செப்டம்பர் 1 : ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்., எய்ம்ஸ் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கான முழு செலவையும் அரசே ஏற்கும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டு இருக்கிறது.
செப்டம்பர் 1 : ஜூன் முதல் ஆகஸ்டு மாதம் வரை 18 மாவட்டங்களில் இயல்பை விட 100 சதவீதத்துக்கு மேல் மழை பொழிந்துள்ளது. அதிகபட்சமாக தேனியில் 292 சதவீதம் மழை பதிவாகி இருக்கிறது.
செப்டம்பர் 2 : ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை மனு ஏற்கப்பட்டு உள்ளது.
செப்டம்பர் 2 : கேரளா சென்ற தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்தித்து பேசினார். அப்போது, இரு மாநிலங்களுக்கு நலன் பயக்கும் திட்ட அறிக்கையை வழங்கினார்.
செப்டம்பர் 2 : உள்நாட்டில் விமானம் தாங்கி போர்க்கப்பலை (ஐ.என்.எஸ்.விக்ராந்த்) வடிவமைத்து கட்டியதின் மூலம் வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா தன்னை சேர்த்து கொண்டுள்ளது. ரூ.20 ஆயிரம் கோடியில் கட்டப்பட்ட இந்த கப்பலை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
செப்டம்பர் 3 : நீட்’ தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரளாவில் மத்திய மந்திரி அமித்ஷா தலைமையில் நடந்த தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார்.
செப்டம்பர் 3 : மக்கள் கிளர்ச்சியால் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே நாடு திரும்பினார்.
செப்டம்பர் 3 : இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளிவிட்டு, உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வந்துள்ளது.
செப்டம்பர் 3 : தைவானுக்கு ரூ.8,688 கோடிக்கு ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 4 : தமிழகத்தில் நடைபெற்ற 35-வது மெகா தடுப்பூசி முகாமில் 12.28 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 4 : விசாகப்பட்டினத்தில் போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல், சென்னையை அடுத்த காட்டுப்பள்ளி துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது.
செப்டம்பர் 4 : காங்கிரசில் இருந்து வெளியேறியுள்ள குலாம்நபி ஆசாத், புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்தார். கட்சியின் செயல் திட் டத்தையும் வெளியிட்டார்.
செப்டம்பர் 5 : அரசு பள்ளிகளில் படித்த கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
செப்டம்பர் 5 : எல்.ஐ.சி.யில் கடந்த 2021-2022-ம் ஆண்டில் 2.17 கோடி புதிய பாலிசிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
செப்டம்பர் 5 : மார்ச் மாத நிலவரப்படி இந்தியாவின் வெளிநாட்டு கடன் ரூ.47 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 5 : ரூ.150 கோடி செலவில் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு அரசு பள்ளியிலும் 4 ஆண்டுகளில் தலா ஒரு ஸ்மார்ட் வகுப்பறை உருவாக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
செப்டம்பர் 6 : சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தலைமையில் கைம்பெண் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் உருவாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
செப்டம்பர் 6 : எதிர்க்கட்சி தலைவர்களை பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் சந்தித்து பேசினார். எதிர்க்கட்சிகள் ஒன்றுபடுவதற்கான தருணம் இது என அவர் தெரிவித்தார்.
செப்டம்பர் 6 : பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்துக்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 7 : கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை செல்லும் ராகுல்காந்தியின் பாதயாத்திரையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி வழங்கி தொடங்கிவைத்தார்.
செப்டம்பர் 7 : ‘நீட்' தேர்வு முடிவு வெளியானது. 715 மதிப்பெண் பெற்று ராஜஸ்தான் மாணவி முதலிடம் பிடித்தார்.
செப்டம்பர் 7 : டெல்லியில் பட்டாசு வெடிக்க ஜனவரி 1-ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டதால் சிவகாசியில் இருந்து அனுப்பி வைக்கப்படும் ரூ.150 கோடி மதிப்பிலான பட்டாசு விற்பனை பாதிக்கும் என உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்தனர்.
செப்டம்பர் 8 : கும்பகோணம் கோவிலில் 60 ஆண்டு களுக்கு முன்பு திருட்டுபோன 4 சிலைகள் இங்கிலாந்து, அமெரிக்க அருங்காட்சியகங்களில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
செப்டம்பர் 8 : சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக பெண் களுக்கு 30 சதவீத இடஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு வழங்கியது துரதிருஷ்டவசமானது, தவறானது என்று சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
செப்டம்பர் 8 : தமிழ்நாட்டில் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 25 சதவீதம் பேருக்கு மேல் அடிப்படை எண்கணித திறன் இல்லாதவர்களாக இருக்கின்றனர் என்று மத்திய அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
செப்டம்பர் 9 : தூத்துக்குடி விமான நிலையத்தை தரம் உயர்த்தும் பணி அடுத்த ஆண்டு முடிவடையும், 600 பயணிகளை கையாளும் வகையில் புதிய முனையம் அமைக்கப்படுகிறது என மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 9 : திருச்சியில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
செப்டம்பர் 9 : மனிதவள மேம்பாட்டு குறியீட்டில் இந்தியாவுக்கு 132-வது இடம் கிடைத்துள்ளது.
செப்டம்பர் 10 : தமிழகத்தில் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதன்படி 200 யூனிட் வரை பயன்படுத்தும் மின்நுகர்வோர் ரூ.55 கூடுதலாக செலுத்த வேண்டும். தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், உயர் அழுத்த மின்சார நுகர்வோர்களுக்கான நிலையான கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளது என்று மின்சார வாரியம் தெரிவித்து உள்ளது.
செப்டம்பர் 10 : அரசு பெண் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் 12 மாத கால மகப்பேறு விடுப்பு, ரேஷன் கடை பெண் ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
செப்டம்பர் 4 : ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்றது.
செப்டம்பர் 6 : கிரிக்கெட்டில் இருந்து ரெய்னா முழுமையாக ஓய்வு பெற்றார்.
செப்டம்பர் 6 : அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னாள் சாம்பியனான ஸ்பெயினின் ரபெல் நடால், அமெரிக்க வீரர் டியாபோவிடம் தோற்று வெளியேறினார்.
செப்டம்பர் 7 : தெற்காசிய பெண்கள் கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை தோற்கடித்து வெற்றிவாகை சூடியது.
செப்டம்பர் 7 : 20 ஓவர் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் ரிஸ்வான் முதலிடம் பிடித்தார்.
செப்டம்பர் 8 :உலக கோப்பை ஆக்கி போட்டியில் ஒரே பிரிவில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடம் பிடித்துள்ளன.
செப்டம்பர் 9 : டைமண்ட் லீக் இறுதி சுற்று ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தார்.
செப்டம்பர் 10 : சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டியின் தகுதி சுற்றில் இந்திய வீராங்கனைகள் தோல்வி அடைந்தனர்.
செப்டம்பர் 10 : சர்வதேச ஒருநாள் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஓய்வு பெற்றார்.
செப்டம்பர் 4 : தமிழ்நாட்டில் அகதிகளாக வசித்து வரும் இலங்கை தமிழர்களை மீண்டும் தங்கள் நாட்டில் குடியமர்த்த இலங்கை அரசு குழு அமைத்தது.
செப்டம்பர் 6 : இங்கிலாந்து பிரதமர் ஆனார், லிஸ் டிரஸ். அவரை ராணி எலிசபெத் முறைப்படி நியமித்தார்.
செப்டம்பர் 6 : இலங்கை அதிபரின் அதிகாரங்களை குறைப்பதற்கான மசோதாவுக்கு அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் அளித்தது.
செப்டம்பர் 6 : வட கொரியாவிடம் இருந்து ரஷியா ஆயுதங்களை வாங்குகிறது என்ற அதிர்ச்சி தகவலை அமெரிக்க உளவுத்துறை வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் 7 : அமெரிக்கர்களுக்கு ஆண்டுதோறும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.
செப்டம்பர் 8 : உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த 96 வயது இங்கிலாந்து ராணி எலிசபெத் காலமானார். அவரது மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
செப்டம்பர் 8 : பாகிஸ்தானுக்கு 4 ஆண்டுகளில் முதல்முறையாக ரூ.3,600 கோடி மதிப்பிலான ‘எப்-16’ போர் விமான உபகரணங்களை அமெரிக்கா வழங்குகிறது.
செப்டம்பர் 8 : ரஷியாவுடனான மோதலுக்கு நடுவே கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தி அமெரிக்கா அதிரடி காட்டியது.
செப்டம்பர் 9 :வடகொரியா சட்டம் இயற்றி தன்னை ஒரு அணு ஆயுத நாடாக பிரகடனம் செய்துள்ளது. அமெரிக்காவை எதிர்கொள்ளத்தேவையான அணு ஆயுதங்களை தனது நாடு ஒருபோதும் கைவிடாது என அந்த நாட்டின் தலைவர் கிம் திட்டவட்டமாக தெரிவித்தார்.
செப்டம்பர் 10 : லண்டனில் நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியில், இங்கிலாந்து மன்னராக சார்லஸ் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
செப்டம்பர் 10 : சீனாவில் மருத்துவம் படிக்க விரும்புவோருக்கு இந்தியா ஆலோசனை குறிப்புகளை வெளியிட்டது. சீனாவில் படிப்பதில் உள்ள சிரமங்களையும், விதிகளையும் பட்டிய லிட்டுள்ளது.
செப்டம்பர் 1 : கொரோனா பரவலால் சீனாவின் செங்டு நகரில் பொதுமுடக்கம் அமல் படுத்தப்பட்டுள்ளது.
செப்டம்பர் 1 : தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை மதுரை ஐகோர்ட்டு நீக்கியது.
செப்டம்பர் 1 : கடந்த ஆகஸ்டு மாதத்தில் ஜி.எஸ்.டி. மூலம் ரூ.1 லட்சத்து 43 ஆயிரத்து 612 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டின் ஆகஸ்டு மாத வருவாயுடன் ஒப்பிடுகையில் இது 28 சதவீதம் அதிகம் ஆகும்.
செப்டம்பர் 1 : ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்., எய்ம்ஸ் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கான முழு செலவையும் அரசே ஏற்கும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டு இருக்கிறது.
செப்டம்பர் 1 : ஜூன் முதல் ஆகஸ்டு மாதம் வரை 18 மாவட்டங்களில் இயல்பை விட 100 சதவீதத்துக்கு மேல் மழை பொழிந்துள்ளது. அதிகபட்சமாக தேனியில் 292 சதவீதம் மழை பதிவாகி இருக்கிறது.
செப்டம்பர் 2 : ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை மனு ஏற்கப்பட்டு உள்ளது.
செப்டம்பர் 2 : கேரளா சென்ற தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்தித்து பேசினார். அப்போது, இரு மாநிலங்களுக்கு நலன் பயக்கும் திட்ட அறிக்கையை வழங்கினார்.
செப்டம்பர் 2 : உள்நாட்டில் விமானம் தாங்கி போர்க்கப்பலை (ஐ.என்.எஸ்.விக்ராந்த்) வடிவமைத்து கட்டியதின் மூலம் வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா தன்னை சேர்த்து கொண்டுள்ளது. ரூ.20 ஆயிரம் கோடியில் கட்டப்பட்ட இந்த கப்பலை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
செப்டம்பர் 3 : நீட்’ தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரளாவில் மத்திய மந்திரி அமித்ஷா தலைமையில் நடந்த தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார்.
செப்டம்பர் 3 : மக்கள் கிளர்ச்சியால் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே நாடு திரும்பினார்.
செப்டம்பர் 3 : இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளிவிட்டு, உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வந்துள்ளது.
செப்டம்பர் 3 : தைவானுக்கு ரூ.8,688 கோடிக்கு ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 4 : தமிழகத்தில் நடைபெற்ற 35-வது மெகா தடுப்பூசி முகாமில் 12.28 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 4 : விசாகப்பட்டினத்தில் போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல், சென்னையை அடுத்த காட்டுப்பள்ளி துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது.
செப்டம்பர் 4 : காங்கிரசில் இருந்து வெளியேறியுள்ள குலாம்நபி ஆசாத், புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்தார். கட்சியின் செயல் திட் டத்தையும் வெளியிட்டார்.
செப்டம்பர் 5 : அரசு பள்ளிகளில் படித்த கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
செப்டம்பர் 5 : எல்.ஐ.சி.யில் கடந்த 2021-2022-ம் ஆண்டில் 2.17 கோடி புதிய பாலிசிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
செப்டம்பர் 5 : மார்ச் மாத நிலவரப்படி இந்தியாவின் வெளிநாட்டு கடன் ரூ.47 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 5 : ரூ.150 கோடி செலவில் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு அரசு பள்ளியிலும் 4 ஆண்டுகளில் தலா ஒரு ஸ்மார்ட் வகுப்பறை உருவாக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
செப்டம்பர் 6 : சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தலைமையில் கைம்பெண் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் உருவாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
செப்டம்பர் 6 : எதிர்க்கட்சி தலைவர்களை பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் சந்தித்து பேசினார். எதிர்க்கட்சிகள் ஒன்றுபடுவதற்கான தருணம் இது என அவர் தெரிவித்தார்.
செப்டம்பர் 6 : பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்துக்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 7 : கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை செல்லும் ராகுல்காந்தியின் பாதயாத்திரையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி வழங்கி தொடங்கிவைத்தார்.
செப்டம்பர் 7 : ‘நீட்' தேர்வு முடிவு வெளியானது. 715 மதிப்பெண் பெற்று ராஜஸ்தான் மாணவி முதலிடம் பிடித்தார்.
செப்டம்பர் 7 : டெல்லியில் பட்டாசு வெடிக்க ஜனவரி 1-ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டதால் சிவகாசியில் இருந்து அனுப்பி வைக்கப்படும் ரூ.150 கோடி மதிப்பிலான பட்டாசு விற்பனை பாதிக்கும் என உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்தனர்.
செப்டம்பர் 8 : கும்பகோணம் கோவிலில் 60 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டுபோன 4 சிலைகள் இங்கிலாந்து, அமெரிக்க அருங்காட்சியகங்களில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
செப்டம்பர் 8 : சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு வழங்கியது துரதிருஷ்டவசமானது, தவறானது என்று சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
செப்டம்பர் 8 : தமிழ்நாட்டில் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 25 சதவீதம் பேருக்கு மேல் அடிப்படை எண்கணித திறன் இல்லாதவர்களாக இருக்கின்றனர் என்று மத்திய அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
செப்டம்பர் 9 : தூத்துக்குடி விமான நிலையத்தை தரம் உயர்த்தும் பணி அடுத்த ஆண்டு முடிவடையும், 600 பயணிகளை கையாளும் வகையில் புதிய முனையம் அமைக்கப்படுகிறது என மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 9 : திருச்சியில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
செப்டம்பர் 9 : மனிதவள மேம்பாட்டு குறியீட்டில் இந்தியாவுக்கு 132-வது இடம் கிடைத்துள்ளது.
செப்டம்பர் 10 : தமிழகத்தில் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதன்படி 200 யூனிட் வரை பயன்படுத்தும் மின்நுகர்வோர் ரூ.55 கூடுதலாக செலுத்த வேண்டும். தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், உயர் அழுத்த மின்சார நுகர்வோர்களுக்கான நிலையான கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளது என்று மின்சார வாரியம் தெரிவித்து உள்ளது.
செப்டம்பர் 10 : அரசு பெண் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் 12 மாத கால மகப்பேறு விடுப்பு, ரேஷன் கடை பெண் ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
செப்டம்பர் 4 : ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்றது.
செப்டம்பர் 6 : கிரிக்கெட்டில் இருந்து ரெய்னா முழுமையாக ஓய்வு பெற்றார்.
செப்டம்பர் 6 : அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னாள் சாம்பியனான ஸ்பெயினின் ரபெல் நடால், அமெரிக்க வீரர் டியாபோவிடம் தோற்று வெளியேறினார்.
செப்டம்பர் 7 : தெற்காசிய பெண்கள் கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை தோற்கடித்து வெற்றிவாகை சூடியது.
செப்டம்பர் 7 : 20 ஓவர் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் ரிஸ்வான் முதலிடம் பிடித்தார்.
செப்டம்பர் 8 : உலக கோப்பை ஆக்கி போட்டியில் ஒரே பிரிவில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடம் பிடித்துள்ளன.
செப்டம்பர் 9 : டைமண்ட் லீக் இறுதி சுற்று ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தார்.
செப்டம்பர் 10 : சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டியின் தகுதி சுற்றில் இந்திய வீராங்கனைகள் தோல்வி அடைந்தனர்.
செப்டம்பர் 10 : சர்வதேச ஒருநாள் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஓய்வு பெற்றார்.
செப்டம்பர் 4 : தமிழ்நாட்டில் அகதிகளாக வசித்து வரும் இலங்கை தமிழர்களை மீண்டும் தங்கள் நாட்டில் குடியமர்த்த இலங்கை அரசு குழு அமைத்தது.
செப்டம்பர் 6 : இங்கிலாந்து பிரதமர் ஆனார், லிஸ் டிரஸ். அவரை ராணி எலிசபெத் முறைப்படி நியமித்தார்.
செப்டம்பர் 6 : இலங்கை அதிபரின் அதிகாரங்களை குறைப்பதற்கான மசோதாவுக்கு அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் அளித்தது.
செப்டம்பர் 6 : வட கொரியாவிடம் இருந்து ரஷியா ஆயுதங்களை வாங்குகிறது என்ற அதிர்ச்சி தகவலை அமெரிக்க உளவுத்துறை வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் 7 : அமெரிக்கர்களுக்கு ஆண்டுதோறும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.
செப்டம்பர் 8 : உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த 96 வயது இங்கிலாந்து ராணி எலிசபெத் காலமானார். அவரது மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
செப்டம்பர் 8 : பாகிஸ்தானுக்கு 4 ஆண்டுகளில் முதல்முறையாக ரூ.3,600 கோடி மதிப்பிலான ‘எப்-16’ போர் விமான உபகரணங்களை அமெரிக்கா வழங்குகிறது.
செப்டம்பர் 8 : ரஷியாவுடனான மோதலுக்கு நடுவே கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தி அமெரிக்கா அதிரடி காட்டியது.
செப்டம்பர் 9 : வடகொரியா சட்டம் இயற்றி தன்னை ஒரு அணு ஆயுத நாடாக பிரகடனம் செய்துள்ளது. அமெரிக்காவை எதிர்கொள்ளத்தேவையான அணு ஆயுதங்களை தனது நாடு ஒருபோதும் கைவிடாது என அந்த நாட்டின் தலைவர் கிம் திட்டவட்டமாக தெரிவித்தார்.
செப்டம்பர் 10 : லண்டனில் நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியில், இங்கிலாந்து மன்னராக சார்லஸ் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
செப்டம்பர் 10 : சீனாவில் மருத்துவம் படிக்க விரும்புவோருக்கு இந்தியா ஆலோசனை குறிப்புகளை வெளியிட்டது. சீனாவில் படிப்பதில் உள்ள சிரமங்களையும், விதிகளையும் பட்டிய லிட்டுள்ளது.
செப்டம்பர் 11 : தமிழகத்தில் நடைபெற்ற 36-வது மெகா தடுப்பூசி முகாமில் 12.62 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
செப்டம்பர் 11 : உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தாராகிரி போர் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
செப்டம்பர் 12 : தமிழகத்தில் ‘நீட்’ தேர்வில் 12 ஆயிரத்து 840 அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதியதில், 4 ஆயிரத்து 447 பேர் வெற்றி பெற்று இருக்கின்றனர். இதன் தேர்ச்சி சதவீதம் 35 ஆகும்.
செப்டம்பர் 12 : அயோத்தியில் நடந்து வரும் ராமர் கோவில் கட்டுமான செலவு ரூ.1,800 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளதாக அறக்கட்டளை தகவல் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 12 : ஆகஸ்டு மாதத்தில் பணவீக்கம் 7 சதவீதமாக உயர்ந்தது.
செப்டம்பர் 12 : வாகனங்களுக்கு மின்சார சார்ஜ் ஏற்றும் வசதியுடன் நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறினார்.
செப்டம்பர் 13 : கொரோனா 2-வது அலையின்போது மத்திய அரசு சரியான நேரத்தில் செயல்பட்டிருந்தால் பல உயிர்களை காப்பாற்றி இருக்கலாம் என்று நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை அளித்துள்ளது.
செப்டம்பர் 13 : அத்தியாவசிய மருந்துகளின் புதிய தேசிய பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் கூடுதலாக 34 மருந்துகள் சேர்க்கப்பட்டு உள்ளன.
செப்டம்பர் 13 : பஞ்சாப் அரசை கவிழ்க்க 10 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு பா.ஜனதா தலா ரூ.25 கோடி பேரம் பேசுவதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.
செப்டம்பர் 13 : தேர்தல் கமிஷனின் பட்டியலில் இருந்து மேலும் 86 கட்சிகள் நீக்கம் செய்யப்படுவதாகவும், 253 கட்சிகள் செயல்படாதவை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
செப்டம்பர் 13 : நிலவுக்கு ராக்கெட்டை அனுப்பும் ‘நாசா'வின் திட்டம் 3-வது முறையாக நிறுத்தப்பட்டுள்ளது.
செப்டம்பர் 14 : இந்தி தினம் கொண்டாட எதிர்ப்பு தெரிவித்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழை மத்திய அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.
செப்டம்பர் 14 : தமிழக அரசின் தொடர் முயற்சியால் நரிக்குறவர்களுக்கு பழங்குடியினர் தகுதி வழங்கியிருக்கும் மத்திய அரசின் முடிவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
செப்டம்பர் 15 : தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் 100 சதவீதம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்று போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.
செப்டம்பர் 15 : இந்திய வங்கி வாடிக்கையாளர்களை குறிவைத்து ‘சோவா’ என்ற புதிய வைரஸ் உலவி வருகிறது. இதனால், மொபைல் பேங்கிங் செயலி வழியாக பணம் திருடப்படும் அபாயம் எழுந்துள்ளது.
செப்டம்பர் 15 : அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் 1,545 பள்ளிக்கூடங்களில் படிக்கும் 1.14 லட்சம் குழந்தைகள் பயன்பெறுவார்கள்.
செப்டம்பர் 16 : மதுரையில் ரூ.600 கோடி செலவில் டைடல் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
செப்டம்பர் 16 : நீரிழிவுக்கு ‘சிடாக்லிப்டின்’ என்ற மலிவு விலை மாத்திரையை மத்திய அரசு அறிமுகம் செய்தது.
செப்டம்பர் 16 : சென்னை மெரினாவில் கடலின் நடுவே அமைக்கப்பட உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பேனா நினைவுச்சின்னத்துக்கு, மத்திய அரசு முதல் கட்ட அனுமதியை வழங்கியுள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தியுள்ளது.
செப்டம்பர் 16 : செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கு ஆதாரம் உண்டா? என்பதை ஆராய ‘நாசா’வின் ரோபோ 2-ம் கட்ட ஆராய்ச்சியை தொடங்கியது.
செப்டம்பர் 16 : மிக கடினமான சூழல்களில் செயல்படும் ‘மிட் ஜெட்' எனும் அமெரிக்க போர்க்கப்பல் சென்னை வந்தது. இந்த கப்பல் 418 அடி நீளம், 54 அடி உயரம் கொண்டதாகும்.
செப்டம்பர் 17 : அரசு ஆஸ்பத்திரியில் மருந்துகள் இல்லை என்று ஊழியர்கள் சொன்னால் மக்கள் உடனடியாக புகார் செய்யலாம் என்றும், தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 17 : கீழடி அகழாய்வில் யானை தந்தத்தில் செய்த பாசிமணி கண்டுபிடிக்கப்பட்டது.
செப்டம்பர் 17 : இந்தியாவில் முதல் முறையாக முழு அளவிலான கைமாற்று அறுவை சிகிச்சை கேரள ஆஸ்பத்திரியில் 2 பேருக்கு நடத்தப்பட்டுள்ளது.
செப்டம்பர் 17 : நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 8 சிறுத்தைப்புலிகளை பிரதமர் மோடி காட்டுக்குள் திறந்து விட்டார். இதன் மூலம் 70 ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்த விலங்கினத்துக்கு புத்துயிரூட்டப்படுகிறது.
செப்டம்பர் 11 : கிழக்கு உக்ரைனில் முக்கிய நகரங்களை உக்ரைன் மீட்டது. ரஷிய படைகள் அங்கிருந்து பின்வாங்கின.
செப்டம்பர் 12 : இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மன்னர் 3-ம் சார்லஸ் முதல் முறையாக உரையாற்றினார். அப்போது தனது தாயும், மறைந்த ராணியுமான இரண்டாம் எலிசபெத்தை உருக்கமாக நினைவு கூர்ந்தார்.
செப்டம்பர் 14 : உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் இந்தியாவில் கல்வியை தொடர முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 15 : அமெரிக்காவில் தேர்தல் வரும் நிலையில் அதிபர் ஜோ பைடன் செல்வாக்கு திடீரென உயர்ந்துள்ளது.
செப்டம்பர் 16 : உஸ்பெகிஸ்தானில் நடந்த 8 நாடுகள் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசினார். அப்போது, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தினார்.
செப்டம்பர் 26 : சண்டிகார் விமான நிலையத்துக்கு பகத்சிங் பெயர் சூட்டப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
செப்டம்பர் 28 : முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக ஓய்வு பெற்ற லெப்டினென்ட் ஜெனரல் அனில் சவுகானை மத்திய அரசு நியமித்துள்ளது.
செப்டம்பர் 18 : ரெயில்களில் இரவு நேரங்களில் பயணம் செய்யும்போது வெகுநேரம் விளக்குகளை எரிய விடுவது, செல்போனில் சத்தமாக பேசி சக பயணிகளை தொந்தரவு செய்வது போன்ற பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கை எடுப்பது குறித்து ரெயில்வே நிர்வாகம் புதிய விதிமுறையை வகுத்துள்ளது.
செப்டம்பர் 19 : அரசியல் கட்சிகள் ரொக்கமாக நன்கொடை பெறுவதற்கான உச்சவரம்பை குறைக்க வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் கமிஷன் யோசனை தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 19 : கல்லூரி மாணவர்கள் ராகிங் தடுப்பு உறுதிச்சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டுள்ளது.
செப்டம்பர் 19 : சென்னை விமான நிலையத்தில் முதல் ஓடுபாதையின் நீளத்தை 400 மீ்ட்டர் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் பெரிய ரக விமானங்கள் தரை இறங்கி, மீண்டும் புறப்பட்டு செல்ல முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
செப்டம்பர் 19 : 3-ம் முழுமை திட்ட ஆவண தயாரிப்பு பணி தொடங்கியது. அதன்படி அச்சரப்பாக்கம், அரக்கோணம் வரை சென்னை பெருநகரம் விரிவாக்கம் செய்யப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
செப்டம்பர் 20 : தமிழகத்தில் 5,104 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் 46 நகரசபைகளில் 100 சதவீதம் அளவுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக பொது சுகாதாரத்துறை கூறியது.
செப்டம்பர் 20 : குன்றத்தூரில் நடந்து வரும் தொல்லியல்துறை அகழாய்வில் தங்கம் கிடைத்தது.
செப்டம்பர் 20 : காஷ்மீரில் 30 ஆண்டுகளுக்கு பிறகு முதல் தியேட்டர் திறக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 20 : இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு குஜராத்தி படம் ‘செலோ ஷோ' பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் 20 : வைரசை கண்டறிந்து குறுஞ்செய்தி அனுப்பும் முக கவசத்தை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.
செப்டம்பர் 21 : மியான்மரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையே அவர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
செப்டம்பர் 21 : வாழ்விட இழப்பு காரணமாக அழிந்து வரும் கடற்பசுக்களுக்கான பாதுகாப்பகத்தை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவிலேயே இது தான் முதல் கடற்பசு பாதுகாப்பகமாகும்.
செப்டம்பர் 21 : இந்திய பெரும் பணக்காரர்களில் கவுதம் அதானி முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். கடந்த ஓராண்டில் அவர் தினமும் ரூ.1600 கோடி சேர்த்திருக்கிறார்.
செப்டம்பர் 21 : மத்திய அரசின் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் ஏற்பாட்டில் புவிசார் குறியீடு பெற்ற மதுரை மல்லிகைப் பூ, மஸ்கட் நகருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
செப்டம்பர் 22 : அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரே நாளில் 90 காசுகள் வீழ்ச்சி அடைந்தது.
செப்டம்பர் 22 : விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் பகுதியில் நடந்து வரும் அகழாய்வில் ஆண்-பெண் உருவ செப்டம்பர்பு நாணயம், சங்கு வளையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 22 : இணைய அழைப்பு சேவை வழங்கும் செயலிகளான வாட்ஸ்-அப், ஜூம், கூகுள் டியோ போன்றவை இந்தியாவில் இயங்குவதற்கு உரிமம் பெற வேண்டும் என்று புதிய மசோதாவில் மத்திய அரசு கூறியுள்ளது.
செப்டம்பர் 22 : நெப்டியூனையும், அதன் மெல்லிய வளையங்களின் விரிவான படத்தையும் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி முதல் முறையாக படம் பிடித்துள்ளது.
செப்டம்பர் 23 : சென்னையை அடுத்த வடக்குப்பட்டு கிராமத்தில் ஒரே அகழாய்வில் 4 நாகரிகங்களை பிரதிபலிக்கும் கல் கருவிகள், ஆபரணங்கள், கலைப்பொருட்கள், மணிகள் உள்ளிட்ட பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
செப்டம்பர் 22 : பட்டா மாறுதலுக்காக ‘எங்கிருந்தும் எந் நேரத்திலும்’ என்ற இணையவழி சேவையின் மூலமாக பொதுமக்கள் விண்ணப்பிக்கும் வசதி மற்றும் நகர்ப்புற நிலஅளவை வரைபடங்களை இணையவழியில் பதிவிறக்கம் செய்யும் வசதி ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
செப்டம்பர் 22 : காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிடவில்லை என ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் உறுதிபட தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 22 : கற்பழிப்பு குற்றவாளிக்கு முன்ஜாமீன் கிடையாது என்ற புதிய மசோதா உத்தரபிரதேச சட்டசபையில் நிறைவேறியது.
செப்டம்பர் 24 : மியான்மர் மோசடியைத் தொடர்ந்து வெளிநாட்டு வேலைக்கு செல்ல விரும்புகிறவர்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது. வேலைக்கு அமர்த்தும் நிறுவனத்தைப் பற்றி விசாரித்து சரிபாருங்கள் என கூறி உள்ளது.
செப்டம்பர் 24 : பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தை மரக்கன்று நட்டு தொடங்கி வைத்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.920 கோடி ஜப்பான் நிதி உதவி மூலம் தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் மேம் படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
செப்டம்பர் 18 : சென்னை ஓபன் டென்னிசில் 17 வயதான செக்குடியரசின் லின்டா புருவிர்தோவா சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார். அவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுக்கோப்பையை வழங்கினார்.
செப்டம்பர் 19: உலக மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா 4-வது முறையாக பதக்கம் வென்று அசத்தினார்.
செப்டம்பர் 20 : 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான நியூசிலாந்து அணியில் மார்ட்டின் கப்தில் 7-வது முறையாக இடம் பிடித்தார்.
செப்டம்பர் 20 : கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீராங்கனை மந்தனா 2-வது இடத்துக்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.
செப்டம்பர் 21 : அடுத்த இரு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் நடக்கும் என்று ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
செப்டம்பர் 22 : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி வெற்றி பெற்றதுடன் தொடரையும் 23 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றி சாதனை படைத்தது.
செப்டம்பர் 24 : லாவெர் கோப்பை டென்னிஸ் போட்டியின் இரட்டையர் ஆட்டத்தில் தோல்வி கண்ட சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் கண்ணீர் மல்க சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து விடை பெற்றார்.
செப்டம்பர் 30 : மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் 2020-ம் ஆண்டுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெற்றது. விழாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமை தாங்கி விருதுகளை வழங்கினார்.
செப்டம்பர் 30 : தேசிய அளவில் சிறந்த நடிகருக்கான வெள்ளித்தாமரை விருது நடிகர் சூர்யாவுக்கு வழங்கப்பட்டது. சூரரைப் போற்று படத்தில் அவரது சிறந்த நடிப்புக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
செப்டம்பர் 30 : வாழ்நாள் திரைப்பட சாதனையாளருக்கான தாதா சாகேப் பால்கே விருது, பிரபல இந்தி நடிகை ஆஷா பரேக்குக்கு வழங்கப்பட்டது.
செப்டம்பர் 30 : ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ என்ற தமிழ்ப்படமும் 3 தேசிய விருதுகளைப் பெற்றது. தமிழில் சிறந்த படம், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த துணை நடிகை ஆகியவற்றுக்காக விருது கிடைத்தது.
செப்டம்பர் 25 : தமிழகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் தொடர்ந்ததையடுத்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்தது.
செப்டம்பர் 25 : சண்டிகார் விமான நிலையத்துக்கு பகத்சிங் பெயர் சூட்டப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
செப்டம்பர் 26 : தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அவசர சட்டம் விரைவில் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
செப்டம்பர் 26 : கூட்டுறவு வங்கிகளில் 14 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 26 : சீமை கருவேல மரங்களை அகற்றுவது குறித்து அனைத்து பஞ்சாயத்து தலைவர்களுக்கும் மாவட்ட கலெக்டர்கள் அறிவுறுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
செப்டம்பர் 26 : காங்கிரசில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத் ‘ஜனநாயக ஆசாத் கட்சி’ என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார்.
செப்டம்பர் 26 : டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் வீழ்ச்சி அடைந்துள்ளது. 58 காசுகள் சரிந்து ரூ.81.67 ஆக உள்ளது.
செப்டம்பர் 27 : பழம் பெரும் இந்தி நடிகை ஆஷா பரேக்குக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
செப்டம்பர் 27 : சுப்ரீம் கோர்ட்டில் அரசியல் சாசன அமர்வுகளின் வழக்கு விசாரணையை நேரடியாக ஒளிபரப்பு செய்வது தொடங்கியது. பொருளாதார ரீதியில் நலிவுற்றோருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்க்கும் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
செப்டம்பர் 27 : விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு போன்ற ‘விஞ்ஞான் ரத்னா’ என்ற புதிய விருதை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
செப்டம்பர் 27 : தமிழகம் முழுவதும் 73 லட்சத்து 99 ஆயிரத்து 512 பேர் அரசு வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.
செப்டம்பர் 28 : இலவச ரேஷன் திட்டம், மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு, 3 ரெயில் நிலையங்கள் நவீனமயம் போன்ற முக்கிய முடிவுகள் மத்திய மந்திரி சபை கூட்டத்தில் எடுக்கப்பட்டன.
செப்டம்பர் 28 : முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினென்ட் ஜெனரல் அனில் சவுகானை மத்திய அரசு நியமித்துள்ளது.
செப்டம்பர் 28 : போலி ஆவணங்கள் மூலம் நடந்த மோசடி ஆவண பதிவை ரத்து செய்து, சொத்து உரிமையாளர்களுக்கு ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
செப்டம்பர் 28 : மத்திய அரசின் தலைமை வக்கீலாக (அட்டார்னி ஜெனரல்) தமிழகத்தை சேர்ந்த ஆர்.வெங்கட ரமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
செப்டம்பர் 29 : அரசின் நிர்வாக செயல்முறையை மேம்படுத்தும் விதத்தில் இளைஞர்களின் திறமையையும், ஆற்றலையும் பயன்படுத்தும் புத்தாய்வு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
செப்டம்பர் 29 : மத்திய அரசு பிறப்பித்துள்ள தடை உத்தரவின் எதிரொலியாக தமிழகத்திலும் ‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா’ அமைப்பை சட்ட விரோதமான அமைப்பாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
செப்டம்பர் 29 : காங்கிரஸ் தலைவர் தேர்தலில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. ராஜஸ்தான் நெருக்கடிக்கு சோனியாவை சந்தித்து மன்னிப்பு கேட்ட அசோக் கெலாட், போட்டியில் இல்லை என அறிவித்துள்ளார்.
செப்டம்பர் 29 : திருமணம் ஆகாத பெண்களுக்கும் கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
செப்டம்பர் 30 : சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரும் வரை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்தமாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கோர்ட்டில் உத்தரவாதம் அளித்துள்ளனர்.
செப்டம்பர் 30 : பணவீக்கத்தை கட்டுப்படுத்த கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி மீண்டும் உயர்த்தியது. இதனால், வீடு, வாகன, தனிநபர் கடன்களுக்கான தவணை காலம் அதிகரிக்கும்.
செப்டம்பர் 30 : காந்தி நகர் - மும்பை ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
செப்டம்பர் 30 : ‘சூரரைப் போற்று’ படத்துக்காக நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.
செப்டம்பர் 25 : உக்ரைனிடம் சரணடையும் ரஷிய ராணுவ வீரர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ரஷிய அதிபர் புதின் அதிரடியாக அறிவித்துள்ளார்.
செப்டம்பர் 27 : ரஷியாவில் கொரோனா தொற்று திடீரென அதிகரித்துள்ளது.
செப்டம்பர் 27 : பூமியை நோக்கி வந்த விண்கல் மீது நாசாவின் விண்கலம் துல்லியமாக மோதி அதை உடைத்து வரலாற்று சாதனை படைத்தது.
செப்டம்பர் 27 : சீன அதிபர் ஜின்பிங் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதாக வதந்திகள் பரவி வந்த நிலையில் அவர் பொதுவெளியில் தோன்றி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
செப்டம்பர் 27 : கியூபாவில் நடந்த வரலாற்று சிறப்பு மிக்க பொதுவாக்கெடுப்பில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கும் முடிவு எடுக்கப்பட்டது.
செப்டம்பர் 28 : நட்பை வலுப்படுத்தும் நல்லெண்ண பயணமாக கொரியாவின் 2 கடற்படை கப்பல்கள் சென்னை துறைமுகம் வந்து சேர்ந்தன. அவற்றில் 470 வீரர்களும் வந்தனர்.
செப்டம்பர் 25 : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஒரு பந்து மீதம் வைத்து திரில் வெற்றியை ருசித்த இந்திய அணி தொடரையும் கைப்பற்றியது.
செப்டம்பர் 25 : துலீப் கோப்பை கிரிக்கெட்டில் ரஹானே தலைமையிலான மேற்கு மண்டல அணி சாம்பியன் கோப்பையை வென்றது.
செப்டம்பர் 26 :20 ஓவர் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் நீடிக்கிறது.
செப்டம்பர் 29 : குஜராத் மாநிலத்தில் நடைபெறும் தேசிய விளையாட்டு போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
செப்டம்பர் 29 : 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஒரு ஆண்டில் அதிக சிக்சர்கள் (45) அடித்து இந்திய வீரர் சூர்ய குமார் யாதவ் சாதனை படைத்துள்ளார்.
செப்டம்பர் 29 : முதுகு வலியால் அவதிப்படும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விரைவில் நடக்க உள்ள 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் விளையாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
செப்டம்பர் 30 : 20 ஓவர் உலக கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.13 கோடி பரிசு வழங்கப்படும் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
செப்டம்பர் 30 : தேசிய விளையாட்டு போட்டியில் தமிழகத்தின் பவானிதேவி, பிரவீன் சித்ரவேல் தங்கப்பதக்கம் வென்றனர்.
No comments:
Post a Comment