நான்மணிக்கடிகையின் உருவம் :
- ஆசிரியர் - விளம்பி நாகனார்
- ஊர் - விளம்பி
- பாடல்கள் - 2 + 104
- பாவகை - வெண்பா
பெயர்க்காரணம் :
- நான்கு + மணி + கடிகை - நான்மணிக்கடிகை.
- கடிகை - துண்டு, ஆபரணம், தோள்வளை. நான்கு மணிகள் பதிக்கப்பெற்ற தோள்வளை போல் நான்கு நீதி மணிகளால் நிலைநாடாப்பட்ட பாடல்களைக் கொண்ட நூல்.
- நான்மணிகள் முத்து பவளம் மரகதம்,மாணிக்கம்.
கடவுள் வாழ்த்து :
- முதல் இரண்டு கடவுள் வாழ்த்து பாடலிலும் நான்கு கருத்துக்கள் உள்ளன.
கடவுள் வாழ்த்து திருமாலைப் பற்றியது.
பொதுவான குறிப்புகள் :
- ஒவ்வொரு பாடலிலும் நாலு கருத்துக்கள் உள்ளன.
- நூலில் வடமொழி கலப்பு அதிகம்.
- இந்நூல் தொல்காப்பியர் கூறும் அம்மை என்ற வனப்பிற்கு உரியது.
- ஜி.யு.போப் இந்நூலின் 7,100 ஆகிய இரு பாடல்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துள்ளார்.
- இந்நூலின் மிகப் பிரபலமான அடி - “யார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி”.
- கீழ்கணக்கு நூல்களில் 2 கடவுள் வாழ்த்து கொண்ட ஓரே நூல் காலம் நூற்றாண்டு என டி.வி. சதாசிவ பண்டாரத்தார் கருத்து. பழைய உரையாசிரியர் பேராசிரியர், நச்சினார்கினியார்.
- உரையாசிரியர் பாலசுந்தரம் பிள்ளை.
முக்கிய அடிகள் :
- யார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி.
- இந்நிலத்தே மன்னுதல் வேண்டின் இசைநடுக.
- தன்னொடு செல்வது வேண்டின் அறம் செய்க, வெல்வது வேண்டின் வெகுளிவிடல்.
- இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்.
- வளமில்லாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம்.
- ஈன்றாளோடு எண்ணக் கடவுளும் இல்.
- கொண்டானிற் சிறந்த கேளிர் பிறர்இல்.
- மனைக்கு விளக்கம் மடவாள், மடவாளுக்கு விளக்கம் புதல்வர், புதல்வர்க்கு விளக்கம் கல்வி, கல்விக்கு இலக்கம் புகழ்சால் உணர்வு.
No comments:
Post a Comment