- நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார் - பாண்டியன் மாறன் வழுதி.
- நற்றிணைப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை - 176.
- நற்றிணையைத் தொகுப்பித்தவர் - பன்னாடு தந்த மாறன்வழுதி.
- வினையே ஆடவர்க்கு உயிரே இடம் பெற்றுள்ள இலக்கியம் - குறுந்தொகை.
- குறுந்தொகையைத் தொகுத்தவர் யார் - பூரிக்கோ.
- ஐங்குறுநூறு பாடல்களின் பாவகை - அகவற்பா.
- தொகுத்தோன் தொகுப்பித்தோன் பற்றிய வரலாறு முழுமையாக அமையப்பெற்ற நூல்கள் - அகநானூறு, ஐங்குறுநூறு.
- மூன்றடிச் சிறுமையும் ஆறடிப் பெருமையும் உடைய நூல் - ஐங்குறுநூறு.
- ஐங்குறுநூற்றில் கடவுள் வாழ்த்துப் பாடியவர் - பாரதம் பாடிய பெருந்தேவனார்.
- ஐங்குறுநூற்றில் பழைய உரையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 469.
- ஐங்குறுநூற்றை முதலில் பதிப்பித்தவர் - உவேசா.
- ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் - புலத்துறை முற்றிய கூடலூர்க் கிழார்.
- ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தவர் - யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.
- ஐங்குறுநூறின் அடிவரையறை - 3-6 அடிகள்.
- ஐங்குறுநூறின் பாவகை - அகவற்பா.
- ஐங்குறுநூறுக்கு உரை எழுதியவர் - ஔவை துரைசாமிப் பிள்ளை.
- பதிற்றுப்பத்தில் இரண்டாம் பத்து எந்த மன்னனைப் பாடுகிறது - இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்.
- பதிற்றுப்பத்தில் ஒன்பதாம் பத்தை பாடிய புலவர் - பெருங்குன்றூர்க்கிழார்.
- பாலைக் கவுதமனார் பாடிய பதிற்றுப்பத்துப் பகுதி - மூன்றாம் பத்து.
- சங்க இலக்கியத்தில் பண்ணும் இசை வகுத்தவர் பெயரும் குறிக்கப் பெற்ற நூல் எது - பரிபாடல்.
- அகப்பாடல்களும் புறப்பாடல்களும் கலந்த தொகை நூல் - பரிபாடல்.
- பண்ணுடன் பாடப்பட்ட எட்டுத்தொகை நூல் - பரிபாடல்.
- கலித்தொகை எதன் வழிப் பெயர் பெற்றது - யாப்பு வகையால்.
- இதிகாச நிகழ்வுகள் அதிகம் இடம் பெற்ற நூல் - கலித்தொகை.
- யவனர்கள் மரக்கலங்களில் பொன்னை எடுத்து வந்து அதற்கீடாக மிளகை பெற்று சென்றது குறித்து கூறும் நூல் எது - அகநானூறு.
- அகத்தொகையுள் நீண்ட பாடல்களைக் கொண்ட நூல் - அகநானூறு (அல்லது) நெடுந்தொகை.
- தொகுத்தோன் தொகுப்பித்தோன் பற்றிய வரலாறு முழுமையாக அமையப்பெற்ற நூல்கள் - அகநானூறு, ஐங்குறுநூறு.
- அகநானூற்றுப் பாக்களின் அடி வரையறை யாது - 13 அடி முதல் 31 அடி வரை.
- நந்தர், மோரியர் குறிப்புகளைக் காட்டும் நூல் - அகநானூறு.
- அகநானூற்றின் முதல் பகுதிக்குப் பெயர் - களியாற்றினை நிரை.
- அகநானூற்றுக்கு வழங்கப்படும் இன்னொரு பெயர் - நெடுந்தொகை.
- அகநானூற்றில் 1, 3, 5, 7 என ஒற்றை எண்ணைப் பெற்று வரும் பாடல்கள் - பாலைத்திணை(200 பாடல்கள்).
- அகநானூற்றில் 10, 20, 30, 40 என வரும் பாடல்கள் - நெய்தல் திணை (40 பாடல்கள்).
- அகநானூற்றில் 2,8,12,18 என 2,8 எனும் எண்ணைப் பெற்று வரும் பாடல்கள் - குறிஞ்சித்திணை(80 பாடல்கள்).
- அகநானூற்றில் 4, 14, 24, 34 என 4 எனும் எண்ணைப் பெற்று வரும் பாடல்கள் - முல்லைத்திணை(40 பாடல்கள்).
- அகநானூற்றில் 6,16, 26, 36 என 6 எனும் எண்ணைப் பெற்று வரும் பாடல்கள் - மருதத்திணை(40 பாடல்கள்)
- அகநானூற்றில் பாடல் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் - நோய்பாடியார், ஊட்டியார்.
- அகநானூற்றின் அடிவரையறை - 1331 அடிகள்.
- அகநானூற்றின் இரண்டாம் பகுதி - மணிமிடைப்பவளம்.
- அகநானூற்றின் நூல் முழுமைக்கும் உரை எழுதியவர்கள் - வேங்கடசாமி நாட்டார், இராவெங்கடாசலம்பிள்ளை.
- அகநானூற்றின் பாடல்களுக்கு உள்ள பழைய உரை எண்ணிக்கை - 90.
- அகநானூற்றின் பிரிவுகள் எத்தனை மற்றும் யாவை - 3 பிரிவுகள் களிற்றுயானைநிரை, மணிமிடைப்பவளம், நித்திலக்கோவை.
- அகநானூற்றின் முதல் பகுதி - களிற்றுயானை நிரை.
- அகநானூற்றின் முதல் பதிப்பாசிரியர் - வேஇராசகோபால்.
- தமிழர்களின் வரலாற்றுக் களஞ்சியமாக விளங்கும் நூல் - புறநானூறு.
- இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும் எனும் அடிகள் இடம் பெற்ற நூல் - புறநானூறு.
- ஜியுபோப்பைக் கவர்ந்த எட்டுத்தொகை நூல் - புறநானூறு.
- திருமுருகாற்றுப்படையில் இடம் பெறும் திணை - பாடாண்திணை.
- பொருநராற்றுப்படையின் ஆசிரியர் - முடத்தாமக் கண்ணியார்.
- நெஞ்சாற்றுப்படை' எனச் சிறப்பிக்கப்படும் இலக்கியம் எது - முல்லைப்பாட்டு.
- பத்துப்பாட்டில் மிகச்சிறிய நூல் - முல்லைப்பாட்டு.
- தொன்னூற்றொன்பது வகை மலர்களைப் பற்றிக் கூறும் நூல் - குறிஞ்சிப்பாட்டு.
- பட்டினப்பாலையில் பாட்டுடைத் தலைவன் - கரிகாலன்.
- பட்டினப்பாலைச் சுட்டும் பெருமைமிகு பட்டினம் எது - காவிரிபூம்பட்டினம்.
Thursday, September 29, 2022
TNPSC G.K - 128 | பொதுத்தமிழ் - பத்துப்பாட்டு,எட்டுத்தொகை நூல்கள்
Labels:
GENERAL_TAMIL,
தெரிந்துகொள்ளுங்கள்-1_1
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப...
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
-
S.NO QUESTIONS ANSWERS 1 ஹெருஸ்டிக் முறை _______ கற்றலை வலியுறுத்துகிறது. செய்து 2 ஹெப்(Hubb)பினுடைய கொள்கை எதனுடன் தொடர்புடையது - க...
-
டெல்லி சுல்தான்கள் : இந்தியாவின் மீது முஸ்லிம்கள் நடத்திய படையெடுப்புகளின் விளைவாக டெல்லி சுல்தானியர்களின் ஆட்சி நிறுவப்பட்டது. டெல்லி...
-
நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார் - பாண்டியன் மாறன் வழுதி. நற்றிணைப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை - 176. நற்றிணையைத் தொ...
-
TAMIL G.K 0591-0610 | TNPSC | TRB | TET | 60 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம் 591. 8-ஆம் வகு...
-
இளம் உயிரி கன்னி இனப்பெருக்கம் என்றால் என்ன? இளம் உயிரி கன்னி இனப்பெருக்கத்தில் இளவுயிரியே கன்னி இனப்பெருக்கத்தின் மூலம் புதிய தலைமுறை இள...
No comments:
Post a Comment