வெல்லெஸ்லி பிரபு (1798-1805) .
- தம்மை வங்கப்புலி என அழைத்துக் கொண்ட தலைமை ஆளுநர் - வெல்லெஸ்லி பிரபு.
- வெல்லெஸ்லி பிரபு துணைப்படை திட்டத்தை எப்போது கொண்டு வந்தார் - 1798.
- துணைப்படை திட்டத்தை ஏற்றுக்கொண்ட முதல் இந்திய மன்னர் - ஹைதராபாத் நிஜாம்.
- வெல்லெஸ்லி பிரபு யாரை கட்டாயப்படுத்தி துணைப்படை திட்டத்தில் இணைத்துக் கொண்டார் - அயோத்தி நவாப்.
- யார் வெல்லெஸ்லியின் துணைப்படைத் திட்டத்தை ஏற்க மறுத்தார் - திப்பு சுல்தான் மைசூர் .
- 1799 மே 4 எந்த போரில் திப்பு சுல்தான் கொல்லப்பட்டார் - 4 ஆவது ஆங்கில - மைசூர்ப்போர் (1799).
- 4 ஆவது மைசூர் போருக்கு பின் மைசூர் அரசு யாரிடம் திரும்ப அளிக்கப்பட்டது - பழைய இந்து வம்ச மன்னர் குடும்பத்தில் பிறந்த கிருஷ்ணா.
- ஹைதராபாத் அரசுடன் வெல்லெஸ்லி பிரபு துணைப்படை திட்டத்தை நிறுத்தி வைக்கப்பட்டு 1800ம் ஆண்டு செய்த உடன்படிக்கைப்படி நிசாம் கொடுத்த நிலப்பகுதி பெயர் என்ன - கொடை மாவட்டம்.
- 1799ல் வெல்லெஸ்லி பிரபு எந்த தஞ்சை அரசுடன் செய்து கொண்ட உடன்படிக்கை செய்து கொண்டார் - சரபோஜி.
- துணைப்படைத் திட்டத்திற்கு உட்படாத ஒரே பகுதி - மராட்டி .
- இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு என்பதற்குப் பதில் பிரிட்டிஷ் இந்தியப் பேரரசு ஒன்றை உருவாக்க வேண்டும் என்றவர் - வெல்லெஸ்லி பிரபு.
- ஆங்கில கிழக்கிந்திய நிறுவனத்தை இந்தியாவில் வலிமைமிகுந்த ஓர் அரசியல் சக்தியாக மாற்றியமைத்தவர் - வெல்லெஸ்லி பிரபு.
- வாணிப கழகமாக இருந்த கிழக்கிந்திய வணிகக் குழுவை ஒரு பேரரசு சக்தியாக மாற்றியவர் - வெல்லெஸ்லி பிரபு.
- யார் ஆட்சியின் போது வேலூர் சிப்பாய் கலகம் (1806) நடைபெற்றது - சர் ஜார்ஜ் பார்லோ (1805-1807).
- வேலூர் புரட்சியின் போது சென்னை ஆளுநராக இருந்தவர் - வில்லியம் பெண்டிங் பிரபு.
மார்குவிஸ் ஹேஸ்டிங்ஸ். (1813 - 1823).
- யாருடைய ஆட்சிக்காலத்தில் 1813 ஆம் ஆண்டு பட்டய சட்டம் நிறைவேற்றப்பட்டது - மார்குவிஸ் ஹேஸ்டிங்ஸ்.
- கூர்கர்களுடன் போர் (கி.பி.1814 - 16) யார் காலத்தில் நடைப்பெற்றது- ஹேஸ்டிங்ஸ் பிரபு .
- கூர்கர்களுடன் போர் எந்த உடன்படிக்கை மூலம் முடிவுக்கு வந்தது - சகௌலி உடன்படிக்கை (1816) .
- பிண்டாரிகளுடன் போர் (கி.பி 1816 - 1818) யார் காலத்தில் நடைபெற்றது - ஹேஸ்டிங்ஸ்பிரபு.
- ஆங்கில கல்வி வளர்ச்சிக்காக எந்தாண்டு ஹேஸ்டிங்ஸ் பிரபுவின் கல்கத்தாவில் கல்லூரியை நிறுவினார் - 1817 .
- வட்டார மொழிப்பத்திரிக்கை தடை சட்டத்தை நீக்கியவர் யார் - ஹேஸ்டிங்ஸ் பிரபு.
- சமாச்சார் பத்திரிக்கை வெளிவர காரணமாக இருந்தவர் யார் - ஹேஸ்டிங்ஸ் பிரபு.
- யாருடைய ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாணத்தில் ரயத்துவாரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது - ஹேஸ்டிங்ஸ் பிரபு.
- ஹேஸ்டிங்ஸ் பிரபு எந்த வருடம் வங்காளக் குத்தகைச் சட்டத்தை நிறைவேற்றி விவசாயிகளின் நலனைப் பாதுகாத்தார் - 1822.
- இந்தியர்களின் கல்வி வளர்ச்சிக்காக ஆண்டுதோறும் ரூபாய் ஒரு இலட்சம் ஒதுக்கப்பட்டது எந்த பட்டயச் சட்டம் - 1813 (ஆங்கில வழி கல்வி).
வில்லியம் பெண்டிங் பிரபு (1828-1835).
- வில்லியம் பெண்டிங் பிரபு எப்போது சென்னை ஆளுநராக நியமிக்கப்பட்டார் - 1828.
- இந்திய மக்களின் நலனைப் பேணுவதே, இந்தியாவில் ஆளும் பிரிட்டிஷாரின் தலையாய கடமை, என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்ட முதல் தலைமை ஆளுநர்யார் - வில்லியம் பெண்டிங் பிரபு.
- வில்லியம் பெண்டிங் பிரபு இரஞ்சித் சிங்கை, எங்கு எப்போது சந்தித்தார் - 1831 அக்டோபர் 25, சட்லஜ் நதிக் கரையிலிருந்த ரூபார்.
- முதல் பர்மியர் போர் (1824) யார் காலத்தின் உடன்படிக்கைப்படி மூலம் முடிவுக்கு வந்தது - யாண்டபு (1826) .
- தலையிடாக் கொள்கையை பின்பற்றிய இந்தியத் தலைமை ஆளுநர் - வில்லியம் பெண்டிங் பிரபு.
- வில்லியம் பெண்டிங் பிரபு சாதர் நிஜாமத் அதாலத் என்ற மேல் முறையீட்டு நீதிமன்றத்தை எங்கு நிறுவினார் - அலகாபாத்.
- 1833ஆம் பட்டய சட்டப்படி நியமனம் செய்யப்பட்ட முதல் சட்ட உறுப்பினர் - மெக்காலே பிரபு .
- டிசம்பர் 4 1829ஆம் ஆண்டு சதி ஒழிப்பு சட்டத்தை வில்லியம் பெண்டிங் பிரபு யாருடைய துணையுடன் இயற்றினார் - ராஜா ராம் மோகன்ராய் .
- பெண்சிசுக்கொலை காணப்பட்ட இடங்கள் - கத்தியவா, ராஜஸ்தான்.
- பெண் சிசுக் கொலையை ஒழித்தவர் - வில்லியம் பெண்டிங் பிரபு.
- நரபலி எங்கு காணப்பட்டது அதை தடை செய்தவர் - ஒரிசா மலைவாழ் மக்கள், வில்லியம் பெண்டிங் பிரபு.
- வில்லியம் பெண்டிங் பிரபு தக்கர்களின் நடவடிக்கைகளைத் தடுக்க யார் தலைமையில் தனியாக ஒரு துறை தோற்றுவித்தார் - மேஜர் ஸ்லிமென் (1830).
- யாருடைய காலத்தில் கல்கத்தாவில் மருத்துவ கல்லூரியும், பம்பாயில் எல்பின்ஸ்டன் கல்லூரியும், நிறுவப்பட்டது - வில்லியம் பெண்டிங் பிரபு.
- எந்த பட்டயச் சட்டம் மூலம் யார் வங்காள தலைமை ஆளுநர் இந்தியாவின் தலைமை ஆளுநராக பொறுப்பேற்றார் - 1833, வில்லியம் பெண்டிங் பிரபு.
- இந்தியாவின் முதல் தலைமை ஆளுநர் யார் - வில்லியம் பெண்டிங் பிரபு.
- சதி முறை ஒழிப்பு சட்டம் எந்தாண்டு சென்னை, பம்பாய் மாகாணங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது - 1930.
- எந்த ஆண்டு அரசின் தீர்மானம் ஆங்கிலத்தை இந்தியாவின் ஆட்சி மொழியாகவும் இலக்கிய மொழியாகவும் வில்லியம் பெண்டிங் பிரபு அறிவித்தார் - 1835.
No comments:
Post a Comment