Sunday, October 02, 2022

TNPSC G.K - 147 | மௌரிய பேரரசு.

  • மௌரிய வம்சத்தைத் துவக்கியவர் - சந்திரகுப்த மௌரியர்.

  • சந்திரகுப்த மௌரியரின் அரசியல் குரு: சாணக்கியர்.

  • அலெக்ஸாண்டரின் படைத்தலைவரான செலுக்கஸ் நிகேடரை சந்திரகுப்த மௌரியர் தோற்கடித்தார்.

  • சந்திரகுப்த மௌரியர் அவைக்கு வந்த கிரேக்கத் தூதுவர் - மெகஸ்தனிஸ்.

  • மெகஸ்தனிஸ் எழுதிய நூல் - இண்டிகா.

  • சந்திரகுப்த மௌரியரின் மகன் - பிந்துசாரர்.

  • பிந்துசாரரின் மகன் : சக்கரவர்த்தி அசோகர்.

  • கிமு 261 ஆம் ஆண்டு நடந்த கலிங்கப்போரில், அசோகர் கலிங்கத்தை வென்றார்.

  • கலிங்கப் போர் நிகழ்வுகளால் மனம் மாறிய அசோகர், புத்த மதத்தைத் தழுவினார்.

  • அசோகரைப் புத்த மதத்துக்கு மாற்றிய புத்த பிட்சு - உபகுப்தா.

  • மௌரியர்களின் முக்கிய கலைச் சின்னங்கள் - சாரநாத் சிம்மதூண், சாஞ்சி ஸ்தூபி.

  • சாணக்கியர் எழுதிய நூலான 'அர்த்த சாஸ்திரம்' அரசு நிர்வாகம் பற்றியது.

  • அசோகர், தனது கல்வெட்டுகளில் தேவனாம்பிரிய பிரியதர்ஷி' என்ற பெயரால் குறிக்கப்படுகிறார்.

  • மாஸ்கி' என்ற இடத்திலுள்ள கல்வெட்டில் மட்டுமே அசோகர் என்ற பெயர் காணப்படுகிறது.

  • அசோகர், மூன்றாம் புத்த மாநாட்டை பாடலிபுத்திரத்தில் நடத்தினார்.

  • அசோகர், தன் மகன் மகேந்திரனையும் மகள் சங்கமித்திரையையும் இலங்கைக்கு அனுப்பி புத்த மதத்தைப் பரப்பினார்.

No comments:

Popular Posts