எட்டாம் திருமுறை யாருடைய பாடல்களை உள்ளடக்கியது - மாணிக்க வாசகர்.
எட்டாம் திருமுறையில் உள்ள பாடல்கள் - திருவாசகம், திருக்கோவையார்.
மாணிக்கவாசகரின் ஊர் - திருவாதவூர்.
மாணிக்கவாசகரின் காலம் - ஒன்பதாம் நூற்றாண்டு.
மாணிக்க வாசகர் எந்த மன்னனிடம் அமைச்சராக இருந்தார் - அரிமர்த்த பாண்டியன்.
அமைச்சராக மாணிக்கவாசகர் பெற்ற பட்டம் - தென்னவன் பிரம்மராயன்.
மாணிக்கவாசகரின் வேறு பெயர் - வாதவூரார்.
மாணிக்கவாசகருக்கு இறைவன் ஞானாசிரியனாக வந்து ஞானம் தந்த இடம் - திருப்பெருந்துறையின் குருந்த மரத்தடி.
இறைவன் நரியைப் பரியாக்கி, பரியை நரியாக்கி திருவிளையாடல் செய்தது யாருக்காக - மாணிக்கவாசகர்.
மாணிக்கவாசகர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார் - 32.
திருவாசகத்தின் முதல் பகுதி - சிவபுராணம்.
திருவாசகத்தின் இறுதிப்பகுதி - ஆச்சோப்பதிகம்.
திருவாசகத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 659.
முதல் கோவை இலக்கியம் எது - திருக்கோவையார்.
திருக்கோவையாரில் உள்ள பாடல்கள் - 400.
திருக்கோவையார் எந்தப் பாவால் ஆனது - கட்டளைக்கலித்துறை.
திருக்கோவையாருக்கு உரை எழுதியவர் - பேராசிரியர்.
'திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்' - என்றவர் - ஜி.யு.போப்.
திருவாசகத்தை 'ஊண் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே' என்றவர் - வள்ளலார்.
'மெய்ம்மயிர் பொடிப்ப விதிர்விதிப்பு எய்தி' என திருவாசகத்தால் எழும் மெய்ப்பாட்டைப் புகழ்பவர் - சிவப்பிரகாசர்.
மாணிக்க வாசகரின் மார்க்கம் - சன்மார்க்கம் [ஞான நெறி].
சன்மார்க்கம் என்பது - ஆசிரியர் - மாணவர் உறவு.
ஒன்பதாம் திருமுறையைப் பாடியோர் - ஒன்பதின்மர் [திருமளிகைத்தேவர், கருவூர்த் தேவர், சேந்தனார், பூந்துருத்தி காடவ நம்பி, கண்டராதிதர், வேணாட்டடிகள், திருவாலி அமுதனார், புருடோத்தம நம்பி, சோதிராயர்].
ஒன்பதாம் திருமுறையில் உள்ளவை - திருவிசைப்பா, திருப்பல்லாண்டு.
ஒன்பதாம் திருமுறையில் உள்ள பதிகங்கள் - 29.
ஒன்பதாம் திருமுறையில் உள்ள பாடல்கள் - 301.
ஒன்பதாம் திருமுறையில் அதிகம் சிறப்பிக்கப்படும் ஊர் - சிதம்பரம்.
ஒன்பதாம் திருமுறையின் காலம் - கி.பி. 10/11 நூற்றாண்டு.
திருமளிகைத்தேவர் எத்தனைப் பதிகங்கள் பாடி உள்ளார் - 4 [45 பாடல்கள்].
கருவூர்த்தேவர் எத்தனைப் பதிகங்கள் பாடினார் - 10 [105 பாடல்கள்].
சேந்தனார் பாடிய மொத்தப் பதிகங்கள் எத்தனை - 4 [47 பாடல்கள்].
பூந்துருத்தி காடவ நம்பி பாடிய பதிகங்கள் எத்தனை - 2 [12 பாடல்கள்].
சாளரப்பண் என்ற புதிய பண்ணைப் பாடியவர் யார் - பூந்துருத்தி காடவ நம்பி
கண்டராதித்தர் பாடிய பாடல்கள் - 10 [தில்லை பற்றியவை].
வேணாட்டடிகள் பாடிய பாடல்கள் - 10 [சிதம்பரம் பற்றியவை].
திருவாலி அமுதனார் எத்தனைப் பதிகங்கள் பாடினார் - 4 [42 பாடல்கள்].
புருடோத்தம நம்பி எத்தனைப் பதிகங்கள் பாடினார் - 2 [22 பாடல்கள்].
சோதிராயர் எத்தனைப் பாடல்களைப் பாடினார் - 10.
பத்தாம் திருமுறையில் இடம் பெறுபவை - திருமந்திரம்.
திருமந்திரத்தை இயற்றியவர் - திருமூலர்.
திருமுறையில் உள்ள இயல்கள் - 9.
திருமுறையில் உள்ள அதிகாரங்கள் - 232.
திருமந்திரத்தில் உள்ள பாக்கள் - 3000.
'அன்பே சிவம்' என்றவர் - திருமூலர்.
'ஒன்றே குலம் ஒருவனே தேவன் '- இது இடம்பெற்றுள்ள நூல் - திருமந்திரம்.
பதினோராம் திருமுறையை இயற்றியோர் - பன்னிருவர் [திருவாலவுடையார், காரைக்கால் அம்மையார், கல்லாட தேவ நாயனார், நக்கீர தேவ நாயனார், கபிலதேவ நாயனார், பரண தேவ நாயணார், அதிரா அடிகள், எம்பெருமான் அடிகள், ஐயடிகள் கடவர்கோன், பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பி].
பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ள நூல்கள் - 40.
பதினோராம் திருமுறை இயற்றியோரில் இறைவன் என நம்பப்படுபவர் - திருவாலவுடையார்.
பன்னிரெண்டாம் திருமுறையாக விளங்கும் நூல் - பெரிய புராணம்.
பெரிய புராண ஆசிரியர் - சேக்கிழார்.
No comments:
Post a Comment