TNPSC CURRENT AFFAIRS OCTOBER 2021 | நடப்பு நிகழ்வுகள் 2021 | சமிபத்திய நிகழ்வுகள் 2021
❇️ அக்டோபர் 1: 2012 தேர்தலில் சட்டவிரோதமாக நிதி அளித்த புகாரில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோசிக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கியது.
❇️ அக்டோபர் 2: காதித் துணியால் நெய்யப்பட்ட உலகின் மிகப் பெரிய இந்திய தேசியக் கொடி லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே பகுதியில் பறக்கவிடப்பட்டது.
❇️ அக்டோபர் 3: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் இடையே முதன் முறையாக பிங்க் பந்து பகலிரவு டெஸ்ட் போட்டி கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்றது.
❇️ அக்டோபர் 4: 2021-ம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டெம் பட்டாபுடியான் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
❇️ அக்டோபர் 5: கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்த வள்ளலார் பிறந்த அக்டோபர் 5 இனி ‘தனிப்பெருங் கருணை’ நாளாகக் கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
❇️ அக்டோபர் 5: இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜப்பானின் சியுகுரோ மனாபே, ஜெர்மனியின் கிளாஸ் ஹாசல்மேன் மற்றும் இத்தாலியின் ஜார்ஜியோ பாரிசி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.
❇️ அக்டோபர் 6: வேதியியலுக்கான நோபல் பரிசு ஜெர்மனியின் பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் பிரிட்டனின் டேவிட் டபுள்யு.சி மேக்மில்லன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.
❇️ அக்டோபர் 7: இந்தியப் பணக்காரர்களின் பட்டியலில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து பத்தாம் முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளார். இரண்டாமிடத்தில் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி உள்ளார்.
❇️ அக்டோபர் 8: ஏர் இந்தியா நிறுவனத்தை ரூ.18 ஆயிரம் கோடிக்கு டாடா சன்ஸ் துணை நிறுவனமான தலேஸ் பிரைவேட் லிமிடெட் வாங்கியுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. டாடா நிறுவனம் தொடங்கிய ஏர் இந்தியாவை 1953-ல் மத்திய அரசு நாட்டுடமையாக்கியது.
❇️ அக்டோபர் 8: அமைதிக்கான நோபல் பரிசு பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் மரியா ரெஸா, ரஷ்ய பத்திரிகையாளர் திமித்ரி முராதஃப் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.
❇️ அக்டோபர் 8: தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக ஐசரி கணேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், இந்தச் சங்கத்தில் 15 ஆண்டுகள் துணைத் தலைவராக இருந்தார்.
❇️ அக்டோபர் 9: புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான நல வாரியம் அமைக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்தது. இது, ‘புலம்பெயர் தமிழர் நல வாரியம்’ என அழைக்கப்படும்.
❇️ அக்டோபர் 10: 2022ஆம் ஆண்டில் பிரிட்டனின் பர்மிங்காம் நகரில் நடைபெற உள்ள காமன்வெல்த் ஹாக்கிப் போட்டியிலிருந்து விலகுவதாக ஹாக்கி இந்தியா அமைப்பு அறிவித்தது.
❇️ அக்டோபர் 13: தமிழகத்தில் நவம்பர் 1 முதல்ஒன்பதாவதற்குக் கீழ் உள்ள வகுப்பு களைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. வாரத்தில் 7 நாட்களும் வழிபாட்டுத் தலங்களை திறக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டது.
❇️ அக்டோபர் 14: ‘டி23’ என்று பெயரிடப்பட்ட புலியை 23 நாட்கள் தேடுதலுக்குப் பிறகு முதுமலை புலிகள் காப்பகப் பகுதியில் உயிருடன் வனத்துறைப் பிடித்தது.
❇️ அக்டோபர் 13: சர்வதேசக் கால்பந்துப் போட்டிகளில் அதிக கோல்கள் அடித்திருந்தவர்களின் பட்டியலில் பீலேவின் (77 கோல்) சாதனையை இந்தியாவின் சுனில் சேத்ரி முறியடித்தார். 79 கோல் அடித்திருக்கும் சுனில் சேத்ரி 3ஆம் இடத்தில் உள்ளார்.
❇️ அக்டோபர் 15: துபாயில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைட்டர்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துக் கோப்பையை வென்றது. இது சென்னை அணி வெல்லும் 4-வது கோப்பை.
❇️ அக்டோபர் 15: பிரபல பாடலாசிரியரும் கவிஞருமான பிறைசூடன் (அக்டோபர் 8), புகழ்பெற்ற மலையாள நடிகர் நெடுமுடி வேணு (அக்டோபர் 11), பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் (அக்டோபர் 12) ஆகியோர் உடல்நலக் குறைவால் காலமானார்கள்.
❇️ அக்டோபர் 16: உலகப் பட்டினிக் குறியீட்டில் இந்தியா 101ஆவது இடத்தில் உள்ளது. 2020இல் 91-ஆவது இடத்தில் இந்தியா இருந்தது. இப்பட்டியலில் 116 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
❇️ அக்டோபர் 16: ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலுக்கு (2022-2024 வரை) இந்தியா மீண்டும் தேர்வானது. 193 உறுப்பினர்களைக் கொண்ட இச்சபையில் 184 வாக்குகளை இந்தியா பெற்றது.
❇️ அக்டோபர் 17, 18: 16 நாட்டு அணிகள் பங்கேற்கும் ஏழாவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாட்டில் தொடங்கியது. நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் குர்டிஸ் கேம்பர் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்தார்.
❇️ அக்டோபர் 18: கும்பகோணம் நகராட்சியை மாநகராட்சியாகத் தரம் உயா்த்தித் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதன் மூலம் தமிழகத்தில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 16ஆக அதிகரித்தது.
❇️ அக்டோபர் 19: மணிப்பூர் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு கவுரவம் அளிக்கும் வகையில் ஹாரியட் மலையை ‘மணிப்பூர் மலை’ எனப் பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவுசெய்தது.
❇️ அக்டோபர் 19: 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 100 சதவீதம் முதல் டோஸ் செலுத்திய மாநிலம் என்கிற பெருமையை உத்தரகாண்ட் பெற்றது.
❇️ அக்டோபர் 19: விண்வெளியில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் என்கிற பெருமையைப் பெற்ற ‘சேலஞ்ச்’ படத்தில் பணியாற்றிய ரஷ்ய நாட்டைச் சேர்ந்த குழுவினர் சோயுஸ் எம்.எஸ்-19 விண்கலம் மூலம் பூமியை வந்தடைந்தனர்.
❇️ அக்டோபர் 21: இந்தியாவில் கடந்த ஜனவரி மாதத்தில் தொடங்கிய கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம், 100 கோடி டோஸ் என்கிற நிலையை எட்டியது.
❇️ அக்டோபர் 23: தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் சமூக நீதி சரியான முறையில் அமல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க சமூக நீதி கண்காணிப்புக் குழுவை தமிழக அரசு அமைத்தது.
❇️ அக்டோபர் 23: தமிழக ரேஷன் கடைகளில் ‘கற்பகம்’ என்கிற பெயரில் பனை வெல்லம் விற்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
❇️ அக்டோபர் 24: பிகாரின் ஜெய்நகர் - நேபாளம் குர்தா வரையிலான ரயில் இணைப்புப் பாதையை நேபாள அரசிடம் இந்திய அரசு ஒப்படைத்தது.
❇️ அக்டோபர் 25: இந்திய சினிமா கலைஞர் களுக்கு வழங்கப்படும் உயரிய தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது.
❇️ அக்டோபர் 26: ஐபிஎல் கிரிக்கெட்டில் அகமதாபாத் மற்றும் லக்னோ நகரங்களை மையமாகக் கொண்டு இரு புதிய அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ஐபிஎல் அணிகளின் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்துள்ளது.
❇️ அக்டோபர் 27: நிலம் விட்டு நிலம் பாயும் ‘அக்னி-5’ என்ற ஏவுகணை ஒடிஷா மாநிலம் ஏபிஜே அப்துல் கலாம் தீவிலிருந்து வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.
❇️ அக்டோபர் 28: விழுப்புரம் மாவட்டம் முதலியார்குப்பத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியது.
❇️ அக்டோபர் 29: பேரியம் கலந்து தயாரிக்கப்படும் பட்டாசுகளைத் தயாரிக்கவும் விற்கவும் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
❇️ அக்டோபர் 29: இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.
❇️ அக்டோபர் 29: ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயர் ‘மெட்டா’ என்று மாற்றப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்க் ஸகர்பர்க் அறிவித்துள்ளார்.
❇️ அக்டோபர் 30: ஆண்டுதோறும் ஜூலை 18 அன்று தமிழ்நாடு தினம் கொண்டாட விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
No comments:
Post a Comment