தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் - எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி (ஆஷ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி (அ) பாரதமாதா சங்கம் மூலம் இளைஞர்கள் மத்தியில் சுதந்திர உணர்வை ஏற்படுத்தியவர்)
நாடு சுதந்திரம் அடையும் வரை திருமணம் செய்யமாட்டேன் என 16 வயதிலே வைராக்கியமாய் பிரம்மச்சாரியம்’ ஏற்று நீலகண்ட பிரம்மச்சாரி என்றானார். இவருக்கு 20 வயதை நெருங்கியபோது தான் வ.உ.சி. கப்பல் விட்டார். அதற்கு தன்னால் ஆன உதவி எல்லாம் செய்த நீலகண்டன், அந்த கப்பலுக்கான பங்கு களை திரட்டி கொடுத்தார். அந்த நேரம் ஆஷ் துரை வந்து, மாபெரும் கொடுமைகள் செய்து, வ.உ.சி.யை வீழ்த்திய தும், அதனால் வாஞ்சிநாதன் ஆஷ் துரையினை கொன்றார்.
வாய்ப்புக்காக காத்திருந்த ஆங்கிலேய அரசு, 14 பேரை கைது செய்தது. அந்த 14 பேரும், 21 வயதுக்கு கீழ் உள்ளவர்கள்.வாஞ்சிநாதனை அடுத்த முதல் குற்றவாளி நீலகண்ட பிரம்மச்சாரி. 7 ஆண்டு சிறை என தீர்ப்பளித்தார் நீதிபதி. சிறையில் கடும் தண்டனை கொடுக்கப்பட்டது. தண்டனை முடிந்து பாரதியாரை பார்க்க வந்தபோது தான் பாரதி மரணித்தார். பாரதிக்கு கொள்ளி வைக்கும் உரிமை நீலகண்டனுக்கு வழங்கப்பட்டது.
1928-ல் இரண்டாம் சுதந்திர போராட்டத்தை தன்னுடைய 28-வது வயதில் தொடங்கினார் நீலகண்டன். மீண்டும் கைது செய்த ஆங்கிலேய அரசு, அப்போதைய இந்தியாவும், இன்றைய பாகிஸ்தானுமானமுல்தானிலும் மற்றும்பர்மாவிலும் சிறை வைத்தது. மிக இளம் வயதிலே12 ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்டு, 1933-ல் வெளிவந்த அவருக்கு கள சூழல் முழுக்க மாறி இருந்ததை உணரமுடிந்தது. வ.வே.சு. அய்யர், சேரன்மகாதேவி பக்கம் ஆசிரமம் அமைத்தது போல், நீலகண்ட பிரம்மச்சாரி, மைசூர் அருகே சென்னகிரியில், ஒரு ஆசிரமம் அமைத்து தங்கினார்.
முழு துறவி கோலத்தில் மாறி, தியானம், தவம் என முழுக்க, துறவியாய் மாறினார். அவரை சந்திக்க காந்தியும் வந்தார். மலை மேல் இருந்து இறங்கி வந்த நீலகண்டன் மக்கள் எழுச்சி ஏற்படாமல் எதுவும் மாறாது, மாறினாலும் நிலைக்காது என சொல்லி, காந்தியினை ஆசீர்வதித்து விட்டு சென்றார். “ஆன்மிக எழுச்சியே தேசத்தை மாற்றும்” என நினைத்து, சன்னியாசியாய் மாறி , “ஸ்ரீ ஓம் காரானந்த சுவாமி” என பெயர் மாற்றி, தியானம், வழிபாடு என யோகியாக மாறினார்.
No comments:
Post a Comment