CURRENT AFFAIRS APRIL 2021 | நடப்பு நிகழ்வுகள் 2021 | சமிபத்திய நிகழ்வுகள் 2021
❇️ ஏப்ரல்1: நாடு முழுவதும் 45 வயது மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கியது.
❇️ ஏப்ரல்1: இந்திய திரைப்படத் துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டார். ஏற்கெனவே பத்மபூஷண், பத்மவிபூஷன் ஆகிய விருதுகளை அவர் பெற்றுள்ளார்.
❇️ ஏப்ரல்1: தமிழகத் தேர்தல் பிரச்சாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா 48 மணி நேரம் பிரச்சாரம் மேற்கொள்ள தலைமைத் தேர்தல் ஆணையம் தடை விதித்தது.
❇️ ஏப்ரல் 3: பல அடுக்குகள் கொண்ட முகக்கவசங் களை அணிவதால், நுண்துகள் பரவல் 96 சதவீதம் குறையும் என்று அமெரிக்காவின் ஜார்ஜியா தொழில்நுட்ப மையம் நடத்திய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
❇️ ஏப்ரல் 4: இந்திய மகளிர் கால்பந்து அணியின் கேப்டனாகத் தமிழகத்தைச் சேர்ந்த இந்துமதி கதிரேசன் நியமிக்கப்பட்டார்.
❇️ ஏப்ரல் 5: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அடுத்து 2 முறை பதவியில் நீடிப்பதற்கான மசோதாவில் கையெழுத்திட்டுள்ளார். இதன்படி தலா 6 ஆண்டுகள் என 2 முறை பதவியில் நீடிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 2036ஆம் ஆண்டு வரை புதின் அதிகாரத்தில் இருக்க முடியும்.
❇️ ஏப்ரல்6: தமிழகத்தில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் சராசரியாக 72.78 சதவீத வாக்குகள் பதிவாகின. புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 81.88 சதவீத வாக்குகள் பதிவாகின.
❇️ ஏப்ரல் 7: உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா நியமிக்கப் பட்டுள்ளார். இவர் இந்தியாவின் 48ஆவது தலைமை நீதிபதி. தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டேவின் பதவிக்காலம் ஏப்ரல் 23இல் நிறைவடைகிறது.
❇️ ஏப்ரல் 7: தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக புதிய துணை வேந்தராகப் பேராசிரியர் கே.என்.செல்வகுமார் நியமிக்கப் பட்டார்.
❇️ ஏப்ரல் 8: டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்தியத் துப்பாக்கிச் சுடுதல் அணி அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் இடம்பிடித்தார்.
❇️ ஏப்ரல் 10: கரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவிவரும் நிலையில் தமிழகத்தில் புதிய கரோனா பொதுமுடக்கக் கட்டுப் பாடுகள் மீண்டும் நடைமுறைக்கு வந்தன.
❇️ ஏப்ரல் 9: பிரிட்டன் அரசி இரண்டாம் எலிச பெத்தின் கணவர் இளவரசர் பிலிப் (99) காலமானார். பிரிட்டன் வரலாற்றில் அரசர் அல்லது அரசியின் வாழ்க்கைத் துணைக்கு வழங்கப்படும் ‘கன்சார்ட்’ என்கிற அந்தஸ்தை நீண்ட காலம் தக்கவைத்திருந்தவர் பிலிப்.
❇️ ஏப்ரல் 10: திண்டுக்கல் காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எஸ்.மாதேஸ்வரன் பொறுப்பேற்றார்.
❇️ ஏப்ரல் 11: பிஹாரைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் அர்பித் குமார், அபிஜித் குமார் ஆகியோர் கண்டுபிடித்த தொலைவிலிருந்தே கரோனா வெப்பப் பரிசோதனை கண்டறியும் கருவிக்கு மத்திய அரசு காப்புரிமை வழங்கியது
❇️ ஏப்ரல் 12: டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மல்யுத்த வீராங்கனைகளான சோனம் மாலி (18), அன்ஷு மாலிக் (19) ஆகியோர் தகுதிபெற்றனர்.
❇️ ஏப்ரல் 13: ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் வி’ கரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்காக இந்திய மருந்துப் பொருள்கள் கட்டுப்பாட்டு இயக்குநரகம் அனுமதி அளித்தது. இது இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் மூன்றாவது தடுப்பூசி.
❇️ ஏப்ரல் 13: தலைமைத் தேர்தல் ஆணையர் அனில் அரோரா ஓய்வு பெற்றதையடுத்து, புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷீல்சந்திரா நியமிக்கப்பட்டார். 24-வது ஆணையரான இவர், 2022 மே 14 வரை பொறுப்பில் இருப்பார்.
❇️ ஏப்ரல் 14: சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளராக புதுச்சேரியைச் சேர்ந்த நீதிபதி பி.தனபால் நியமிக்கப்பட்டார்.
❇️ ஏப்ரல் 15: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் ‘ககன்யான்’ திட்டத்தில் ஒருங்கிணைந்து செயல்பட இந்தியா-பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
❇️ ஏப்ரல் 16: கஜகஸ்தானின் அல்மாட்டி நகரில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சரிதா தொடர்ந்து இரண்டாவது முறையாகத் தங்கம் வென்றார்.
❇️ ஏப்ரல் 17: ‘சின்ன கலைவாணர்’ என்று அழைக் கப்பட்ட தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக் (59) காலமானார்.
❇️ ஏப்ரல் 24: கரோனா நோயாளிகளுக்கான அவசர சிகிச்சைக்கு ‘விரஃபின்’ ஊசி மருந்தைப் பயன்படுத்த இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் அனுமதி அளித்தது.
❇️ ஏப்ரல் 24: இந்தோனேசிய கடற்படையைச் சேர்ந்த கே.ஆர்.ஐ. நங்காலா 402 என்கிற நீழ்மூழ்கிக் கப்பல் 53 பேருடன் பாலி தீவு அருகே மாயமானது.
❇️ ஏப்ரல் 24: உச்ச நீதிமன்ற 48-வது தலைமை நீதிபதியாக என்.வி. ரமணா பொறுப்பேற்றார்.
❇️ ஏப்ரல் 24: மின்னணு முறையில் சொத்துக்கான அட்டை வழங்கும் ‘ஸ்வமித்வா யோஜனா’ திட்டம் தொடங்கப்பட்டது.
❇️ ஏப்ரல் 25: நாடு முழுவதும் புதிதாக 551 மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டது.
❇️ ஏப்ரல்25: உச்ச நீதிமன்ற நீதிபதி மோகன் எம்.சந்தானகவுடர் (62) காலமானார்.
❇️ ஏப்ரல் 26, 27: ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையையத் திறப்பது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை ஜூலை 31 வரை செயல்பட உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது.
❇️ ஏப்ரல்27: கவுதமாலா உலகக் கோப்பை வில்வித்தை முதல் நிலை போட்டியில் இந்தியாவின் தீபிகாகுமாரி, அதானு தாஸ் ஆகியோர் தங்கம் வென்றனர்.
❇️ ஏப்ரல் 28: இந்தியாவின் சுவாதி தியாகராஜன் தயாரிப்பு மேலாளராகப் பணியாற்றிய ‘மை ஆக்டோபஸ் டீச்சர்’ என்கிற ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டது.
❇️ ஏப்ரல் 29: இந்திய வகையைச் சேர்ந்த பி.1.617 என்ற இருமுறை உருமாறிய கரோனா வைரஸ் 17 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
❇️ ஏப்ரல் 30: தமிழ்த் திரைப்பட ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான கே.வி. ஆனந்த் (54) காலமானார்.
❇️ ஏப்ரல் 1: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம். கோயிலின் முக்கியத்துவத்தை வருகை பதிவேட்டில் குறிப்பிட்டார்.
❇️ ஏப்ரல் 27: மதுரை கள்ளிக் குடியில் ஆம்னி வேன்--கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி.
❇️ ஏப்ரல் 27: துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கொரோனாவுக்காக ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி.
❇️ ஏப்ரல் 6: உச்சநீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியாக ஆந்திராவின் என்.வி. ரமணா பதவியேற்பு.
❇️ ஏப்ரல் 1: 45 வயதுக்கு மேற்பட் டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கம்.
❇️ ஏப்ரல் 4: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 22 பேர் வீரமரணம்.
❇️ ஏப்ரல் 5: லஞ்ச புகாரால் மகா ராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் (தேசியவாத காங்.,) ராஜினாமா.
❇️ ஏப்ரல் 7: தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாணைய உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம்.
❇️ ஏப்ரல் 12: ரஷ்யாவின் 'ஸ்புட்னிக்-வி' கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி.
❇️ ஏப்ரல் 13: இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக சுஷில் சந்திரா பதவியேற்பு.
❇️ ஏப்ரல் 14: சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து. பிளஸ் 2 தேர்வு ஒத்திவைப்பு.
❇️ ஏப்ரல் 17 : கொரோனா காரணமாக ஹரித்வார் கும்பமேளா (12 ஆண்டு) பாதியில் நிறுத்தம்.
❇️ ஏப்ரல் 22: கர்நாடகாவின் சிரூர் மடத்தின் தலைமை ஜீயராக 16 வயதான அனிருத்தா சரளத்தையா சுவாமி தேர்வு.
❇️ ஏப்ரல் 25: இந்தோனேஷி யாவில் 'கே.ஆர்.ஐ.நங்கலா 402' நீர்மூழ்கி கப்பல் காணாமல் போனதில் 53 பேர் பலி.
❇️ ஏப்ரல் 25: கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில், சரிதா நாயருக்கு கோழிக்கோடு நீதிமன்றம் 6 ஆண்டு சிறை.
❇️ ஏப்ரல் 7: அமெரிக்க 'போர்ப்ஸ்' பத்திரிகையின் உலக பணக்காரர் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பெஜாஸ் முதலிடம்.
❇️ ஏப்ரல் 7: ஆசிய பணக்காரர்களில் இந்தியாவின் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடம்.
❇️ ஏப்ரல் 17: கியூபா கம்யூ., தலைவர் ரவுல் காஸ்ட்ரோ 89, விலகினார். 60 ஆண்டு காஸ்ட்ரோ குடும்ப பதவிக் காலம் முடிவுக்கு வந்தது.
❇️ ஏப்ரல் 21: ஆப்ரிக்காவில் உள்ள சாட் நாட்டின் அதிபர் இட்ரிஸ் டெபி இட்னோ 68, கிளர்ச்சியாளர்களால் சுட்டுக்கொலை.
❇️ ஏப்ரல் 22: அமெரிக்காவின் இணை அட்டர்னி ஜெனரலாக இந்திய வம்சாவளியை சேர்ந்த வனிதா குப்தா நியமனம்.
❇️ ஏப்ரல் 27: பிரிட்டனில் தானியங்கி வாகனங்கள் இயக்க அனுமதி.
❇️ ஏப்ரல் 2: தைவானில் ரயில் தடம் புரண்டு 50 பேர் பலி.
❇️ ஏப்ரல் 3: ராணுவத்துக்கான எடை குறைந்த 'புல்லட் புரூப்' உடை அறிமுகம்.
❇️ ஏப்ரல் 3 : பொதுத்துறை நிறுவன தேர்வு வாரிய தலைவராக மல்லிகா சீனிவாசன் நியமனம்.
❇️ ஏப்ரல் 13: காசநோய் இல்லாத யூனியன் பிரதேசமாக லட்சத்தீவு அறிவிப்பு.
No comments:
Post a Comment