Tuesday, January 11, 2022

TNPSC G.K - 18 | பொது அறிவு.

தெரிந்துகொள்ளுங்கள்-18

❇️ ஆழ்வார்க்குறிச்சி, மொடக்குறிச்சி, கல்லிடைக்குறிச்சி போன்ற ஊர்களில் வாழும் மக்கள் யாவர் - புலம் பெயர்ந்த குறிஞ்சி நில மக்கள்.
❇️ ஏழைகளின் பசியைப் போக்க வள்ளலார் நிறுவிய சத்திய தருமசாலை எங்குள்ளது - வடலூர்.
❇️ கடல் பயணத்தை முந்நீர் வழக்க மெனக் குறிப்பிடும் நூல் எது -தொல்காப்பியம்.
❇️ சங்கரதாஸ் சுவாமிகள் ஒரே இரவில் எழுதி முடித்த நாடகம் எது -அபிமன்யு சுந்தரி.
❇️ சிறுகதையினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் யார் - வ.வே.சு. ஐயர்.
❇️ சுகுண விலாச சபா என்ற நாடக சபையைத் தோற்றுவித்தவர் யார் -பம்மல் சம்பந்த முதலியார்.
❇️ தமிழகத்தின் அன்னிபெசன்ட் யார் - இராமாமிர்தம் அம்மையார்.

❇️ தமிழ் நாடகத் தந்தை என்று போற்றப்படுபவர் யார் - பம்மல் சம்பந்த முதலியார்.

❇️ நூறில் ஒரு பங்குடைய அணுவின் பெயராகக் கம்பன் கூறுவது -கோண்.

www.kalvisolai.in

No comments:

Popular Posts