Tuesday, October 04, 2022

TNPSC G.K - 172 | சிந்துவெளி நாகரிகம் (Indus Valley Civilisation).

சிந்து சமவெளி நாகரிகம் /ஹரப்பா நாகரிகம் :


  • பழைய கற்காலம்- கி.மு 10,000 முன்பு.
  • புதிய கற்காலம் கி.மு 10000 - 4000.
  • செம்பு கற்காலம் கி.மு 3000 - 1500 (சிந்து சமவெளி நாகரிகம் இருந்தது).
  • இரும்பு கற்காலம் கி.மு 1500 - 600.

உலகின் தொன்மையான நாகரிகம் :


  • மெசபடோமியா நாகரிகம் கிமு 3500 2000.
  • சிந்து சமவெளி நாகரிகம் கிமு 3300 -1900 (அதிக பரப்பளவு கொண்டது ).
  • எகிப்து நாகரிகம் கிமு 3100 -1100 .
  • சீன நாகரிகம் கிமு1700 -1120.

பொதுவான குறிப்புகள் :


  • ஹரப்பா என்பது சிந்தி மொழி சொல் -புதையுண்ட நகரம் என பொருள் முதுபெரும் நகரம் என்றும் பொருள்.
  • மொகஞ்சதாரோ சிந்தி மொழிச் சொல் -இறந்தவர்கள் மேடு எனப் பொருள். கல்லறை மேடு எனவும் பொருள்.
  • சிவிக்ஸ் என்பது இலத்தீன் மொழிச் சொல் இதன் பொருள் நகரம்.
  • ஹரப்பா நாகரிகம் மொகஞ்சதாரோ நகர நாகரிகத்தை விட பழமையானது.
  • புவி எல்லை.
  • தெற்கு ஆசியாவில் இருந்து சிந்து நதியின் ராவி நதிக்கரை.
  • பரப்பளவு 13 லட்சம் சதுர கிலோமீட்டர் 1.3 மில்லியன் சதுர கிலோமீட்டர் . (15 லட்சம் சதுர கிலோமீட்டர் 1.5 மில்லியன் சதுர கிலோமீட்டர்).
  • நகரங்கள் 6.
  • கிராமங்கள்-200க்கும் மேற்பட்டவை.
  • எழுத்துக்கள் -5000.
  • முத்திரைகள் -26.
  • நிலத்தடி ஆய்வு முறை -காந்தப்புல வருடி.
  • எஞ்சிய தொல்பொருட்கள் -ரேடார் கருவி முறை.
  • கண்டுபிடிப்பு.
  • ரேடியோ கார்பன் முறை.
  • டேல்ட்ரோ காலக்கணிப்பு முறை.
  • ஐசோடோப்பு முறை C14.
  • ஹரப்பா -100 எக்டேர்.
  • மொகஞ்சதாரோ -200 எக்டேர்.

ஹரப்பா காலகட்டம் :


  • தொடக்ககால ஹரப்பா - கி.மு 3000 - 2600.
  • முதிர்ச்சியடைந்த ஹரப்பா - கி.மு 2600 -1900.
  • பிற்கால ஹரப்பா -கி.மு 1900 -1700 .
  • மார்டிமர் வீலர் -கி.மு 2500 -1500.
  • கதிரியக்க கார்பன் வயது கணிப்பு முறை- கி.மு 1300 - 1900 ( 2500-1500).
  • கியர் கி.மு - 3000 - 1500.

புவி எல்லை :


  • வடக்கு -ஆப்கானிஸ்தான் ஷோர் குகை.
  • கிழக்கு- உத்தரப்பிரதேசம் இந்தியா ஆலம்கீர் பூர்.
  • தெற்கு- மகாராஷ்டிரா தைமாபாத்.
  • மேற்கு -பாகிஸ்தான் சுட்கா சென் டோர்.

முக்கிய நகரங்கள் (found places) :


  • ஹரப்பா - பாகிஸ்தான், பஞ்சாப் ,மாண்ட் கோமரி மாவட்டம் ---ராவி நதிக்கரையில் உள்ளது.
  • மொகஞ்சதாரோ - பாகிஸ்தான், சிந்து மாகாணம் ,லர்கானா மாவட்டம் --சிந்து நதிக்கரை .
  • தோலவிரா - இந்தியா ,குஜராத் ராண்ஆப்கட்ச் .
  • காலிபங்கன் - இந்தியா ராஜஸ்தான் காஜர் நதிக்கரை --மெசபடோமியா முத்திரை ,பலிபீடம், வேள்விகள் ,குதிரைகள் இல்லை ஆனால் எச்சம் கண்டுபிடிப்பு.
  • லோத்தல் - இந்தியா ,குஜராத் ,சபர்மதி துணையாறு-- பாரசீக முத்திரைகள், கப்பல் கட்டும் தளம் .
  • பனாவலி- இந்தியா , ராஜஸ்தான், சரஸ்வதி நதி கரை --பார்லி பயிரிடப்பட்ட சான்று.
  • ராகி கர்கி -இந்தியா, ஹரியானா .
  • சுர்கொடா (சர்கோட்டடா - இந்தியா, குஜராத்.

ஹரப்பா கண்டுபிடிப்பு :


முதல் வருகை :


  • சார்லஸ் மேசன்.
  • உயரமான மேட்டுப்பகுதி கோபுரம் கட்டுமானம்.
  • பெண் சிலை.
  • கல் முத்திரைகள் கற்கள்.
  • மொகஞ்சதாரோ .
  • ஆண் சிலை .
  • பெருங்குளம்.
  • தானிய களஞ்சியம் .
  • மாபெரும் கட்டிடம்.

ஹரப்பா /மொகஞ்சதாரோ :


சார்லஸ் மேசன் :


  • ஹரப்பா முதன்முதலில் 1826 இல் வருகை .
  • 1842 பலுசிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் .
  • ஹரப்பாவை -இவர் புராதான நகரம் என அழைத்தார்.
  • பாழடைந்த செங்கோட்டை உயரமான சுவர்களுடன் ஒரு மலை மீது கட்டப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

சர் ஜான் மார்ஷல் :


  • இந்திய தொல்பொருளியல் தலைமை இயக்குனர்.
  • 1924 ஹரப்பா -மொகஞ்சதாரோ இடையேயான பொதுவான கூறுகள் கண்டறிந்தார்.
  • 1902 கர்சன் பிரபு இவரை இயக்குனராக நியமித்தார்.
  • 1913-1933 -20 வருடங்கள் தங்கி தட்சசீலம் அருங்காட்சியகம் 1918ல் அமைத்தார்.
  • காலம் 3250- 2750 ஹரப்பா காலம் எனக் குறிப்பிட்டார்.
  • 1921-ஹரப்பா கண்டுபிடிப்பு.
  • ஹரப்பா மொகஞ்சதாரோவை விட பழமையானது.
  • சர் ஜான் மார்ஷல், மாதவ் ஷாப்வாட்கண், ராய் பகதூர், தயாராம் சாகினி - 1912-1921.

R.D பானர்ஜி :


  • இந்திய தொல்பொருள் ஆய்வு மேதை.
  • 1922 மொகஞ்சதரோ கண்டுபிடிப்பு.

பிளீட் :


  • 1912 பல ஹரப்பா முத்திரை கண்டுபிடிப்பு.
  • ஈராசு பாதிரியார் :
  • சிந்து சமவெளியின் மொழி தமிழுடன் ஒத்து இருந்ததாக கூறினார்.
  • அலெக்சாண்டர்ரோ (1889 -1905 ) :
  • புதைபொருள் ஆராய்ச்சி.
  • ஆதிச்சநல்லூர் இது இந்தியாவின் ஆய்வுக்களம் (தொன்மை மிக்கது).

Dr.ஜாகர் :


  • ஜெர்மானியர் 1876.
  • ஆதிச்சநல்லூர் புதைபொருள் ஆராய்ச்சி .
  • அலெக்சாண்டர் பர்ன்ஸ் :
  • 1831 அம்பி (ஹரப்பா பண்பாடு )பகுதிக்கு வருகை புரிந்தார்.
  • மார்டிமர் வீலர் (ஆர் இ எம் வீலர்) :
  • 1944 -48 -->ஆராய்ச்சியின் பொற்காலம்.
  • மொகஞ்சதாரோ -தானியக்களஞ்சியம் கண்டுபிடிப்பு.
  • 1940 - பாண்டிச்சேரி அரிக்கமேடு பகுதியில் ரோமப் பேரரசு ஹரப்பா வணிகத் தொடர்பு கண்டுபிடிப்பு.

அலெக்சாண்டர் கன்னிங்காம் :


  • முதல் நில அளவையாளர்.
  • ஏ எஸ் ஐ ( ASI)1861 அமைப்பை நிறுவினார் - டெல்லி.
  • 1853,1856 ,1875 ஹரப்பா வந்தார்.
  • 1872 ,1875 பிராமி எழுத்து பொறித்த முதல் முத்திரை வெளியிடப்பட்டது.

மெஹர்கர் :


  • சிந்து சமவெளியின் முன்னோடி.
  • பாகிஸ்தான், பலுசிஸ்தான்- போலன் நதிக்கரையில் உள்ளது.
  • வேளாண்மை கால்நடை தொழில் மிக முன்பே செய்தனர்.
  • கிமு 7000 க்கு முற்பட்டது.
  • சிந்து சமவெளியின் வளர்ச்சி இதன் வீழ்ச்சிக்கு காரணம்.

நகர அமைப்பு :


  • மேல் நகர அமைப்பு - மேற்கு பகுதியில் அமைந்து இருந்தது -நிர்வாகிகள் , தானியக்களஞ்சியம் மற்றும் பெருங்குளம் இங்கு காணப்படுகிறது.
  • கீழ் நகர அமைப்பு - கிழக்குப் பகுதியில் அமைந்திருந்தது- மக்கள் வசித்தனர் , இது பரப்பளவில் பெரியது.

தெருக்கள் மற்றும் வீடுகள் :


  • சட்டக வடிவம் - வீடு, தெரு.
  • சாலைகள் அகலமாகவும் வளைவான முனைகள் கொண்டதாகவும் இருந்தது.
  • கிழக்கு மேற்காகவும் வடக்கு தெற்காகவும் செங்கோண வடிவம் போன்று வெட்டிக்கொள்ளும் தெருக்கள்.
  • வீடுகள் சேற்று மண் மற்றும் சுட்ட செங்கற்கள் கொண்டு கட்டப்பட்ட உயரமான வீடுகள்.
  • அரண்மனைகள் வழிபாட்டுத்தலங்கள் காணப்பட்டதற்கான சான்று இல்லை.
  • வீடுகளின் கூரை சமதளமாக இருந்தது.
  • மூடப்பட்ட கழிவுநீர் வடிகால் அமைப்பு காணப்பட்டது
  • ஒன்றுக்கு மேற்பட்ட தளங்கள் காணப்பட்டது
  • வீடுகளில் ஜன்னல்கள் இல்லை

பெருங்குளம் :


  • அகன்று செவ்வக வடிவில் இருந்தது.
  • நான்கு புறமும் நடைபாதை இருந்தது.
  • படிகள் வடக்கு தெற்கு பகுதியில் இருந்தன.
  • இயற்கை தார் ,சுண்ணாம்பு , ஜிப்சம் கொண்டு சுவர் பூசப்பட்டு இருந்தது.
  • உலகின் மிகப்பெரிய குளம் மொகஞ்சதாரோ.
  • 8 அடி ஆழம்x39 அடி நீளம் x21 அடி அகலம்.
  • வடக்கு மற்றும் தெற்கு புறத்தில் இருந்து உள்ளே செல்ல படிகள் மூன்று புறமும் அறைகள் இருந்தன.

தானியக் களஞ்சியம் :


  • ஹரப்பாவில் 6 தானிய களஞ்சியம்.
  • பெரியது மொகஞ்சதாரோ 150 அடி நீளம் 50 அடி அகலம்.
  • ஹரியானா- ராகிகர்கி- முதிர்ச்சி அடைந்த ஹரப்பா காலத்தை சேர்ந்தது.
  • நெல் ,கோதுமை, பார்லி ,பருப்பு மற்றும் எள் நில வெடிப்பில் காணப்பட்டது.

மாபெரும் கட்டிடம் :


  • மொகஞ்சதாரோ 20 தூண்கள் 4 வரிசைகள் கொண்ட கட்டிடம் காணப்பட்டது.
  • இது பொது கட்டிடம் அல்லது கூட்ட அரங்கு என அழைக்கப்பட்டது.

வேளாண்மை :


  • மக்கள் நிலையாக வாழ்ந்ததற்கு சான்று வேளாண்மை.
  • பயிரிடுதல் -பார்லி ,கோதுமை .
  • இரட்டை பயிரிடுதல் முறை.
  • உழவர் கலப்பை- கலிபங்கன் பகுதியில் காணப்பட்டது.
  • பாசனம் - கிணறு , கால்வாய் பயன்பாடு காணப்பட்டது.

விலங்குகள் :


  • மேய்ச்சல் முக்கிய தொழில்.
  • மாடு பெரியமாடு - ஜெபு (செபு) என அழைக்கப்பட்டது மற்றும் ஹரப்பா .முத்திரையில் சித்தரிப்பு.
  • பெரிய காளை -முத்திரை பொறிப்பு.
  • குதிரை இவர்களுக்குத் தெரியாது (எச்சம் கலிபங்கன் பகுதியில் இருந்தன) .
  • உணவு - மீன், பறவை.
  • மான், முதலை மற்றும் காட்டுப்பன்றி இவைகள் வளர்த்ததற்கான சான்று கிடைத்தது.
  • வளர்த்தவை -செம்மறி ஆடு, வெள்ளாடு, எருமை ,பன்றி ,கோழி மற்றும் மாடு.

சுண்ணாம்புக்கல் சிலை :


  • ஸ்டீட் டைட், மொகஞ்சதாரோ தலைவர்.
  • அமர்ந்த நிலையிலான சிலை மதகுரு தலைவர் அல்லது பூசாரி அரசர்.
  • நடன மங்கையின் சிலை :
  • செம்பு.
  • நடனமாது.
  • 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது சர் ஜான் மார்ஷல்.
  • கண்டுபிடிப்பு 1926 மார்டிமர் வீலர்.
  • 10.8 சென்டிமீட்டர் உயரம் கொண்டது.

கைவினை தயாரிப்பு :


  • பொருளாதாரத்தில் முக்கியமானது.
  • மண்பாண்டத்தின் நிறம் - சிவப்பு கருப்பு கலந்த நிறம்.
  • கார்னிலியம் சிவப்பு நிற மணி கற்கள்.
  • ஜாஸ்பர் கிரிஸ்டல் ,படிகக்கல், ஸ்டீட் டைட் (நுரைக்கல்).
  • செம்பு தங்கம் சங்கு பீங்கான் சுடுமண் அணிகலன் உலோக சிலைகள் .மெசபடோமியாவிற்கு ஏற்றுமதி செய்தனர்.
  • சங்கு - நாகஷ்வர் பாலக்கோட்
  • கார்னிலியன் - லோத்தல்.
  • ஸ்டீட் டைட்- தெற்கு ராஜஸ்தான்.
  • வைடூரியம் -ஷோர்குகை.
  • செம்பு - ராஜஸ்தான் ஓமன் ஹேத்ரி.
  • ரோரி செர்ட்- பாகிஸ்தான்.
  • உலோகக் கருவிகள் ஆயுதங்கள் :
  • ஹரப்பா நாகரிகம் வெண்கல கால நாகரிகம்.
  • செம்பு வெண்கலத்தில் கருவிகள் செய்தனர்.
  • ரோரி செர்ட் கருவிகள், படிகக் கற்கள் - கத்தி பிளேடு.
  • அம்பு ,ஈட்டி, கோடாரி, உளி.
  • எலும்பு, தங்கம் கொண்டு கருவிகள் செய்தனர்.

ஆடைகள் அணிகலன்கள் :


  • பருத்தி கம்பளி பட்டு ஆடைகள் பயன்படுத்தினர்.
  • கல் மற்றும் உலோக அணிகலன்கள் பயன்படுத்தினர்.
  • சங்கு சிற்பம் மெசபடோமியாவிற்கு ஏற்றுமதி செய்தனர்.

வணிகம் :


  • பெரும் வணிகர்களாக இருந்தனர்.
  • ஹரப்பா மெசபடோமியா வணிகத் தொடர்பு அதிகம்.
  • மேற்காசிய பகுதிகளில் (சுமேரிய நாகரீகம்) ஹரப்பா முத்திரை .காணப்பட்டுள்ளது ஓமன் பக்ரைன் ஈரான் ஈராக்.
  • கியூனிைபார்ம் ஆவணங்களில் :
  • ஹரப்பா மெசபடோமியா வணிக தொடர்பு பற்றி கூறுகிறது.
  • கியூனிபார்ம் எழுத்துக்களில் மெலுஹாக என சிந்துப் பகுதி கூறப்பட்டுள்ளன.
  • ஆரங்கள் இல்லாத சக்கர வண்டிகள்.
  • ஹரப்பா ஜாடி ஓமன் பகுதியில் கிடைத்தது.
  • குஜராத் லோத்தல் கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் காணப்பட்டுள்ளது.
  • சுமேரிய அக்காடிய பேரரசின் நாரம் சின் "மெலுக்கா" என்ற இடத்தில் அணிகலன் வாங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • கார்னிலியன், வைடூரியம் , செம்பு, தங்கம், மரங்கள் மெசபடோமியா ஏற்றுமதி
  • மெசபடோமியா மெலுக்கா குறிப்பு.
  • உங்களது பறவை ஹஜா மயில் ஆகுக அதன் ஒலி அரண்மனையில் கேட்கட்டும்.

எடைக்கற்கள் அளவீடுகள் :


  • சரியான எடைகள் அளவீடுகள் குச்சிகள் நீளம் அளக்க பயன்பட்டது.
  • எடைக்கற்கள் கனசதுர வடிவம் கொண்டது.
  • இரட்டிப்பு முறை 1:2 :4 :6 :8 :16 : 32 .
  • சிறிய எடை அளவீடு 13.63 கிராம்.
  • யானை தந்தம் அளவீடுகள் =1704 மில்லிமீட்டர் குஜராத் பகுதியில் காணப்பட்டது.
  • 1 இன்ச்= 1.75 சென்டிமீட்டர்.

எழுத்து முறை / முத்திரைகள் :


  • செவ்வக வடிவ முத்திரைகள்.
  • நுரைக்கல், செம்மண், களிமண், சுடுமண் மூலம் முத்திரை செய்தனர்.
  • சித்திர வடிவ எழுத்துக்கள்.
  • உருளை வடிவ முத்திரைகளும் பயன்படுத்தினர்.
  • யோக முத்திரை ஒரு மனிதர் அமர்ந்து இயற்கையை காணும் வடிவம்.
  • களிமண் முத்திரை -காளை, புறா, படகு ,வண்டி பொறிக்கப்பட்டன.
  • சுடுமண் முத்திரைகள் பயன்படுத்தினர்.
  • முதல் எழுத்து வடிவம் சுமேரியர்கள் உடையது.
  • முதுமக்கள் தாழி- தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
  • சுடுமண் மண்பாண்டங்கள் செய்யும் முறை டெரகோட்டா முறை வண்ணம் கருப்பு சிவப்பு கோப்பை குவளை தட்டு செய்தனர்.

கலை பொழுதுபோக்கு :


  • சுடுமண் பொம்மைகள்.
  • கல்வி முக்கியத்துவம்.
  • ஜாதி வேறுபாடு இல்லை.
  • ஹரப்பா மொகஞ்சதாரோ தோலவிரா ஆகிய பகுதிகளில் கல் சிற்பங்கள் கிடைத்தது.

தொழில்கள் :


  • வணிகர்கள் வர்த்தகர்கள் கைவினைஞர் இருந்தனர்.
  • கால்நடை பராமரிப்பு.
  • பாசிமணி தொழில் சிறப்பு பெற்றது.
  • ஒட்டக பயணம் செய்தனர்.
  • கடவுள் வழிபாடு :
  • பெண் கடவுள் சிலை.
  • மரம் - அரச மரம் ,வேம்பு.
  • விலங்கு - திமில் காளை.
  • கலிபங்கன் வேள்விகள் சான்று.

இறப்பு :


  • இறந்தவர்களை புதைத்தனர்.
  • நாகரிகம் உருவாக்கியவர்கள் இந்திய பண்பாடும் :
  • ஹரப்பா மக்கள் திராவிட மக்கள்.
  • கிழக்கு தெற்கு பகுதிகளுக்கு இடப்பெயர்வு செய்தனர்.
  • அதிக குழுக்கள் விவசாயம் ,கால்நடை வளர்ப்பு, உணவு சேகரித்தல்.
  • அதிக எழுத்துக்கள் பொருள் அறியப்படவில்லை.

கே வி டி வளாகம் :


  • கொற்கை தொண்டி வஞ்சி வளாகம்.
  • பாகிஸ்தான் --கொற்கை ,வஞ்சி ,தொண்டி, மத்ரை, உறை, கூடல்கர்.
  • ஆப்கானிஸ்தான்-- பூம்புகார், கொற்கை ஆறுகள்- காவ்ரி ,பொருணஸ்.
  • பாகிஸ்தான் -ஆறுகள் -காவிரி வாலா , பொருணை.

ஹரப்பா வீழ்ச்சி :


  • கிமு 1900.
  • காலநிலை.
  • இயற்கை.
  • ஆரியர் வருகை.
  • தோற்று நோய்.
  • கிமு 1800 அளவில் வீழ்ச்சி காணப்பட்டது.
  • கிமு 1700 பெரும்பாலான நகரங்கள் கைவிடப்பட்டன.
  • காக்கர் ஹக்ரா ஆறு முறைமை இல்லாமல் போனதும் காரணம். 

No comments:

Popular Posts