தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் - அம்புஜம்மாள் (சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் இரும்பு பெண்) ஸ்ரீ அம்புஜம், “உங்கள் கடிதத்தைப் படித்ததில், நான் மகிழ்ச்சி அடைந்தேன். நீண்ட காலத்திற்குப் பிறகு, உங்கள் கடிதத்தைப் பார்த்தது, ஒரு தந்தை தனது மகளைப் பார்த்த போது அனுபவித்த மகிழ்ச்சியை எனக்கு அளித்தது... ஏன் உங்கள் மனம் கவலைப் படுகிறது. எனக்கு எழுதுங்கள்" பாபுவின் ஆசீர்வாதம்...
காந்திஜியிடமிருந்து, இந்தக் கடிதத்தைப் பெற்ற போது, அம்புஜம்மாள் வயது 36. அம்புஜம்மாள், 1898 ஆம் ஆண்டு , ஒரு பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தார். ஒரு திறமையான மொழியியலாளர். தேசாச்சாரி என்ற வழக்கறிஞரை, திருமணம் செய்து கொண்டார். 1920-களில் காந்திஜியை மெட்ராஸில் (சென்னையில்) சந்தித்ததில் இருந்தே, அம்புஜம்மாள் அவரைப் பின்பற்றினார். காந்திஜி சேவா கிராமுக்கு வருகை தந்த போது, ஹரிஜன் நல நிதிக்காக, தனது வைரங்கள் மற்றும் பட்டுப் புடவைகளை கொடுத்தார். ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றார், சுதேசியின் வலுவான ஆதரவாளராக இருந்ததால், வெளிநாட்டுப் பொருட்களையும் ஆடைகளையும் புறக்கணித்தார், மேலும் காதியைத் தழுவினார்.
கதர் உடையணிந்து, கழுத்தில் மணிகளின் இழையைத்தவிர வேறெதுவும் அணியவில்லை. 1930-ஆம் ஆண்டு , ஒத்துழையாமை இயக்கத்தின் போது, அரசியல் வாழ்க்கையில் நுழைந்தார். உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டு, கைது செய்யப்பட்டார். 1932-ஆம் ஆண்டு , ஆறு மாதங்கள் சிறையில் அடைக்கப் பட்டார். தனது வாழ்க்கையை, இந்திய சுதந்திர போராட்டத்திற்காக அர்ப்பணித்தார், மேலும் பல பெண்களையும், அவ்வாறு செய்ய ஊக்கப் படுத்தினார். பெண்கள் நலன் அவரது வாழ்க்கையில் முதலிடத்தில் இருந்தது.1948-ஆம் ஆண்டு, சென்னை தேனாம்பேட்டையில் சீனிவாச காந்தி நிலையம் என்ற இடத்தில், தேவைப்பட்டோருக்கு இலவச பால், மருந்துகள் மற்றும் கஞ்சி ஆகியவை வழங்கப் பட்டன.
அம்புஜம்மாள் எளிமைக்குப் பெயர் பெற்றவர். அக்கம்மா என்று அன்புடன் அழைக்கப் பட்டவர். வினோபாபாவேயின் பூமி தான இயக்கத்தை பிரபலபடுத்த, அவருடன் தமிழ்நாட்டில், 1956-ஆம் ஆண்டு,சுற்றுப் பயணம் செய்தார். அம்புஜம்மாள். கிராம தன்னிறைவை நம்பினார். 1957 முதல் 1962 வரை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராகவும், 1957 முதல் 1964 வரை மாநில சமூக நல வாரியத்தின் தலைவராகவும் இருந்தார்.
No comments:
Post a Comment