TNPSC தேர்வுக்கு தயாராகும் அன்பர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். இந்த யூ ட்யூப் தளத்தில் வரும் ஆடியோவை ப்ளே செய்து கொண்டே கீழே உள்ள பாடத்தை SCROLL செய்து உற்று நோக்குங்கள். மீண்டும் மீண்டும் முயற்சி செய்து மனப்பாடம் செய்யுங்கள்... வாழ்த்துக்கள்...அன்புடன் - K.K.D.
சமூக மற்றும் சமய சீர்திருத்தம்.
- 1815 ஆம் ஆண்டு ஆத்மிய சபையை நிறுவியவர் - ராஜா ராம் மோகன்ராய்.
- 1829 வில்லியம் பெண்டிங் பிரபு சதி முறையை ஒழிக்க முன் வந்து உறுதுணையாக இருந்தவர் யார் - ராஜாராம் மோகன்ராய்.
- ராஜாராம் மோகன்ராய் எங்கு எப்போது பிறந்தார் - 1772, வங்காளத்தின் ஹூக்ளி.
- ஏசு கிறிஸ்துவின் கட்டளைகள் அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் வழி என்ற நூலை எழுதியவர் - ராஜா ராம் மோகன்ராய்.
- யாருக்கு ஓய்வு ஊதியத்தை உயர்த்த ராஜா ராம் மோகன்ராய் இங்கிலாந்து சென்றார் - 2 ஆம் அக்பர் (முகலாய அரசர்) .
- ராம் மோகன்ராய் அவர்களுக்கு ராஜா என்ற பட்டத்தை அளித்தவர் - 2 ஆம் அக்பர்.
- நவீன இந்தியாவின் விடிவெள்ளி - ராஜா ராம் மோகன்ராய்.
- பிரம்ம சமாஜத்தை யார் எப்போது தோற்றுவித்தார் - ராஜா ராம் மோகன்ராய் 1828.
- ஒரே கடவுள் என்ற கொள்கையின் அடிப்படையில் பொது சமயத்தில் நம்பிக்கை கொண்டவர் - ராஜாராம் மோகன்ராய்.
- ராஜா ராம் மோகன்ராய் யாருடன் இணைந்து 1817 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் இந்து கல்லூரியை நிறுவினார் - சமயப்பரப்பாளர் டேவிட் ஹேர்.
- வங்காள மொழியில் வெளிவந்த முதல் வார இதழ் எது அதை யார் தொடங்கினார் - சம்வாத்கௌமுகி, ராஜா ராம் மோகன்ராய்.
- ராஜா ராம் மோகன் ராய் ஆசிரியராக இருந்த பாரசீக வார இதழ் - மீரத், 2 ஆம் அக்பர்.
- ராஜா ராம் மோகன் ராய் எப்போது எங்கு இறந்தார் - 1833, பிரிஸ்டல் (இங்கிலாந்து.
- யாருடைய முயற்சியால் 1872ம் ஆண்டு பலதார மணமுறை மற்றும் குழந்தைகள் திருமணம் போன்றவை தடை சட்டம் இயற்றப்பட்டது-கேசவ் சந்திர சென்.
இளம் வங்காள இயக்கம் .
- இளம் வங்காள இயக்கத்தை தோற்றுவித்தவர் - ஹென்றி விவியன் டெரோசியோ.
- ஹென்றி விவியன் டெரோசியோ எங்கு எப்போது பிறந்தார் - 1809 கல்கத்தா.
- ஹென்றி விவியன் காலரா நோயால் எப்போது இறந்தார் - 1833.
ஆரிய சமாஜம் .
- ஆரிய சமாஜம் எப்போது தோற்றுவிக்கப்பட்டது - 1875.
- ஆரிய சமாஜம் எங்கு தோற்றுவிக்கப்பட்டது - மும்பை.
- ஆரிய சமாஜம் யாரால் தோற்றுவிக்கப்பட்டது - சுவாமி தயானந்த சரஸ்வதி.
- சுவாமி தயானந்த சரஸ்வதி எங்கு பிறந்தார் - குஜராத் மாநிலத்தில் கத்தியவார் மாகாணத்தில் மூர்வி என்னும் இடத்தில்.
- சுவாமி தயானந்த சரஸ்வதி இயற்பெயர் - மூல் சங்கர்.
- சுவாமி தயானந்த சரஸ்வதி யாருடைய சீடர் - சுவாமி விராஜனந்தர்
- வேதங்களை நோக்கிச் செல் என்பது யாருடைய முழக்கம் - சுவாமி தயானந்த சரஸ்வதி.
- சுத்தி இயக்கத்தை தோற்றுவித்தவர் - சுவாமி தயானந்த சரஸ்வதி.
- சுவாமி தயானந்த சரஸ்வதி எதற்காக சுத்தி இயக்கத்தை தோற்றுவித்தார் - மதம் மாறிய இந்துக்களை மீண்டும் இந்து சமயத்தில் சேர்க்க.
- சத்யார்த்த பிரகாஷ் என்ற நூலையை எழுதியவர் - சுவாமி தயானந்த சரஸ்வதி.
- தயானந்த சரஸ்வதி எங்கு எப்போது முதலாவது தயானந்த ஆங்கிலோ வேத பள்ளியை நிறுவினார் - 1866, லாகூர்.
- தயானந்த சரஸ்வதியின் முக்கிய சீடர்கள் - லாலாலஜபதிராய், லாலா ஹன்ஸ்ராஜ், பண்டித குருதத்.
- ஆரிய சமாஜத்தின் தத்துவங்களிலும் கோட்பாடுகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர்கள் -பாலகங்காதர திலகர், கோபாலகிருஷ்ண கோகலே.
- சுதேசி என்ற வார்த்தையை முதன்முறையாக முழங்கியவர் - சுவாமி தயானந்த சரஸ்வதி.
- இந்தியா இந்தியருக்கே என்று முழங்கியவர் - சுவாமி தயானந்த சரஸ்வதி.
- இந்து சமயத்தின் மார்டின் லூதர் என அழைக்கப்படுபவர் - சுவாமி தயானந்த சரஸ்வதி.
பிரார்த்தனை சமாஜம்.
- பிரார்த்தனை சமாஜம் எங்கு யார் தோற்றுவித்தார் - 1867, பம்பாய்.
- தக்காண கல்விக் கழகத்தை போற்றி வளர்த்தவர் - நீதிபதி ரானடே.
இராமகிருஷ்ண இயக்கம் .
- சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் - நரேந்திரநாத் தத்தா .
- சுவாமி விவேகானந்தர் யாருடைய சீடர் - இராமகிருஷ்ண பரமஹம்சர்.
- சுவாமி விவேகானந்தர் எங்கு, எப்போது நடைபெற்ற உலக சமய மாநாட்டில் கலந்துக்கொண்டார் - 1893, செப்டம்பர், சிகாகோ .
- சுவாமி விவேகானந்தர் எந்த மாநாட்டில் கலந்துக் கொண்டு என் சகோதர சகோதரிகளே என தனது உரையின் மூலம் இந்திய பண்பாட்டின் சிறப்பையும் இந்து சமயத்தின் மேன்மையையும் உலகறிய செய்தவர் - சிகாகோ உலக சமய மாநாடு .
- தேசாபிமான சன்னியாசி என யாரை அழைக்கின்றோம் - சுவாமி விவேகானந்தர்.
- மனிதனுக்கு செய்யும் சேவையே கடவுளுக்கு ஆற்றும் சேவை என்று யார் திடமாக நம்பியவர் - சுவாமி விவேகானந்தர்.
- ராமகிருஷ்ண பரமஹம்சர் எங்கு எப்போது பிறந்தார் - வங்காளத்தில், 1836 .
- ராமன், சிவன், காளி கோவிலின் பூசாரியாக யார் இருந்தார் - இராமகிருஷ்ண பரமஹம்சர்.
- தட்சிணேசுவரம் காளி கோவிலில் அர்ச்சகராக இருந்தவர் யார் - இராமகிருஷ்ண பரமஹம்சர்.
- ராம கிருஷ்ண இயக்கம் எப்போது யாரால் துவங்கப்பட்டது - 1897 மே 1, சுவாமி விவேகானந்தர்.
- ராமகிருஷ்ண இயக்கம் எங்கு அமைக்கப்பட்டது - கொல்கத்தா (பேலூர்) .
- ராம கிருஷ்ண பரமஹம்சர் எப்போது இறந்தார் - 1886.
- சுவாமி விவேகானந்தர் எவற்றை நவீன இந்தியாவின் இரு கொள்கைகளாக இருக்க வேண்டும் என கூறியாவர் - துறத்தல் மற்றும் சேவை.
- ஜீவாவே (உயிர்) சிவா என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மக்கள் பணியே கடவுள் பணி என்று கூறி தொண்டாற்றியவர் - சுவாமி விவேகானந்தர்.
- யுனெஸ்கோ 1897 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ராமகிருஷ்ண இயக்கம் போன்று செயல்படுகிறது என்றவர் யுனெஸ்கோ தலைமை இயக்குநர் பெடரிக்கோ மேயர்.
No comments:
Post a Comment