ஜூன் 1 : இணையதளம் மூலம் பட்டா மாறுதல் மற்றும் சான்றிதழ்கள் பெற அனுப்பப்படும் விண்ணப்பங்களை அதிகாரிகள் தேவையற்ற காரணங்களை கூறி நிராகரிப்பதை தடுக்க தமிழக அரசு புதிய பிரிவை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 1 : குரங்கு காய்ச்சலை முழுமையாக கட்டுப்படுத்துவது சந்தேகம் என உலக சுகாதார அமைப்பு சொல்கிறது.
ஜூன் 1 : வீடு வீடாக சென்று தடுப்பூசி போடாமல் விடுபட்டவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்தும் 2 மாத கால பணி தொடங்கியது.
ஜூன் 1 : ஆசிய கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலப்பதக்கம் வென்றது.
ஜூன் 2 : தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையிலுள்ள சட்ட மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கவர்னர் ஆர்.என். ரவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
ஜூன் 2 : கேரள, மராட்டிய மாநிலங்களில் கொரோனா பரவல் வேகம் எடுக்கிறது. குரங்கு அம்மை தொற்று 30 நாடுகளுக்கு பரவியது.
ஜூன் 2 : உலகளாவிய கல்விக்கு ஏற்ப, மாநில கல்விக்கொள்கையை உருவாக்க வேண்டும் என்று 13 பேரை கொண்ட குழுவுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜூன் 2 : வங்காளதேச டெஸ்ட் அணிக்கு ஷகிப் அல்-ஹசன் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
ஜூன் 2 : உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ஜூன் 3 : கட்டாயப்படுத்தாத பட்சத்தில் மதம் மாறுவதற்கு சட்டப்படி தடையில்லை என்றும், தான் விரும்பும் மதத்தை பின்பற்றும் உரிமை அனைவருக்கும் உண்டு என்றும் டெல்லி ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
ஜூன் 3 : ரெயில்களில் கூடுதல் லக்கேஜ் கொண்டு செல்ல இனி கட்டணம் வசூலிக்கப்படும், தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 3 : நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தையும், சென்னையில் தீவிர தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு முகாமையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
ஜூன் 3 : தொழிலாளர் வருங்கால வைப்புநிதிக்கு 8.1 சதவீத வட்டி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
ஜூன் 3 : உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் இரு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
ஜூன் 4 : சென்னை துறைமுகத்தில் இருந்து சொகுசு கப்பல் சுற்றுலாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஜூன் 4 : அரியலூர் மாவட்டம் மாளிகை மேட்டில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் சோழர்கால அரண்மனையின் ஒரு பகுதி செங்கல் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 4 : இந்தியாவில் முதல் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு முன்பே 36 குழந்தைகளில் ஒரு குழந்தை இறந்து விடுகிற பரிதாபம் நேருவதாக தெரிய வந்துள்ளது.
ஜூன் 4 : அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்கள் அனைவரும் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஜூன் 4 : பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
ஜூன் 5 : இந்தியாவில் கொரோனா மீண்டும் வேகம் எடுக்கிறது. தமிழகத்தில் புதிய வகை கொரோனா 12 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஜூன் 5 : ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரத்தில், மேலை நாடுகளின் எதிர்ப்பை இந்தியா நிராகரித்துள்ளது.
ஜூன் 5 : இந்த ஆண்டில் பல்வேறு காரணங்களுக்காக சுமார் 9 ஆயிரம் பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் நிலக்கரி கொண்டு செல்வதற்காக மட்டுமே 1,900 ரெயில்கள் நிறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஜூன் 6 : ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் மாதத்துக்கு 24 டிக்கெட் வரை முன்பதிவு செய்யலாம் என்று ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் 2026-ம் ஆண்டு இயக்கப்படும் என்று ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
ஜூன் 6 : மாற்றுத்திறனாளிகளுக்காக அனைத்தும் சாத்தியம் என்ற அருங்காட்சியகத்தை சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ஜூன் 6 : கல்வி, விவசாயம், வணிகக்கடன் பெற தனி இணையதளத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
ஜூன் 6 : சுதந்திர தின 75-ம் ஆண்டு விழா முத்திரையுடன் கூடிய புதிய ரூபாய் நாணயங்களை பிரதமர் மோடி வெளியிட்டார்.
ஜூன் 6 : இந்தியாவிலேயே முதன் முறையாக எந்தவித கட்டணமும் இன்றி 5-ம் வகுப்பு மாணவர்களும் ஐ.ஐ.டி.யில் படிக்கும் புதிய திறன்வளர்ப்பு பயிற்சி திட்டத்தை சென்னை ஐ.ஐ.டி. அறிமுகப்படுத்தி உள்ளது.
ஜூன் 7 : அமெரிக்காவில் 8.21 கோடி கொரோனா தடுப்பூசிகள் வீணாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜூன் 7 : நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது.
ஜூன் 8 : 10 மற்றும் அதற்கு மேற்பட்ட பணியாளர் களைக் கொண்ட கடைகள் மற்றும் நிறுவனங்கள் 24 மணிநேரமும் திறந்திருக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜூன் 8 : வங்கி கடன் வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 5 வாரங்களில் 2-வது தடவையாக வட்டி அதிகரித்துள்ளது. இதனால், வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான தவணை காலம் மீண்டும் அதிகரிக்கும்.
ஜூன் 8 : நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.100 உயர்த்த மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.
ஜூன் 8 : 82 சதவீத வழித்தடம் மின்மயமாக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
ஜூன் 8 : அமெரிக்காவில் புற்றுநோயை அறுவை சிகிச்சையின்றி குணப்படுத்தும் மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தால் 12 புற்றுநோயாளிகள் பூரண குணம் அடைந்துள்ள அதிசயம் அரங்கேறி இருக்கிறது.
ஜூன் 9 : ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ந் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. 4,809 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடுகிறார்கள்.
ஜூன் 9 : அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடர்ந்து இயங்கும். இதற்காக தகுதியான சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஜூன் 9 : 12,525 கிராமங்கள் பயன் அடையும் வகையில் ரூ.1,627 கோடி மதிப்பில் பாரத் நெட் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஜூன் 9 : ரிசர்வ் வங்கியின் வட்டி விகித உயர்வால் வங்கிகளில் கடனுக்கான வட்டி உயர்வு உடனடியாக அமலுக்கு வந்தது.
ஜூன் 9 : கழிவுநீர்த் தொட்டிகளை மனிதர்கள் இன்றி சுத்தம் செய்ய ‘ரோபா’ கருவியை சென்னை ஐ.ஐ.டி கண்டுபிடித்து உள்ளது.
ஜூன் 10 : தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக விரைவில் அவசர சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகள் அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜூன் 10 : நாய், முயல், சிங்கம் உள்ளிட்ட விலங்கு களுக்கு கொரோனா தடுப்பூசி இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 11 : குழந்தை தொழிலாளர்கள் குறித்து அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.
ஜூன் 11 : புதிய மாறுபாடுகள் காணப்படாத நிலையில், கொரோனா தொற்று அதிகரித்தாலும் பீதி அடைய தேவையில்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஜூன் 11 : 3 கொரோனா அலைகளுக்கு மத்தியிலும் ‘இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது என்று அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.
ஜூன் 12 : தமிழகத்தில் ஒரு லட்சம் இடங்களில் நடந்த 30-வது மெகா தடுப்பூசி முகாமில் 13.83 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
ஜூன் 12 : ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களை கொண்ட காட்டு யானை போகேஸ்வரன் இறந்தது. அதன் உடல் கபினி அணை அருகே புதைக்கப்பட்டது.
ஜூன் 12 : பொது இடங்களில் முககவசம் அணிய வேண்டியது அவசியம் எனவும், கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே வழி எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
ஜூன் 12 : உக்ரைனில் இருந்து படிப்பை பாதியில் விட்டு திரும்பிய இந்திய மாணவர்கள், ரஷிய பல்கலைக்கழகங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று ரஷிய தூதரக அதிகாரி கூறினார்.
ஜூன் 13 : சுப்ரீம் கோர்ட்டில் தமிழகத்தின் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை பற்றி விவாதிக்க அனுமதிக்கக்கூடாது என்று பிரதமருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ஜூன் 13 : தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் சட்டத்திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
ஜூன் 13 : கொரோனா இன்னும் முடியவில்லை என்றும் எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஜூன் 14 : முப்படைகளில் வீரர்கள் சேர்ப்பில் அதிரடி மாற்றத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அக்னிபத் என்ற இந்த திட்டத்தில் சேரும் இளைஞர்கள் 4 ஆண்டுகள் பணி செய்யும் வாய்ப்பு வழங்கப்படும்.
ஜூன் 14 : அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொழில் நுட்ப மையங்களாக தரம் உயர்த்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
ஜூன் 14 : அடுத்த 1½ ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை வழங்க பிரதமர் நரேந்திரமோடி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஜூன் 14 : ரூ.50 ஆயிரத்துக்கு மேல் மதிப்புள்ள தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை கொண்டு வரும் வெளிநாட்டினர் உறுதிமொழி படிவத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஜூன் 15 : இந்தியாவில் அடுத்த மாதம் 5-ஜி அலைக்கற்றைகள் ஏலம் விடுவதற்கு மத்திய மந்திரிசபை தனது ஒப்புதலை அளித்துள்ளது.
ஜூன் 15 : கொரோனா பாதித்தவர்கள் வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்படும் என்றும், கொரோனா பரிசோதனைகள் 5 ஆயிரம் என்ற அளவில் அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
ஜூன் 15 : அரசு அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு, தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது என்று சென்னை ஐகோர்ட்டு வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ளது.
ஜூன் 15 : ஈரானில் அடுத்தடுத்து 7 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜூன் 16 : சென்னையின் 2-வது விமான நிலையத்தை பன்னூரில் அமைக்க சாதகமான அம்சங்கள் இருப்பது முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஜூன் 16 : அக்னிபத் திட்டத்தை எதிர்த்து 2-வது நாளாக போராட்டம் நீடித்தது. பீகாரில் 2 ரெயில்களுக்கு தீவைக்கப்பட்டது. கல் வீச்சில் பெண் எம்.எல்.ஏ. காயமடைந்தார். பல மாநிலங்களில் போராட்டம் நடந்ததால், 34 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
ஜூன் 16 : நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தைக் கடந்தது. மராட்டியம், கேரளாவில் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது.
ஜூன் 16 : புதிய சமையல் கியாஸ் சிலிண்டருக்கான டெபாசிட் தொகை ரூ.750 உயர்த்தப்பட்டு, ரூ.2 ஆயிரத்து 200 ஆக நிர்ணயம் செய்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து உள்ளன.
ஜூன் 17 : ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் புதிய முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார்.
ஜூன் 17 : பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து குஜராத் கலவரம், எமர்ஜென்சி உள்பட ஏராளமான பாடங்களை என்.சி.இ.ஆர்.டி. நீக்கி உள்ளது.
ஜூன் 17 : வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
ஜூன் 17 : இந்தியாவில் 50 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஜூன் 17 : முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன விமானம் தாங்கி போர்க்கப்பலை சீனா அறிமுகப் படுத்தியது.
ஜூன் 18 : மேக தாது அணையை கட்ட விடமாட்டோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுபற்றி மத்திய அரசிடம் வலியுறுத்த தமிழக குழு டெல்லி செல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜூன் 18 : அக்னிபத் திட்டத்தில் ராணுவத்தில் சேருவோருக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. துணை ராணுவத்தில் அவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. வயது வரம்பிலும் தளர்வு அளிக்கப்படுகிறது.
ஜூன் 19 : 17-வது மக்களவையில் இதுவரை 149 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஓம் பிர்லா பெருமையுடன் குறிப்பிட்டார்.
ஜூன் 20 : 111 கட்சிகளின் பதிவுகளை ரத்து செய்து தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜூன் 20 : இந்தியாவில் 130 நாட்களுக்கு பிறகு, தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 4 சதவீதத்தை தாண்டியது.
ஜூன் 20 : ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள், அக்னிபத் திட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தினர்.
ஜூன் 20 : தமிழகத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. பிளஸ் 2 தேர்வில் 94 சதவீதம் பேரும், 10-ம் வகுப்பில் 90 சதவீதம் பேரும் தேர்வானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஜூன் 21 : இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்துக்கு கீழே வந்தது.
ஜூன் 21 : தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
ஜூன் 21 : பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 10, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் 11 பேர் ஒரே நாளில் தற்கொலை செய்துகொண்டதும், 28 பேர் தற்கொலைக்கு முயற்சித்ததும் கல்வித்துறையை அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது.
ஜூன் 21 : ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார். ஆளும் பா.ஜனதா கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு நிறுத்தப்பட்டு உள்ளார்.
ஜூன் 22 : புதுக்கோட்டையில் மன்னர் ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவருக்கு நினைவு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஜூன் 22 : சேலம், தஞ்சாவூர், திருச்சி அரசு மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் 250 ஆக உயர்த்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
ஜூன் 22 : இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் 12 ஆயிரத்தைக் கடந்தது.
ஜூன் 22 : இந்த ஆண்டு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை பெற அரசு பள்ளி மாணவர்கள் 2.70 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.
ஜூன் 22 : தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் காவிரி ஆற்றில் கர்நாடக அரசு எந்த ஒரு அணையையும் கட்ட முடியாது என்று மத்திய மந்திரி உறுதி செய்ததாக அமைச்சர் துரை முருகன் கூறினார்.
ஜூன் 23 : 10-ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை எண்ணத்தில் 123 மாணவிகள் இருந்ததை தமிழக அரசு கண்டறிந்துள்ளது. அவர்களின் எண்ணத்தை மாற்ற பள்ளிக் கல்வித்துறை கவுன்சிலிங் அளித்து வருகிறது.
ஜூன் 23 : கொரோனா கால செலவுகளை முன்னிட்டு அரசு நிகழ்வுகளுக்கு முன்பு விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜூன் 23 : ஜிசாட்-24 தகவல் தொடர்பு வசதிக்கான ஜிசாட்-24 செயற்கைக்கோள் பிரெஞ்சு கயானாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
ஜூன் 24 : உணவு தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும். அதன் பின்விளைவுகளில் இருந்து எந்த நாடும் தப்ப முடியாது என்று ஐ.நா. பொதுச்செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜூன் 24 : ஒரே ஆண்டில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளால் 42 லட்சம் இறப்புகள் தடுக்கப்பட்டுள்ளன என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஜூன் 24 : தமிழகத்தில் ரேஷன் கடைகளை ஒரே வடிவில் அமைப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதன் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது.
ஜூன் 24 : குஜராத் இனக்கலவரங்கள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அவர் குற்றமற்றவர் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
ஜூன் 25 : பிளஸ்-2 முடித்த மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி என்ற புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
ஜூன் 25 : பாகிஸ்தானால் இறந்ததாக அறிவிக்கப்பட்ட மும்பை தாக்குதல் பயங்கரவாதி சாஜித் மிர்ருக்கு லாகூர் கோர்ட்டில் 15½ ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 25 : இங்கிலாந்தில் வசிக்கும் குஷி படேல், இந்த ஆண்டுக்கான வெளிநாடுவாழ் இந்திய அழகியாக கிரீடம் சூட்டப்பட்டுள்ளார்.
ஜூன் 19 : அக்னிபத் திட்டம் வாபஸ் இல்லை என்றும், தீ வைப்பு மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு ராணுவத்தில் இடம் கிடையாது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
ஜூன் 20 : அக்னிபத் திட்டத்துக்கு எதிராக நடந்த நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தையொட்டி 600-க்கும் மேற்பட்ட ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
ஜூன் 22 : அக்னிபத் திட்டம் மூலம் ராணுவத்தை அழிக்க பார்க்கிறார்கள். அதன் பாதிப்பு போர் வரும்போதுதான் தெரியும் என்று ராகுல் காந்தி கூறினார்.
ஜூன் 24 : அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப்படைக்கு ஆள்தேர்வு தொடங்கியது.
ஜூன் 25 : அக்னிபத் திட்டம் குறித்து ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்படும் என்று ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.
ஜூன் 25 : ஆப்கானிஸ்தான் நாட்டை பயங்கர நிலநடுக்கம் உலுக்கியது. இதில் 1,000 பேர் பலியாகினர். (ஜூன் 22)
ஜூன் 25 : அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு அங்கு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 26 : இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.470 ஆக உயர்ந்திருக்கிறது. டீசல் விலையும் லிட்டர் ரூ.460 என கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், ‘டோக்கன்’ முறை அமல்படுத்தப்படுகிறது.
ஜூன் 26 : ரஞ்சி கிரிக்கெட்டில் மத்தியபிரதேச அணி, மும்பையை வீழ்த்தி முதல்முறையாக கோப்பையை வென்று வரலாறு படைத்தது.
ஜூன் 26 : உலக கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய அணிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இந்த உலக தொடரில் இந்தியா மொத்தம் ஒரு தங்கம், 2 வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது.
ஜூன் 27 : நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது.
ஜூன் 28 : இங்கிலாந்து அணிக்கு உலக கோப்பையை பெற்றுத்தந்த கேப்டன் இயான் மோர்கன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
ஜூன் 29 : விம்பிள்டன் டென்னிசில், முன்னாள் சாம்பியனான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்து, முதல் சுற்றுடன் வெளியேறினார்.
ஜூன் 28 : இலங்கை அதிபரை விட நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் அளிக்கும் அரசியல் சட்ட திருத்த மசோதாவுக்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
ஜூன் 28 : உக்ரைன் வணிக வளாகம் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர்.
ஜூன் 28 : ஐரோப்பிய நாடுகளில் கொரோனா சான்றிதழ் பயன்பாடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 30 : இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. அந்த நாடு, 4 ஆண்டுகளில் 5-வது முறையாக பொதுத்தேர்தலை சந்திக்கிறது.
ஜூன் 28 : பண்டிகை, யாத்திரைகளில் மக்கள் பெருந்திரளாக பங்கேற்கிறபோது கொரோனா தொற்று பரவலை தடுக்க உஷாராக இருக்கும் வகையில் அறிவுரைகள் வழங்கி மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.
ஜூன் 28 : 31 சதவீத மாநிலங்களவை எம்.பி.க்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இவர்களில் 6 பேர், தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவர்.
ஜூன் 28 : அலுவலகத்தில் அனைவரும் முழு நேரமும் முறையாக முககவசம் அணிந்தபடி இருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜூன் 29 : பிரமாண்டம் இந்தியாவின் தென்கோடி முனையில் உள்ள கன்னியாகுமரியில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட 150 அடி உயர கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
ஜூன் 30 : மராட்டிய முதல்-மந்திரி பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில் நம்பிக்கை ஓட்டெடுப்பை சந்திக்காமலேயே அவர் பதவி விலகினார்.
ஜூன் 30 : பல்வேறு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை உயர்த்்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கரண்டி, கத்தி, கிரைண்டருக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 30 : வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் முடிகிறது. ஆகஸ்டு 6-ந் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
ஜூன் 30 : கொரோனாவுக்கு எதிரான நாட்டின் முதல் எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது இனி வரும் உருமாறிய வைரஸ்களுக்கும் ஏற்றதாகும்.
ஜூன் 30 : பி.எஸ்.எல்.வி. சி-53 சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த பூமி கண்காணிப்பு செயற்கை கோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
No comments:
Post a Comment