- இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லிம் மன்னர் - முகமது பின் காசிம்.
- முகமது பின் காசிம் கிபி 712 ஆம் ஆண்டு சிந்து மீது படையெடுத்தார்.
- முகமது கஜினி இந்தியாவின் மீது கிபி 1000 -1025 பதினேழு முறை படையெடுத்தார்..
- முகமது கஜினி கடைசியாகக் கொள்ளையிட்டது, குஜராத்திலுள்ள சோமநாதர் கோயில்.
- முகமது கஜினியோடு இந்தியா வந்த பெர்சிய அறிஞர் - அல்பெரூனி.
- 1191 ஆம் ஆண்டு இந்தியா மீது படையெடுத்த முகமது கோரியை, ராஜபுத்திர அரசர் பிரிதிவிராஜன் தோற்கடித்தார்.
- 1192 ஆம் ஆண்டு முகமது கோரி, பிரிதிவிராஜனைத் தோற்கடித்து முஸ்லிம்கள் ஆட்சியை நிறுவினார் .
- முகமது கோரி, இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை, தன் அடிமையான குத்புதீன் ஐபெக்கிடம் தந்தார்.
- குத்புதீன் ஐபெக்கின் வம்சம், அடிமை வம்சம் என்று அழைக்கப்படுகிறது.
- அடிமை வம்சத்தின் முதல் அரசரான குத்புதீன் ஐபெக், டெல்லியில் குதுப்மினாரைக் கட்டத் தொடங்கினார்.
- குத்புதீன் ஐபெக், ஏழைகளுக்கு லட்ச லட்சமாக வாரி வழங்கியதால் லக்பக்ஷ் என அழைக்கப்பட்டார்.
- குத்புதீன் ஐபெக், போலோ' விளையாடும்போது குதிரையிலிருந்து விழுந்து இறந்தார்.
- குத்புதீன் ஐபெக்குக்குப் பின் ஆட்சிக்கு வந்த இல்டுமிஷ், குதுப்மினாரைக் கட்டி முடித்தார்.
- துருக்கி கலிபாவின் அங்கீகாரம் பெற்ற முதல் டெல்லி சுல்தான் - இல்டுமிஷ்.
- இல்டுமிஷ் ஆட்சியின்போது மங்கோலியர் செங்கிஸ்கான் இந்தியாவின் மீது படையெடுத்தார்.
- இல்டுமிஷுக்குப்பின் அவரது மகள் சுல்தானா ரஸியா ஆட்சிக்கு வந்தார்.
- டெல்லியை ஆண்ட முதல் பெண் - சுல்தானா ரஸியா.
- சுல்தானா ரஸியாவுக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர் - கியாசுதீன் பால்பன்.
- அடிமை வம்சத்து அரசர்கள் மாமலுக்குகள் என அழைக்கப்பட்டனர்.
- அடிமை வம்சத்துக்குப் பின் கில்ஜி வம்ச ஜலாலுதீன் கில்ஜி ஆட்சிக்கு வந்தார்.
- ஜலாலுதீன் கில்ஜியின் மருமகனான அலாவுதீன் கில்ஜி, தன் மாமனைக் கொன்று ஆட்சிக்கு வந்தார்.
- அலாவுதீன் கில்ஜி, அங்காடிச் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார்.
- சிரி நகரை நிர்மாணித்தவர் - அலாவுதீன் கில்ஜி அவரின் அவையில் இருந்த பாரசீகக் கவிஞர் - அமீர் குஸ்ரு.
- அமீர் குஸ்ரு, இந்தியாவின் கிளி' என்றழைக்கப்பட்டார்.
- சிதார் இசைக்கருவி, அமீர் குஸ்ருவால் கண்டுபிடிக்கப்பட்டது.
- அமீர் குஸ்ரு, லைலா மஜ்னு' கதையைப் பாரசீக மொழியில் எழுதினார்.
- கில்ஜி வம்சத்துக்குப் பின் துக்ளக் வம்சம் ஆட்சிக்கு வந்தது .
- முகமது பின் துக்ளக்குக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர் - பெரோஸ் ஷா துக்ளக்.
- துக்ளக் வம்ச நஸ்ருதீன் முகமது ஆட்சிக்காலத்தில் தைமூர் இந்தியாவின் மீது படையெடுத்தார்.
- துக்ளக் வம்சத்துக்குப் பின் தைமூரின் பிரதிநிதியால் தோற்றுவிக்கப்பட்ட சையது வம்சத்தினர் ஆட்சிக்கு வந்தனர்.
- சையது வம்ச அரசர்கள், நபிகள் நாயகத்தின் நேரடி சந்ததியினர் என்று சொல்லப்படுகிறது.
- சையது வம்சத்துக்குப் பின் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த லோடி வம்சத்தினர் ஆட்சிக்கு வந்தனர்.
- லோடி வம்சத்து முதல் அரசரான பகலுல் லோடி, டெல்லியை ஆண்ட முதல் ஆப்கான்.
- பகலுல் லோடிக்குப் பின் சிக்கந்தர் லோடி, ஆக்ராவை நிர்மாணித்தார்.
- லோடி வம்சத்துக் கடைசி அரசர் - இப்ராஹிம் லோடி.
Sunday, October 02, 2022
TNPSC G.K - 154 | டெல்லி சுல்தான்கள் ஆட்சி.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப...
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
நான்மணிக்கடிகையின் உருவம்: ஆசிரியர் = விளம்பி நாகனார் ஊர் =விளம்பி பாடல்கள் = 2 + 104 பாவகை = வெண்பா பெயர்க்காரணம்: நான்கு + ம...
-
S.NO QUESTIONS ANSWERS 1 ஹெருஸ்டிக் முறை _______ கற்றலை வலியுறுத்துகிறது. செய்து 2 ஹெப்(Hubb)பினுடைய கொள்கை எதனுடன் தொடர்புடையது - க...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
லோக்பால் என்றால் என்ன? ( OIMBUDSMAN) லோக்பால் என்பது ஊழல், பொதுமக்கள் பணம் கையாடல் முதலிய தவறிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
-
நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார் - பாண்டியன் மாறன் வழுதி. நற்றிணைப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை - 176. நற்றிணையைத் தொ...
-
கன்னி இனப்பெருக்கம் என்றால் என்ன? அண்ட செல்லானது, கருவுறாமலேயே முழு உயிரியாக வளர்ச்சி அடையும் செயலுக்கு கன்னி இனப்பெருக்கம் என்று பெயர். ...
No comments:
Post a Comment