Monday, August 01, 2022

TNPSC G.K - 72 | பொது அறிவு.

⭕ இந்தியாவில் கங்கை நதியும், யமுனை நதியும் இணையும் இடத்தின் பெயர்- அலகாபாத்.


⭕ சங்க காலத்தில் கொற்றவை என்னும் பெண் தெய்வத்தினை வழிபட்ட மக்கள் வாழ்ந்த நிலப்பரப்பு- பாலை.


⭕ தமிழறிஞரும், தமிழ் ஆய்வாளருமான மறைமலை அடிகளின் இயற்பெயர்- சுவாமி வேதாச்சலம்.


⭕ பட்டு உற்பத்தியில் இந்தியாவின் முதன்மை மாநிலம்- கர்நாடகம்.


⭕ மத்திய பட்டு ஆராய்ச்சி தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமையகம் அமைந்த இடம்- பெங்களூரு.


⭕ ‘தங்க இழைப்பயிர்’ என்று அழைக்கப்படுவது- சணல்.


⭕ பருத்தி நெசவாலைகள் அதிகம் காணப்படும் மாநிலங்கள்- மகாராஷ்டிரம், குஜராத், மேற்குவங்கம், உத்திரபிர தேசம், தமிழ்நாடு.


⭕ உலக அளவில் பருத்தி நெசவு உற்பத்தியில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம்.


⭕ இந்தியாவின் முதல் பருத்தி நெசவாலை தொடங்கப்பட்ட இடம் - போர்ட் க்ளாஸ்டர் (கொல்கத்தா)- 1818.


⭕ இந்தியாவின் முதல் திருநங்கை புகைப் படக் கலைஞர் - சோயா தாமஸ் லோபோ.


⭕ இந்தியாவின் முதல் திருநங்கை செவிலியர் - அன்பு ரூபி.


⭕ இந்தியாவின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர் - பத்மினி பிரகாஷ்.


⭕ ரெயிலை இயக்கிய முதல் ஆசியப் பெண் - சுரேகா யாதவ்.


⭕ டீசல் ரெயிலை இயக்கிய முதல் ஆசியப் பெண் - மும்தாஜ் காசி


No comments:

Popular Posts