Sunday, January 31, 2021

TNPSC CURRENT AFFAIRS JANUARY 2021 | நடப்பு நிகழ்வுகள் 2021 | சமிபத்திய நிகழ்வுகள் 2021

CURRENT AFFAIRS JANUARY 2021 | நடப்பு நிகழ்வுகள் 2021 | சமிபத்திய நிகழ்வுகள் 2021


❇️ ஜனவரி 1: சென்னை ஐகோர்ட்டின் 50-வது தலைமை நீதிபதியாக கொல்கத்தா ஐகோர்ட்டில் நீதிபதியாக இருக்கும் சஞ்சீவ் பானர்ஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியாக நீதிபதி ஏ.பி.சாஹி நவம்பர் 11, 2019 முதல் பதவி வகித்து வருகிறார். அவர் 31.12.2020 அன்று பணி ஓய்வு பெற்றார்.


❇️ ஜனவரி 1 : கொரோனா வைரஸை தடுக்கும் விதத்தில் தடுப்பூசி தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்திருக்கும் நிலையில் முதன் முதலாக சைபர், பயோஎன்டெக் நிறுவனங்களின் கூட்டு தயாரிப்பான தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளித்தது.


❇️ ஜனவரி 1 : `எச்1பி' விசாவுக்கு தடை நீடிப்பு அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கி வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் ‘எச்1பி’ விசா மீதான தடையை மார்ச் 31-ந் தேதி வரை நீட்டித்து அதிபர் டிரம்ப் உத்தரவு பிறப்பித்தார்.


❇️ ஜனவரி 2 : இந்தியா முழுவதும் 125 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை வெற்றிகரமாக நடந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசமாகவே போடப்படும் என்று மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் தெரிவித்தார்.


❇️ ஜனவரி 2: குடியரசு தினத்தன்று பேரணி வேளாண் சட்டங்களை திரும்ப பெறாவிட்டால் குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் அறிவித்தனர்.


❇️ ஜனவரி 2: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சேலத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் சேர்க்கப்பட்டு உள்ளார்.ஐ.பி.எல். போட்டியில் ‘யார்க்கர்’ பந்து வீச்சை துல்லியமாக போட்டு எதிரணி வீரர்களை திணறடித்த நடராஜன், காயமடைந்த வருண் சக்ரவர்த்திக்கு பதிலாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியில் முதலில் சேர்க்கப்பட்டார். ஆனால் ஆஸ்திரேலியா சென்றதும் நவ்தீப் சைனி காயமடைந்ததால் ஒரு நாள் போட்டி அணியில் நடராஜன் கூடுதலாக சேர்க்கப்பட்டார். முதல் 2 ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி தோற்றதால் கடைசி ஒரு நாள் போட்டியில் நடராஜன் களம் இறக்கப்பட்டார். இதில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியதோடு இந்தியாவின் வெற்றிக்கு பங்களிப்பு அளித்தார். அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டிகளில் அவரது அற்புதமான பந்து வீச்சால் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில் நடராஜன் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.


❇️ ஜனவரி 5: புதிய வகை கொரோனா வைரஸ் பரவலால் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்திய வரவிருந்த பயணத்தை ரத்து செய்தார். டெல்லியில் வருகிற 26-ந் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு இந்தியா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட போரிஸ் ஜான்சன் குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள இந்தியா வருவதாக அறிவித்தார். இந்த நிலையில் இங்கிலாந்தில் தற்போது அதிக வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. ஒருபுறம் தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடந்து வந்தாலும் வைரஸ் ஜெட் வேகத்தில் பரவிவருகிறது. எனவே வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மீண்டும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கை பிரதமர் போரிஸ் ஜான்சன் அமல்படுத்தினார்.


❇️ ஜனவரி 6: டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் உள்ளிட்ட ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டம் 900 முதல் 1,200 எம்.பி.க்கள் அமரும் வகையில் ரூ.971 கோடி செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் உள்ளிட்ட ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்ட கட்டுமான பணிக்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டில் இத்திட்டம் நிறைவு பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டத்துக்கு எதிராக வக்கீல் ராஜீவ் சூரி உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்தது. இந்நிலையில், இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கான்வில்கர், தினேஷ் மகேஷ்வரி அளித்த பெரும்பான்மை தீர்ப்பின் விவரம் வருமாறு:- புதிய நாடாளுமன்றம் உள்ளிட்ட சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்கு சென்ட்ரல் விஸ்டா கமிட்டி, டெல்லி நகர்ப்புற கலை ஆணையம், பாரம்பரிய சின்னங்கள் பாதுகாப்புக் குழு ஆகியவை அளித்த ஒப்புதல்களில் எவ்வித தவறும் இல்லை. இந்த திட்டத்துக்கு டெல்லி வளர்ச்சி ஆணையத்தின் அதிகாரத்தை மத்திய அரசு பயன்படுத்தி டெல்லி மாஸ்டர் பிளான் திட்டத்தில் நிலப் பயன்பாடு தொடர்பாக வெளியிட்ட அறிவிக்கையும் சரியே. இத்திட்டத்துக்கு மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டு குழுவின் பரிந்துரையும், சுற்றுச்சூழல் அனுமதியும் சரிதான். சென்ட்ரல் விஸ்டா திட்டத்தைச் செயல்படுத்தும் கட்டுமான நிறுவனம், போதுமான காற்றுமாசு தடுப்பு கோபுரங்களை உருவாக்க வேண்டும். கட்டுமான பணிகளின்போது காற்று மாசைத் தடுக்க நீர் தெளிப்பான்களை பயன்படுத்த வேண்டும். இது போன்ற பெரிய திட்டங்களை, குறிப்பாக காற்று மாசு பாதிப்புள்ள மாநகரங்களில் செயல்படுத்தும்போது காற்றுமாசு தடுப்பு கோபுரங்களை உருவாக்குவதையும், கட்டுமான பணிகளின்போது ஸ்மோக் கன்கள் பயன்படுத்துவதையும் உறுதி செய்து, திட்ட அனுமதி வழங்க வேண்டும் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு உத்தரவிடுகிறோம். பாரம்பரிய பாதுகாப்பு குழுவின் முன்அனுமதி பெறாமல் இருந்தால், முன்அனுமதி பெற்று திட்டங்களைத் தொடர மத்திய அரசுக்கு உத்தரவிடுகிறோம் என தெரிவித்துள்ளனர். நீதிபதி சஞ்சீவ் கன்னா நீதிபதி சஞ்சீவ் கன்னா அளித்த தீர்ப்பில், திட்டத்துக்கு அளிக்கப்பட்ட ஒப்புதலை ஏற்றுக்கொண்டிருப்பதுடன், திட்டத்துக்கான நிலப் பயன்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட மாற்றம், சுற்றுச்சூழல் அனுமதி ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் அவர் அளித்த தீர்ப்பில் புதிய நாடாளுமன்றமும், சென்ட்ரல் விஸ்டா திட்டமும் நாட்டு மக்களுக்கு சொந்தமானது. இதுபோன்ற முக்கியமான திட்டங்கள் தொடர்பான விவரங்கள், உரிய தகவல்களை தெரிவிக்கவில்லை என்பதையும், தற்போதுள்ள நாடாளுமன்றம் உள்ளிட்ட பாரம்பரிய கட்டிடங்களை தொடர்ந்து பராமரிக்கவும், செயல்பாட்டில் வைக்கவும் நிபுணர்கள் தீர்வை அளிக்க முடியும் என்பதையும் மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.


❇️ ஜனவரி 7: சூரியனை ஆய்வு செய்யும் ‘ஆதித்யா எல்-1’ செயற்கைகோள் இந்த ஆண்டில் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டம் சூரியனை ஆய்வு செய்யும் ‘ஆதித்யா எல்-1’ செயற்கைகோள் மற்றும் சிறிய வகை செயற்கைகோள்களை விண்ணுக்கு செலுத்தும் புதிய வகை எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை இந்த ஆண்டு செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் 2-வது ஏவுதளத்தை தொடங்குவது தனியார் விண்வெளி தொழில்முனைவோருக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும். இந்த ஆண்டு முதல் ராக்கெட்டாக, சிறிய வகை (நானோ) செயற்கைகோளை விண்ணுக்கு செலுத்தும் ராக்கெட்டை (எஸ்.எஸ்.எல்.வி) செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல், ‘சந்திரயான்-3’, சூரியனை ஆய்வு செய்வதற்காக வடிவமைக்கப்பட்டு வரும் ‘ஆதித்யா எல்-1’ மற்றும் இந்தியாவின் முதல் தகவல் ஒளிபரப்பு செயற்கைகோள், மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்தின் கீழ் ஆளில்லா விமானம் போன்ற திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட உள்ளன.


❇️ ஜனவரி 7: உலகின் முதல் இரட்டை அடுக்கு சரக்கு ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேற்கு சரக்கு ரெயில்பாதை தலைநகர் டெல்லியை, நவிமும்பையுடன் இணைக்கும் வகையில் 1,483 கி.மீ. நீளம் கொண்ட அர்ப்பணிக்கப்பட்ட மேற்கு சரக்கு ரெயில்பாதை திட்டத்தை இந்திய ரெயில்வே நிறைவேற்றுகிறது. இதன் அங்கமாக 306 கி.மீ. தொலைவு புது ரேவாரி&புது மாடர் பிரிவு சரக்கு ரெயில்பாதை (மின்மயமாக்கப்பட்டது) அமைக்கப்பட்டு விட்டது. முதல் இரட்டை அடுக்கு சரக்கு ரெயில் அத்துடன் 1.5 கி.மீ. நீளமுள்ள உலகின் முதல் இரட்டை அடுக்கு சரக்கு ரெயிலை (கன்டெய்னர்) பிரதமர் நரேந்திர மோடி் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரெயில்பாதை, அரியானாவில் 79 கி.மீ., ராஜஸ்தானில் 227 கி.மீ. தொலைவை கொண்டுள்ளது. இதன்மூலம் அரியானாவின் ரேவாரி, மானேசர், நர்னால், புலேரா, கிஷன்கார் பகுதியில் உள்ள பல்வேறு தொழில்கள் பலன்பெறும். ராஜஸ்தான் மாநிலமும் பலன் அடையும்.


❇️ ஜனவரி 10 : இணையதள வழி வகுப்புகளில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா இலவசமாக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.


❇️ ஜனவரி 10 : காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் 2019-ம் ஆண்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்கு தலையடுத்து பாகிஸ்தானில் உள்ள பாலகோட்டில் நுழைந்து இந்தியா விமானப்படை நடத்திய துல்லிய தாக்குதலில் 300 பயங்கரவாதிகள் பலியானதை பாகிஸ்தான் முதன் முதலாக ஒப்புக்கொண்டது.


❇️ ஜனவரி 11 : கொரோனா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மாநில முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, முன்கள பணியாளர்கள் 3 கோடி பேருக்கான செலவை அரசே ஏற்கும் என்று தெரிவித்தார்.


❇️ ஜனவரி 11 : நான் என்னுடைய முடிவை கூறிவிட்டேன் என்றும், அரசியலுக்கு வர வேண்டும் என்று மேலும் மேலும் என்னை வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்றும் நடிகர் ரஜினிகாந்த் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.


❇️ ஜனவரி 12: முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்களுக்கு செலுத்துவதற்காக, 1 கோடியே 10 லட்சம் டோஸ் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது.ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியையும், ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த ‘கோவேக்சின்’ தடுப்பூசியையும் இந்தியாவில் பயன்படுத்த மருந்து தர கட்டுப்பாடு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான 2 கட்ட ஒத்திகைகளும் நடந்து முடிந்துள்ளன. ஜனவரி 16-ந்தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.


❇️ ஜனவரி 12: இந்திய ராணுவ முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், லடாக் சென்றுள்ளார். அங்கு நாட்டின் ஒட்டுமொத்த ராணுவ தயார் நிலையை ஆய்வு செய்தார்.


❇️ ஜனவரி 12: வடதுருவத்தின் வழியாக மிக நீளமான விமான பாதையை பெண் விமானிகள் குழு முதன் முதலாக கடந்து பெங்களூரு வந்தடைந்தது. உலகின் மிக நீண்ட விமான பாதைகளுள் சான்பிரான்சிஸ்கோ முதல் பெங்களூரு வரையிலான விமான பாதையும் ஒன்றாகும். இது சுமார் 13,993 கி.மீ தூரம் கொண்டதாகும். காற்றின் வேகத்தை பொறுத்து இந்த பாதையை கடப்பதற்கு 17 மணி நேரத்துக்கு மேலாகும். முதல் முதலான இந்த பாதையில் பெண் விமானிகள் குழு விமானத்தை இயக்கி சாதனை படைத்துள்ளனர். பெண் விமானி சோயா அகர்வால் தலைமையிலான பெண் விமானிகள் பாபா கரி தன்மாய், அகன்சா சோனேவாரி மற்றும் ஷிவானி ஆகியோர் அடங்கிய குழுவினர் இந்த சாதனையை செய்துள்ளனர். சனியன்று உள்ளூர்நேரப்படி இரவு 8.30 மணிக்கு அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று அதிகாலை 3.45மணிக்கு பெங்களூருவின் கெம்பேகவுடா விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது. மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் பூரி பெண் விமானிகள் குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


❇️ ஜனவரி 12: விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் தகுதியில்லாத 20.48 லட்சம் பயனாளிகளுக்கு மத்திய அரசு ரூ.1,364 கோடி வழங்கியுள்ளது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. சிறு, குறு விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது பி.எம். கிசான் திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் 2 ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகள், கூட்டாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்காக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை 3 பிரிவுகளாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டு வருகிறது.


❇️ ஜனவரி 12 : மந்திர அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை அமுல்படுத்த சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. வேளாண் சட்டம் குறித்து ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழுவையும் அமைத்தது. அந்த குழு முன்பு ஆஜராக மாட்டோம், மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று விவசாய அமைப்புகள் அறிவித்தன.


❇️ ஜனவரி 12 : 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 19-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.


❇️ ஜனவரி 12 : தேவையான அனுமதி கிடைத்ததும் தனியார் சந்தையில் கோவிஷீல்டு தடுப்பூசி ரூ.1000-க்கு விற்பனை செய்யப்படும் என புனே மருந்து நிறுவனம் அறிவித்து இருக்கிறது.


❇️ ஜனவரி 12 : கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.


❇️ ஜனவரி 13 : 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வு


❇️ ஜனவரி 13 : தமிழகத்தில் மேலும் 7 இடங்களில் தொல்லியல் அகழ்வாய்வு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தொல்லியல் துறை கமிஷனர் உதயசந்திரன் தெரிவித்தார்.


❇️ ஜனவரி 13 : காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுரு வுவதற்காக சர்வதேச எல்லையில் கட்டப்பட்ட 150 மீட்டர் நீள சுரங்கப்பாதையை எல்லை பாதுகாப்பு படை கண்டுபிடித்தது.


❇️ ஜனவரி 13 : தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கருணாநிதி வழி நின்று விவசாயிகள் கடன், 5 பவுன் வரையிலான நகைக்கடன் ரத்து செய்யப்படும் என்று சமத்துவ பொங்கல் விழாவில் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.


❇️ ஜனவரி 13 : இந்திய விமானப்படைக்கு ரூ.48 ஆயிரம் கோடியில் 83 தேஜாஸ் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.


❇️ ஜனவரி 13 : மறு உத்தரவு வரும் வரை போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்கப் படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது.


❇️ ஜனவரி 13: பழந்தமிழரின் பெருமையை உலக அரங்கில் நிலைநிறுத்தும் பணியை தமிழக அரசு தொல்லியல்துறை தொடர்ந்து தனிக்கவனம் செலுத்தி செயல்படுத்தி வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி மற்றும் அதைச் சுற்றியுள்ள மணலூர், அகரம், கொந்தகை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமணல் ஆகிய இடங்களில் முறையான தொல்லியல் அகழாய்வு பணிகள் முடிக்கப்பட்டு, ஆவணப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொல்லியல் அகழாய்வு-களஆய்வு 2020-21-ம் ஆண்டில் தமிழக அரசு தொல்லியல் துறையின் மூலம் சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், சிவகளை, அதைச் சுற்றியுள்ள பகுதிகள், கொற்கை, அதைச் சுற்றியுள்ள பகுதிகள், ஈரோடு மாவட்டம் கொடுமணல், கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை, அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம், மாளிகைமேடு ஆகிய 7 தொல்லியல் அகழாய்வுகள், புதிய கற்கால இடங்களைக் கண்டறிய கிருஷ்ணகிரி, வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் முறையான தொல்லியல் கள ஆய்வு மற்றும் தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகத்தைக் கண்டறிய திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தொல்லியல் களஆய்வு என 2 தொல்லியல் களஆய்வுகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. அதற்காக, மத்திய தொல்லியல் ஆலோசனை வாரிய நிலைக்குழுவின் ஒப்புதலுக்காக தமிழக அரசு பரிந்துரையின் பெயரில் கடந்த ஜூலை மாதம் உரிய முன்மொழிவுகள் அனுப்பப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. பரிசீலனை தொல்லியல் கள ஆய்வுகள் மற்றும் அகழாய்வுகள் மேற்கொள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள், துறைகள், முகமைகளிடம் இருந்து திட்ட கருத்துருக்கள் பெறப்பட்டு, தமிழக அரசு பரிந்துரையின் பெயரில் மத்திய தொல்லியல் ஆலோசனை வாரிய நிலைக்குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அதில் சென்னையில் உள்ள சர்மா மரபுசார் கல்வி மையத்தின் மூலம் திருவள்ளூர் மாவட்டம் சென்றாயன்பாளையம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தால் சிவகங்கை மாவட்டம் இலந்தக்கரை, தமிழ் பல்கலைக்கழகத்தால் கோவை மாவட்டம் மூலப்பாளையம், சென்னை பல்கலைக்கழகத்தால் வேலூர் மாவட்டம் வசலை மற்றும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தால் புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை ஆகிய இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் மேற்கொள்ள அனுப்பிவைக்கப்பட்டுள்ள முன்மொழிகள், மத்திய தொல்லியல் ஆலோசனை வாரிய நிலைக்குழுவின் பரிசீலனையில் உள்ளன. 10 ஆயிரத்துக்கும்மேற்பட்ட இடங்களில் இந்த கருத்துருக்களுக்கு ஒப்புதல் பெற்றால், 2020-21-ம் ஆண்டில் தமிழகத்தில் முதல் முறையாக சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வரலாற்று மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் தொல்லியல் நெறிமுறைகளின்படி அகழாய்வுகள் மற்றும் விரிவான தொல்லியல்சார் களஆய்வுகள் மேற்கொள்ளப்படும். தற்போது மேற்கொள்ளப்பட உள்ள அகழாய்வுகள் மற்றும் களஆய்வுகள், பண்டைய தமிழக பண்பாட்டு பெருமையை மீட்டெடுக்கும் நீண்ட அறிவியல் சார்ந்த செயல்பாட்டின் முக்கிய படிக்கல் ஆகும். தொல்லியல் மற்றும் நமது மரபு குறித்தான ஆர்வம் தமிழகத்தில் தற்போது புத்தாக்கம் பெற்றுள்ளது. எனவே கடந்த காலத்தைப் பற்றி கற்கவும், கண்டறியவும், அக்கறை கொள்ளவும், நமது பன்முகம் கொண்ட வளமையான பண்பாட்டை உலகத்துக்கு அறியச் செய்யவும் அளப்பரிய வாய்ப்புகள் உள்ளன. தற்போது நடைபெற்றுவரும் தொல்லியல் ஆய்வு மற்றும் அகழாய்வு பணிகளில் உலகத்தரம் வாய்ந்த நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை தமிழக தொல்லியல் துறை உணர்ந்துள்ளது. நன்கு வடிவமைக்கப்பட்ட பன்முக அணுகுமுறைகளின் வழியாக தமிழகத்தில் மரபுசார் மேலாண்மையை மேம்படுத்தும் வகையில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.


❇️ ஜனவரி 14 : சபரி மலையில் பிரசித்திபெற்ற மகர விளக்கு பூஜை நடைபெற்றது. கொரோனா பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.


❇️ ஜனவரி 15 : டெல்லியில் போராடும் விவசாயிகள் சங்க தலைவர்களுடன் மத்திய மந்திரிகள் நடத்திய 9-வது சுற்று பேச்சுவார்த்தையிலும் முடிவு ஏற்படவில்லை. மீண்டும் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது.


❇️ ஜனவரி 15 : மதுரை அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். ‘தமிழ் மக்களின் கலாசாரத்தை கொண்டாட வந்தேன்’ என்று கூறினார்.


❇️ ஜனவரி 15 : வேளாண் சட்டங்களுக்கு சர்வதேச நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது. இந்த சட்டங்கள், விவசாய சீர்திருத்தங்களுக்கான குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் திறன் கொண்டு இருக்கின்றன என அந்த அமைப்பு கூறியது.


❇️ ஜனவரி 15 : கொரோனா வைரசுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையாக, இந்தியாவில் தடுப்பூசி போடும் பணியை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். ‘உலகத்துக்கே இந்தியா முன் மாதிரியாக’ இருப்பதாக பெருமிதத்துடன் கூறினார். தமிழகத்தில் ஒரே நாளில் 2,783 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.


❇️ ஜனவரி 16 : நாடு முழுவதும் இன்று ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. முதல்கட்டமாக முன்கள பணியாளர்கள் 3 கோடி பேருக்கு செலுத்தப்படுகிறது.தமிழத்தில் 166 மையங்களில், 4 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.


❇️ ஜனவரி 16 : உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 719 காளை களுடன் 600 வீரர்கள் மல்லுக்கட்டினர். 48 பேர் காயம் அடைந்தனர்.


❇️ ஜனவரி 16 : பயனாளர்களிடையே குழப்பம் மற்றும் எதிர்ப்பு காரணமாக வாட்ஸ்-அப் நிறுவனம் தனது புதிய தனியுரிமை கொள்கையை அமுல்படுத்துவதை 3 மாதங் களுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தது.


❇️ ஜனவரி 17 : தமிழகத்தில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்காக பள்ளிக்கூடம் திறக்கப்படுவதையொட்டி குறைக்கப்பட்ட பாடங்கள் எவை என்ற விவரம் வெளியிடப்பட்டது.


❇️ ஜனவரி 17 : சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைந்துள்ள கெவாடியாவுக்கு 8 ரெயில்களின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.


❇️ ஜனவரி 18 : மத்திய அரசின் அறிவிப்பையடுத்து சொத்து விவரங்களை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 31-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டார்.


❇️ ஜனவரி 18 : மற்ற நாடுகளை விட இந்தியாவில் முதல் நாளில் அதிகம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் தெரிவித்தார்.


❇️ ஜனவரி 19 : சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்க வாய்ப்பு இல்லை என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.


❇️ ஜனவரி 19 : 300 நாட்களுக்கு பிறகு 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட்டன.


❇️ ஜனவரி 20 : அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவி ஏற்கிறார். அவருடன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார்.


❇️ ஜனவரி 20 : தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி தமிழகத்தில் மொத்தம் ஆறரை கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.


❇️ ஜனவரி 21 : கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் புனே சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.


❇️ ஜனவரி 21 : இலங்கை கடற்படை கப்பலை மோதவிட்டு படகை மூழ்கடித்ததில் கடலில் மூழ்கி பலியான ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் உடல்கள் மீட்கப்பட்டன. இலங்கை கடற்படையை கண்டித்து மீனவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.


❇️ ஜனவரி 21 : 3 வேளாண் சட்டங்களையும் 18 மாதங்களுக்கு நிறுத்திவைக்கும் மத்திய அரசின் திட்டத்தை விவசாய அமைப்புகள் நிராகரித்தன. சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டம் நீடிக்கும் என்று அறிவித்தன.


❇️ ஜனவரி 22 : இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே சென்னையில் நடக்கும் இரு டெஸ்ட் போட்டிகளிலும் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்தது.


❇️ ஜனவரி 22 : பிற நாடுகளில் இருந்து அமெரிக்கா வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்கி ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டார்.


❇️ ஜனவரி 23 : ஓசூர் நிதி நிறுவனத்தில் கைவரிசை காட்டிய வட நாட்டு கொள்ளை கும்பலை 18 மணி நேரத்தில் தமிழக போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 25 கிலோ தங்க நகைகள், 7 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.


❇️ ஜனவரி 23 : மாணவர்களின் தேர்வு விடைத்தாள்களை திருத்த மறுக்கும் ஆசிரியர்கள், ஆசிரியர் என்ற தகுதியை தானாகவே இழந்து விடுவர் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.


❇️ ஜனவரி 24 : டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கடலோர காவல் படை அணிவகுப்பை, தமிழகத்தைச் சேர்ந்த பெண் அதிகாரி தேவிகா செல்வராஜ் 2-வது ஆண்டாக வழி நடத்த இருக்கிறார்.


❇️ ஜனவரி 24 : 2020-2021 நிதி ஆண்டின் 3-ம் காலாண்டில் இந்தியன் வங்கியின் நிகர லாபம் ரூ.514 கோடியாக உள்ளது.


❇️ ஜனவரி 24 : என்ஜினீயரிங் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் ஒரு மணி நேரம் நடக்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது.


❇️ ஜனவரி 24 : இஸ்ரோ, சிறந்த திட்டமாக கருதும் பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட்டை இந்த மாதம் (பிப்ரவரி) விண்ணில் ஏவ திட்டமிட்டு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறினர்.


❇️ ஜனவரி 25 : மக்களிடம் பெறப்படும் மனுக்களுக்கு ஆட்சிக்கு வந்ததும் 100 நாளில் தீர்வு காணப்படும் என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.


❇️ ஜனவரி 25 : பழைய ரூ.100, ரூ.10, ரூ.5 நோட்டுகளை திரும்பப்பெறும் திட்டம் இல்லை என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்தது.


❇️ ஜனவரி 26 : டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில் முதன் முறையாக ரபேல் போர் விமானம் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றது.


❇️ ஜனவரி 26 : டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டது. செங்கோட்டை மீது ஏறி கொடி ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தியதுடன் கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர்.


❇️ ஜனவரி 27 : சென்னை மெரினா கடற்கரையில் பீனிக்ஸ் பறவை வடிவில் ரூ.80 கோடியில் அரசு சார்பில் கட்டப்பட்ட ஜெயலலிதா நினைவிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.


❇️ ஜனவரி 27 : சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவடைந்ததையடுத்து விக்டோரியோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபடியே சசிகலா விடுதலை செய்யப்பட்டார்.


❇️ ஜனவரி 27 : மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் இரண்டு மாதத்தில் தொடங்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.


❇️ ஜனவரி 28 : தமிழக அரசின் 47-வது தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான தமிழக அரசின் உத்தரவு ஓரிரு நாட்களில் பிறப்பிக்கப்பட உள்ளது.


❇️ ஜனவரி 28 : ஜெயலலிதா வாழ்ந்த ‘வேதா நிலையம்' நினைவு இல்லமாக மாறுகிறது. அதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்.‘வேதா நிலையம்' 10 கிரவுண்டு பரப்பளவில் 3 மாடிகளுடன் அமைந்துள்ளது. அந்த இல்லத்தில் நகரும் வகையிலான 32 ஆயிரத்து 721 பொருட்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 8 ஆயிரத்து 376 புத்தகங்கள் மற்றும் 394 நினைவுப்பொருட்களும் அடங்கும். 4 கிலோ 372 கிராம் எடை கொண்ட 14 வகையான தங்க நகைகளும், 601 கிலோ 424 கிராம் எடை கொண்ட 867 வெள்ளிப் பொருட்களும், வெள்ளிப் பாத்திரங்களும் உள்ளன.சினிமா, அரசியல் என ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் கருப்பு-வெள்ளை அரிய புகைப்படங்கள், அவர் பயன்படுத்திய பொருட்கள், ஜெயலலிதாவின் ஆளுமையைப் பிரதிபலிக்கும் பொருட்கள், அவர் படித்த புத்தகங்கள், நினைவுப்பொருட்கள், அவர் பயன்படுத்திய தனிப்பட்ட பொருட்களும் நினைவு இல்லத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஜெயலலிதா பயன்படுத்திய பூஜை அறையும் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக தயார்ப்படுத்தப்பட்டுள்ளது.நினைவு இல்லமாக மாற்றம் செய்யப்பட்டுள்ள போயஸ் கார்டன் ‘வேதா நிலையம்’ இல்லத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு திறந்துவைக்கிறார்.


❇️ ஜனவரி 28 : சென்னை ஐகோர்ட்டு விதித்த கட்டுப்பாடுகளுடன் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீடு நினைவு இல்லமாக திறக்கப்பட்டது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.


❇️ ஜனவரி 28 : ஆண்டுதோறும் பிப்ரவரி 21-ந் தேதி ஜெயலலிதா பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.


❇️ ஜனவரி 28 : கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இந்தியாவில் ஆபரண தங்கத்தின் தேவை 42 சதவீதம் குறைந்து இருப்பதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்தது.


❇️ ஜனவரி 29 : நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 வேளாண் சட்டங்களால் 10 கோடி சிறு விவசாயிகள் உடனடி பலன் பெற்றனர் என்று தெரிவித்தார்.


❇️ ஜனவரி 29 : டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


❇️ ஜனவரி 30 : இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்தை கடந்தது.


❇️ ஜனவரி 30 : சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் தோற்றம் பற்றி அறிய உலக சுகாதார நிறுவன நிபுணர்கள் குழு அங்கு சென்று 2-வது நாளாக விசாரணை நடத்தியது.


❇️ ஜனவரி 31 : இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை யில் மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடத்தை பிடித்தது. அங்கு இதுவரை 51 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.


❇️ ஜனவரி 31 : இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை யில் மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடத்தை பிடித்தது. அங்கு இதுவரை 51 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.


❇️ ஜனவரி 5: தைப்பூசத் திருவிழாவுக்கு பொது விடுமுறை.


❇️ ஜனவரி 5: புதிய பார்லிமென்ட் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி.


❇️ ஜனவரி 13: தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லுார் உட்பட 7 இடங்களில் அகழாய்வை தொடர மத்திய அரசு ஒப்புதல்.


❇️ ஜனவரி 14: அவனியாபுரம் ஜல்லிக்கட்டை காங்., எம்.பி., ராகுல் நேரில் பார்த்தார்.


❇️ ஜனவரி 16: மதுரை அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் துவக்கினர்.


❇️ ஜனவரி 16: கொரோனா தடுப்பூசி திட்டத்தை மதுரை அரசு மருத்துவமனையில் முதல்வர் பழனிசாமி துவக்கினார்.


❇️ ஜனவரி 18: 'நீட்' தேர்வு மதிப்பெண் மோசடி வழக்கில் பரமக்குடி மாணவி தீக் ஷா கைது.


❇️ ஜனவரி 19: டில்லியில் பிரதமர் மோடி- தமிழக முதல்வர் பழனிசாமி சந்திப்பு.


❇️ ஜனவரி 21: இலங்கை கப்பல்படை தாக்கியதில் புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர்கள் பலி.


❇️ ஜனவரி 22: ஓசூரில் முத்துாட் நிறுவனத்தில் ரூ. 10 கோடி மதிப்புள்ள தங்க நகை, ரூ. 90 ஆயிரம் கொள்ளை. அடுத்த நாளே ரூ. 10 கோடி மதிப்பு தங்க நகை மீட்பு. 7 பேர் கைது.


❇️ ஜனவரி 26: கொரோனா அச்சுறுத்தலால், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயணம் ரத்து. குடியரசு தினத்தில் 1966க்கு பின் சிறப்பு விருந்தினர் பங்கேற்கவில்லை.


❇️ ஜனவரி 27: சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறை தண்டனை முடிந்து சசிகலா விடுதலை.


❇️ ஜனவரி 2: கொரோனா தடுப்பூசி 'கோவிஷீல்டு', 'கோவாக்சின்' பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி.


❇️ ஜனவரி 6: சட்னியில் விஷம் கலந்து தன்னை கொல்ல சதி நடந்ததாக 'இஸ்ரோ' விஞ்ஞானி தபன் மிஸ்ரா புகார்.


❇️ ஜனவரி 7: தெலுங்கானா உயர்நீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதியாக ஹிமா கோஹ்லி பதவியேற்பு.


❇️ ஜனவரி 12 : மூன்று வேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை.


❇️ ஜனவரி 13: விமானப்படையை பலப்படுத்த உள்நாட்டில் தயாரான 'தேஜஸ் எம்.கே.1' போர் விமானங்களை ரூ. 48 ஆயிரம் கோடிக்கு வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.


❇️ ஜனவரி 13: காஷ்மீரின் கதுவா எல்லையில் பாக்., பயங்கரவாதிகள் அமைத்த 492 அடி நீள சுரங்கப்பாதையை இந்திய ராணுவம் அழித்தது.


❇️ ஜனவரி 15: டில்லியில் புதிய பார்லிமென்ட் கட்டும் பணி துவக்கம்.


❇️ ஜனவரி 16: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி (கோவிஷீல்டு, கோவாக்சின்) திட்டத்தை பிரதமர் மோடி காணொளி மூலம் துவக்கினார்.


❇️ ஜனவரி 17: குஜராத்தின் கேவாடியாடிவில் சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது உலகின் உயரமான சிலை (560 அடி). சென்னை உட்பட ஏழு நகரங்களில் இருந்து ரயிலில் நேரடியாக இங்கு செல்லலாம்.


❇️ ஜனவரி 21: கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் புனேயின் சீரம் நிறுவனத்தில் தீ. 5 பேர் பலி.


❇️ ஜனவரி 24: தேசிய பெண் குழந்தை தினத்தில் ஒருநாள் முதல்வராக உத்தரகாண்ட் கல்லுாரி மாணவி ஷிருஷ்டி கோஸ்வாமி பணியாற்றினார்


❇️ ஜனவரி 26: டில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில்வன்முறை.


❇️ ஜனவரி 27: சென்னை மெரினா கடற்கரையில் 'பீனிக்ஸ்' பறவை வடிவிலான ஜெயலலிதா நினைவிடம் திறப்பு.


❇️ ஜனவரி 29: டில்லியில் உள்ள இஸ்ரேல் துாதரகம் அருகே குண்டு வெடித்தது.


❇️ ஜனவரி 6: இந்தியாவுக்கான பிரிட்டன் துாதராக அலெக்சாண்டர் எலிஸ் நியமனம்.


❇️ ஜனவரி 7: தேர்தல் தோல்வியை எதிர்த்து அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆதரவாளர்கள் வாஷிங்டன் பார்லி., கட்டடத்தில் (கேப்பிடோல்) நடத்திய கலவரத்தில் 4 பேர் பலி.


❇️ ஜனவரி 7: நீளமான ரயில்: ஹரியானாவின் நியூ அடெலி - ராஜஸ்தானின் நியூ கிஷன்கர் இடையே உலகின் முதல் இரட்டை அடுக்கு பெட்டக மின்சார ரயில் சேவை துவக்கம். நீளம் 1.5 கி.மீ.,


❇️ ஜனவரி 8: அமெரிக்க இணை அட்டர்னி ஜெனரலாக இந்திய வம்சாவளியை சேர்ந்த வனிதா நியமனம்.


❇️ ஜனவரி 8: மும்பை தாக்குதலில் ஈடுபட்ட லக் ஷர்-இ -தொய்பாவின் ஜகியுர் ரகுமானுக்கு பாக்., நீதிமன்றம் 15 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.


❇️ ஜனவரி 13: பாலியல் குற்றத்துக்காக துருக்கியை சேர்ந்த மத வழிபாட்டு தலைவர் அட்னான் அக்தார்க்கு 1075 ஆண்டுகள் சிறை.


❇️ ஜனவரி 14: வன்முறையை துாண்டும் விதத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் மீதான கண்டன தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்.


❇️ ஜனவரி 15: இந்தோனேஷியாவின் சுலாவேசி தீவில் நிலநடுக்கத்தில் 42 பேர் பலி.


❇️ ஜனவரி 18: லஞ்ச வழக்கில் தென்கொரியாவின் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன துணைத்தலைவர் லி ஜே யாங்கிற்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனை.


❇️ ஜனவரி 20: அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்பு. வயதான (78) அதிபர், அதிக ஓட்டு வித்தியாசத்தில் (8.12 கோடி) வென்றவர் இவர்.


❇️ ஜனவரி 20: அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்பு.


❇️ ஜனவரி 22: அணு ஆயுத பயன்பாட்டை தடுக்கும் விதமாக ஐ.நா., வின் அணு ஆயுத தடைச் சட்டம் அமல். இதில் 61 நாடுகள் கையெழுத்து. இந்தியா இல்லை.


❇️ ஜனவரி 23: பிற நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கிய இந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பு (WHO) பாராட்டு.


❇️ ஜனவரி 25: போர்ச்சுக்கல் அதிபராக டிசோசா மீண்டும் பதவியேற்பு.


❇️ ஜனவரி 26: ஈஸ்டானியாவின் முதல் பெண் அதிபராக கஜா கலாஸ் பதவியேற்பு.


❇️ ஜனவரி 26: அமெரிக்காவின் முதல் பெண் நிதியமைச்சராக ஜெனட் ஏலென் நியமனம்.


❇️ ஜனவரி 27: இந்தியா இலவசமாக கொடுத்த 'கோவிஷீல்டு' தடுப்பூசி மியான்மரில் பயன்பாட்டுக்கு வந்தது.


❇️ ஜனவரி 9: இந்தோனேஷியாவின் ஜகார்தாவில் விமான விபத்தில் 62 பேர் பலி.


❇️ ஜனவரி 19: பத்து, பிளஸ் 2 மாணவருக்கு 10 மாதங்களுக்கு பின் பள்ளி திறப்பு.


❇️ ஜனவரி 25: மின்னணு வாக்காளர் அடையாள அட்டை அறிமுகம்.


❇️ ஜனவரி 29: பாக்., சிந்து மாகாணத்தில் 129 ஆண்டு சிவன் கோயில் மீண்டும் திறப்பு.


No comments:

Popular Posts