தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் - ஆர்யா என்ற பாஷ்யம் (1932-ல் சென்னை கோட்டையில் தேசியக்கொடி ஏற்றிய இளைஞன்)
1932, ஜனவரி-25, “ஆர்யா என்ற பாஷ்யம்”திருவல்லிக்கேணி கடைத்தெருவில், துணிக்கடைகளில் ஏறி, “இந்திய தேசியக்கொடி இருக்கிறதா?” என கேட்டார். பலர் “இல்லை” என்று சொல்லி விட்டார்கள், சிலர் ரகசியமாய் வைத்திருந்த சிறிய அளவிலான கொடியை காட்டினார்கள். பாஷ்யத்தின் தேவை, அந்த சிறிய கொடி அல்ல, மிகப்பெரிய கொடி. நான்கு முழ வேட்டியை வாங்கினார், வண்ணப்பொடி கடையில் காவியும், பச்சையும், நீலமும் வாங்கி, வேட்டியில், காவியையும், பச்சையும் கரைத்து நனைத்து, நடுவேநீல ராட்டை வரைந்து, ஒரு இந்திய தேசியக்கொடியை உருவாக் கினார்.
அதில், “இந்தியா இன்று முதல் சுதந்திர காற்றை சுவாசிக்கிறது..” என எழுதி, காயவைத்து மடித்து, இடுப்பில் சுற்றிக்கொண்டார். மவுண்ட்ரோடில் (தற்போதைய அண்ணா சாலை) இருந்த எல்பின்ஸ்டன் தியேட்டருக்குள் நுழைவுச்சீட்டு வாங்கி, நுழைந் தார். படம் முடிந்து அனைவரும் வெளியேற, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் காவல் பணி முடிந்து, சினிமா பார்க்க வந்தவர்களுடன் கலந்தார். காக்கிசீருடையில் இருந்ததால், யாரும் கண்டுபிடிக்க முடிய வில்லை. கோட்டையின் கொடி மரம் நோக்கி நடந்தார், 200 அடி உயரத்தில், 140 அடி ஏறி, அந்த அளவு வரை தான் கால் வைத்து ஏறும் வசதி இருந்தது, அதற்கு மேலே, 60 அடி உயரம் வெறும் இரும்புக்குழாய் அமைப்பு தான், அடி, அடியாய் ஏறி, 60 அடியையும் கடந்து, உச்சியை அடைந்து, தன் இடுப்பில் இருந்த இந்திய தேசியக் கொடியை அந்தகம்பத்தில் கட்டினார்.
மறுநாள் காலை, செயின்ட் ஜார்ஜ் கோட்டை அலுவலக அதிகாரிகளின் மத்தியில் பரபரப்பு பற்றிக்கொண்டது. எல்லா உயர் அதிகாரிகளும் கோட்டை கொடி மரத்தின் அருகே குழுமினார்கள். எதுவுமே தெரியாதது போல, தம்புச்செட்டி தெருவில், தனி ஆளாய் நடந்துக்கொண்டிருந்தார் ‘பாஷ்யம் என்ற ஆர்யா'. அதே 1932-ம் வருடம், ஜனவரி 26-ந் தேதியை, நாம் சுதந்திர தினமாக கொண்டாடவேண்டும் என ஜவஹர்லால் நேரு விடுத்திருந்த அறை கூவலை செயலாக்கவே, பாஷ்யம் கோட்டையில் கொடி ஏற்றினார். இதை செய்தபோது, அவர் வயது 25.
2 comments:
கொடியை ஏத்தினது எல்லாம் போராட்டமா ?
பிற நாடு சுதந்திர போராட்டங்களை பற்றி படிக்கவும்
விட்டால் கக்கா போனதையும் போராட்டம் என்று சொல்வீர் போல இருக்கே
நாய்க்கு வேற என்ன சிந்தனை வரும்..??
Post a Comment