதுக்குழு.
  • அரசருக்கு உதவியவர் - புரோகிதர் .
  • ராணுவ உதவி செய்தவர் - சேனானி (படைத்தளபதி)

பின் வேத காலத்தில் :


  • பல ஜனங்கள் இணைந்து ஜனபதங்கள் உருவாகின.
  • சபா ,சமிதி முக்கியத்துவம் இழந்தன .
  • விதாதா - கலைக்கப்பட்டது .
  • பாலி - மக்கள் மனமுவந்து அரசருக்கு அளிக்கும் நன்கொடை (1/6 ) பின்னாளில் இது வரியானது .
  • குரு, பாஞ்சால அரசுகள் வளர்ந்தன .
  • அயோத்தி ,இந்திரபிரஸ்தம் மற்றும் மதுரா உருவாயின .

சமூக அமைப்பு :


  • தந்தை வழி சமூகம்.
  • ஆரியரல்லாத மக்கள் தசயுங்கள் தாசர்கள் .
  • மூன்று பெரும் பிரிவுகள் காணப்பட்டன.
    • பொதுமக்கள் - விஸ் .
    • போர்வீரர்கள் - சத்ரியர்கள் .
    • மதகுருமார்கள் - பிராமணர் .
  • இதுவே பின்னாளில் 4 ஆனது.
    • பிராமணர் .
    • சத்திரியர்.
    • நில உடைமையாளர் - வைசியர் .
    • வேலைத் திறன் கொண்ட சூத்திரன் .

பெண்களின் நிலை :


ரிக்வேத காலத்தில் :


  • சுதந்திரம் காணப்பட்டது .
  • உடன்கட்டை இல்லை.
  • கைம் பெண் மறுமணம் உண்டு .
  • சொத்துரிமை இல்லை .
  • விதாதா, சபாகளில் பங்கேற்றனர் .
  • பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை .

பின் வேத காலத்தில் :


  • பலதாரமணம் காணப்பட்டது .
  • கைம்பெண் மணம் இல்லை.
  • கல்வி மறுக்கப்பட்டது.

பொருளாதார வாழ்க்கை :


  • கால்நடை மேய்ச்சல் வேளாண்மை முக்கியத் தொழில்.
  • பழுப்பு மஞ்சள் நிற மண்பாண்டங்கள் இக்காலத்தைச் சேர்ந்தது.
  • வளர்த்தவை - குதிரைகள்,பசுக்கள் ,ஆடுகள் ,செம்மறி ,ஆடுகள் , காளைகள் மற்றும் நாய்கள் பழக்கப் படுத்தினர்.
  • யவா(பார்லி) - முதன்மை பயிர் .
  • பின் வேதகாலத்தில்--வர்ணம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டங்கள் பயன்படுத்தினர்.
  • பண்டமாற்று முறை காணப்பட்டது .
  • தங்க நாணயம் - நிஷ்கா, சத்மனா.
  • வெள்ளி நாணயம் - கிருஷ்ணாலா .

மதம் :


  • ரிக்வேத காலத்தில் .
  • நிலம் ஆகாயம் கடவுள் வழிபாடு காணப்பட்டது.
  • பிருத்வி (நிலம்) , அக்னி (நெருப்பு) , வாயு (காற்று) ,வருணன் (மழை) இந்திரன் (இடி) ,அதிதி (நித்திய கடவுள்) மற்றும் உஷா (விடியற்காலை தோற்றம்).
  • குழந்தை( பிரஜா) பசுக்கள் (கால்நடைகள்) செல்வம் (தனா) ஆகியவற்றுக்காகக் கடவுளை வணங்கினர் .
  • சிலை வழிபாடு இல்லை .
  • பின்னாளில்.
  • இந்திரன்,அக்னி போன்றவை முக்கியம் இழந்தன .
  • பிரஜபதி, விஷ்ணு மற்றும் ருத்ரன் ஆகியவை முக்கியத்துவம் பெற்றன.

நான்கு ஆசிரமங்கள் வயது அடிப்படையில் :


  • பிரம்மச்சரியம் (மாணவப் பருவம்) .
  • கிரகஸ்தம் (திருமண வாழ்க்கை).
  • வனப் பிரஸ்தம் (காடுகளுக்குச் சென்று தவம் செய்தல்) .
  • சன்னியாசம் (துறவறம்). 

No comments:

Popular Posts