Wednesday, June 01, 2022

TNPSC CURRENT AFFAIRS MAY 2022

மே 15 : கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே வழங்குவது, ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட ‘சீட்’ வழங்குவது என்று காங்கிரஸ் மாநாட்டில் பிரகடனம் நிறைவேற்றப்பட்டது.


மே 15 : வாடிகனில் நடந்த விழாவில் தமிழ்நாட்டின் தேவசகாயத்துக்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கி சிறப்பு செய்தார்.


மே 15 : கொரோனா ஊரடங்கை மீறியதாக பொதுமக்கள் மீது தொடரப்பட்ட சுமார் 9 லட்சம் வழக்குகளை போலீசார் வாபஸ் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


மே 15 : விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும், ‘ககன்யான்' திட்டத்திற்கு பயன்படுத்தப்பட உள்ள, ‘ராக்கெட் பூஸ்டர்' கருவியை இஸ்ரோ வெற்றிகரமாக பரிசோதித்து உள்ளது.


மே 15 : லிவிவ் பிராந்தியத்தில் இருந்த உக்ரைன் ராணுவ கட்டமைப்பு வளாகம், ரஷியாவின் ஏவுகணை தாக்குதலில் அழிக்கப்பட்டது.


மே 16 : சென்னை துறைமுகம் - மதுரவாயல் வரையில் ரூ.5,855 கோடியில் 2 அடுக்கு உயர்மட்ட சாலை திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.


மே 16 : அனைத்து மாநில பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை அமைக்கப்பட வேண்டும் என்றும், ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்றும் சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.


மே 16 : உக்ரைனின் 2-வது மிகப்பெரிய நகரமான கார்கிவ் நகரை உக்ரைன் ராணுவம் முழுமையாக மீட்டது.


மே 17 : நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததால், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி தப்பியது.


மே 17 : பிரான்சில் 30 ஆண்டுகளுக்கு பிறகு பெண் ஒருவர் (எலிசபெத் போர்னி) பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.


மே 17 : காஷ்மீர் தொகுதி மறுவரையறைக்கு எதிராக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்தியாவின் உள்விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடக்கூடாது என்று இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


மே 17 : ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 15.08 சதவீதமாக உயர்ந்துள்ளது.


மே 17 : தனியார் சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி மருத்துவ கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு பின்னர் ஏற்படும் காலியிடங்களை கல்லூரி நிர்வாகம் நிரப்பிக் கொள்ளலாம் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.


மே 17 : சென்னை ஐ.ஐ.டி. தலைமையில் 8 நிறுவனங்கள் உருவாக்கிய ‘5-ஜி’ சோதனை அமைப்பை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இன்னும் 8 ஆண்டுகளில் ‘6-ஜி’ வந்து விடும் என அவர் அறிவித்தார்.


மே 17 : வட கொரியாவில் காய்ச்சல் பாதிப்பு, உயிரிழப்பு தொடர்ந்து அதிகரிப்பது கவலையை ஏற்படுத்தி உள்ளது. அந்த நாட்டின் தலைவர் கிம், இந்த சவாலை எப்படி கையாளப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.


மே 18 : முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளனை சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது.


மே 18 : 2025-2026-ம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனாலை கலக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.


மே 18 : இந்தியாவில் 2019-ல் மாசு காரணமாக 23 லட்சத்து 50 ஆயிரம் பேர் அகால மரணம் அடைந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.


மே 18 : ஆடம்பர பொருட்கள் இறக்குமதிக்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.


மே 18 : உக்ரைனில் அப்பாவி மனிதரை சுட்டுக்கொன்ற ரஷிய வீரர் தன் மீதான போர்க்குற்றத்தை கோர்ட்டில் ஒப்புக் கொண்டார்.


மே 19 : மத்திய பல்கலைக்கழகங்களில் முதுகலை பட்டப்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு முதல் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.


மே 19 : ஜி.எஸ்.டி. கவுன்சில் பரிந்துரைகள் மத்திய-மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.


மே 19 : சிவகாசி அருகே உள்ள விஜய கரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் தொல்லியல் துறை சார்பில் நடக்கும் அகழாய்வில் பழங்கால புகைக்கும் குழாய்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


மே 19 : வடகொரியாவில் மேலும் 2.62 லட்சம் பேருக்கு கொரோனா அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு கொரோனா பலிகள் பல்லாயிரக்கணக்கில் நேரிடும் என நிபுணர் எச்சரித்துள்ளார்.


மே 20 : மத்திய அரசுக்கு கடந்த 2021-22-ம் நிதியாண்டின் உபரி தொகையாக ரூ.30,307 கோடி வழங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்து உள்ளது.


மே 20 : ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை. ரெயில்வே துறையை உலக தரத்துக்கு மாற்றுவதே பிரதமர் மோடியின் நோக்கம் என மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.


மே 20 : மாமல்லபுரத்தை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா தலமாக மேம்படுத்த ரூ.461.22 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு ஒப்புதலுக்கு சமர்பிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் கூறினார்.


மே 20 : கிழக்கு லடாக்கில் சீனா பாலம் கட்டி வரும் இடம், 1960-களில் இருந்து சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் இருந்து வருகிறது என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.


மே 20 : இலங்கையில் உணவுக்கே போராடும் நிலை வரும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் அறிவித்தது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மே 21 : உக்ரைன் போரில் மரியுபோல் நகரை ரஷியா முழுமையாக கைப்பற்றியது.


மே 21 : உற்பத்தி வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்தது. இதனால் டீசல் விலை லிட்டருக்கு ரூ.7-ம், பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசும் குறைக்கப்பட்டுள்ளது. ‘உஜ்வாலா’ திட்ட கியாஸ் சிலிண்டர்களுக்கு ரூ.200 மானியம் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மே 21 : சென்னையில் மோட்டார் சைக்கிளை ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


மே 21 : செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் ஒமைக்ரான் பி.ஏ-4 வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


மே 21 : மேற்கத்திய நாடுகளில் குரங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதைத் தடுப்பது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு ஆலோசனை நடத்தி வருகிறது. தொடர்ந்து வடகொரியாவில் 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது.


மே 22 : என்ஜினீயரிங் கல்வி கட்டணம் உயர்கிறது. இது தொடர்பான பரிந்துரை பட்டியலை தொழில் நுட்ப கவுன்சில் வெளியிட்டுள்ளது.


மே 22 : ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த பொது தேர்தலில் எதிர்கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து அக்கட்சியின் தலைவரான அந்தோணி அல்பானீஸ் புதிய பிரதமராக பதவியேற்கிறார்.


மே 22 : அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷியாவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.


மே 23 : அனைத்து கிராமங்களும் விவசாயத்தில் தன்னிறைவு பெ றும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் என்ற புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


மே 23 : இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த பாடுபட்ட 10 லட்சம் `ஆஷா' பெண் ஊழியர்களுக்கு உலக சுகாதார அமைப்பு விருது வழங்கியுள்ளது.


மே 24 : மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி நீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, முதல் முறையாக மேட்டூர் அணையில் இருந்து மே மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.


மே 24 : ஒமைக்ரான் வைரசின் துணை வைரசான பி.ஏ. 5 என்ற புதிய வைரஸ் இந்தியாவிற்குள் நுழைந்தது.


மே 25 : இந்திய ராணுவத்தில் முதல் பெண் போர் விமானியாக கேப்டன் அபிலாஷா பராக் பொறுப்பேற்றார்.


மே 25 : இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தை கடந்தது.


மே 25 : வடகொரியா மீண்டும் ஒரே நாளில் 3 ஏவுகணைகளை சோதித்தது. அதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்தது.


மே 26 : ஆசிய கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி 16 கோல்கள் அடித்து இந்தோனேஷியாவை ஊதித்தள்ளியது.


மே 27 : சொகுசு கப்பலில் நடந்த போதைப் பொருள் விருந்து வழக்கில் திடீர் திருப்பமாக ஷாருக்கான் மகன் குற்றமற்றவர் என்று கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.


மே 27 : குட்கா, பான் மசாலாவுக்கு மேலும் ஒரு ஆண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


மே 27 : நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுத்துறைகளில் 62 லட்சத்துக்கும் மேற்பட்ட பணி இடங்கள் காலியாக உள்ளதாக பட்டியலிட்டு காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.


மே 28 : ரெயில்வேயில் 91 ஆயிரம் பணி இடங்களை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பணி நியமனங்களும், நம்பிக்கையும் முடிவுக்கு வந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி சாடி உள்ளது.


மே 28 : கிழக்கு உக்ரைன் தாக்குதலுக்கு மத்தியில் 1,000 கிலோ மீட்டர் சென்று தாக்கும் அதி நவீன ஏவுகணையை ரஷியா சோதித்துள்ளது.


மே 29 : சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் ஆயிரம் ரூபாய்க்கு முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.


மே 29 : உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் உடை (66 மீட்டர் நீளம், 42 மீட்டர் அகலம்) ஐ.பி.எல். நிறைவு விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.


மே 29 : ஐ.பி.எல். கிரிக்கெட்டில் குஜராத் அணி, ராஜஸ்தானை சுருட்டி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை உச்சி முகர்ந்தது.


மே 30 : கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் தோறும் ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.


மே 30 : மேட்டூர் அணை திறக்கப்பட்டதையடுத்து காவிரி டெல்டா பகுதியில் தூர்வாரும் பணிகளை முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.


மே 31 : குரங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. தொற்று பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்களை 21 நாட்கள் கண்காணிக்குமாறு கூறியுள்ளது.


மே 31 : ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்திய பின்பு தமிழகத்தில் ஒரே நாளில் 7 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு பெற்றனர்.


மே 31 : கடந்த நிதி ஆண்டின் 4-வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.1 சதவீதமாக குறைந்தது.


மே 31 : உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய பெண்கள் அணி தங்கம் வென்றது.

No comments:

Popular Posts