மௌரிய அரசும் ஆட்சி அமைப்பும் :
- இந்தியாவில் மூன்றில் இரண்டு பங்கு அதிக பகுதியை ஆட்சி செய்தனர்.
- முக்கிய வருவாய் - வரி ஆகும்.
- மெகஸ்தனிஸ் இடமிருந்து தகவல் பெற்று ஒரு மையப்படுத்தப்பட்ட அரசுபற்றிக் கிரேக்க வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
- அர்த்த சாஸ்திரம் கூறுவது.
- தலைமை அமைச்சர், புரோகிதர், ராணுவ தளபதி - இவர்களின் ஊதியம் 48,000 பணம்.
- போர் வீரர் ஊதியம் 500 பணம்.
மாகாண நிர்வாகம் :
- நாடு அதன் தலைவர் அரசர் - அமைச்சரவை, மதகுருக்கள், மகாமாத்திரியர்கள் (செயலாளர்கள்).
- தலைநகர் பாடலிபுத்திரம்.
- 4 மாகாணங்கள் - தலைவர் அரச பிரதிநிதி
- 1. சுவர்ண கிரி - (கர்னூல்) ஆந்திரா.
- 2. உஜ்ஜயினி - (அவந்தி, மாளவம்).
- 3. வடமேற்கு - தட்சசீலம்.
- 4. தென்கிழக்கு ஒடிசா - (தோசாலி).
- வரி வசூலிப்பவர் -சமஹர்த்தா.
மாவட்டம் மற்றும் கிராம நிர்வாகம் :
- மாவட்ட நிர்வாகம் --ஸ்தானிகர்.
- கோபா-- ஐந்து அல்லது பத்து கிராமங்களின் பொறுப்பாளர்.
- நகர நிர்வாகம் --நகரகா.
- கிராமங்கள் தன்னாட்சி பெற்று இருந்தன.
- நிர்வாகம் --குழுக்களால் நியமிக்கப்பட்ட - கிராமணி.
நீதி நிர்வாகம் :
- .இருவகை நீதிமன்றம்
- 1. தர்மஸ்தியா.
- 2. கந்தகோசந்தனா.
- தர்மஸ்தியா.
- திருமணம் வாரிசுரிமை குடிமை உரிமைகள் சம்பந்தப்பட்ட வழக்குகள் மதச் சடங்குகள் அறிந்த
- 3 நீதிபதிகள்
- 3 அமாத்தியாக்கள் (செயலாளர்கள்)
- திருமணம் வாரிசுரிமை குடிமை உரிமைகள் சம்பந்தப்பட்ட வழக்குகள் மதச் சடங்குகள் அறிந்த
- கந்த கோசந்தனா
- காந்தகோசந்தனா என்பதன் பொருள் முள் எடுத்தல்
- சமூக விரோத பிரச்சனைகள்
- 3 நீதிபதிகள்
- 3 செயலாளர்கள்
- ஒற்றர்களைக் கொண்டது
- தண்டனைகள் மிகக் கடுமையானது
அசோகரின் அரசு :
- யுக்தர்கள் - கீழ்நிலை அதிகாரிகள்.
- இராஜிக்கர்கள் - கிராம நிர்வாகம்.
- பிரதேசிகர்கள் - மாவட்டத் தலைவர்.
அசோகரின் கட்டளைகள் :
- 1. ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை சுற்றுப்பயணம் செய்து தகவல் சேகரித்தனர்.
- 2. தமக்குத் தேவையான தகவல்களும் ஆலோசனைகளும் தரப்பட வேண்டுமென அசோகர் கூறினார்.
- 3. அனைத்து மதங்களுக்கும் அமைதி நிலவ வேண்டும்.
- 4. மருத்துவ வசதி தருவது அரசின் பணி.
பொருளாதாரம் சமூகம் :
- வேளாண்மை பொருளாதாரத்தின் முக்கிய முதுகெலும்பு
- “தேனை உற்பத்தி செய்யும் மூங்கில்”, “கம்பளி வளரும் செடி”என மெகஸ்தனிஸ் தனது குறிப்பில் கூறுகிறார்
- நெசவு அடுத்த முக்கிய தொழில்
- காசி, வாரணாசி, வங்கம், காமரூபம் (அசாம்) மற்றும் மதுரை
- நெசவுக்கு சிறப்பு பெற்ற இடங்கள் என அர்த்த சாஸ்திரம் குறிப்பிடுகிறது
- பட்டுப் பொதுவாகச் சீனப் பட்டு என்று அழைக்கப்பட்டது
- இரும்பு பிரித்தெடுக்கும் முறை அறிந்திருந்தனர். இத்தொழில்நுட்பம் கிமு 500 பெரிய முன்னேற்றம் அடைந்தது
- கைவினைத் தொழில் நுட்பம் --பமுகா (பிரமுகா=தலைவர்) & ஜெட்டா (ஜேஷ்டா= மூத்தவர்)
- தொழில்கள் நிர்வாகம் -சேனி (ஸ்ரேனி) வணிக குழு
- ஸ்ரேனிகளுக்கு இடைப்பட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு - மகாசேத்தி காண்பார்
வணிகம் :
- விதிஷா, உஜ்ஜயினி வழியாக வணிகம் நடைபெற்றது
- புத்த ஜாதகக் கதைகள்வணிகம்பற்றியய தகவல் கூறுகின்றன
- பர்மா, மாலத்தீவு மற்றும் இலங்கை உடன் கடல் வாணிபம் செய்தனர்
- வணிக கூட்டத் தலைவர் --மகா சர்த்தவாகா
- பொருள் எடுத்துச்சொல்ல நுழைவு வரி வசூலிக்கப்பட்டது
- அவுரி, தந்தம், ஆமை ஓடு, வாசனை திரவியம் மற்றும் அபூர்வ
- மரக்கட்டை எகிப்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது
- வெள்ளி நாணயம் அதிகம் பயன்படுத்தப்பட்டது
பாடலிபுத்திரம் :
- மாபெரும் நகர்
- பெரிய செல்வம் மிக்க நகரம்
- கங்கை நதி மற்றும் சோன் நதிகள் சங்கமமாகும் இடத்தில் இருந்தது
- இணைகரம் வடிவம் கொண்டது
- 14 கிலோ மீட்டர் நீளம் 2 ½ கிலோமீட்டர் அகலம் கொண்டது
- 64 வாசல்கள் கொண்டிருந்தது
- 570 கண்காணிப்பு கோபுரங்கள் காணப்பட்டது
- 30 பேர் கொண்ட ஒரு கழகத்தால் நிர்வகிக்கப்பட்டது
கலை பண்பாடு :
- சமஸ்கிருத மொழி இலக்கிய இலக்கணம் வளர்ச்சி பெற்றது காரணம் பாணினி படைப்புகள் மற்றும் அவற்றுக்கு உரை எழுதியவரும் நந்தர்களின் சமகாலத்தவருமான காத்யாயனரால் வளர்ச்சி பெற்றது
- புத்த சமய நூல்கள் பொதுவாகப் பாலி மொழியில் இருந்தன
- இசைக்கருவிகள், இசை நடனம் மற்றும் நாடகம் போன்ற கலைகள்பற்றி
- அர்த்த சாஸ்திரம் குறிப்பிடுகிறது
No comments:
Post a Comment