லோக்பால் என்றால் என்ன? ( OIMBUDSMAN)
- லோக்பால் என்பது ஊழல், பொதுமக்கள் பணம் கையாடல் முதலிய தவறிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மக்களால் நேரடியாக தண்டிக்கப்படவேண்டும் என்ற அடிப்படை சித்தாந்ததில் இம்மசோதா முன்மொழியப்பட்டதாகும்.
- லோக்பால் என்னும் சொல் யாரால் அறிமுகம் செய்யப்பட்டது? லஷ்மி மால் சிங்வி-1963
- லோக் என்றால் மக்கள் என்றும். பால் என்றால் மக்களை காப்பவர்கள் என்றும் சமஸ்கிருதம் அர்த்தமாகும்.
- லோக்பால் மசோதா மக்களவையில் முதன் முதலில் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது? 1968 ஆம் ஆண்டு (இந்திரா காந்தி அரசு)
- லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா உருவாக்கப்பட வேண்டும் என்று கூறிய குழு? மொராஜி தேசாய் தலைமையிலான நிர்வாக சீர்திருத்த கமிஷன் (ARC) 1966
- லோக்பால் தலைவர், உறுப்பினர்கள் நியமனம் செய்ய பரிந்துரை:
- பிரதமர்,
- மக்களவைத் தலைவர்,
- மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்,
- இந்திய தலைமை நீதிபதி அல்லது இந்திய தலைமை நீதிபதி நியமனம் செய்யும் உச்சநீதிமன்ற நீதிபதி
- குடியரசுத் தலைவர் நியமனம் செய்யும் சட்ட வல்லுநர்
- லோக்பால் மக்களவையில் நிறைவேறிய ஆண்டு ? 18 டிசம்பர் 2013
- லோக்பால் மாநிலங்கள் அவையில் எப்போது நிறைவேறிய ஆண்டு? 2013 டிசம்பர் 17
- லோக்பால் தலைவர், உறுப்பினர்களை நியமனம் செய்பவர்? குடியரசுத் தலைவர்
- லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் முதன் முதலில் யாரல் அறிமுகப்படுத்தப்பட்டது? சாந்தி புஷன் (1968, மே)
- எந்த மசோதா அடிப்படையில் தற்போது லோக்பால் சட்டம்மாக மாற்றப்பட்டது? 2011இல்,மன்மோகன் சிங் அரசால் தாக்கல் செய்த மசோதா அடிப்படையில்
- லோக்பாலுக்கு ஜனாதிபதி ஒப்புதல் எப்போது அளித்தார் ? 2014 ஜனவரி 1
- லோக்பால் நடைமுறைக்கு வந்த வருடம்? 2014 ஜனவரி 16
- லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா சட்டம்- 2013
- லோக்பாலுக்கு ஒப்புதல் அளித்த ஜனாதிபதி? பிரணாப்முகர்ஜி (ஐக்கிய முற்போக்கு கூட்டணி)
- லோக்பால் (OMBUDSMAN) எந்த நாட்டில் இருந்து எடுக்கப்பட்டது? ஸ்விடன் (1809)
- Ombudsman என்ற பெயரை லோக்பால் என்று மாற்றியவர்? லஷ்மி மால் சிங்வி
- லோக்பால் - ஊழலுக்கு எதிராக தேசிய அளவில் அமைப்பு
- லோக்ஆயுக்தா - ஊழலுக்கு எதிராக மாநில அளவில் அமைப்பு
- லோக்ஆயுக்தா முதலில் நடைமுறைப்படுத்திய மாநிலம்? மகாராஷ்டிரா (1971)
- நாட்டின் முதல் லோக்பால் தலைவராக பதவியேற்றவர்? பினாகி சந்திரகோஷ்
- லோக்பால் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம்? ஐந்து ஆண்டுகள் அல்லது 70 வயது
- லோக்பால் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்? 1+8
- லோக்பால் தலைவருக்கு உதியம்? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இணையான ஊதியம் வழங்கப்படும்
- லோக்பால் உறுப்பினருக்கு உதியம் ? உச்சநீதிமன்ற நீதிபதிக்கு இணையான ஊதியம் வழங்கப்படும்.
- லோக்பால் நியமன விதிகள்?
- லோக்பால் அமைப்பின் தலைவர் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவோ அல்லது உச்சநீதிமன்ற நீதிபதியாகவோ இருந்திருக்க வேண்டும்.
- லோக்பால் ஆணையத்தில் 8 உறுப்பினர்கள் வரை இடம்பெறலாம்.
- அதில் 4 உறுப்பினர்கள் நீதித்துறையைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
- மொத்த உறுப்பினர்களில் 50 சதவீதம் பேராவது பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
- லோக் ஆயுக்தா மசோதாவின் முக்கிய கூறுகள்:
- லோக்பால் விசாரணை வரம்பில் பிரதமர்.
- விசாரணை வரம்புக்குள் அரசு ஊழியர்களில் அனைத்துப் பிரிவினரும் வருவார்கள்.
- சிபிஐ இயக்குநரை பிரதமர் தலைமையிலான உயர் அதிகார குழு பரிந்துரைக்கும்
- மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் பரிந்துரை பேரில் சிபிஐ வழக்கு தொடுக்கும் பிரிவின் இயக்குநர் நியமிப்பு
- லோக்பால் பரிந்துரைக்கும் வழக்குகளை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் லோக்பால் ஒப்புதல் தந்தால் மட்டுமே பணியிடமாற்றம்
- தமிழக சட்டபேரவையில் லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றம் எப்போது? 2018 ஜூலை 9-ம் தேதி
- தமிழகத்தில் "லோக் ஆயுக்தா' அமைப்பின் முதல் தலைவர்? பி.தேவதாஸ் (ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி)
- "லோக் ஆயுக்தா" தலைவர் மற்றும் உறுப்பினர்கள்? 1+4
- நீதித்துறை சார்ந்த இருவர் உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற நீதிபதிகள்
- இருவர் நீதித்துறை சாராத உறுப்பினர்கள்
- லோக் ஆயுக்தா அமைப்பின் பதவி காலம்? 5 ஆண்டுகள் அல்லது 70 வயதை அடையும் வரையாகும்
- தமிழக லோக் ஆயுக்தா தேடுதல் குழுவின் தலைவர்? வெங்கட்ராமன்
- லோக் ஆயுக்தா' தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்? ஆளுநர்
- 2013ம் ஆண்டு, லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தின், 63ம் பிரிவு ஒவ்வொரு மாநிலமும், சட்டம் அமலுக்கு வந்த 365 நாளுக்குள் லோக் ஆயுக்தா அமைப்பை நிறுவ வேண்டும் என, வலியுறுத்துகிறது.
- 1988ம் ஆண்டு, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், தவறு செய்த பொது ஊழியர்கள் மீது புகார் அளிக்கலாம். அந்தப் புகார்களை, லோக் ஆயுக்தா அமைப்பு விசாரிக்கும்
- லோக் ஆயுக்தா விசாரணை அதிகாரம்:
- அரசு ஊழியர்களில், 'ஏ, பி, சி மற்றும், 'டி' பிரிவு ஊழியர்கள் மீதான விசாரணையை நடத்துவதற்காக, 'விஜிலன்ஸ்' ஆணையத்துக்கு, அந்தப் புகார் அனுப்பப்பட வேண்டும்.
- அந்த ஆணையம், அதனுடைய அறிக்கையை, லோக் ஆயுக்தாவிடம் சமர்ப்பிக்க வேண்டும்
- முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், மாநில அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும், லோக் ஆயுக்தாவின் அதிகார வரம்பிற்குள் வருவர்.
- அவர்கள் மீதான புகார்களை விசாரிக்கலாம்.
- லோக் ஆயுக்தாவில் பொய் புகார் :
- லோக்- ஆயுக்தா அமைப்பில் பொய் புகார் அளித்தால், ஒரு ஆண்டு சிறை தண்டனையுடன், ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் ஒரு புகாரோ, குற்றமோ, அது நடந்ததாக கருதப்படும் தேதியில் இருந்து, நான்கு ஆண்டுகளுக்குள் பெறப்பட்டிருக்க வேண்டும்.
- அவ்வாறு இல்லாவிட்டால், அந்தப் புகார் குறித்து, விசாரணை செய்யக் கூடாது.
- இவ்வாறு லோக் ஆயுக்தா சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- லோக் ஆயுக்தா தலைவர், உறுப்பினர்கள் நியமனம் செய்ய பரிந்துரை:
- முதல்வர்,
- சபாநாயகர்,
- சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரை கொண்ட தேர்வுக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
- லோக் ஆயுக்தாவை சட்ட சபையில் சட்டமாக இயற்றிய முதல் மாநிலம்? ஒடிசா
- லோக்பால் தேடுதல் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்? ரஞ்சன் பிரகாஸ் தேசாய்
- மக்களால் இயற்றப்பட்ட ஜன் லோக்பால் அல்லது லோக் ஆயுக்தா சட்ட முன்வரைவினை சட்டமாக்காத நடுவண் அரசிலோ மாநில அரசிலோ பதவியில் உள்ள எந்தக் கட்சிக்கும் தான் வாக்களிக்க மாட்டேன் என்று உறுதி கூறுகிறேன்-இந்திய வாக்களிப்பு உறுதிமொழி
- முதல் நிர்வாக சீர்திருத்த கமிஷன்- மொராஜி தேசாய் 1966
- இரண்டாம் நிர்வாக சீர்திருத்த கமிஷன்- வீரப்ப மவ்லி 2005
No comments:
Post a Comment