- 1857 ஆம் ஆண்டு கலகத்தை இராணுவ புரட்சி என்று கூறியவர் - சர் ஜான் லாரன்ஸ்.
- 1857 ஆம் ஆண்டு கலகத்தை முதல் இந்திய விடுதலைப் போர் என்று கூறியவர் - வீர சவார்க்கர்
- 1857 ஆம் ஆண்டு கலகம் இந்திய விடுதலை இயக்கத்தின் ஒரு பகுதி - S.N.சென்.
- 1857 ஆம் ஆண்டுக்கு முன்பு தோன்றிய சிவில் அல்லது ராணுவ கிளர்ச்சிகள் அனைத்தும் ஆங்காங்கே நடைபெற்றவை என்றும் பின்னர் அவை 1857 ஆம் ஆண்டு பெரும் கலகமாக உச்சவடிவம் பெற்றது என்று A.C மஜூம்தார் வர்ணித்தார்.
- ஆங்கில வரலாற்று அறிஞர்கள் 1857 ஆம் ஆண்டு பெருங்கலத்தை சிப்பாய் கலகம் (படைவீரர் கிளர்ச்சி) என்று அழைத்தனர்.
- இந்திய வரலாற்று அறிஞர்கள் 1857 பெருங்கலத்தை எவ்வாறு அழைத்தனர் - முதல் இந்திய சுதந்திரப்போர்.
- 1857 ஆம் ஆண்டு கலகத்தின் போது இந்தியாவின் தலைமை ஆளுநர் - கானிங் பிரபு.
- 1856 ஆம் ஆண்டு பொதுப்பணி படைச் சட்டம் யார் கொண்டு வந்தார் - கானிங் பிரபு.
- 1857 பெருங்கலத்தின் முன்னோடியாக இருந்தது - வேலூர் கலகம் 1806.
- 1857 கலகத்திற்கு உடனடி காரணம் - என்பீல்டு ரக துப்பாக்கிகளில் பயன்படுத்த கொழுப்பு தடவிய தோட்டாக்கள் அறிமுகப்படுத்துதல்.
- என்பீல்டு ரக துப்பாக்கியில் என்ன கொழுப்பு இருந்தது - பசுவின் கொழுப்பு மற்றும் பன்றியின் கொழுப்பு.
- பாரக்பூரில் எப்போது யார் கலகத்தை வெடித்தவர் - 1857 மார்ச் 29 - மங்கள் பாண்டே.
- பாரக்பூரில் கொழுப்பு தடவிய தோட்டாவை பயன்படுத்த மறுத்தவர் யார் - 34 வது காலாட்படை பிரிவை சார்ந்த மங்கள் பாண்டே.
- 1857 பெருங்கலகம் மீரட்டில் எப்போது வெடித்தது - 1857 மே 10.
- படைவீரர்கள் மீரட்டிலிருந்து எங்கு சென்றனர் - டெல்லி.
- பெருங்கலக கிளர்ச்சியாளர்கள் டெல்லியை எப்போது கைப்பற்றினர் - 1857 மே 12.
- சிப்பாய்கள் 1857 ஆம் பெருங்கலகத்திற்கு யாரை தலைவராக்கினார்கள் - கடைசி முகலாய மன்னன் 2ம் பகதூர்ஷா.
- 1857 ஆம் ஆண்டு டெல்லியில் யார் தலைமை தாங்கி நடத்தினார் - பகத்கான்.
- முகலாய மன்னன் 2ம் பகதூர்ஷா 1857 ஆம் ஆண்டு கலகத்தின் போது எங்கு நாடு கடத்தப்பட்டார் - ரங்கூன் .
- முகலாய மன்னன் 2ம் பகதூர்ஷா எங்கு எப்போது இறந்தார் - ரங்கூன் 1862.
- ஆங்கிலேயர் யார் தலைமையில் டெல்லியை மீண்டும் கைப்பற்றினார் - சர் ஜான் நீக்கல் சன்.
- கான்பூரில் 1857 ஆம் ஆண்டு கலகம் யார் தலைமையில் நடைபெற்றது -நானாசாகிப்.
- கான்பூரில் நானாசாகிப்புக்கு பக்கபலமாக இருந்தவர்கள் - தாந்தியா தோப், அசிமுல்லா.
- 1857 ஆம் ஆண்டு கலகத்தை கான்பூரில் ஆங்கிலேயர் யார் தலைமையில் மீண்டும் மீட்டனர் - கர்னல் ஹாவ்லாக் மற்றும் ஓநெயில்.
- 1857 ஆம் ஆண்டு பெருங்கலம் லக்னோவில் யார் தலைமையில் நடைப்பெற்றது - அயோத்தி பேகம் ஹஷ்ரத்மகால்.
- 1857 ஆம் ஆண்டு கலகத்தில் லக்னோவை ஆங்கிலேயர் யார் தலைமையில் மீட்டனர் - சர் காலின் காம்பெல்.
- 1857 ஆம் ஆண்டு கலகத்திற்கு இராணி லட்சுமிபாய் எங்கு தலைமை தாங்கினார் - மத்திய இந்தியா (ஜான்சி).
- இராணி லட்சுமிபாய் யாருடன் சேர்ந்து பெரும் கலகத்தில் ஈடுபட்டார் - தாந்தியா தோப்
- இராணி லட்சுமிபாய் ஏன் கலகத்தில் ஈடுபட்டார் - டல்ஹௌவுசியின் வாரிசு இழப்பு கொள்கை காரணமாக.
- இராணி லட்சுமிபாய் கலகத்தில் எப்போது வீர மணமடைந்தார் - 1858 ஆம் ஆண்டு ஜூன் 17.
- 1857 ஆம் கலகத்தின் போது தாந்தியா தோப் ஏன் தூக்கிலிடப்பட்டார் - கிளர்ச்சி மற்றும் கான்பூர் படுகொலை.
- 1857 ஆம் கலகத்தை ஜான்சியில் ஆங்கிலேயர் யார் தலைமையில் அடக்கினார்கள் -1858 சர் ஹக்ரோஸ்.
- 1857 ஆம் கலகத்திற்கு பீகாரில் தலைமை தாங்கியவர் யார் - கன்வர்சிங்.
- 1857 ஆம் கலகத்தின் முக்கிய சிறப்பம்சம் - இந்து, முஸ்லீம் ஒற்றுமை.
- எதன் விளைவாக கம்பெனி ஆட்சி முடிவுக்கு வந்தது - 1857 ஆம் பெருங்கலகம்.
- பிரிட்டிஷாரின் நேரடி ஆட்சி எப்போது நடைமுறைக்கு வந்தது - 1858 ஆம் ஆண்டு நவம்பர் 1.
- விக்டோரியா மகாராணி பேரறிக்கை எங்கு எப்போது வெளியிடப்பட்டது - 1858 ஆம் ஆண்டு நவம்பர் 1 (அலகாபாத்).
- விக்டோரியா மகாராணி பேரறிக்கையை யார் வாசித்தார் - கானிங் பிரபு.
- இந்தியாவின் கடைசி தலைமை ஆளுநர் - கானிங் பிரபு.
- முதல் அரசுப் பிரதி (வைசிராய்) யார் - கானிங் பிரபு.
- இந்திய மக்களின் மேக்னா கார்ட்டா (உரிமை சாசனம்) என்று அழைக்கப்படுவது - விக்டோரியா மகாராணி அறிக்கை.
- துணைப்படைத் திட்டத்தை கொண்டு வந்தவர் (1798) - வெல்லெஸ்லி பிரபு.
- நாடிழக்கும் கொள்கையை கொண்டு வந்தவர் (1848) - டல்ஹௌசி .
- நானா சாகிப் என்பவர் யார் - பீஷ்வா 2ம் பாஜிரா வளர்ப்பு மகன் 1857ம் கலகத்திற்கு கான்பூரில் தலைமை தாங்கியவர்.
- நானா சாகிப் படை தளபதி யார் - தாந்தியா தோப்.
- மங்கள் பாண்டே எப்போது தூக்கிலிடப்பட்டார் - ஏப்ரல் 8, 1857.
- டல்ஹௌசி வாரிசு இழப்பு கொள்கை மூலம் இணைந்த நாடுகள் - சதாரா, நாக்பூர், ஜான்சி.
- முகலாய பேரரசின் கடைசி பேரரசர் - 2 ஆம் பகதூர்ஷா.
- இராணுவத்தில் இந்தியப் படை வீரர்களுக்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த பதவி - சுபேதார்.
- மங்கள் பான்டே தூக்கிலிடப்பட்ட பின் பாரக்பூரிலிருந்த காலாட்படை எங்கு மாற்றப்பட்டது - மீரட்.
- 1857 ஆம் ஆண்டு கலகம் முதன் முறையாக எங்கு வெடித்தது - வங்காளம் - பாரக்பூர்.
- 1857 ஆம் ஆண்டு கலகத்தின் போது நானாசாகிப் எங்கு தப்பி ஓடினார் - நேபாளம்.
- பீகாரில் கன்வர்சிங்கிற்கு பின் யார் தலைமை தாங்கினார் - அமர்சிங் (கன்வர் சிங் சகோதரர்).
- 1858 ஆம் ஆண்டு கொண்டு வந்த சட்டத்தின் படி எந்த குழு கலைக்கப்பட்டன - கட்டுப்பாட்டுக்குழு, இயக்குநர் குழு.
Thursday, June 10, 2021
GS-22-INDIAN NATIONAL MOVEMENT | இந்திய தேசிய இயக்கம் | 1857 - பெருங்கலகம் - ஒரு வரி வினா விடை
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
-
எட்டுத்தொகை நூல்கள் : எட்டுத்தொகை நூல்களை “எண்பெருந்தொகை” எனவும் வழங்குவர். எட்டுத்தொகை நூல்கள் மொத்தம் எட்டு. இதன் நூல் பெயர்களை பழம...
-
UNIT-I : GENERAL SCIENCE : (i) Scientific Knowledge and Scientific temper Power of Reasoning Rote Learning Vs Conceptual Learning Science...
-
நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார் - பாண்டியன் மாறன் வழுதி. நற்றிணைப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை - 176. நற்றிணையைத் தொ...
-
டெல்லி சுல்தான் டெல்லி சுல்தானின் காலம் - (கி.பி. 1206 - கி.பி. 1526) டெல்லி சுல்தான் மரபுகளின் கால வரிசை 1. அடிமை வம்சம் (மாம்லுக்)...
-
S.NO QUESTIONS ANSWERS 1 ஹெருஸ்டிக் முறை _______ கற்றலை வலியுறுத்துகிறது. செய்து 2 ஹெப்(Hubb)பினுடைய கொள்கை எதனுடன் தொடர்புடையது - க...
No comments:
Post a Comment