Sunday, February 28, 2021

TNPSC CURRENT AFFAIRS FEBRUARY 2021 | நடப்பு நிகழ்வுகள் 2021 | சமிபத்திய நிகழ்வுகள் 2021

CURRENT AFFAIRS FEBRUARY 2021 | நடப்பு நிகழ்வுகள் 2021 | சமிபத்திய நிகழ்வுகள் 2021


❇️ பிப்ரவரி 1 : மத்திய பட்ஜெட்டில் விவசாயம், சுகாதாரத்துறைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. கொரோனா தடுப்பூசிக்கு ரூ.35 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. தமிழக சாலை பணிகளுக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


❇️ பிப்ரவரி 1 : முல்லைப்பெரியாறு அணைக்கு 20 ஆண்டு களுக்கு பிறகு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. 2000-ம் ஆண்டு மின் கம்பி உரசியதில் யானை உயிரிழந்ததை தொடர்ந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் ஐகோர்ட்டு உத்தரவுப்படி தரையில் குழாய்கள் பதித்து அதன் வழியே மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது.


❇️ பிப்ரவரி 1 : மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. நோபல் பரிசு பெற்ற அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டார்.


❇️ பிப்ரவரி 2 : தமிழகத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி படிப்படியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இரு மொழி கொள்கை தொடரும் என்றும் சட்டசபையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிவித்தார்.


❇️ பிப்ரவரி 2 : சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி பொதுத்தேர்வுகள் மே மாதம் 4-ந் தேதி தொடங்கி ஜூன் மாதம் 11-ந் தேதி நிறைவு பெறுகிறது.


❇️ பிப்ரவரி 3 : வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் குற்ற வழக்குகளை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.


❇️ பிப்ரவரி 3 : கொரோனா அச்சம் காரணமாக இந்தியா உள்பட 20 நாடுகளின் பயணிகள் சவுதி அரேபியா வருவதற்கு அந்த நாட்டு அரசு தடை விதித்தது.


❇️ பிப்ரவரி 3 : இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து வழங்கும் வகையில் 13-வது சட்ட திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று இந்தியா சார்பில் துணை தூதர் மூலம் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.


❇️ பிப்ரவரி 4 : முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் விடுதலை விவகாரத்தில் தமிழக கவர்னரின் பதிலை, சுப்ரீம் கோர்ட்டில் மனுவாக மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில், ‘முடிவு எடுக்க ஜனாதிபதியே முழு அதிகாரம் படைத்தவர்’ என்று கூறப்பட்டுள்ளது.


❇️ பிப்ரவரி 4 : பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான சுங்க வரி குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டது. 8 மாதங்களுக்கு பிறகு ஒரு பவுன் ரூ.36 ஆயிரத்துக்கு கீழே வந்தது.


❇️ பிப்ரவரி 5 :கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதன் மூலம் 16.43 லட்சம் பேர் பயன் அடைவார்கள்.


❇️ பிப்ரவரி 5 :பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனை காலத்தை உயர்த்தும் சட்ட மசோதா, தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.


❇️ பிப்ரவரி 6 : இந்தியாவில் இதுவரை நடந்துள்ள கொரோனா பரிசோதனை களின் எண்ணிக்கை 20 கோடியை கடந்தது.


❇️ பிப்ரவரி 6 : உலகிலேயே மிக வேகமாக 21 நாட்களில் 50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டு இந்தியா சாதனை படைத்துள்ளது.


❇️ பிப்ரவரி 6 : பெண்களுக்கான முன்னேற்றம், வளர்ச்சி திட்டங்களில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டதற்காக மத்திய அரசு விருது வழங்கியது. மேலும் பெண்களுக்கான பாதுகாப்பான நகரங்களாக சென்னை, கோவை தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றன.


❇️ பிப்ரவரி 7 : மத்திய பட்ஜெட்டில் விவசாயம், சுகாதாரத்துறைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. கொரோனா தடுப்பூசிக்கு ரூ.35 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. தமிழக சாலை பணிகளுக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


❇️ பிப்ரவரி 7 : உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் நீர் மின் நிலையம் அடித்து செல்லப்பட்டது. அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை தொடர்பு கொள்ள முடியாமல் போனது. இதற்கிடையே இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் இரு மடங்கு வேகத்தில் உருகுவதாக ஆய்வில் தெரியவந்தது.


❇️ பிப்ரவரி 7 : இந்திய தேயிலை பற்றி அவதூறு பரப்ப வெளிநாடுகளில் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான ஆவணங்கள் வெளியாகி உள்ளதாகவும் பிரதமர் நரேந்திரமோடி திடுக்கிடும் தகவலை கூறினார்.


❇️ பிப்ரவரி 8 : விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘போராட்டத்தை கைவிடுங்கள்’ என்று விவசாயி களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.


❇️ பிப்ரவரி 8 : பெங்களூருவில் இருந்து அ.தி.மு.க. கொடி கட்டிய காரில் சசிகலா தமிழகம் வந்தார். வழிநெடுக அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அடக்கு முறைகளுக்கு நான் என்றும் அஞ்சமாட்டேன் என்று தொண்டர்கள் மத்தியில் சசிகலா பேசினார்.


❇️ பிப்ரவரி 8 : 10 மாதங்களுக்கு பிறகு அனைத்து மாணவர்களுக்கும் கல்லூரி கள் திறக்கப்பட்டன. அதேபோல் பள்ளிகளில் 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கி இருக்கின்றன.


❇️ பிப்ரவரி 9 : ஆகஸ்டு 25-ந் தேதி கிருபானந்தவாரியார் பிறந்த தினம் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.


❇️ பிப்ரவரி 9 : பொருளாதார தடைகளை மீறி வடகொரியா அணு ஆயுதங்களை நவீனமயமாக்கி இருக்கிறது என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் நிபுணர் குழு பரபரப்பு அறிக்கை அளித்தது.


❇️ பிப்ரவரி 10 : தமிழக சட்டசபை தேர்தல் குறித்து சென்னையில் ஆலோசனை நடத்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோராவிடம், ‘ஒரே கட்டமாக தேர்தலை நடத்துங்கள்’ என அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.


❇️ பிப்ரவரி 10 : 9,10,11,12-ம் வகுப்புகளை தொடர்ந்து 6,7,8-ம் வகுப்புகளுக்கும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு இருப்பதாக கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


❇️ பிப்ரவரி 11: தமிழக சட்டசபை தேர்தலில் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்,தேர்தல் பணியில் கூடுதல் ராணுவம் ஈடுபடுத்தப்படும், ஓட்டுப்பதிவு நேரம் நீட்டிக்கப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா தெரிவித்தார்.


❇️ பிப்ரவரி 11: பெட்ரோல் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. கடந்த 6 மாதங்களில் ரூ.5 வரை உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.90-ஐ தாண்டியது.


❇️ பிப்ரவரி 11: விமான கட்டணங்களை 30 சதவீதம் வரை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. அதன்படி ரூ.200 முதல் ரூ.5,600 வரை கட்டணம் அதிகரித்துள்ளது.


❇️ பிப்ரவரி 12 : சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 17 பேர் உடல் கருகி பலியானார்கள். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.


❇️ பிப்ரவரி 12 : தே.மு.தி.க. அலுவலகத்திற்கு வந்த விஜயகாந்த் நீண்ட நாட்களுக்கு பிறகு தொண்டர்களை சந்தித்தார். அ.தி.மு.க. கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்று பிரேமலதா கூறினார்.


❇️ பிப்ரவரி 12 : இந்திய பகுதியை சீனாவிடம் பிரதமர் மோடி விட்டுக்கொடுத்துவிட்டார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். சீனாவுடனான படை விலக்க ஒப்பந்தத்துக்காக இந்தியா எந்த பிராந்தியத்தையும் விட்டுக்கொடுக்கவில்லை என்று ராணுவ அமைச்சகம் கூறியது.


❇️ பிப்ரவரி 13 : மக்கள் தங்களின் குறைகளை அரசுக்கு தெரிவித்து உடனடியாக தீர்வு காண வசதியாக 1100 எண் தொலைபேசி சேவை திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.


❇️ பிப்ரவரி 13 : கொரோனா வைரஸ் பரவல் குறைந்தாலும் எந்த நாடும் கட்டுப்பாடுகளை தளர்த்த கூடாது. அதற்கான தருணம் வரவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தது.


❇️ பிப்ரவரி 21 : காவிரி-வைகை-குண்டாறு இடையே ரூ.14,400 கோடியில் நதிகள் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான பணியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.


❇️ பிப்ரவரி 21 : ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் அரசியலில் நுழைந்தார். ‘காமராஜர், கக்கன், அண்ணா போன்று எளிமையாக இருக்க வேண்டும்’ என்று ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார்.


❇️ பிப்ரவரி 21 : வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு காங் கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதினார்.


❇️ பிப்ரவரி 22 : புதுச்சேரி சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வி அடைந்து, காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயண சாமி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார்.


❇️ பிப்ரவரி 22 : நதிகள் இணைப்பு திட்டத்திற்கு காவிரி உபரி நீரை தமிழகம் பயன்படுத்திக்கொள்வதற்கு கர்நாடக அரசு அனுமதிக்காது என்று முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்தார்.


❇️ பிப்ரவரி 23 : தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் புதிதாக 12 ஆயிரம் பஸ்கள் வாங்கப்படும் என்றும், பள்ளிக்கூடங்களில் 6-ம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் பாடம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் பட்ஜெட்டில் பயிர்க்கடன் தள்ளுபடிக்கு ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது.


❇️ பிப்ரவரி 23 : அதிகரித்து வரும் வருவாய் பற்றாக்குறை காரணமாக தமிழக அரசின் கடன் ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. இதனால் பிறக்கும் குழந்தையின் மீதும் ரூ.62 ஆயிரத்துக்கும் மேல் கடனை அ.தி.மு.க. அரசு சுமத்தி இருக்கிறது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.


❇️ பிப்ரவரி 24 : நாடு முழுவதும் மார்ச் 1-ந் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், நாள்பட்ட நோய்களுடன் போராடும் 45 வயது மேற்பட்டவர்களுக்கும் அரசு ஆஸ்பத்திரிகளில் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்தது.


❇️ பிப்ரவரி 24 : சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் அவரது வாழ்நாள் சாதனைகளை விளக்கும் அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்காவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.


❇️ பிப்ரவரி 24 : புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய மந்திரிசபை தனது ஒப்புதலை அளித்தது.


❇️ பிப்ரவரி 25 : கொரோனா பரவல் கட்டுப்பாடு நடவடிக்கையாக இந்த ஆண்டும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்றும், 9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்படுவதாகவும் அறிவித்தார்.


❇️ பிப்ரவரி 25 : பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப் போன்ற சமூகவலைத்தளங் களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு விதித்தது. தேச விரோத கருத்துக்களை உருவாக்கியவரை அடையாளம் காணும் வசதி கட்டாயம் இடம்பெற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.


❇️ பிப்ரவரி 25 : சமையல் கியாஸ் விலை மீண்டும் உயர்ந்தது. ஒரே மாதத்தில் ரூ.100 கூடியதால் இல்லத்தரசிகள் உள்பட பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


❇️ பிப்ரவரி 26 : தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் மார்ச் 12-ந் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. ஏப்ரல் 6-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. மே-2-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.


❇️ பிப்ரவரி 26 : கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் சுய உதவிக்குழுவினர் வாங்கிய நிலுவைக் கடனும், கூட்டுறவு நிறுவனங்களில் 6 பவுன் வரை வாங்கிய நகைக்கடனும் தள்ளுபடி செய்யப்படுவதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.


❇️ பிப்ரவரி 26 : மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


❇️ பிப்ரவரி 27 : கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தனியார் ஆஸ்பத்திரிகள் ஒரு டோசுக்கு ரூ.250 வரை கட்டணம் வசூலித்துக்கொள்ளலாம் என்று தகவல் வெளியானது. தமிழகத்தில் 761 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


❇️ பிப்ரவரி 27 : இந்தியாவுடன் நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண பாகிஸ்தான் தயாராக இருப்பதாக பிரதமர் இம்ரான்கான் அறிவித்தார்.


❇️ பிப்ரவரி 28: பிரேசில் நாட்டின் செயற்கைக்கோள் உள்பட 19 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சியில் நேரில் பங்கேற்ற பிரேசில் மந்திரி, இந்திய விஞ்ஞானி களுக்கு புகழாரம் சூட்டினார்.


❇️ பிப்ரவரி 28: நீர் நிலைகளை சுத்தப் படுத்தவும், மழை நீரை சேகரிக்கவும் 100 நாள் இயக்கம் நடத்துமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.


❇️ பிப்ரவரி21: நாட்டின் முதல் டிஜிட்டல் பல்கலைக்கழகம் கேரளத்தில் திறக்கப்பட்டது. திருவனந்தபுரத்துக்கு அருகே மங்களாபுரத்தில் டிஜிட்டல் அறிவியல், புத்தாக்க, தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் என்கிற பெயரில் இது அமைந்துள்ளது.


❇️ பிப்ரவரி22: புதுச்சேரி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்தது. இதையடுத்து புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது.


❇️ பிப்ரவரி22: ஆசியாவின் மிகப்பெரிய கால்நடை பூங்கா சேலம் தலைவாசலில் 1,100 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,022 கோடி செலவில் திறக்கப்பட்டுள்ளது.


❇️ பிப்ரவரி23: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.


❇️ பிப்ரவரி25: டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக (77 டெஸ்ட் போட்டி) 400 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாமிடத்தைப் பிடித்தார்.


❇️ பிப்ரவரி25: 9 முதல் 11-ம்வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


❇️ பிப்ரவரி26: அஸ்ஸாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 6 தேர்தல் நடைபெறும்.


❇️ பிப்ரவரி13: உலகச் சுகாதார நிறுவனத்தில் மீண்டும் இணைவதற்கான நடவடிக் கையை அமெரிக்கா தொடங்கியது. கரோனா தொற்று விவகாரத்தில் அந்த அமைப்பிலிருந்து விலகும் முடிவை அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னதாக எடுத்திருந்தார்.


❇️ பிப்ரவரி14: இந்தியத் தேர்தல் ஆணையத்தில் 2,360 அரசியல் கட்சிகள் பதிவுசெய்துள்ளன. பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 2,301. ஜனநாயகச் சீர்த்திருத்த சங்கம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.


❇️ பிப்ரவரி14: சென்னை ஆவடியில் உள்ள கனரக ஊர்தித் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட அர்ஜூன் மார்க் 1ஏ என்கிற பீரங்கி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.


❇️ பிப்ரவரி15: இந்தியாவில் விளையாடப்பட்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஹர்பஜன் சிங்கைப் பின்னுக்குத் தள்ளி அதிக விக்கெட்டுகளை (268) வீழ்த்திய 2-வது கிரிக்கெட் வீரர் என்கிற பெருமையை ரவிச்சந்திரன் அஸ்வின் பெற்றார்.


❇️ பிப்ரவரி18: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து கிரண்பேடி விடுவிக்கப்பட்டார். இப்பொறுப்பு தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.


❇️ பிப்ரவரி19: 2020 ஜூனில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் சீன தரப்பில் 4 வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பதை சீன ராணுவம் முதன்முதலாக ஒப்புக்கொண்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.


❇️ பிப்ரவரி4: மியான்மர் ராணுவம் அந்நாட்டு ஆட்சியைக் கைப்பற்றியது. மியான்மரில் ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது இது 3-வது முறை. முதன்முறையாக 1962-ல் ராணுவப் புரட்சி நடைபெற்றது.


❇️ பிப்ரவரி5: இந்தியாவில் முதல் பனிக்குடில் உணவகம் (இக்ளு கஃபே) காஷ்மீரில் உள்ள குல்மார்க்கில் அமைக்கப்பட்டது. இது பிர் பஞ்சால் மலைத்தொடரில் 2,650 மீட்டர் உயரத்தில் திறக்கப்பட்டுள்ளது. இது ஆசியாவின் மிகப் பெரிய பனிக்குடில் உணவகம்.


❇️ பிப்ரவரி6: இமாச்சலப் பிரதேச அமைச்சரவையின் மொத்த செயல்பாட்டையும் காகிதமற்ற பணியாக அந்த மாநில அரசு மாற்றியது. இதன்மூலம் நாட்டின் முதல் மின் அமைச்சரவை என்கிற பெருமையை இமாச்சலப் பிரதேச அமைச்சரவை பெற்றது.


❇️ பிப்ரவரி7: உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் உள்ள அலக்நந்தா ஆற்றில் பனிச்சரிவும் திடீர் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர்.


❇️ பிப்ரவரி8: தமிழகத்தில் மேக மலை, வில்லிப்புத்தூர் ஆகிய காட்டுப்பகுதி சரணாலயங்களுக்குப் புலிகள் காப்பக அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியது. இது தமிழகத்தின் 5-வது, நாட்டின் 51-வது புலிகள் காப்பகம்.


❇️ பிப்ரவரி9: வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் குறித்து பொய்யான தகவல்களை பரப்பியதாக 1,178 ட்விட்டர் கணக்குகளை நீக்க ட்விட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.


❇️ பிப்ரவரி 1: மதுரை கீழவெளி பகுதியில் பழமை யான கட்டட சுவர் இடிந்து மூவர் பலி.


❇️ பிப்ரவரி 4: ராஜிவ் கொலை வழக்கில் ஏழு பேரை விடுதலை செய்ய ஜனாதிபதிக்கே அதி காரம் என தமிழக கவர்னர் உச்சநீதிமன்றத்தில் மனு.


❇️ பிப்ரவரி 5: கூட்டுறவு வங்கிகள் வழங்கிய ரூ. 12,110 கோடி விவசாய பயிர்க்கடன் தள்ளு படி.


❇️ பிப்ரவரி 6: ஸ்ரீவில்லிபுத்துார்- மேகமலையை இணைத்து புலிகள் சரணாலயமாக்கி மத்திய அரசு அறிவிப்பு.


❇️ பிப்ரவரி 8: திருப்பூர், கரூரில் 175 கோடி மதிப்பு கோயில் நிலம் மீட்பு.


❇️ பிப்ரவரி 9: கிருபானந்த வாரியார் பிறந்த தினம் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவிப்பு


❇️ பிப்ரவரி 12: சாத்துார் பட்டாசு ஆலை விபத்தில் 19 பேர் பலி.


❇️ பிப்ரவரி 14: சென்னையில் மெட்ரோ ரயில் விரிவாக்கம் உட்பட ரூ. 8 ஆயிரம் கோடி மதிப்பு திட்டங்களை பிரதமர் மோடி துவக்கினார்.


❇️ பிப்ரவரி 17: பிரதமர் மோடி காணொலி மூலம் ராமநாதபுரம் - துாத்துக்குடி எரிவாயு குழாய் திட்டத்தை துவக்கினார்.


❇️ பிப்ரவரி 17: தனது தந்தை ராஜிவை கொன்றவர்களை மன்னித்து விட்டதாக காங்., எம்.பி., ராகுல் கூறினார்.


❇️ பிப்ரவரி 20: ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் ரத்து.


❇️ பிப்ரவரி 20: சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு.


❇️ பிப்ரவரி 21: காவிரி - தெற்கு வெள்ளாறு - வைகை - குண்டாறு நதிகள் இணைக்கும் திட்டத்துக்கு அடிக்கல்.


❇️ பிப்ரவரி 22: புதுச்சேரியில் காங்., அரசு கவிழ்ந்தது.


❇️ பிப்ரவரி 23: இடைக்கால பட் ஜெட் தாக்கல். அரசின் கடன் ரூ.4.85 லட்சம் கோடியாக உயர்வு. 2020 பட்ஜெட்டில் 4.56 லட்சம் கோடியாக இருந்தது.


❇️ பிப்ரவரி 24: புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சி.


❇️ பிப்ரவரி 25: அரசு ஊழியர் ஓய்வு வயது இனி 60.


❇️ பிப்ரவரி 25: 9, 10, பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள் 'ஆல் பாஸ்' என அறிவிப்பு.


❇️ பிப்ரவரி 25: கோவையில் ரூ. 12 ஆயிரம் கோடி மதிப்பு திட்டங்களை பிரதமர் மோடி துவக்கினார்.


❇️ பிப்ரவரி 25: சிவகாசி காளையார் குறிச்சி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 5 பேர் பலி.


❇️ பிப்ரவரி 26: வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதா சட்டசபையில் நிறைவேற்றம்.


❇️ பிப்ரவரி 1: பெரியாறு அணைக்கு 20 ஆண்டுக்குப்பின் கேரள அரசு மின் இணைப்பு வழங்கியது.


❇️ பிப்ரவரி 3: பெங்களூருவில் 13வது சர்வதேச விமான கண்காட்சி துவக்கம்.


❇️ பிப்ரவரி 5: காஷ்மீரில் 18 மாதத்துக்கு பின் 4ஜி இணைய சேவை துவக்கம்.


❇️ பிப்ரவரி 6: சி.ஆர்.பி.எப்., நக்சலைட் ஒழிப்பு படையில் முதல்முறையாக 34 பெண் கமாண்டோ சேர்ப்பு.


❇️ பிப்ரவரி 7: உத்தரகாண்ட்டின் சமோலி மாவட்டத்தில் பனிப்பாறை உருகி தவிலிகங்கை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் 16 பேர் பலி.


❇️ பிப்ரவரி 10: சென்னை, துாத்துக் குடி உட்பட 12 துறைமுகத்திற்கு தன்னாட்சி வழங்கும் மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றம்.


❇️ பிப்ரவரி 13: திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னை தி.நகரில் பத்மாவதி தாயார் கோயில் பூமி பூஜையை காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் துவக்கினார்.


❇️ பிப்ரவரி 13: விரும்பிய இடத்தில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை என டில்லி 'ஷாகின்பாக்' வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு.


❇️ பிப்ரவரி 14: ஆந்திராவின் சித்துாரில் வேன்- - லாரி மோதி 14 பேர் பலி.


❇️ பிப்ரவரி 15: மேற்கு வங்கத்தில் ரூ.5க்கு மதிய உணவு திட்டம் துவக்கம்.


❇️ பிப்ரவரி 16: ம.பி.,யில் பஸ் கால்வாயில் கவிழ்ந்ததில் 37 பேர் பலி.


❇️ பிப்ரவரி 17: காஷ்மீரின் ஸ்ரீநகரில் 30 ஆண்டுக்குப்பின் ஷீத்தல்நாத் கோயில் திறப்பு.


❇️ பிப்ரவரி 18: கிரண்பேடி நீக்கப்பட, கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி கவர்னராக தமிழிசை (தெலுங்கானா கவர்னர்) பதவி ஏற்பு.


❇️ பிப்ரவரி 18: இந்தியாவின் நீளமான பாலத்தை(19 கி.மீ.,) அசாமின் துப்ரி- -மேகாலயாவின் புல்பரி இடையே பிரம்மபுத்திரா நதியில் கட்ட பிரதமர் மோடி அடிக்கல்.


❇️ பிப்ரவரி 23: பயணிகளுக்கு பிடித்த விமான நிலைய பட்டியலில் மதுரைக்கு இரண்டாவது இடம். உதய்பூருக்கு (ராஜஸ் தான்) முதலிடம்.


❇️ பிப்ரவரி 25: வங்கி கடன் மோசடி வழக்கில் நிரவ் மோடியை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப லண்டன் நீதிமன்றம் உத்தரவு.


❇️ பிப்ரவரி1: மியான்மர் நிர்வாகத்தை ராணுவம் கைப்பற்றியது.


❇️ பிப்ரவரி 2: அமெரிக்க விண்வெளி ஆய்வு மைய (நாசா) செயல் தலைவராக இந்திய வம்சாவளி பெண் பவ்யா லால் நியமனம்.


❇️ பிப்ரவரி 3: பண மோசடி வழக்கில் ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நாவல்னிக்கு இரண்டரை ஆண்டு சிறை.


❇️ பிப்ரவரி 4: உலகின் 145 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை வினியோகிக்க இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் ஐ.நா., ஒப்பந்தம்.


❇️ பிப்ரவரி 5: இந்தியாவிடம் கடனாக பெற்ற ரூ. 3000 கோடியை இலங்கை திரும்ப கொடுத்தது.


❇️ பிப்ரவரி10: சீன உயிரியல் ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவவில்லை என உலக சுகாதார அமைப்பு (WHO) தகவல்.


❇️ பிப்ரவரி 13: இத்தாலி பிரதமராக மரியோ டிராகி பொறுப்பேற்பு.


❇️ பிப்ரவரி 16: மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடினால் 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.


❇️ பிப்ரவரி 19: லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்துடன் நடந்த மோதலில் தங்கள் நாட்டு வீரர்கள் நான்கு பேர் பலியானதாக சீனா ஒப்புதல்.


❇️ பிப்ரவரி 19: பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா இணைந்தது.


❇️ பிப்ரவரி 25: அமெரிக்க குடியுரிமைக்கான 'கிரீன் கார்டு' கட்டுப்பாடுகளை அதிபர் ஜோ பைடன் நீக்கினார்.


❇️ பிப்ரவரி 15: சுங்கச் சாவடியில் 'பாஸ்டேக்' முறை அமல்.


❇️ பிப்ரவரி 17: முதல் முறையாக ராஜஸ்தானில் பெட்ரோல் விலை ரூ.100 ஐ தாண்டியது.


❇️ பிப்ரவரி 21: இந்தியாவின் முதல் 'டிஜிட்டல்' பல்கலை கேரளாவின் திருவனந்தபுரத்தில் துவக்கம்.


❇️ பிப்ரவரி 23: ராணுவத்தில் பெண்கள் சேர சவுதி அரசு அனுமதி.


No comments:

Popular Posts