Tuesday, September 28, 2021

GS-30-INDIAN NATIONAL MOVEMENT | இந்திய தேசிய இயக்கம் | இந்திய விடுதலைப்போராட்டத்தில் தமிழ்நாடு | ஒரு வரி வினா விடை

இந்திய விடுதலைப்போராட்டத்தில் தமிழ்நாடு

  • சென்னை மாகாணத்தில் மக்கள் உரிமைகளை நிலைநாட்ட ஏற்படுத்தப்பட்ட முதல் அமைப்பு - சென்னை சுதேசி சங்கம்
  • சென்னை சுதேசி சங்கம் எப்போது யாரால் தொடங்கப்பட்டது - 1852, ஹார்லி - லஷ்மி நரசுச்செட்டி மற்றும் சீனிவாசப்பிள்ளை
  • சென்னை சுதேசி சங்கம், சென்னை மகாஜன சபையுடன் எப்போது இணைக்கப்பட்டது - 1884
  • சென்னை மகாஜன சபையை யார் ஏற்படுத்தினர் - இராமசாமி முதலியார், பி.அனந்தாசாருலு .
  • சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார் - பி. இரங்கையா நாயுடு
  • சென்னை மகாஜன சபையில் காந்திஜி எப்போது உரையாற்றினார் -1896, அக்டோபர் 24
  • சென்னை மகாஜன சபையில் ஜவஹர்லால் நேரு எப்போது கலந்து கொண்டார் - பொன்விழாவில் (1909)
  • இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாடு எப்போது பம்பாயில் கூடியது - 1885 டிசம்பர்
  • முதல் மாநாட்டில் தமிழ் நாட்டிலிருந்து கலந்துக் கொண்டவர்கள் - 16 பேர்
  • இந்திய தேசிய காங்கிரஸ் 3வது மாநாடு (1887) எங்கு நடைபெற்றது - சென்னை
  • எந்த காங்கிரஸ் மாநாட்டு முதன் முறையாகத் திறந்த வெளித்திடலில் நடைபெற்றது - சென்னை
  • 1887 மாநாட்டில் கலந்து கொண்ட சென்னை கவர்னர் யார் - கன்னிமாரா பிரபு 13. 1920 நாக்பூர் காங்கிரஸ் மாநாட்டின் தலைவர் யார் - சி.பி.விஜயராகவாச்சாரி
  • 1926 கௌகாத்தி காங்கிரஸ் மாநாட்டின் தலைவர் யார் - எஸ். சீனிவாச ஐய்யங்கார்
  • தமிழ்நாட்டுத் தீவிரவாதத்தின் தந்தை யார் - சேலம் விஜயராகவாச்சாரியார்
  • தென்னாட்டின் பூனா என எப்பகுதி அழைக்கப்படுகிறது - சேலம்
  • வ.உ.சி.எப்போது சுதேசி கப்பல் கம்பெனியை எப்போது துவக்கினார் - 1906, நவம்பர்
  • வாஞ்சிநாதன் எப்போது எங்கு திருநெல்வேலி மாவட்டத் துணைக் கலெக்டர் ஆஷ்துரை சுட்டுக்கொன்றார் - 1911 ஜூன் 17, மணியாச்சி ரயில்நிலையம்
  • தன்னாட்சி சங்கம் எப்போது சென்னையில் யார் ஏற்படுத்தினார் - 1916 செப்டம்பர், அன்னிபெசன்ட்
  • 1917ல் யார் தலைமையில் மாநில தன்னாட்சி மாநாடு நடைபெற்றது - வி.பி.மாதவராவ்
  • 1917 கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரசின் தலைவர் யார் - அன்னிபெசன்ட் முதல் பெண் காங்கிரஸ் தலைவர்)
  • தமிழ்நாட்டில் ரௌலட் சட்ட எதிர்ப்பு நாள் எந்த தினமாகக் கொண்டாடப்படுகிறது - 1919 ஏப்ரல் 6
  • சென்னையில் 1920-ல் யார் தலைமையில் கிலாபத் மாநாடு நடைபெற்றது - மௌலானா சவுக்கத்
  • தமிழ்நாட்டில் ஒத்துழையாமை இயக்கம் யார் தலைமையில் நடைபெற்றது - சி.ராஜகோபாலாச்சாரி
  • வேல்ஸ் இளவரசர் சென்னைக்கு எப்போது வருகை தந்தார் - 1922 ஜனவரி 14
  • தமிழ்நாடு என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் - வரத ராஜீலு நாயுடு
  • யார் 1857 பெருங்கிளர்ச்சியை ஒடுக்குவதில் தனித்தீவிரம் காட்டினார் - கர்னல் நீல்
  • கர்னல் நீலின் சிலையை யார் உடைத்து சேதப்படுத்தினார்கள் - முகமது சாலியா ராவு, சுப்பராயலு நாயுடு
  • 1937ல் யாருடைய ஆட்சியில் கர்னல் நீல் சிலை அகற்றப்பட்டது - ராஜாஜி
  • வேதாரண்ய உப்புச்சத்திய கிரகத்தில் நாமக்கல் கவிஞர் பாடிய பாடல் - சக்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது
  • சென்னை மெரினா உப்பு சத்திய கிரகத்தில் யார் தலைமை தாங்கினார் - ஆந்திர கேசரி
  • திருப்பூர் குமரன் எந்த நிகழ்வில் உயிர் நீட்டார் - சட்டமறுப்பு இயக்கம்
  • எப்போது முதன் முறையாக தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது -1937
  • மத்தியில் நேருவின் இடைக்கால அரசில் இடம் பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்தவர் யார் - சி. ராஜகோபாலச்சாரி
  • சுதந்திரம் அடைந்த போது சென்னையில் மாகாணத்தில் மூவர்ண கொடி ஏற்றிய முதல்வர் யார்? - ஓமந்தூர் ராமசாமி
  • ஆங்கிலேயர் தீரன் சின்னமலையாரை எங்கு தூக்கிலிட்டனர் - சங்ககிரி
  • வ. உ.சி.எப்போது காங்கிரஸில் இணைத்தார் - 1905
  • எந்த இரு இடத்திற்கிடையே வ.உ.சி. போக்குவரத்து கப்பலை துவங்கினார் - தூத்துக்குடி - கொழும்பு
  • வ.உ.சி. சுதேசி நாவாய் சங்கத்தை எங்கு தொடங்கினார் - தூத்துக்குடி
  • வ.உ.சி சுதேசி நாவாய் கப்பலின் பெயர் என்ன - கலிலியோ லாவோ
  • தென்னாட்டுத் திலகர், கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல் என்று அழைக்கப்படுபவர் - வ.உ.சிதம்பரனார்
  • Story of Kambar என்ற ஆங்கில நூலை எழுதியவர் யார் - வ.வே.சுப்பிரமணிய ஐயர்
  • பாலபாரதி என்ற மாத இதழை நடத்தியவர் யார் - வ.வே.சுப்பிரமணிய ஐயர்
  • வாஞ்சிநாதனின் குரு யார் - வ.வே.சுப்பிரமணிய ஐயர்
  • சேரன்மாதேவி பாரத்துவாஜ் ஆசிரமத்தை நிறுவியவர் யார் - வ.வே.சுப்பிரமணிய ஐயர்
  • 1910ம் ஆண்டு பாரத மாதா சங்கம் என்ற அமைப்பை யார் ஏற்படுத்தினார் - பிரம்மச்சாரி
  • புதுவையில் சூர்யோதயம் என்ற பத்திரிக்கையை நடத்தியவர் யார் - நீலகண்ட பிரம்மச்சாரி
  • பாரதியாரின் இயற்பெயர் என்ன - சுப்பிரமணியம்
  • பாரதி என்ற பட்டத்தை பாரதியாருக்கு யார் வழங்கினார்கள் - எட்டயபுரம் அரசவை
  • சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக பாரதி எப்போது பணியாற்றினார் - (1904 முதல் 1906 வரை)
  • இந்தியா (1907) என்ற தமிழ் வார இதழையும் பாலபாரதம் என்ற ஆங்கில இதழை வெளியிட்டவர் யார் - பாரதியார்
  • 1907ல் பிபின் சந்திர பாலை சென்னைக்கு அழைத்தவர் யார் - பாரதியார்
  • சூர்யோதயம் (1910) என்ற புதுச்சேரியில் வார இதழை யார் வெளியிட்டார் - பாரதியார்
  • ஞானபானு, பிரபஞ்சமித்திரன், இந்திய தேசாந்திரி இதழை யார் வெளியிட்டார் - சுப்பிரமணிய சிவா
  • சுதந்திரானந்தா என்ற புனைப்பெயரை சூட்டிக் கொண்டவர் யார் - சுப்பிரமணிய சிவா
  • பாப்பாரப்பட்டியில் பாரதி ஆசிரமத்தை நிறுவியவர் யார் / - சுப்பிரமணிய சிவா
  • சேலத்து மாம்பழம் என அழைக்கப்படுபவர் யார் - இராஜாஜி
  • 1925ல் திருச்செங்கோட்டில் காந்தி ஆசிரமம் அமைத்து மது விலக்குப் பிரச்சாரம் செய்தவர் யார் - இராஜாஜி
  • சி.ஆர்.திட்டத்தை இராஜாஜி எப்போது காந்தியடிகளிடம் அளித்தார் - 1944
  • இளம் இந்தியா என்னும் பத்திரிக்கையை யார் நடத்தினார் - இராஜாஜி 62. இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த ஒரே இந்தியர் யார் - இராஜாஜி
  • இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் யார் - இராஜாஜி
  • 1952ல் தமிழக முதலமைச்சர் பதவி வகித்தவர் யார் - இராஜாஜி
  • இராஜாஜிக்கு எப்போது பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது - 1955
  • 1959ல் சுதந்திரக் கட்சியை யார் தொடங்கினார் - இராஜாஜி
  • இராஜாஜி சென்னை மாகாணத்தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரான வருடம் - 1937
  • குலக்கல்வி திட்டத்தை அறிமுகப் படுத்தியவர் - இராஜாஜி
  • சக்கரவர்த்தி திருமகன், வியாசர் விருந்து, திக்கற்ற பார்வதி போன்ற நூல்களை யார் எழுதினார் - இராஜாஜி
  • அரசியல் சாணக்கியர் என அழைக்கப் பட்டனர் - இராஜாஜி
  • ஈ.வெ.ரா. எப்போது காங்கிரஸில் இணைத்தார் - 1919
  •  ஈ.வெ.ரா. எப்போது சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் - 1923
  • பெரியார் எப்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார் - 1925
  • 1929ல் சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடு எங்கு நடைபெற்றது - செங்கல்பட்டு
  • எப்போது பெரியார் திராவிடன் பத்திரிக் கையின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார் - 1926
  • பெரியார் குடும்பக்கட்டுப்பாடு பற்றிய புத்தகத்தை எப்போது வெளியிட்டார் - 1930
  • எப்போது பெரியார் நீதிக்கட்சியின் தலைவரானார் - 1938
  • அண்ணாவின் தீர்மானத்தின் படி நீதிக்கட்சியின் பெயர் எப்போது திராவிட கழகம் என மாற்றம் செய்யப்பட்டது - 1944 (சேலம்)
  • காமராஜரின் குரு யார் - சத்தியமூர்த்தி
  • 1922ல் நேரு தலைமையில் இந்தியக் குடியரசு காங்கிரஸ் என்ற பெயரில் மாநாட்டை யார் நடத்தினார் - காமராஜர்
  • காமராசர் முதன் முதலில் கலந்து கொண்ட போராட்டம் - 1924, வைக்கம் சத்தியாகிரகம்
  • எந்த போரட்டத்தில் காமராசர் பங்கேற்று 3 வருடம் அமராவதி சிறையில் அடைக்கப்பட்டார் - 1942, வெள்ளையனே வெளியேறு
  • 1930ம் ஆண்டு காமராஜர் வேதாரண்யம் உப்பு சத்திய கிரகத்தில் பங்கேற்று எந்த சிறையில் அடைக்கப்பட்டார் - கல்கத்தா (அலிப்பூர்)
  • காமராஜர் எப்போது சென்னையில் மாகாண காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தார் - 1914 முதல் 1952
  • காமராஜ் எப்போது தமிழக முதல்வராக பதவியேற்றார் - 1954 ஏப்ரல் 13
  • 1956ஆம் ஆண்டு எங்கு இலவச மத்திய உணவு திட்டத்தை காமராசர் கொண்டு வந்தார் - எட்டயபுரம்
  • காமராசரின் கே திட்டம் எப்போது கொண்டு வந்தார் - 1963
  • 1964ம் ஆண்டு எங்கு நடைபெற்ற மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் தலைவரானார் - புவனேஸ்வர்
  • பாரத ரத்னா விருது எப்போது காமராசர் வழங்கப்பட்டது - 1976
  • கிங் மேக்கர், கர்ம வீரர் என அனைவராலும் படுபவர் யார் - காமராஜர்
  • காமராஜர் எப்போது காமராஜர் இறந்தார் - 1975, அக்டோபர் 2
  • பூண்டி நீர்த் தேக்கத்திற்கு (1939) அடிக்கல் நாட்டியவர் யார் - சத்தியமூர்த்தி
  • சத்தியமூர்த்தி 1942ம் ஆண்டு தனிநபர் சத்தியாகிரகம் செய்தமையில் எங்கு சிறையில் அடைக்கப்பட்டார் - நாக்பூர் (அமராவதி
  • ம்மை எங்கு எப்போது பிறந்தார் - தென்னாப்பிரிக்கா ஜோகன்ஸ் பர்க் 1898 பிப்ரவரி 22
  • தில்லையாடி வள்ளியம்மை பூர்விகம் எங்கு உள்ளது - தஞ்சாவூர் (தில்லையாடி
  • தில்லையாடி வள்ளியம்மை எப்போது இறந்தார் - 16 வயதில், 1914 பிப்ரவரி 17
  • தில்லையாடி வள்ளியம்மைக்கு எப்போது அஞ்சல் தலை வெளியிடப்பட்டது - 2008 டிசம்பர் 31
  • வேலூர் கலகம் எப்போது நடைபெற்றது - 1806
  • வில்லியம் பெண்டிங் பிரபுவின் அனும தியோடு படைத்தளபதி யார் தலைப்பாகை யுடன் கூடிய புதிய சீருடையை அறிமுகப் படுத்தினார் - சர் ஜான் கிரடாக்
  • வேலூர் சிப்பாய் கலகம் எப்போது எந்த படைப்பிரிவினர் கலகத்தை தோற்றுவித்தனர் - ஜுலை 10, 1806, 23ம் படைப்பிரிவினர்
  • வேலூர் கலகத்தின் போது கிளர்ச்சியாளர்கள் யாரை புதிய சுல்தானாக அறிவித்தார் - பதேக்ஹைதர் (திப்பு சுல்தான் மூத்தமகன்)
  • வேலூர் சிப்பாய் கலகத்தின் போது வேலூர் கோட்டையில் யாருடைய கொடி பறக்கவிடப்பட்டது - திப்பு சுல்தானின், புலி கொடி
  • வேலூர் சிப்பாய் கலகம் யாரினால் உடனடியாக அடக்கப்பட்டது - கர்னல் ஜில்லெஸ்பி
  • வேலூர் சிப்பாய் கலக முடிவில் திப்புசுல்தான் மகன் எங்கே அனுப்பி வைக்கப்பட்டார் - கல்கத்தா
  • வேலூர் கலகம் 1857 பெருங்கலகத்திற்கு வடிவகுத்தது என்ற கூற்றை யார் மறுத்தார் - கே.கே . பிள்ளை
  • 1857 முதல் இந்திய சுதந்திர போருக்கு வேலூர் கலகம் முன்னோடி என யார் கூறினார் - சவார்க்கா
  • இந்திய விடுதலைக்கு தமிழர்கள் முன்னோடியாக திகழ்ந்தனர் என்று யார் கூறினார் - என். சஞ்சீவி
  • புதிய வகை தலைப்பாகை யார் அறிமுகப்படுத்தினார் - தளபதி அக்னியூ
  • காலனியாதிக்கத்தை எதிர்த்து மருது சகோதரர்கள் நடத்திய போராட்டத்தின் தொடர்ச்சியே வேலூர் கலகம் என்றவர் - கே.ராசய்யன்
  • மருது சகோதரர் எப்போது தென்னிந்திய கலகத்திற்கு தலைமையேற்று நடத்தினார் - 1801
  • ஜி.சுப்பிரமணிய அய்யர் எப்போது தனது விதவை மகளுக்கு மறுமணம் செய்து வைத்தார் - 1889
  • 1885ம் ஆண்டு முதலாவது காங்கிரஸ் மாநாட்டில் முதல் தீர்மானத்தை யார் கொண்டு வந்தார் - ஜி.சுப்பிரமணிய அய்யர்
  • தமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்தை முன்னின்று நடத்தியவர்கள் யார் - வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, சுப்ரமணிய பாரதி
  • சுதேச கீதங்கள் என்றழைக்கப்படும் தேசிய பாடல்களை யார் எழுதினார் - பாரதியார்
  • இந்தியா என்ற தமிழ்வார இதழின் ஆசிரியர் யார் - பாரதியார்
  • கு.காமராஜ் எந்த சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டதின் மூலம் தேசிய இயக்கத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார் - வைக்கம்
  • எந்தாண்டு இராபர்ட் கால்டுவெல் எழுதிய திராவிட அல்லது தென்னிந்திய மொழிகள் குறித்த ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதினார் - 1856
  • நீதிக்கட்சியின் முன்னோடி என அழைக்கப்படுவது - சென்னை ஐக்கிய கழகம்
  • எப்போது நீதிக்கட்சி சென்னை திராவிட சங்கம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது - 1912
  • எந்தாண்டு தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது - 1916
  • தென்னிந்திய நல உரிமைச்சங்கம் உருவாகக் காரணமாக இருந்தவர் - தியாகராய செட்டி, டாக்டர்.டி.எம்.நாயர், பி.ராமராயலிங்கர் (பனகல் அரசர்), சி.நடேசமுதலியார்) 1
  • தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எந்த ஆங்கில மொழி செய்தித்தாளை நடத்தினார் - ஜஸ்டிஸ் (நீதி
  • எப்போது நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தது - 1920
  • 1920ல் தமிழகத்தின் முதலமைச்சர் யார் - ஏ.சுப்பராயலு ரெட்டி
  • 1930 ஆம் ஆண்டு தேர்தலில் யார் தலைமையில் அமைச்சரவை பதவியேற்றது - பி.முனுசாமி நாயுடு
  • 1932ல் தமிழ்நாட்டின் முதலமைச்சர் - பொப்பிலி
  • நீதிக்கட்சி எத்தனை ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஆட்சியிலிருந்தது - 13 ஆண்டுகள்
  • யாருடைய அமைச்சரவையில் 1924ல் உருவாக்கப்பட்ட பணியாளர் தேர்வுக் கழகம், 1929 பணியாளர் தேர்வு ஆணையமாக மாற்றப்பட்டது - பனகல் அமைச்சரவை
  • ஆந்திரப் பல்கலைகழகம் எப்போது நிறுவப்பட்டது - 1926
  • அண்ணாமலை பல்கலைக்கழகம் எப் போது நிறுவப்பட்டது - 1929
  • 1944-ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் அண்ணா நீதிக்கட்சியை எவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. - திராவிட கழகம்


| kalvisolai.in | tnpsc | trb | study materials | audio study materials |

No comments:

Popular Posts