Monday, October 03, 2022

TNPSC G.K - 161 | மௌரிய பேரரசு.

மௌரிய பேரரசு :


  • சந்திரகுப்த மௌரியர், அலெக்ஸாண்டரின் படை எடுப்பின்போது தட்சசீலம் இளைஞராக இருந்தாரெனக் குறிப்பிடப்படுகின்றன.
  • கிரேக்க வரலாற்று ஆசிரியர்கள் - ”சண்ட்ரகோட்டஸ்”, “சண்ட்ரகோப்டஸ்”. இது சந்திரகுப்தரின் திரிபுகள்.

சந்திரகுப்தர் :


  • கிமு 321 மௌரிய பேரரசு அமைத்து அதன் முதல் பேரரசர் ஆனார்.
  • குஜராத் வரை எல்லையை விரிவு செய்ததாக ஜுனாக எழுத்துக்கள் கூறுகின்றன.
  • சிறந்த ஆட்சியாளர்.
  • அலெக்சாண்டரின் தளபதி செலியூகஸிடம் போர் செய்து பஞ்சாபை கைப்பற்றினார்.
  • பின்னர் உடன்படிக்கை செய்து கொண்டனர்.
  • சந்திரகுப்தர் 500 யானைகளைச் செலியூகஸிற்கு வழங்கினார்.
  • செலியூகஸ் சந்திரகுப்தர் அவைக்கு மெகஸ்தனிஸ் தூதுவராக அனுப்பினார்.
  • ஆலோசனைகளை வழங்கியவர் - சாணக்கியர்.
  • “விஷ்ணு குப்தர்“ (கௌடில்யர்).
  • ஒரு பிராமணர்.
  • அர்த்தசாஸ்திரம் (அரசியல் நிர்வாகம்).
  • முத்ரா ராட்சசம் (தந்திரங்கள் யுத்திகள் கொண்டது)எழுதியவர்- சாணக்கியர்.
  • சந்திரகுப்தர் சமணத் துறவியாகச் சென்றாரெனக் கருதப்படுகிறது.
  • சரவணபெலகுலாவிற்கு (கர்நாடகா) அருகில் உள்ள சந்திரகிரியில் துறவியாக வாழ்ந்தாரென நம்பப்படுகிறது.

பிந்துசாரர் :


  • சந்திரகுப்தரின் புதல்வர்.
  • கிமு 297 அரியணை ஏறினார்.
  • பிந்துசாரர் சந்திரகுப்தருக்கு பிறகு இயல்பாக ஆட்சிக்கு வந்தார்.
  • பிந்துசாரர் நல்ல திறமையான அரசர்.
  • தன் தந்தை வழியிலேயே ஆட்சி செய்தார்.
  • ஆலோசனை - சாணக்கியர்.
  • 25 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
  • அரசுப் பிரதிநிதிகள் - அவரின் புதல்வர்களாக இருந்தனர்.
  • இறப்பு கி மு 272.

அசோகர் :


  • இவர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசர் அல்ல வாரிசுரிமை போரில் வென்று அரியணையைக் கைப்பற்றினார்.
  • கிமு 268 அரியணை ஏறினார்.
  • முன்னர் தட்சசீலம் அரசுப் பிரதிநிதியாக இருந்தார்.
  • எட்டாம் நூற்றாண்டில் நடந்த கலிங்கம் (ஒடிசா)மீதான போர் முக்கியத்துவம் வாய்ந்தது.
  • இப்போரில் பல ஆயிரம் பேர் இறந்தனர் இதனால் மனம் வருந்திப் பௌத்த மதம் தழுவினார்.
  • நேர்மை தர்மம் ஆகியவற்றில் பெரு விருப்பம் கொண்டார்.
  • மூன்றாம் புத்த மாநாடு கிமு 250.
  • தலைநகரம் பாடலிபுத்திரம்.
  • அசோகர் தன் மகன்களான மகேந்திரன், சங்கமித்திரை பௌத்தம் பரப்ப இலங்கைக்கு அனுப்பினார்.
  • புத்தர் அமர்ந்த போதி மரக் கிளையை இலங்கைக்கு எடுத்துச் சென்றதாக நம்பப்படுகிறது.
  • மறைவு கிமு 231 இல்.

அசோகரின் கல்வெட்டு :


  • 14 முக்கிய பாறை கல்வெட்டுகள் - கல்வெட்டு கட்டளைகள்.
  • கலிங்க கல்வெட்டுக் கட்டளை - 2.
  • தூண் கல்வெட்டுக் கட்டளை - 7.
  • சில சிறு தூண்களில் கல்வெட்டுக் கட்டளைகள் - 33.
  • கல்வெட்டுகள் காணப்பட்ட இடம்.
  • ஆப்கானிஸ்தான் - காந்தஹார்.
  • வடமேற்கு பாகிஸ்தான் - ஷாப்ஸ் கார்ஹி.
  • உத்தரகாண்ட் வடக்கு - மண்ஷேரா.
  • மேற்கு குஜராத், மகாராஷ்டிரா, ஒடிசா, கர்நாடகா மற்றும் ஆந்திரா (கர்னூல்) வரை பரவியிருந்தது.
  • கல்வெட்டுக்களில் பொதுவாகப் பிராமி எழுத்துக்கள் காணப்பட்டது.
  • சில கல்வெட்டுகளில் மகதி, பிராகிருதம், கிரேக்கம், அராமிக் மற்றும் காரோஷ்டி மொழிகளிலும் இருந்தன.

No comments:

Popular Posts