- இந்தியாவில் வரி விதிப்பின் வேர்கள் மனு ஸ்மிருதி மற்றும் அர்த்தசாஸ்திர காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டது.
- தற்கால இந்திய வரி முறையானது பண்டைய கால வரி முறையை அடிப்படையாகக் கொண்டது.
- Taxation in India has its roots from the period of Manu Smriti and Arthasastra.
- The present Indian tax system is based on this ancient tax system.
- இந்தியாவில் முதன்முதலாக வருமானவரி 1860ஆம் ஆண்டு சர் ஜேம்ஸ் வில்சன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1857ஆம் ஆண்டு கலகத்தின் மூலம் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட அரசாங்கத்தின் மூலம் போடப்பட்ட ஆணையே வரி விதிப்பாகும்.
- In India, Income Tax was introduced for the first time in 1860 by Sir James Wilson
- In order to meet the losses sustained by the Government on account of the Mutiny of 1857.
- நேர்முக வரி என்பது மத்திய அரசுக்கு அல்லது மாநில அரசுக்கு அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேரடியாகச் செலுத்தும் வரியாகும். இதில் வருமான வரி, சொத்துவரி ஆகியன அடங்கும்.
- வருமான வரி தனி நபர்கள் மற்றும் தொழில் செய்பவர்களால் ஈட்டப்பட்ட மற்றும் ஈட்டப்படாத வருமானங்களின் அடிப்படையில் விதிக்கப்படுகிறது.
- உள்ளூர் வரி என்பது உள்ளாட்சி அமைப்பு அல்லது அரசின் மூலம் ஒரு நகரம் அல்லது ஒரு நாட்டின் எல்லைக்குள் விதிக்கப்படுகின்ற வரியாகும்.
- ஒரு நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றம் அடையச் செய்வதற்கு அரசாங்கத்தால் வரி விதிக்கப்படுகிறது.
- அரசின் வருமானம் நேர்முக மற்றும் மறைமுக வரிகளைச் சார்ந்து உள்ளது. நேர்முக வரியானது தனி நபரின் வருமானத்திலும், மறைமுக வரியானது பண்டங்கள் மற்றும் பணிகள் மீதும் விதிக்கப்படுகின்றன.
- இதன் மூலம் அரசாங்கம் அதன் "நிதி ஆதாரங்களை திரட்டுகிறது.
- Tax is levied by government for the development of the state’s economy.
- The revenue of the government depends upon direct and indirect taxes.
- Direct taxes are levied on income of the persons and the indirect taxes are levied on goods and services by which the government mobilises its “financial resources”.
4.1 வளர்ச்சிக் கொள்கைகளில் அரசாங்கத்தின் பங்கு
1. பாதுகாப்பு (அ) இராணுவம்
- எதிரிகளிடமிருந்து மக்களைப் பாதுகாப்பது இராணுவத்தின் அத்தியாவசியப் பணியாகக் கருதப்படுகிறது.
- பாதுகாப்புப் படைகளை உருவாக்குவதற்கும், பராமரிப்பதற்கும் மத்திய அரசாங்கமே பொறுப்பாகும்.
Defence:
- This is an essential security function to protect our nation from our enemies.
- The Union government is responsible for creating and maintaining defence forces.
2 அயல்நாட்டுக் கொள்கை
- இன்றைய உலகில் நாம் அனைத்து உலக நாடுகளுடனும் நட்பான உறவைப் பராமரித்தல் அவசியமானதாகும்.
- ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதன் மூலமும், மூலதனம் மற்றும் உழைப்பைப் பரிமாற்றம் செய்வதன் மூலமும் நாம் நல்ல பொருளாதார உறவினை பராமரிக்க முடியும்.
- இந்த சேவையை மத்திய அரசாங்கம் வழங்குகிறது.
Foreign policy:
- In today’s world, we need to maintain friendly relationships with all the other countries in the world.
- We should also maintain cordial economic relationships through exports and imports, sending and receiving investments and labour.
- This service is also provided by the Union government.
3. அவ்வப்போது தேர்தல்களை நடத்துதல்
- இந்தியா ஒரு ஜனநாயக நாடு. நாம் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்குப் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கின்றோம்.
- இதேபோல், மாநில அரசுகள் உள்ளாட்சி மன்றங்களுக்குத் தேர்தலை மாநிலத்திற்குள் நடத்துகிறது.
Conduct of periodic elections:
- India is a democratic country. We elect our representatives to Parliament and state assemblies.
- Similarly the state governments conduct elections to local bodies within the state.
4. சட்டம் மற்றும் ஒழுங்கு
- நடுவண் மற்றும் மாநில அரசுகள் நமது உரிமைகள், சொத்துக்களைப் பாதுகாப்பதற்கும், நமது பொருளாதாரம் மற்றும் சமூகத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் ஏராளமான சட்டங்களை இயற்றுகின்றன.
- பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக நீதிமன்றங்களை அமைத்துள்ளன.
- மேலும், அந்தந்த மாநிலங்களில் காவல் துறையை நிர்வகிக்கும் பொறுப்பை மாநில அரசுகள் ஏற்றுக் கொள்கின்றன.
Law and order:
- Both the Union and state governments enact numerous laws to protect our rights, properties and to regulate our economy and society.
- To settle disputes, the Union government has a vibrant judicial system.
- State governments take the responsibility for administering the police force in respective states.
5. பொது நிர்வாகம் மற்றும் பொதுப்பண்டங்களை வழங்குதல்
- அரசாங்கம் பொதுவாக பல்வேறு துறைகள் மூலம் பொருளாதாரத்தையும் சமூகத்தையும் நிர்வகிக்கிறது.
- வருவாய் துறை, பள்ளிகள், மருத்துவமனைகள், கிராம வளர்ச்சிமற்றும் நகர்ப்புற வளர்ச்சி போன்றவைகள் எடுத்துக்காட்டுகளாகும்
- உள்ளூர் அரசாங்கங்கள், உள்ளூர் சாலைகள், வடிகால், குடிநீர், குப்பை சேகரிப்பு மற்றும் அகற்றல் போன்ற பொதுப்பணிகளை வழங்குகின்றன.
Public administration and provision of public goods:
- The government generally administers the economy and society through various departments,
- for example, revenue department, schools, hospitals, rural development and urban development.
- The local governments provide public goods like local roads, drainage, drinking water and waste collection and disposal.
6. வருமான மறுபகிர்வு மற்றும் வறுமை ஒழிப்பு
- முன்னதாக குறிப்பிடப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க அரசாங்கங்கள் பல்வேறான வரிகளை வசூலிக்கின்றன.
- அதிக வருமானம் உடையவர்கள் ஏழைகளை விட அரசாங்கத்திற்கு அதிகவரி செலுத்தக்கூடிய வகையில் வரி வசூலிக்கப்படுகிறது.
- சில அடிப்படைத் தேவைகளான உணவு, தங்குமிடம், உடை, கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் மாத வருமானம் போன்றவற்றினை ஏழைகளுக்கு வழங்குவதற்காக அரசாங்கம் பணத்தைச் செலவிடுகின்றது.
- மேலும், வறுமையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளையும் செயல்படுத்துகிறது.
Redistribution of income and poverty alleviation:
- Governments collect various taxes to finance the various activities mentioned earlier.
- The taxes are collected in a way that the high-income people can bring in more tax revenue to the government than the poor.
- The governments also spend money such that the poor are given some basic necessities of life like food, shelter, clothing education, health care and monthly income to the very poor persons.
- Thus collecting taxes and spending for the poor to reduce poverty.
7. பொருளாதாரத்தை ஒழுங்குபடுத்துதல்
- நடுவண் அரசு, பணத்தின் அளிப்பு, வட்டி வீதம், பணவீக்கம் மற்றும் அந்நிய செலாவணி ஆகியவற்றை இந்திய மைய வங்கி மூலம் கட்டுப்படுத்துகிறது.
- இதன் விகிதங்களில் அதிக ஏற்ற இறக்கங்களை களைவதே மையவங்கியின் முக்கிய நோக்கமாகும்.
- இந்திய பங்குமற்றும் பரிவர்த்தனைவாரியம் (SEBI) மற்றும் இந்திய போட்டி ஆணையம் (CCI) போன்ற பல்வேறு முகவர்கள் மூலமாகவும் மத்திய அரசு பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துகிறது.
- இந்தியாவில் உள்ள அனைத்து அரசாங்க நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மலிவுவிலையில் அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளை மக்களுக்கு வழங்குகின்றன.
Regulate the economy:
- The Union government, through the Reserve Bank of India, controls money supply and controls the interest rate, inflation and foreign exchange rate.
- The main objective is to remove too much of fluctuation in these rates.
- The Union Government also controls the economy through various other agencies such as Securities Exchange Board of India and Competition Commission of India.
- All the governments in India run public sector enterprises to provide important goods and services at affordable rates to the people.
4.2 வரி
- "வரி" என்ற சொல் "வரிவிதிப்பு" என்பதிலிருந்து உருவானது. இதன் பொருள் மதிப்பீடு என்பதாகும்.
- வரி விதிப்பு என்பது அரசாங்கம் தனது செலவினங்களுக்காகப் பொது மக்களிடமும், பெரு நிறுவனங்களிடமும் வரிகளை விதித்து வருவாயை உருவாக்கும் ஒரு வழிமுறையாகும்.
- அரசு இயந்திரங்களின் செயல்பாட்டிற்காக வரியின் மூலம் நிதி திரட்டுவது வரிவிதிப்பின் முக்கிய நோக்கமாகும்.
- வரிவிதிப்பு முறை "நல அரசு" என்ற கருத்தை மையமாகக் கொண்டு செயல்படுகிறது.
- வரிகள் என்பது எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி நேரடியாக அரசாங்கத்திற்கு செலுத்துகின்ற கட்டாய கட்டணமேயாகும்.
- பேராசிரியர் செலிக்மேன் கருத்துப்படி, "வரி என்பது ஒரு குடிமகன் அரசுக்கு கட்டாயமாக செலுத்தும் செலுத்துகையாகும். அரசிடமிருந்து எந்தவித நேரடி நன்மையும் எதிர்பார்க்காமல் கட்டாயமாகச் செலுத்த வேண்டியதே வரி" என வரையறை கூறுகிறார்.
- The origin of the word "tax" is from "taxation," which means an estimate.
- Taxation is a means by which governments finance their expenditure by imposing charges on citizens and corporate entities.
- The main purpose of taxation is to accumulate funds for the functioning of the government machinery.
- Tax has come into forefront on account of the new concept of “welfare state”.
- Taxes are compulsory payments to government without expectation of direct return (or) benefit to the tax payer.
- Prof. Seligman also defined a tax as “a compulsory contribution from a person to the government to defray the expenses incurred in the common interest of all, without reference to special benefits conferred.”
வரி அமைப்பு
- ஒவ்வொரு வகையானவரியும் சில நன்மைகள் மற்றும் தீமைகளைப் பெற்றுள்ளன. நாம் கொண்டுள்ள வரி அமைப்பு, பல்வேறு வகையான வரிகளின் தொகுப்பாகும். ஆடம் ஸ்மித் முதல் பல பொருளாதார வல்லுநர்கள் வரி விதிப்புக் கொள்கைகளைக் கொடுத்துள்ளனர். அவைகளில் பொதுவான வகைகளை இங்கு நினைவு கூறுவது முக்கியமானதாகும்.
1. சமத்துவ விதி
- வரி ஒரு கட்டாயக் கட்டணம் என்பதால், வரி முறையை வடிவமைப்பதில் சமத்துவம் என்பது முதன்மை என்பதை அனைத்து பொருளாதார வல்லுநர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். பணக்காரர்கள் ஏழைகளை விட அரசாங்கத்திற்கு அதிக வரி வருவாயை செலுத்தவேண்டும், ஏனென்றால் ஏழைகளை விட பணக்காரர்களுக்கு அதிக வரி செலுத்தும் திறன் உள்ளது.
2 உறுதி விதி
- ஒவ்வொரு வரி செலுத்துவோரும் ஒரு வருடத்தில் எவ்வளவு வரித்தொகையை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் என்பதைக் கணக்கிட ஒவ்வொரு அரசாங்கமும் வரிமுறையை முன் கூட்டியே அறிவிக்க வேண்டும்.
3. சிக்கன மற்றும் வசதி விதிவரி
- எளிமையானதாக இருந்தால், வரி வசூலிப்பதற்கான செலவு (வரி செலுத்துவோர் செலவு + வரி வசூலிப்போர் செலவு) மிகக் குறைவாக இருக்கும். மேலும், ஒரு நபருக்கு வரி செலுத்தப் போதுமான பணம் கிடைக்கும் நேரத்தில் வரி வசூலிக்கப்பட வேண்டும். இது வசதிக்கான வரி என்று அழைக்கப்படுகிறது. ஒரு வசதியான வரி, வரி வசூலிக்கும் செலவை குறைக்கிறது.
4. உற்பத்தித் திறன் மற்றும் நெகிழ்ச்சி வரி
- அரசாங்கம் போதுமான வரி வருவாயைப் பெறக்கூடிய வரிகளை தேர்வு செய்ய வேண்டும். நிறைய வரிகளுக்குப் பதிலாக அதிக வரி வருவாயைப் பெறக் கூடிய சில வரிகளைத் தேர்வு செய்ய வேண்டும். இது உற்பத்தித் திறன் வரியாகும். மக்கள் தங்கள் வருமானத்திலிருந்து வரி செலுத்துகிறார்கள். எனவே, மக்கள் வருமானம் அதிகரித்தால் தானாகவே அதிக வரி வருவாயை செலுத்தும் வகையில் வரி அமைப்பு வடிவமைக்கப்பட வேண்டும். இது நெகிழ்ச்சி வரி எனப்படுகிறது.
Tax system
- Every type of tax has some advantages and some disadvantages. So we have a tax system, that is, a collection of variety of taxes. From Adam Smith, many economists have given lists of canons of taxation. It is important to recall those common among them for discussion here.
1. Canon of equity
- Since tax is a compulsory payment, all economists agree that equity is the cardinal principle in designing the tax system. The rich should pay more tax revenue to government than the poor, because rich has more ability than the poor to pay the tax.
2. Canon of Certainty
- Government should announce in advance the tax system so that every tax payer will be able to calculate how much tax amount one may have to pay during a year to the government.
3. Canons of Economy and Convenience
- If the tax is simple, then the cost of collecting taxes (tax payer cost + tax collector cost) will be very low. Further, tax should be collected from a person at the time he gets enough money to pay the tax. This is called canon of convenience. A convenient tax reduces the cost of collecting tax.
4. Canons of Productivity and Elasticity
- Government should choose the taxes that can get enough tax revenue to it. It should choose a few taxes that can fetch more tax revenue, instead of lots of taxes. This is canon of productivity. Tax is paid by the people out their incomes. Therefore the tax system should be designed in such a way that the people automatically pay more tax revenue if their incomes grow. This is called canon of elasticity.
வரிகள் ஏன் விதிக்கப்படுகிறது?
- வரலாற்று காலத்திலிருந்தே நாடுகளும் அதற்கு இணையாக செயல்படும் அரசுகளும் வரிவிதிப்பின் மூலம் பெற்ற நிதியிலிருந்தே பல செயல்களை நிறைவேற்றியிருக்கின்றது.
- அவைகளில் சில பொருளாதார உள்கட்டமைப்புச் செலவுகள், (போக்குவரத்து, துப்புரவு, பொது பாதுகாப்பு, கல்வி, உடல்நலம்) இராணுவம், அறிவியல் ஆராய்ச்சி, கலாச்சாரம், கலைகள், பொதுப்பணிகள், பொதுக் காப்பீடுகள் மற்றும் அரசாங்க செயல்பாடுகள் போன்றவைகளாகும்.
- வரிகளை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் திறன் நிதித் திறன் என்று கூறப்படுகிறது.
- செலவானது, வரி வருவாயைவிட அதிகமாக இருக்கும்போது ஒரு அரசாங்கம் கடனை திரட்டுகிறது.
- வரிகளின் ஒரு பகுதி கடந்த காலப் பணிகளுக்கான கடன்களுக்குப் பயன்படுத்தப்படலாம்.
- அரசாங்கம் மக்களின் நலனிற்கும் பொது சேவைகளுக்கும் வரிகளைப் பயன்படுத்தலாம்.
- இந்த சேவைகளில் கல்வி முறைகள், முதியோருக்கான ஓய்வூதியம், வேலையின்மை சலுகைகள் மற்றும் பொது போக்குவரத்து ஆகியவை அடங்கும்.
- ஆற்றல், நீர் மற்றும் கழிவு மேலாண்மை ஆகியவை மக்களுக்கான பயன்பாடுகளாகும்.
Why Taxes?
- States and their functional equivalents throughout history have used money provided by taxation to carry out many functions.
- Some of these include expenditures on economic infrastructure (transportation, sanitation, public safety, education, healthcare systems, to name a few), military, scientific research, culture and the arts, public works and public insurance and the operation of government itself.
- A government's ability to raise taxes is called its fiscal capacity.When expenditures exceed tax revenue, a government accumulates debt.
- A portion of taxes may be used to service past debts. Governments also use taxes to fund welfare and public services.
- These services can include education systems, pensions for the elderly, unemployment benefits and public transportation.
- Energy, water and waste management systems are also common public utilities.
4.3 வரிகளின் வகைகள்
- நேர்முக வரிகள் நேர்முக வரி என்பது ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்தின் மீது நேரடியாக விதிக்கப்படுவதாகும். இவ்வரியை மற்றவர் மீது மாற்ற முடியாது.
- பேராசிரியர் ஜே.எஸ். மில்லின் கருத்துப்படி, நேர்முக வரி என்பது யார் மீது வரி விதிக்கப்பட்டதோ அவரே அவ்வரியை செலுத்துவதாகும். வரி செலுத்துபவரே வரிச்சுமையை ஏற்க வேண்டும்.
- சில நேர்முக வரிகள்: வருமான வரி, சொத்து வரி மற்றும் நிறுவன வரி ஆகியனவாகும்.
Direct Taxes
- A tax imposed on an individual or organisation, which is paid directly, is a direct tax. The burden of a direct tax cannot be shifted to others.
- J.S. Mill defines a direct tax as “one which is demanded from the very persons who it is intended or desired should pay it.”
- Some direct taxes are income tax, wealth tax and corporation tax.
வருமான வரி
- வருமான வரி இந்தியாவில் விதிக்கப்படுகின்ற நேர்முக வரி முறையில் மிக முக்கியமான வரியாகும்.
- இவ்வரி தனிநபர் பெறுகின்ற வருமானத்தின் அடிப்படையில் விதிக்கப்படுகின்றது.
- இவ்வரி வசூலிக்கப்படும் விகிதம் வருமான அளவைப் பொறுத்து மாறுபடக்கூடியதாகும்.
Income tax
- Income tax is the most common and most important tax levied on an individual in India.
- It is charged directly based on the income of a person.
- The rate at which it is charged varies, depending on the level of income.
நிறுவனவரி
- இந்த வரி தங்கள் பங்குதாரர்களிடமிருந்து தனி நிறுவனங்களாக இருக்கும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படுகிறது. இது இந்தியாவில் அமைந்துள்ள சிறப்பு உரிமைகளில், மூலதன சொத்துக்களின் விற்பனையிலிருந்து வரும் வட்டி இலாபங்கள், தொழில் நுட்ப சேவைகள் மற்றும் ஈவுத் தொகைகளுக்கான கட்டணம் போன்றவற்றிலிருந்து வசூலிக்கப்படுகிறது.
- இந்த வரி வெளிநாட்டு நிறுவனங்கள் பெரும் வருமானத்தின் மீது விதிக்கப்படுகிறது.
Corporate tax
- This tax is levied on companies that exist as separate entities from their shareholders. It is charged on royalties, interest gains from sale of capital assets located in India and fees for a technical services and dividends.
- Foreign companies are taxed on income that it arises in India.
சொத்து வரி (அ) செல்வ வரி
- சொத்து வரி (அ) செல்வ வரி என்பது தனது சொத்திலிருந்து பெறப்பட்ட நன்மைகளுக்காக சொத்தின் உரிமையாளருக்கு விதிக்கப்படுகின்ற வரியாகும்.
- ஒவ்வொரு ஆண்டும் சொத்தின் நடப்பு சந்தை மதிப்பின் அடிப்படையில் விதிக்கப்படுகிறது.
- இவ்வரி தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் மீது விதிக்கப்படும் வரியாகும்.
Wealth tax
- Wealth tax is charged on the benefits derived from property ownership.
- The same property will be taxed every year on its current market value.
- The tax is levied on the individuals and companies alike.
- இந்தியாவில் அரசாங்கத்தினால் மூன்று அடுக்குகள் வரி வசூலிக்கப்படுகிறது.
- நடுவண் அரசால் எளிதில்வசூலிக்கக்கூடியவரிகள் உள்ளன.
- இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து நேரடி வரிகளும் நடுவண் அரசால்வசூலிக்கப்படுகின்றன.
- பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான வரி நடுவண் மற்றும் மாநில அரசாங்கங்களால் வசூலிக்கப்படுகிறது.
- சொத்துக்களுக்கான வரி உள்ளூர் அரசாங்கங்களால் வசூலிக்கப்படுகிறது.
- இந்தியாவில் நேரடி வரிகளை விட மறைமுக வரி மூலம் அதிக வரி வருவாய் வசூலிக் கப்படுகின்றது.
- இந்தியாவின் முக்கிய மறைமுக வரி சுங்கவரிமற்றும் பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (GST) ஆகும்.
- In India taxes are collected by all the three tiers of government.
- There are taxes that can be easily collected by the Union government.
- In India almost all the direct taxes are collected by the Union governments.
- Taxes on goods and services are collected by both Union and State governments.
- The taxes on properties are collected by local governments.
- In India we collect more tax revenue through indirect taxes than through direct taxes.
- The major indirect taxes in India are customs duty and GST.
மறைமுக வரிகள்
- ஒருவர் மீது விதிக்கப்பட்ட வரிச்சுமை மற்றொருவருக்கு மாற்றப்பட்டால் அது "மறைமுகவரி" எனப்படும்.
- வரி விதிக்கப்பட்டவர் ஒருவர், வரி சுமையை சுமப்பவர் வேறு ஒருவராவார்.
- ஆகையால், மறைமுகவரியில் வரியைச் செலுத்துபவர் வரி சுமையை சுமப்பவர் அல்லர்.
- சில மறைமுக வரிகளாவன: முத்திரைத் தாள் வரி, பொழுதுபோக்கு வரி, சுங்கத் தீர்வை மற்றும் பண்டங்கள் மற்றும் பணிகள் (GST) மீதான வரிகளாகும்.
Indirect Taxes
- If the burden of the tax can be shifted to others, it is an indirect tax.
- The impact is on one person while the incidence is on the another person.
- Therefore, in the case of indirect taxes, the tax payer is not the tax bearer.
- Some indirect taxes are stamp duty, entertainment tax, excise duty and goods and service tax (GST).
- முத்திரைத்தாள் வரி என்பது அரசாங்க ஆவணங்களான திருமண பதிவு அல்லது சொத்து தொடர்பான ஆவணங்கள் மற்றும் சில ஒப்பந்தப் பத்திரங்கள் போன்றவைகள் மீது விதிக்கப்படுவதாகும்.
Stamp duty
- Stamp duty is a tax that is paid on official documents like marriage registration or documents related to a property and in some contractual agreements.
- எந்தவொரு பொழுதுபோக்கு மூலங்களாக இருந்தாலும், அதன் மீது அரசாங்கத்தால் விதிக்கப்படுகின்ற வரி பொழுதுபோக்கு வரியாகும்.
- உதாரணமாக திரைப்படங்கள் பார்ப்பதற்காக விதிக்கப்படுகின்ற கட்டணம், பொழுது போக்கு பூங்காக்கள், கண்காட்சிகள், விளையாட்டு அரங்கம், விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆகியவற்றைப் பார்ப்பதற்காக விதிக்கப்படுகின்ற வரி போன்றவையாகும்.
Entertainment tax
- Entertainment tax is a duty that is charged by the government on any source of entertainment provided.
- This tax can be charged on movie tickets, tickets to amusement parks, exhibitions and even sports events.
சுங்கத் தீர்வை (அல்லது) கலால் வரி
- சுங்கத் தீர்வை என்பது விற்பனையை விட, உற்பத்தியின் இயக்கத்தில் உள்ள எந்தவொரு உற்பத்திப் பொருட்களின் மீதும் விதிக்கப்படும் வரியாகும்.
- இவ்வரி பொதுவாக விற்பனை வரி போன்ற மறைமுக வரிகளுக்கு கூடுதலாக விதிக்கப்படுகிறது.
Excise duty
- An excise tax is any duty on manufactured goods levied at the movement of manufacture, rather than at sale.
- Excise is typically imposed in addition to an indirect tax such as a sales tax.
பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (GST - Goods and Service Tax)
- பண்டங்கள் மற்றும் பணிகள் வரி என்பது மறைமுக வரிகளில் ஒன்றாகும்.
- இவ்வரி இந்தியப் பாராளுமன்றத்தில் மார்ச் 29, 2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
- மேலும் ஜூலை 1, 2017 முதல் அமுல்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
- இதன் குறிக்கோள் "ஒரு நாடு-ஒரு அங்காடி-ஒரு வரி" என்பதாகும். இது மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) போன்று பல முனை வரி' இல்லாமல் இது 'ஒரு முனை வரி' ஆகும்.
- 1954ஆம் ஆண்டு முதன்முதலில் பண்டங்கள் மற்றும் பணிகள் வரியை அமல்படுத்திய நாடு பிரான்ஸ் ஆகும்.
Goods and service tax (GST)
- The goods and service tax (GST) is one of the indirect taxes.
- The GST was passed in Parliament on 29 March 2017.
- The act came into effect on 1 July 2017.
- The motto is one nation, one market, one tax.
பண்டங்கள் மற்றும் பணிகள் வரியின் அமைப்பு (GST)
மாநில பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (SGST): (மாநிலத்திற்குள்)
- மதிப்புக் கூட்டு வரி (VAT) / விற்பனை வரி, கொள்முதல் வரி, பொழுதுபோக்கு வரி, ஆடம்பர வரி, பரிசுச்சீட்டு வரி, மற்றும் மாநில கூடுதல் கட்டணம் மற்றும் வரிகள்.
மத்திய பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (CGST): (மாநிலத்திற்குள்)
- மத்திய சுங்கத்தீர்வை, சேவை வரி, ஈடுசெய்வரி, கூடுதல் ஆயத்தீர்வை , கூடுதல் கட்டணம், கல்வி கட்டணம் (இடைநிலைக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வி வரி).
ஒருங்கிணைந்த பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (IGST): (மாநிலங்களுக்கு இடையே)
- நான்கு முக்கிய GST விகிதங்கள் உள்ளன. (5%, 12%, 18% மற்றும் 28%) காய்கறிகள் மற்றும் உணவு தானியங்கள் போன்ற வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசிய தேவைகளுக்கான அனைத்து பண்டங்களுக்கும் இந்தவரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன.
Structure of Goods and Service Tax (GST)
State Goods and Service Tax (SGST): Intra state (within the state)
- VAT/sales tax, purchase tax, entertainment tax, luxury tax, lottery tax and state surcharge and cesses
Central Goods and Service Tax (CGST): Intra state (within the state)
- Central Excise Duty , service tax, countervailing duty, additional duty of customs, surcharge, education and secondary/higher secondary cess
Integrated Goods and Service Tax (IGST): Inter state (integrated GST)
- There are four major GST rates: (5%, 12%, 18% and 28%) Almost all the necessities of life like vegetables and food grains are excempted from this tax.
4.4 வரி எவ்வாறு விதிக்கப்படுகிறது?
- வளர்வீத வரி விதிப்பு முறை, விகித வரி விதிப்பு முறை மற்றும் தேய்வுவீத வரி விதிப்பு முறை என அரசாங்கம் வரிகளை விதிக்கின்றன.
4.4 How Are Taxes Levied?
- Tax is levied by the government progressively, proportionately as well as regressively.
வளர்வீத வரி விதிப்பு முறை
- வளர்வீத வரி விதிப்பு முறையில் வரியின் அடிப்படைத்தளம் அதிகரிக்கும்போது(பெருக்கப்படும்) வரி விகிதமும் (பெருகி) அதிகரிக்கிறது.
- ஒரு வளர்வீத வரியைப் பொறுத்த வரையில் வருமானம் அதிகரிக்கும் போது, வரி விகிதமும் அதிகரிக்கிறது.
- Progressive tax rate is one in which the rate of taxation increases (multiplier) as the tax base increases (multiplicand).
- In the case of a progressive tax, When income increases, the tax rate also increases.
விகித வரி விதிப்பு முறை அல்லது விகிதாச்சார வரி விதிப்பு முறை
- ஒரு நிலையான அளவில் பண்டங்கள் மற்றும் பணிகளுக்கு விதிக்கப்படும் வரி, விகித வரி விதிப்பு முறை எனப்படுகிறது.
- அனைத்து வரி செலுத்துவோரும், தங்கள் வருமானத்தில் அதே விகிதத்தில் பங்களிப்பு செய்கின்றனர்.
- Tax levied on goods and service in a fixed portion is known as proportionate taxes.
- All tax payers contribute the same proportion of their incomes.
தேய்வுவீத வரி விதிப்பு முறை
- இது அதிக வருமானம் ஈட்டுபவர்களை விட, குறைந்த வருமானம் ஈட்டுபவர்களிடம் அதிகவரி விகிதம் விதிப்பதைக் குறிக்கிறது.
- இது வளர்வீத வரி விதிப்பு முறைக்கு நேர் எதிர் மாறானதாகும்.
- It implies that higher the rate of tax lower the income groups than in the case of higher income groups.
- It is a very opposite of progressive taxation.
4.5 கருப்பு பணம் (Black Money)
- கருப்பு பணம் என்பது கருப்பு சந்தையில் ஈட்டப்பட்ட வருமானம் மற்றும் செலுத்தப்படாத வரிப் பணமாகும்.
- வரி நிர்வாகியிடமிருந்து மறைக்கப்பட்ட, கணக்கிடப்படாத பணம் "கருப்பு பணம்" என்று அழைக்கப்படுகிறது.
Black Money
- Black money is funds earned on the black market on which income and other taxes have not been paid.
- The unaccounted money that is concealed from the tax administrator is called black money.
கருப்பு பணத்திற்கான காரணங்கள்
- கருப்பு பணத்திற்கு பல காரணங்கள் அடையாளம் காணப்படுகின்றன. அவை
1. பண்டங்கள் பற்றாக்குறை
2. உரிமம் பெறும் முறை
3. தொழில் துறையின் பங்கு
4. கடத்தல்
5. வரியின் அமைப்பு
Causes of Black Money
- Several sources of black money are identified as causes.
1. Shortage of goods
2. Licensing proceeding
3. Contribution of the industrial sector
4. Smuggling
5. Tax structure
4.6 வரி ஏய்ப்பு (Tax Evasion)
- தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் ஆகியவை சட்ட விரோதமாக வரி செலுத்தாமல் இருப்பது வரி ஏய்ப்பு எனப்படும். வரி ஏய்ப்பு நடவடிக்கைகளில் சேர்க்கப்பட்டுள்ளவை
- வருமானத்தை குறைத்து மதிப்பிடுதல்
- விலக்குகள் அல்லது செலவுகளை உயர்த்துவது.
- மறைக்கப்பட்ட பணம்.
- கடல் கடந்த கணக்குகளில் விவரங்களை மறைத்தல்.
4.6 Tax Evasion
- Tax evasion is the illegal evasion of taxes by individuals, corporations and trusts. Tax evasion activities included
- Underreporting income
- Inflating deductions or expenses
- Hiding money
- Hiding interest in offshore accounts
வரி ஏய்ப்பும், அபராதமும்
- ஒரு நபர் வரி ஏய்ப்பு செயலை முழுமையாகச் செய்தால், அவர் மோசமான குற்றச்சாட்டுகளை சந்திக்க நேரிடும். வரி ஏய்ப்பு அபாரதங்களில் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அதிக அளவு அபராதமும் அடங்கும்.
- பிரதிவாதிகள், வழக்கு விசாரணைக்கான செலவுகளைச் செலுத்த உத்தரவிடப்படலாம்.
- வரிஏய்ப்பிற்கான அபராதம், குற்றத்தின் தன்மை , மற்றும் அதன் தீவிரத்தினைப் பொறுத்து கடுமையானதாக இருக்கும்.
Tax evasion penalties
- If a person wilfully commits the act of tax evasion, he may face felony charges. Tax evasion penalties include imprisonment of up to five years and high amount as fines.
- The defendant may also be ordered to pay for the costs of prosecution.
- Tax evasion penalties can be harsh, depending on the severity of the crime.
4.7 வரிகளும் முன்னேற்றமும்
- பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் வரி விதிப்பின் பங்கு பின்வருமாறு.
4.7 Taxes and Development
- The role of taxation in developing economies is as follows.
1. வளங்களைத் திரட்டுதல்
- வரிவிதிப்பு அரசாங்கத்திற்கு கணிசமான அளவிற்கு வருவாய் திரட்டுவதற்கு உதவுகிறது.
- குறிப்பாக நேர்முக வரிகளான தனிநபர் வருமானவரி, நிறுவனவரி மற்றும் மறைமுக வரிகளான ஆயத்தீர்வை, சுங்கவரி ஆகியவற்றின் மூலமாக வரி வருவாய் திரட்டப்படுகிறது.
Resource mobilisation:
- Taxation enables the government to mobilise a substantial amount of revenue.
- The tax revenue is generated by imposing direct taxes such as personal income tax and corporate tax and indirect taxes such as customs duty, excise duty, etc.
2. வருமான ஏற்றதாழ்வுகளை குறைத்தல்
- வரியின் மூலம் சமத்துவமுறையை உருவாக்கலாம்.
- குறிப்பாக, நேர்முக வரியில் வளர்வீத வரிமுறை பின்பற்றப்படுகிறது.
- அதேபோல சில மறைமுக வரியான ஆடம்பரப் பண்டங்களின் மீது விதிக்கப்படும் வரி வளர்வீத வரியின் தன்மையுடையதாகும்.
Reduction inequalities of income:
- Taxation follows the principle of equity.
- The direct taxes are progressive in nature.
- Also certain indirect taxes, such as taxes on luxury goods, is also progressive in nature.
3. சமூக நலன் வரி விதிப்பு
- சமூக நலனை உருவாக்குகிறது. சில விரும்பத்தகாத பொருட்களான மதுபானங்கள் போன்ற பொருட்களின் மீது அதிகமாக வரி விதிப்பதன் மூலம் சமூக நலன் பாதுகாக்கப்படுகிறது.
Social welfare:
- Taxation generates social welfare. Social welfare is generated due to higher taxes on certain undesirable products like alcoholic products.
4. அந்நியச் செலாவணி
- வரிவிதிப்பு ஏற்றுமதியை ஊக்குவிப்பதுடன் இறக்குமதியைத் தடுக்கிறது. பொதுவாக, வளரும் நாடுகள் மற்றும் வளர்ந்த நாடுகளும் ஏற்றுமதி பொருட்களுக்கு வரிகளை விதிப்பதில்லை.
Foreign exchange:
- Taxation encourages exports and restricts imports, Generally developing countries and even the developed countries do not impose taxes on export items.
5. வட்டார முன்னேற்றம்
- வட்டார வளர்ச்சியில் வரி விதிப்பு முக்கிய பங்கினை வகிக்கிறது. பின் தங்கிய பகுதிகளில் தொழில் நிறுவனங்கள் அமைப்பதற்காக வரி சலுகையையும், வரி விலக்குகளையும் அளிப்பதன் மூலம், அப்பகுதிகளில் தொழிற்சாலைகளை அமைப்பதற்கு வணிக நிறுவனங்களை தூண்டுகிறது.
Regional development:
- Taxation plays an important role in regional development, Tax incentives such as tax holidays for setting up industries in backward regions, which induces business firms to set up industries in such regions.
6. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தல்
- வரி என்பது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துப் கருவிகளுள் ஒன்றாக பயன்படுத்தப்படுகிறது அரசாங்கம் பண்டங்கள் மீதான வரி விகிதத்தை குறைப்பதன் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும்.
Control of inflation:
- Taxation can be used as an instrument for controlling inflation. Through taxation the government can control inflation by reducing the tax on the commodities.
வரிக்கும் கட்டணத்திற்கும் உள்ள வேறுபாடுகள்
Difference between Tax and other Payments
வரி (Tax)
- வரி என்பது எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் அரசாங்கத்திற்கு கட்டாயமாக செலுத்துகின்ற செலுத்துகையாகும்.
- Tax is compulsory to the government without getting any direct benefits
- பொதுவாக அரசாங்கத்தின் வருமான இனங்களில் ஒன்றாக வரி மேலோங்கியுள்ளது.
- If the element of revenue for general purpose of the state predominates, the levy becomes a tax
- வரி என்பது கட்டாய செலுத்துகை ஆகும்.
- Tax is a compulsory payment
- ஒரு தனிப்பட்ட நபரின் மீது வரி விதிக்கப்பட்டால், அதனை அவர் செலுத்த வேண்டும். இல்லையெனில் அவர் தண்டிக்கப்படுவார்.
- If tax is imposed on a person, he has to pay it; otherwise he has to be penalised
- வரி செலுத்துபவர்கள் நேரடியாக எவ்வித சலுகைகளையும் எதிர்பார்க்க முடியாது.
- In this case, tax payer does not expect any direct benefit.
- உதாரணம்: வருமான வரி, அன்பளிப்பு வரி, சொத்து வரி மற்றும் மதிப்புக் கூட்டு வரி (VAT)
- Example: Income tax, gift box, wealth tax, VAT etc.
கட்டணம் (Payment)
- கட்டணம் என்பது பணிகளை பயன்படுத்துவதற்காக செலுத்துவதாகும்.
- Fee is the payment for getting any service
- கட்டணம் என்பது ஒரு குறிப்பிட்ட நன்மைகளுக்கான தனிச் சலுகைகளைப் பெற்றிருந்தாலும், பொது நல ஒழுங்கு முறையின் சிறப்பான முதன்மை நோக்கமாகும்.
- While a fee is a payment for a specific benefit privilege although the special to the primary purpose of regulation in public interest.
- கட்டணம் (Fee) என்பது தன்னார்வமாக செலுத்துவதாகும்.
- Fee is a voluntary payment.
- மாறாக, பணிகளை பெற விருப்பமில்லை எனில் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
- On the other hand fee is not paid if the person do not want to get the service
- கட்டணம் செலுத்துவதன் மூலம் நுகர்வோர்கள், நேரடியாக சலுகைகளைப் பெறுகின்றனர்.
- Fee payer can get direct benefit for paying fee.
- உதாரணம்: முத்திரை வரி, ஓட்டுநர் உரிமக் கட்டணம், அரசாங்க பதிவுக் கட்டணம்.
- Examples: stamp fee, driving license fee, government registration fee
No comments:
Post a Comment