Monday, January 17, 2022

TNPSC G.K - 51 | பொது அறிவு.

தெரிந்துகொள்ளுங்கள்-51

🥎 சிந்து சமவெளி நகரங்களிலே மிகப்பெரிய நகரம் - மொகஞ்சதாரோ.
🥎 சிந்து சமவெளி நகரத்தில் கோட்டைகள் பல அழிக்கப்பட்டது பற்றி எந்த வேதத்தில் கூறப்பட்டுள்ளது - ரிக்வேதம்.
🥎 சிந்து சமவெளி நாகரீக மக்களின் எழுத்து முறை - சித்திரை எழுத்து முறை மற்றும் பட எழுத்து முறை.
🥎 சிந்து சமவெளி நாகரீக மக்களின் சின்னங்களில் -- மற்றும் --- உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தது - திமிழ்காளை மற்றும் புறா.
🥎 சிந்து சமவெளி நாகரீக மக்களின் முக்கிய உணவு - கோதுமை, பார்லி.
🥎 சிந்து சமவெளி நாகரீகம் எத்தனை ஆண்டுகள் சிறப்பு பெற்றிருந்தன - 500 ஆண்டு.
🥎 சிந்து சமவெளி மக்களின் பட எழுத்துக்களை கொண்ட சின்னங்களின் எண்ணிக்கை எவ்வளவு - 250 முதல் 400 வரை.
🥎 சிந்து சமவெளி மக்களின் மண்பாண்ட தொழில் -- என அழைக்கப்படுகிறது - டெரகோட்டா.
🥎 சிந்து சமவெளி மக்களின் வழிபாட்டு சின்னம் - அரச மரம்.
🥎 சிந்து சமவெளி மக்கள் அறியாத உலோகம் - இரும்பு.
🥎 சிந்து சமவெளி மக்கள் அறியாத விலங்கு - குதிரை.
🥎 சிந்து சமவெளி மக்கள் கிராம வாழ்க்கையில் இருந்து நகர வாழ்க்கையை மேற்கொள்ள ஆரம்பித்ததற்கு எடுத்துக்காட்டாக உள்ள நகரம் - ஆம்ரி, கோட்டிஜி
🥎 சிந்து சமவெளி மக்கள் வணங்கிய கடவுள்களின் பெயர் - பசுபதி என்ற சிவன் மற்றும் பெண்கடவுள்.

www.kalvisolai.in

No comments:

Popular Posts