சிறுபஞ்சமூலத்தின் உருவம் :
- சிறுபஞ்சமூலம் = சிறுமை +பஞ்சம் +மூலம்.
- ஆசிரியர் = காரியாசான்.
- பாடல்கள் = கடவுள் வாழ்த்து 1, பாயிரங்கள் 2, செய்யுட்கள் 102.
- பாவகை = வெண்பா.
- உரையாசிரியர் =புன்னை வனநாத முதலியார்.
பெயர்க்காரணம் :
கண்டங்கத்திரி, சிறு வழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய வேர்கள் இணைந்து மனிதனின் நோயை குணப்பதுவது போல இந்நூல் மனிதனின் உள்ளப்பிணியை நீக்குகிறது.
பொதுவான குறிப்புகள் :
- மருந்தின் பெயரால் பெயர் பெற்ற நூல்.
- பஞ்சம் = ஐந்து, மூலம் = வேர்.
- ஐந்து வேர்கள் = கண்டங்கத்திரி, சிறு வழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி.
- சிறுபஞ்சமூலம் போன்றே பெருபஞ்சமூலம் என்ற ஒன்றும் உண்டு. அவை 1.வில்வம்,2.பெருங்குமிழ்,3.பாதிரி,4.தழுதாழை,5.வாகை என பதார்த்த குண சிந்தாமணி மற்றும் பொருட்தொகை நிகண்டு கூறுகிறது
- காரியாசனும் ஏலாதியின் ஆசிரியருமான கணிமேதாவியாரும் மதுரைத் தமிழ் ஆசிரியர் மாகாயானரின் ஒரு சாலை மாணவர்கள்.
- இந்நூல் தொல்காப்பியர் குறிப்பிடும் “அம்மை” என்ற வனப்பிற்கு உரியது.
- பாடல் தோறும் 5 கருத்துக்கள் கொண்டது.
- மாக்காரியாசான் என பாயிரம் கூறுகிறது.
மேற்கோள் :
- நூற்கு இயைத்த சொல்லின் வனப்பே வனப்பு.
- பேதைக்கு உரைத்தாலும் செல்லாது உணர்வு.
- மயிர் வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும். உகிர் வனப்பும் காதின் வனப்பும்– செயிர் தீர்ந்த பல்லின் வனப்பும் வனப்பல்ல நூற்கியைந்த சொல்லின் வனப்பே வனப்பு.
- நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
- பகுத்துண்டு பல்லுயிர் பாதுகாக்க வேண்டும்.
No comments:
Post a Comment