Monday, October 03, 2022

TNPSC G.K - 162 | குப்தப் பேரரசு.

குப்தப் பேரரசு :


  • காலம் : கிபி 300- 700.
  • ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத்.
  • தலைநகர் : பாடலிபுத்திரம்.
  • இந்தியாவின் பொற்காலம் குப்தர் காலம் என R.S. வர்மா கூறுகிறார்.
  • செவ்வியல் கலைகளின் காலம், பண்பாட்டு மலர்ச்சியின் காலம் சமஸ்கிருத வளர்ச்சி காலம்.
  • இந்துக்கள் அரசர்களாக இருந்தனர்.

 

இலக்கியச் சான்றுகள் :


  • ஸ்மிருதிகள் - நாரதர், விஷ்ணு, பிரகஸ்பதி, காத்யாயனா மற்றும் வாயு பாடல்கள்.
  • விசாகதத்தர் - தேவி சந்திரகுப்தம், முத்ரா ராட்சசம்.
  • காளிதாசர் - சாகுந்தலம், மேகதூதம், ரகுவம்சம், குமார சம்பவம், சூத்ரகர் (மிருகசகடிதம்).
  • காமந்தகார் - நீதிசாரம் (தர்மசாஸ்திரம்).
  • ஹர்ஷர் - ரத்னாவளி, நாக நந்தா, பிரியதர்ஷினி.
  • பாணர் - ஹர்ஷ சரிதம்.
  • யுவான்சுவாங் (சீன பயணி) - சியுகி.
  • பாகியான் - பயணக்குறிப்புகள்.
  • புத்த சமண இலக்கியங்கள்.

நாணயச் சான்றுகள் :


  • சமுத்திரகுப்தர் வெளியிட்ட நாணயத்தில் வீணையுடன் அமர்ந்திருக்கும் காட்சி பொறிக்கப்பட்டுள்ளது.
  • இரண்டாம் சந்திரகுப்தர் வெள்ளி நாணயங்கள் முதலில் வெளியிட்டார்.
  • முதலாம் குமார குப்தர் பல நாணயங்களை வெளியிட்டார்.
  • தங்கம், வெள்ளி மற்றும் செப்பு நாணயங்களை வெளியிட்டனர்.

கல்வெட்டுச் சான்றுகள் :


  • மெஹருளி இரும்பு தூண் கல்வெட்டு - டெல்லி முதலாம் சந்திரகுப்தர் பற்றிக் கூறுகிறது.
  • அலகாபாத் தூண் கல்வெட்டு (பிரயாக் கல்வெட்டு) சமுத்திர குப்தர் காலத்தில் நிறுவினார்.
  • பொறித்தவர் அமைச்சர் ஹரிசேனர்.
  • பிரசஸ்தி என்பது மெய்க்கீர்த்தி அல்லது புகழுரை கல்வெட்டு எனப்படும்.
  • 33 வரிகள் கொண்டது.
  • சமஸ்கிருதத்தின் நாகரி வரிவடிவில் பொறிக்கப்பட்டுள்ளது.
  • உதயகிரி குகை கல்வெட்டு, மதுரா கல்வெட்டு மற்றும் செஞ்சி பாறை கல்வெட்டு இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தவை.
  • பிடாரி ஒற்றை தூண் கல்வெட்டு ஸ்கந்த குப்தர் பற்றிக் கூறுகிறது.
  • குப்த ஆண்டு குப்த ஆண்டு 165 என்று தேதி குறிப்பிடப்பட்டுள்ள புத்த குப்தரின் ஈரன் கல்வெட்டு (காளி நதி மற்றும் நர்மதை நதி இடைப்பட்ட நிலத்தை ஆட்சி செய்த லோக பாலா என்று மகாராஜா சுரஷ்மிசந்திரா பற்றிக் கூறுகிறது.
  • கத்வா பாறை கல்வெட்டு.

செப்புப்பட்டயம் :


  • மதுபான் செப்புப்பட்டயம்.
  • சோனாபட் செப்புபட்டயம்.
  • நளந்தா களிமண் முத்திரை பொறிப்பு.
  • பஹார்பூர் செப்பேடு.

குப்த அரசர்கள் :


  1. ஸ்ரீ குப்தர்.
  2. கடோத்கஜர்.
  3. முதலாம் சந்திரகுப்தர்.
  4. சமுத்திரகுப்தர்.
  5. இரண்டாம் சந்திரகுப்தர்.
  6. குமார குப்தர்(12th BOOK கடைசி பேரரசர்).
  7. புரு குப்தர்.
  8. புத்த குப்தர்.
  9. பாலாதித்யர்(10th BOOK கடைசி பேரரசர்).
  10. விஷ்ணு குப்தர் (கடைசி அங்கீகரிக்கப்பட்ட அரசர்).

ஸ்ரீ குப்தர் :


  • வங்காளம், பீகார் படையெடுத்துக் கைப்பற்றினார்.
  • குப்தா நாணயத்தின் இவரின் உருவம் பொறிக்கப்பட்டது.
  • குப்த மரபைத் தோற்றுவித்தவர்.

கடோத்கஜர் :


  • ஸ்ரீ குப்தர் மகன்.
  • ஸ்ரீ குப்தர் மற்றும் கடோத்கஜர் இருவரும் மகாராஜா என அழைக்கப்பட்டனர்.

முதலாம் சந்திரகுப்தர் :


  • காலம் :கிபி 319 -335.
  • கடோத்கஜர் மகன்.
  • கிபி 320 குப்த யுகம் என்ற கால கணக்கிடும் முறையைத் தொடங்கி வைத்தார்.
  • மெஹ்ருளி இரும்பு தூண் கல்வெட்டுப் போர் வெற்றி பெற்று கூறுகிறது.
  • லிச்சாவி- கங்கை சமவெளியில் தாராய் பகுதி அரச குடும்பத்தின் குமார தேவியை மணம் செய்து கொண்டார்.
  • லிச்சாவி பழமையான கணசங்கம்.
  • கங்கை நேபாளம் இடைப்பட்ட பகுதி.
  • தங்க நாணயத்தில் முதலாம் சந்திரகுப்தர் மற்றும் குமார தேவியின் படம் பொறிக்கப்பட்டது.
  • “லிச்சாவையா” என்ற வார்த்தை நாணயங்களில் பொறிக்கப்பட்டது.
  • சிறப்புப் பெயர் :மகாராஜாதி ராஜா, அதிராஜா (அரசர்களுக்கு அரசன்).

சமுத்திரகுப்தர் :


  • காலம் : கிபி 335 375
  • குப்த மரபிலேயே மிகச் சிறந்த அரசராக விளங்கினார்.
  • அசோகர் தூண் கல்வெட்டு இவர்பற்றிக் கூறுகிறது.
  • சிறப்புப் பெயர்: கவிராஜா (பாடல்கள் இயற்றும் திறமையால்), 100 போர்க்களங்களின் கதாநாயகர், இந்திய நெப்போலியன், புருஷா (அனைவருக்கும் மேலானவர்).
  • அலகாபாத் கல்வெட்டு (பிரயாக் கல்வெட்டு) பிரயாக் பகுதியைக் கைப்பற்றியதாகப் பொறிக்கப்பட்டுள்ளது. பொறித்தவர் அமைச்சர் ஹர்ஷவர்த்தன்.

படையெடுப்பு :


  • கங்கை சமவெளி வட இந்திய படையெடுப்பு.
  • ராஜஸ்தான் பகுதியின் 9 அரசர்களைத் தோற்கடித்தார்.
  • நாகர்கள் உடன் அதிக போர்(அச்சுதர் மற்றும் நாக பாணன்.
  • தென்னிந்திய படையெடுப்பு (தட்சின பாதா).
  • 12 அரசர்களை வென்றார்.
  • காஞ்சிபுரம் விஷ்ணு கோபர்(பல்லவ அரசர்) வென்றாரென அலகாபாத் கல்தூண் கல்வெட்டு கூறுகிறது.
  • இலங்கை அரசு, சாகர் அரசு, தெய்வபுத்திர சாகனுசாகி (குஷாண பட்டம்) ஆகியோரை கப்பம் கட்ட வைத்தார்.
  • ராஜஸ்தான் பழங்குடியினர், காட்டு ராஜாக்கள், கிழக்கு வங்காளம், அசாம் மற்றும் நேபாளம் போன்ற பகுதிகளை வென்றார்.
  • V.A. ஸ்மித்- பிரெஞ்சு அரசனுக்கு நிகராக இருந்ததால் இந்திய நெப்போலியன் என்று அழைத்தார்.
  • வைணவ சமயத்தைச் சேர்ந்தவர்.
  • ஆதரிக்கப் பட்டவர்கள்: ஹரிசேனர் மற்றும் வசுபந்து (பௌத்த அறிஞர்).
  • இலங்கை அரசன் மேகவர்மன் (மானவர்மன்) இவருக்குக் கடிதம்மூலம் புத்தகயா கட்ட அனுமதி கேட்டு எழுதியுள்ளார்.
  • அனைத்து சமயங்களையும் ஆதரித்தார்.
  • எட்டுவகை நாணயம் வெளியிட்டார்.
  • வீணையுடன் அமர்ந்துள்ள உருவம் இவரின் நாணயத்தில் பொறிக்கப்பட்டிருந்தது.
  • அஸ்வமேதயாகம் செய்தார்.

No comments:

Popular Posts