Sunday, January 16, 2022

TNPSC G.K - 38 | சிந்து சமவெளி நாகரீகம்

தெரிந்துகொள்ளுங்கள்-38

🥎 சர் ஜான் மார்ஷல் கருத்துப்படி ஹரப்பா நாகரீகத்தின் காலம் - கிமு 2600 - 1700 வரை.
🥎 ஃபேர்சர்வ்ஸ் என்பவரின் கருத்துப்படி ஹரப்பா பண்பாட்டின் காலம்-கி.மு.2000 – கி.மு.1500 வரை
🥎 டி.டி.அகர்வால் என்பவரின் கருத்துப்படி சிந்து சமவெளி நாகரீகத்தின் காலம் என்பது - கி.மு.2300 – கி.மு.1750 வரை
🥎 ஹரப்பா நகரத்துக்கும் மொகஞ்சதாரோ நகரத்துக்கும் இடையே உள்ள இடைப்பட்ட தூரம் எவ்வளவு? 600 கி.மீ.
🥎 சிந்து சமவெளி மக்கள் வாணிபம் மேற்கொண்ட நாடுகள் எது? சுமேரியா, பாபிலோனியா, எகிப்து
🥎 உடைந்த கப்பல் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்ட இடம் எது? லோத்தல்
🥎 காலிபங்கன் என்ற நகரம் கண்டுபிடிக்கப்பட்ட மாநிலம் எது? இராஜஸ்தான்
🥎 காலிபங்கன் என்ற நகரத்தை கண்டுபிடித்தவர் யார்? அந்த நகர் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது? எ. கோஸ் - 1953
🥎 காலிபங்கன் என்ற நகரம் உள்ள ஆற்றங்கரை எது? காக்கர் ஆற்றங்கரை
🥎 பழிபீடகம் கண்டுபிடிக்கப்பட்ட நகரம் எது? காலிபங்கன்
🥎 உழப்பட்ட நிலம் எந்த நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது? காலிபங்கன்

www.kalvisolai.in

No comments:

Popular Posts