Tuesday, October 04, 2022

TNPSC G.K - 165 | டெல்லி சுல்தான்கள் PART 2

டெல்லி சுல்தான்கள் 1206 -1526 :


  1. அடிமை வம்சம் (கிபி 1206 முதல் 1290 வரை).
  2. கில்ஜி வம்சம் (1290 - 1320).
  3. துக்ளக் வம்சம் (1320 - 1414).
  4. சையது வம்சம் (1414 - 1451).
  5. லோடி வம்சம் (1451 - 1526).

அடிமை வம்சம் :


  • மாம்லுக் என்ற அரேபிய சொல்லுக்கு உடைமை என்று பொருள்.
  • பண்டகன் பாரசீக சொல்.
  • குத்புதீன் ஐபக் -குத்பி மரபு (1206 - 1210).
  • இல்துமிஷ் -முதலாவது இல்பாரி மரபு (1210 - 1266).
  • பால்பன் -இரண்டாவது இல்பாரி மரபு (1266 - 1290).

குத்புதீன் ஐபக் 1206 - 1210 :


  • அடிமை வம்சத்தை (Slave dynasty) நிறுவியவர்.
  • டெல்லிக்கு அருகில் இந்திரப்பிரஸ்தம் என்ற ராணுவ நிலையம் நிறுவினார்.
  • அரியணை ஏற்றம் 1206 ஜூன் 24.
  • டெல்லி தலைநகரை லாகூருக்கு மாற்றிப் பின் மீண்டும் மாற்றினார்.
  • தனது பெயரில் நாணயங்கள் வெளியிடுதல் குப்தா படிப்பதை விரும்பாதவர்.
  • ஜெசியா வரி விதித்தார்.
  • இஸ்லாம் பற்று கொண்டவர் லாக்பாக் ஷ் என்று அழைக்கப்பட்டார் (கொடைக்காக).
  • அடிமை அரசன்.
  • சூஃபி குவாஜா குத்புதீன் பக்தியார் நினைவாகக் குதுப்பினார் கட்ட ஆரம்பித்தார்.
  • டெல்லியில் கட்டப்பட்டது 238 அடி உயரம்.
  • சமரச கொள்கையைப் பின்பற்றினார்.
  • மசூதிகள் - அஜ்மீரில் குவ்வத்துல் இஸ்லாம் மசூதி, டெல்லி தாய்டின்கா கோஸ்பரா.
  • அறிஞர்கள் - ஹாசன் நிசாமி, பக்ரே முதிர்.
  • மத்திய, மேற்கு சிந்து கங்கை சமவெளியைக் குத்புதீன் கைப்பற்றினார்.
  • கீழ் கங்கை சமவெளி முகமது பின் பக்தியார் கில்ஜி தலைமை படைமூலம் கைப்பற்றினார்.
  • மரணம் லாகூர் 1210 நவம்பர் குதிரை (போலோ) சவுகான் விளையாட்டில் இறந்தார்.

ஆரம் ஷா :


  • 1210 எட்டு மாதங்கள் ஆட்சி செய்தார்.
  • குத்புதீன் மகன் ஆரம் ஷா.
  • லாகூரில் முடிசூட்டிக் கொண்டார்.

இல்துமிஷ் 1210 - 1236 :


  • ஆரம் ஷாவை கொன்று ஆட்சியைக் கைப்பற்றினார்.
  • குத்புதீன் மருமகன்.
  • ஷாம்சி / இல்பாரி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்.
  • அபெர்லாய் துருக்கியர் ஆவார்.
  • சம்சுதீன் இல்துமிஷ் இயற்பெயர்.
  • இலம்கான் இவரின் தந்தை.
  • லாகூரிலிருந்து டெல்லிக்கு தலைநகரை மாற்றினார்.
  • டெல்லி இரண்டாம் பாக்தாத்.
  • மேல்தட்டு அடிமைகள் (துருக்கிய மங்கோலிய அடிமைகள்).
  • புக்காரா, சாமர்கண்ட், பாக்தாத், மிஹிகிரி அடிமைகளை வாங்கி துருக்கிய பட்டம் கொடுத்தனர் பின் ஆளுநர்களாக நியமனம் செய்தார்.
  • குவாலியர், ரன்தம்பூர், அஜ்மீர், ஜலோர் ராஜபுத்திரர்கள் இடையேயான பிரச்சனையைச் சமாதானம் செய்தார்.
  • மங்கோலிய தளபதி செங்கிஸ்கான் தெமுஜின்.
  • மத்திய ஆசியா ஜலாலுதீன் மங்கபர்னி (கவார்இஸ்மி ஷா ஜலாலுதீன்) ஆதரவு மரபுமூலம் செங்கிஸ்கான் படையெடுப்பைத் தவிர்த்தார்.
  • நாற்பதின்மர் குழுவைச் சகல்கான்கள் (பாதுகாப்புக்காக) நிறுவினார் இவரின் அடிமைகள் ஷம்ஹி பண்டகன்.

நாணய முறை :


  • அரேபிய நாணய முறையை ஆரம்பித்தார்.
  • டாங்கா (தாங்கா) வெள்ளி நாணயம் (175 mg).
  • ஜிடாஸ் செம்பு நாணயம்.
  • ஒருபுறம் இல்துமிஷ் மறுபுறம் இரசியா முகம் பொறிக்கப்பட்டது மற்றும் அரேபிய எழுத்து பொறிக்கப்பட்டது.

இக்தாதார் முறை (இக்தா) :


  • ராணுவத்தில் உள்ள வீரர்கள் இதிலிருந்து வருவாய் பெறுதல் மற்றும் வரி வசூலிக்க முடியும்.

குதுப்பினார் :


  • 238 அடி உயரம் கட்டி முடித்தார்.
  • அஜ்மீர் (ajmir) அழகிய மசூதி கட்டினார்.

அறிஞர்கள் :


  • மினஸ் உஸ்சிராஜ்.
  • தாஜீதீன்.
  • மாலிக் குத்பதீன் ஹசன்.
  • பக்குல் முல்க் இசாமி.
  • நிசாம் உல் முல்க் முகமது ஜெய்னதி.

போர்கள் :


  • கோரி வழித்தோன்றலில் உள்ள யுல்துஸ் என்பவரைத் தோற்கடித்தார்.
  • உச் லாகூர் முல்தான் மன்னர் நசுருதீன் குபாச்சு பக்சார் பகுதியில் தோற்கடித்தார்.
  • இவாஸ் தோற்கடித்து தோ ஆப் பகுதியைக் கைப்பற்றினர்.
  • 1229 கலிபாக்கள் பட்டயம் வழங்கினார்.
  • 1230 கில்ஜி மாலிக் கலகம் அடக்கினார்.
  • ஜாலோர் மன்னர் உதய சிங்கை வென்று குறுநிலமாக ஆளுகைக்கு கீழ் கொண்டு வந்தார்.
  • வங்காளம், பீகார், சிந்து, முல்தான் பகுதிகளைக் டெல்லி உடன் இணைத்தார்.
  • தங்ககிரி, அஜ்மீர், சம்பா நாகூர் கலிஞ்சார் குவாலியர் இல்துமிஷ் ஆட்சியுடன் இணைக்கப்பட்டது.
  • ரந்தம்பூர், ஜாலோர், அஜ்மீர் மீண்டும் கைப்பற்றினார்.
  • குதுப்பினார் கட்டி முடித்தார்.
  • 1236 மரணம் (பம்யான் மீது போர் தொடுக்கும் காலத்தில் இறந்தார்).
  • மாவளத்தின் பரமாரர்களுக்கு எதிரான அவர் படையெடுப்பு பலனளிக்கவில்லை.
  • இல்துமிஷ் மகன் ருக்குதின் பெரோஸ் (முல்தான் கலகத்தில்) இழப்பின் காரணமாக ரசியா ஆட்சி பொறுப்பேற்றார்.
  • பக்ரம்சா (1240 - 1242).
  • அலாவுதீன் மகத் (1242 - 1246).
  • நசுருதீன் முகமது (1246-1266).

ரசியா பேகம் :


  • டெல்லி சுல்தான்களில் முதல் பெண்ணரசி(first woman ruler of the Delhi Sultanate and she ruled from 1236).
  • ரத்தம் சிந்தாத ஆட்சி.
  • அமீர்கான் ஆட்சிப் பொறுப்பை ஏற்க உதவினார்.
  • ஜலாலுதீன் யாகூத் குதிரைப் படை வீரர் உதவினார்.
  • படிண்டா பகுதியின் ஆளுநர் அல்துணியா மீது 1240 ல் போர் செய்தார் ரஷ்யா தோற்றார் இந்தப் போரில் யாகூத் கொல்லப்பட்டார்.
  • அல்துணியா இரசியாவை சிறை பிடித்தார் பின்னர் அல்துணியா இரசியாவிற்கு டெல்லியை மீண்டும் கைப்பற்ற உதவினார் ஆனால் இரசியாவின் சகோதரர்கள் சூழ்ச்சியால் ரசியாவை கொல்லப்பட்டார்.
  • இரசியாவின் கொள்கை பிரித்தாளும் கொள்கை.
  • சட்டம் ஒழுங்கு நிலைநாட்டினார்.
  • லாகூர், முல்தான், ஹன்சி, பதௌன் முதலில் எதிர்த்துப் பின்னர் ஆதரவு அளித்தன.
  • ரசியா வீழ்ச்சி உயர்குடியினர் எழுச்சி இரசியாவை பற்றி மொராக்கோ மற்றும் இபின் பதூதா கூறுகின்றனர்.

பக்ரம்சா 1240 - 1242 :


அலாவுதீன் மகத் 1242 -1246 :


நசுருதீன் முகமது 1246 - 1266 :


  • பக்ரம்சா மற்றும் அலாவுதீன் மசூத் கொன்று ஆட்சியைப் பிடித்தார்.
  • பொம்மை அரசர் 1264 உடல் நிலை குறைந்து 1266 இல் இறந்தார்.
  • 1254 சிவாலிங் ஆட்சிப் பகுதியின் தளபதி உலுக்கான் டெல்லியை கைப்பற்றினார் (நயிப் இ முல்க்) ஆட்சி அதிகாரப் பிரதிநிதி என்ற பொருள்படும் பட்டத்துடன் ஆட்சிப் பொறுப்பேற்றார்.

பால்பன் 1266 - 1286 :


  • கியாசுதீன் அல்தீன் பால்பன் உலுக்கான் என்பவர் பால்பன்.
  • இயற்பெயர் பகாயுதீன்.
  • நாற்பதின்மர் குழுவை ஒடுக்கினார்.
  • இஸ்லாமிய இறையாண்மை கோட்பாட்டைப் பின்பற்றினார்.
  • தெய்வீக உரிமைக் கோட்பாடு கடவுளின் நிழல், கடவுளால் படைக்கப்பட்டவன் எனக் கூறிக் கொண்டார்.
  • பைபோஸ் முறை.
  • மங்கோலிய பொறுப்பு ஆளுநர் செங்கிஸ்கான் ஹிலுக் உடன் நல்லுறவு பேண முயற்சித்தார்.
  • நவரோஸ் பாரசீக திருவிழாவைக் கொண்டுவந்தார்.
  • ஒற்றர் படை திவானி அர்ஸ் தனிப்படை உருவாக்கினார்.
  • இவர் அடிமை, நீர் சுமப்பவர், வேட்டைக்காரர் மற்றும் ஆளுநராக இருந்தார்.
  • மிகவும் பிடித்த அடிமை துக்ரில் கான் வங்க ஆளுனராக நியமித்துப் பின் இவர் பால்பனுக்கு எதிராகக் கலகம் செய்தார்.
  • 1279 - துக்ரில் கான் வெல்ல அமீர்கான் (அவத் ஆளுநர்) அனுப்பி வைத்தார் ஆனால் இந்தப் போரில் தோற்றார் மேலும் 2 படைகளின் தோல்விக்குப் பிறகு பால்பன் வங்கத்தின் மீது போர் தொடுத்து போரில் (திரிபுராவில்)கொன்றார்.
  • வங்க ஆளுநராகப் பால்பன் மகன் புக்ரா கான் நியமிக்கப்பட்டார்.
  • இக்தாதார் முறையைச் சரி செய்து பார்த்துக் கொண்டார்.
  • மேவாடிஸ் கொள்ளையர்களை மேவார் பகுதியில் தோற்கடித்தார்.

அறிஞர்கள் :


  • அமிர் குஸ்ரு, அமிர் ஹாசன்.
  • அமிர் குஸ்ரு (இந்தியக் கிளி) 4 லட்சம் ஈரடி செய்யுள் எழுதியதால் இப்பெயர் பெற்றார்.

போர்கள் :


  • சட்லெஜ் நதியைத் தாண்டிப் போரிடாமல் இருக்க குலாகுகான் உடன் ஒப்பந்தம் செய்துகொண்டார். மங்கோலிய படையெடுப்பில் முகமது கான் கொல்லப்பட்டார் (பால்பன் மகன்).
  • மாலிக் பாக் பாக் பதௌன் பகுதியின் ஆளுநர் பால்பனின் நண்பர்கள்.
  • மாலிக் ஹபத் அயோத்தி பகுதியின் ஆளுநர்.
  • இவர்களை நீதிக்காகக் கொன்றார்.
  • படிண்டா, சுனம், சாமானா ஆகிய கோட்டைகளில் கூடுதல் படைகளை நிறுத்தி வைத்தார்.
  • தோ ஆப் - ராஜபுத்திரர்களை வென்றார்.
  • ஆப்கானியர்களை நியமித்துச் சாலை சீரமைப்பு, பயிரிடுதல் போன்றவற்றை சீரமைத்தார்.
  • 1286 பால்பன் மறைவு.
  • திவானி அர்ஸ் என்ற ராணுவ துறையை ஏற்படுத்தி ராணுவ நிர்வாகம் சீரமைத்தார்.
  • முகமது : மங்கோலியருக்கு எதிரான போரில் கொல்லப்பட்டார்.
  • கைக்குபாத் மற்றும் கையுமார் - ஜலாலுதீன் பெரோஸ் உதவியுடன் 1290 வரை ஆட்சி செய்தனர்.

No comments:

Popular Posts