Friday, September 30, 2022

TNPSC G.K - 141 | களவழி நாற்பது.

களவழி நாற்பதின் உருவம் :


  • ஆசிரியர் - பொய்கையார்.
  • பாடல் - 40.
  • திணை - புறத்திணை – வாகைத்திணை.
  • பாவகை - வெண்பா
  • உரையாசிரியர் - ந.மு. வேங்கடசாமி நாட்டார்.

பெயர்க்காரணம் :


  • களம் - போர்க்களம்.
    போர்க்களம் பற்றிய நாற்பது பாடல்களைக் கொண்டதால் களவழி நாற்பது எனப் பெயர் பெற்றது.
    களம் இருவகை ஏர்களம் பாடுதல் ஒன்று ,போர்களம் பாடுதல் இரண்டு.
  • இதனை தொல்காப்பியம்,

ஏரோர் களவழி அன்றிக் களவழித்
தேரோர் தோன்றிய வென்றியும்.

– தொல்காப்பியம்

வேறு பெயர் :


  • பரணி நூலின் தோற்றுவாய்.
  • பரணி இலக்கியத்தின் வழி காட்டு.
  • பரணி இலக்கியத்தின் தோன்றல்.

பொதுவான குறிப்புகள் :


  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் புறப்பொருள் சார்ந்த ஒரே நூல்.
  • புறவாழ்வு போர் பற்றி கூறுகிறது.
  • சோழன் செங்கணாணும் சேரமான் கணைக்கால் இரும்பொறையும் போரிட்ட இடம் - போர்ப்புறம்(கழுமலம்).
  • சேரமான் சிறை வைக்கப்பட்ட இடம் - குடவாயில் கோட்டம்.
  • சேரமானை விடுவிப்பதற்காக பொய்கையார் களவழி நாற்பது, சோழன் மீது பாடினார்.
  • நூலிற்கு பரிசாக சேரமானை விடுதலை செய்ய வேண்டினார். சோழனும் சம்மதம் தெரிவித்தான்.
  • ஆனால் சிறையில் தன்னை தரக்குறைவாக நடுதியதால் மானம் பெரிதென எண்ணி உயிர் விட்டான்.
  • சேரமான் புறநானூற்றில் பாடிய பாடல்,

குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்,

ஆளன்று என்று வாளில் தப்பார்,

தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய,

கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்,

மதுகை இன்றி வயிற்றுத் தீத்தணியத்,

தாம்இரந்து உண்ணும் அளவை,

ஈன்மரோ இவ்வுலகத் தானே.

  • இந்நூலில் கார்த்திகைத் திருவிழா சிறப்பாக உவமிக்கப்பட்டுள்ளது.
  • களவழி நாற்பதின் நாற்பது பாடல்களும் “அட்ட களத்து” என முடிவது தொல்காப்பியர் கூறும் அம்மை என்னும் வனப்பு வகையை சேர்ந்தது.
  • அனைத்து பாடல்களும் களம் என்ற சொல் இடம்பெற்றுள்ளது.
  • அனைத்துப் பாடல்களும் போர்க்களம் குறித்து பாடுகிறது.
  • ஒரே இடத்தில் மட்டும் பெண்ணை பற்றி கூறுகிறது.
  • யானைகளின் போரிடும் முறை, வீரர்களின் போர்ச்செயல்கள், போரில் ஏற்படும் அழிவால் போர்களமே இரத்த ஆறாக காணபடுதல் போன்ற போர்கள் வருணனைகள் இதில் இடம் பெற்றுள்ளன.

முக்கிய அடிகள் :


  • கடிகாவில் காற்று உற்று அறிய, வெடிபட்டு.
  • வீற்றுவீற்று ஓடும் மயிலினம் போல் நாற்றிசையும்.
  • கேளிர் இழந்தார் அலறுபவே, செங்கண்.
  • சினமால் பொறுத்த களத்து.

No comments:

Popular Posts