Thursday, September 30, 2021

TNPSC CURRENT AFFAIRS SEPTEMBER 2021 | நடப்பு நிகழ்வுகள் 2021 | சமிபத்திய நிகழ்வுகள் 2021

TNPSC CURRENT AFFAIRS SEPTEMBER 2021 | நடப்பு நிகழ்வுகள் 2021 | சமிபத்திய நிகழ்வுகள் 2021


❇️ செப்டம்பர் 2: பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்துள்ள நிலையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.


❇️ செப்டம்பர் 3: மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு நடந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் எம்.எம். அப்துல்லா போட்டியின்றித் தேர்வானார். மாநிலங்களவையில் திமுகவின் பலம் எட்டாக அதிகரித்தது.


❇️ செப்டம்பர் 3: டோக்கியோ பாராலிம்பிக்கில் மகளிர் ஆர் 2 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் அவனி லேகாரா, தடகளம் ஆடவர் எஃப் 64 ஈட்டி எறிதல் பிரிவில் சுமித் அண்டில், துப்பாக்கிச் சுடுதல் கலப்பு பி4 50 மீ. பிஸ்டல் பிரிவில் மனீஷ் நர்வால், பேட்மிண்ட்டனில் பிரமோத் பகத், கிருஷ்ணா நாகர் ஆகியோர் தங்கப் பதக்கமும்; ஆடவர் டி63 உயரம் தாண்டுதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, ஆடவர் டி47 உயரம் தாண்டுலில் நிஷாத் குமார், ஆடவர் எஃப்56 வட்டெறிதலில் யோகேஷ் கதுனியா, ஆடவர் எஃப்46 ஈட்டி எறிதலில் தேவேந்திர ஜஜாரியா, ஆடவர் டி64 உயரம் தாண்டுதலில் பிரவீன் குமார், துப்பாக்கிச் சுடுதல் எஸ்.ஹெச்.1 கலப்பு 50 மீ. பிரிவில் சிங்ராஜ் அதனா ஆகியோர் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். மொத்தம் 19 பதக்கங்களை இந்தியா வென்றது.


❇️ செப்டம்பர் 4: டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியா முதன் முறையாக 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களை வென்றது. இதற்கு முன்பு 1984, 2016-ஆம் ஆண்டுகளில் தலா 4 பதக்கங்களை வென்றதே அதிகபட்சமாகும்.


❇️ செப்டம்பர் 4: தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் இனி தமிழ்நாடு நகர்வாழிட மேம்பாட்டு வாரியம் என அழைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 1971ஆம் ஆண்டு முதல்வராக மு.கருணாநிதி இருந்தபோது குடிசைமாற்று வாரியம் தொடங்கப்பட்டது.


❇️ செப்டம்பர் 6: 18 வயதைக் கடந்த அனைவருக்கும் கரோனா தடுப்பூசி முதல் தவணையைச் செலுத்திய முதல் மாநிலம் என்கிற பெயரைப் பெற்றது இமாச்சல பிரதேசம்.


❇️ செப்டம்பர் 7: பெரியார் ஈ.வெ. ராமசாமி பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி இனி சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.


❇️ செப்டம்பர் 9: எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மீதான கிரிமினல் வழக்குகளை உயர் நீதிமன்றங்களின் உத்தரவு இல்லாமல் அரசு வழக்கறிஞர்கள் வாபஸ் பெறக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


❇️ செப்டம்பர் 9: ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியும் நாகலாந்து ஆளுநருமான ஆர்.என்.ரவியை தமிழ்நாட்டின் புதிய ஆளுநராகக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்தார். பஞ்சாப் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் மாற்றப்பட்டார்.


❇️ செப்டம்பர் 9: பாடலாசிரியரும் கவிஞருமான புலமைப்பித்தன் (87) உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தமிழ்நாடு சட்ட மேலவையின் துணைத் தலைவராகப் பணியாற்றியவர்.


❇️ செப்டம்பர் 9: ரயில்கள் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு இந்திய ரயில்வே இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


❇️ செப்டம்பர் 10: நெல்லையில் ரூ.15 கோடி செலவில் ‘பொருநை அருங்காட்சியகம்’ அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். பொருநை ஆறு (தாமிரபரணி) நாகரிகம் 3,200 ஆண்டுகள் பழமையானதாகும்.


❇️ செப்டம்பர் 10: இந்திய கிரிக்கெட் அணிக்குள் கரோனா வைரஸ் பரவியதால் இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது.


❇️ செப்டம்பர் 10: பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாளையொட்டி இனி செப்டம்பர் 11ஆம் தேதி மகாகவி தினமாக அனுசரிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.


❇️ செப்டம்பர் 13: நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் தீர்மானம் தமிழகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.


❇️ செப்டம்பர் 13: குஜராத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேல் பொறுப்பேற்றார். முன்னதாக விஜய் ரூபானி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.


❇️ செப்டம்பர் 13: தமிழகத்தில் காலியாக உள்ள ஒன்பது மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சிகளுக்கு அக்.6 மற்றும் அக்.9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.


❇️ செப்டம்பர் 13: அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் போட்டியில் ரஷ்யாவின் டேனி மெட்வடேவ், செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சை வீழ்த்தி முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார்.


❇️ செப்டம்பர் 16: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்குப் பிறகு டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.


❇️ செப்டம்பர் 17: தமிழகத்தில் சமயபுரம், திருத்தணி, திருச்செந்தூர் ஆகிய ஊர்களில் உள்ள கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.


❇️ செப்டம்பர் 18: தமிழகத்தின் 26-ஆவதுஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.


❇️ செப்டம்பர் 19: திருக்குறளை இந்தியில் மொழிபெயர்த்த டி.இ.எஸ். ராகவன், தாகூரின் ‘கோரா’ நாவலைத் தமிழில் மொழிபெயர்த்த கா.செல்லப்பன் ஆகியோர் 2020-ஆம் ஆண்டு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.


❇️ செப்டம்பர் 20: பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பொறுப்பேற்றார். முன்னதாக உட்கட்சிப் பிரச்சினை காரணமாக கேப்டன் அம்ரீந்தர் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.


❇️ செப்டம்பர் 21: ஜப்பானைச் சேர்ந்த 107 வயதான இரட்டைச் சகோதரிகள் உமேமோ சுமிம்மா, கவுமே கோடமா ஆகியோர் உலகின் மிக வயதான இரட்டையர்கள் என்று கின்னஸ் அமைப்பு அங்கீகரித்துள்ளது.


❇️ செப்டம்பர் 21: கனடா நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்தது. ஜஸ்டின் ட்ரூடோ 2015 முதல் அந்நாட்டுப் பிரதமராக இருந்துவருகிறார்.


❇️ செப்டம்பர் 22: சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாக மதுரையில் மகாத்மா காந்தி கோட், சூட் அணிவதைத் துறந்து, அரையாடைக்கு மாறிய நிகழ்வின் நூற்றாண்டு நாள் கடைப்பிடிக்கப்பட்டது.


❇️ செப்டம்பர் 22: தமிழகத்தில் காலியாக இருந்த இரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் கனிமொழி, ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியின்றித் தேர்வா யினர். புதுச்சேரியில் முதன் முறையாக பாஜகவைச் சேர்ந்த செல்வகணபதி மாநிலங்களவை எம்.பி.யானார்.


❇️ செப்டம்பர் 23: தமிழகத்தின் கோவளம், புதுச்சேரியின் ஏடென் ஆகிய கடற்கரைகள் உலகப் புகழ்பெற்ற நீலக்கொடிச் சான்றிதழைப் பெற்றன. இதன் மூலம் இந்தியாவில் இச்சான்றிதழைப் பெற்ற கடற்கரைகளின் எண்ணிக்கை பத்தாக உயர்ந்தது.


❇️ செப்டம்பர் 23: தோகாவில் நடைபெற்ற ஸ்னூக்கர் உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை இந்தியாவின் பங்கஜ் அத்வானி வென்றார். இது அவர் வெல்லும் 24-ஆவது பட்டமாகும்.


❇️ செப்டம்பர் 24: பெருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க, உச்ச நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.


❇️ செப்டம்பர் 25: இந்திய விமானப் படையின் தளபதி பதவுரியா ஓய்வுபெற உள்ள நிலையில், புதிய தளபதியாக விவேக் ராம் சவுத்ரி நியமிக்கப் பட்டுள்ளார்.


❇️ செப்டம்பர் 24: பள்ளிக் கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை வகுக்க கே.கஸ்தூரி ரங்கன் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.


❇️ செப்டம்பர் 25: உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநராக உள்ள எத்தியோப்பியாவைச் சேர்ந்த டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸை, அந்தப் பதவிக்கு இரண்டாவது முறையாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பரிந்துரைத்துள்ளன.


❇️ செப்டம்பர் 26: இந்தியாவின் முதல் விளையாட்டுத் துறை நடுவண் தீர்ப்பாயம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ளது.


❇️ செப்டம்பர் 26: செக் குடியரசில் நடைபெற்ற ஆஸ்ட்ராவா ஒபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-சீனாவின் ஷுவாய் ஜங் இணை பட்டம் வென்றது.


❇️ செப்டம்பர் 27: அமெரிக்காவின் டகோடா மாகாணத்தில் உள்ள யாங்டன் நகரில் நடந்த 2021 உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வில்வித்தை அணி 3 வெள்ளிப் பதக்கங்களை வென்றது.


❇️ செப்டம்பர் 27: ஆயுஷ்மான் பாரத் என்கிற தேசிய டிஜிட்டல் சுகாதாரத் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். ஒவ்வொரு குடிமகனுக்கும் சுகாதார அடையாள அட்டையையும் பதிவேட்டையும் உள்ளடக்கியது இத்திட்டம்.


❇️ செப்டம்பர் 28: சென்னை எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையரகத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு காவல் துறை அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது.


❇️ செப்டம்பர் 28: டி20 கிரிக்கெட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களைக் குவித்த முதல் இந்திய வீரர் என்கிற பெருமையை விராட் கோலி பெற்றார்.


❇️ செப்டம்பர் 29: காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் முழு நேரத் தலைவராக சவுமித்ரா குமார் ஹல்தார் என்பவரை மத்திய அரசு நியமித்துள்ளது.


❇️ செப்டம்பர் 29: போலீஸ், அதிகாரிகளின் கொடுமைகள் குறித்து சாமானியர்கள் அளிக்கும் புகார்களை விசாரிக்க உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்க உச்ச நீதிமன்றம் ஆதரவாக இருக்கும் என்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.


No comments:

Popular Posts