Saturday, October 24, 2020

GS-9- ECONOMICS - தமிழ்நாட்டின் தொழில்மயமாதலின் முன்னேற்றம் பற்றிய வரலாறு | Historical Development of Industrialisation in Tamil Nadu

BHEL
  • தமிழ்நாட்டில் காலனித்துவ முன்காலத்தில் நெசவு, கப்பல் கட்டுமானம், இரும்பு மற்றும் எஃகு தயாரித்தல், மட்பாண்டங்கள் தயாரித்தல் போன்ற தொழில்துறை நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கான ஏராளமான சான்றுகள் உள்ளன. 
  • தமிழ்நாடு பரந்துவிரிந்த கடற்கரையைக் கொண்டுள்ளதால், பல நூற்றாண்டுகளாக தென் கிழக்கு மற்றும் மேற்கு ஆசியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டது. 
  • தொழிற்புரட்சிக்குப் பிறகு இங்கிலாந்தில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட இயந்திரங்களின் இறக்குமதியின் காரணமாகப் போட்டி நிலவி கைத்தறி நெசவுத்தொழில் வீழ்ச்சிக்கு காலனித்துவ கொள்கைகளும் பங்களித்தன. 
  • இருந்தபோதிலும் சில தொழில்கள் காலனித்துவக் காலத்தில் வளர்ந்தன. 
  • There is lot of evidence for presence of industrial activities such as textiles, ship-building, iron and steel making and pottery in precolonial Tamil Nadu. 
  • Given the vast coastline, the region has been involved in trade with both South-East and West Asia for several centuries. 
  • Colonial policies also contributed to the decline of the handloom weaving industry due to competition from machine-made imports from England. 
  • But some industries also developed during the colonial period.
காலனித்துவ காலத்தில் தொழில்மயமாதல் 
  • காலனித்துவ காலத்தில் தொழில்மயமாதலில் இரண்டு காரணிகள் பெரும்பங்கு வகித்தது. 
  • முதலாவதாக, மேற்கு மற்றும் தெற்கு தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பருத்தி சாகுபடி அதிகளவு நெசவுத்தொழில் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தது. 
  • இரண்டாவதாக, இந்த காலகட்டத்தில் வாணிபத்தின் வளர்ச்சியானது சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுக வட்டாரங்களின் அருகாமையில் தொழிற்சாலைகள் உருவாக காரணமாகவும் இருந்தது. 
  • மேலும், காலனித்துவ காலத்தில் சிவகாசியில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு பின்னர் பட்டாசு உற்பத்தி மற்றும் அச்சுத் தொழிலுக்கு முக்கிய மையமாக மாறியது. 
  • துறைமுகம் சார்ந்த தொழில்களும் இதே காலகட்டத்தில் இப்பகுதியின் வளர்ச்சிக்குக் காரணமாகவும் இருந்தது. 
  • தோல் உற்பத்தித் தொழிலானது திண்டுக்கல், வேலூர், ஆம்பூர் ஆகிய பகுதியில் நடைபெற்றது. 
  • தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியில் நெசவுத் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியானது, இயந்திரங்களின் தேவையையும் அதற்கான தொழிற்சாலைகளையும் நிறுவ காரணமாகவும் இருந்தது. 
  • இந்த நெசவு இயந்திரத் தொழிற்சாலைகளுக்கான இயந்திர உதிரிபாகங்கள், பழுது பார்த்தல் மற்றும் உற்பத்தி செய்வதற்கான சிறிய அளவிலான தொழிற்சாலைகள் அதிக அளவில் வளர்ச்சி அடைந்தன. 
  • 1930களில் தமிழகத்தின் மேற்குப் பகுதியில் நீர் மின் சக்தியில் இருந்து மின்சார உற்பத்தி மற்றொருமுக்கிய தொழில் வளர்ச்சி ஆகும். 
  • நிலத்தடிநீரை உறிஞ்சுவதற்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் இயந்திரங்களுக்கு அனுமதிக்கப்பட்ட மின்சாரம் கிடைத்தமையால், வேளாண்மைத் தொழில் விரிவடைந்ததுடன் எண்ணெய் இயந்திரங்களின் தேவையும் அதிகரித்தது. 
  • இதன் காரணமாக, இதனை சார்ந்த எண்ணெய் இயந்திர உதிரிபாகங்கள் பழுதுபார்க்கும் தொழிற்சாலைகள் அதிகளவில் உருவாயின. 
  • இதனால் உலோகத் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு வேளாண்மை சார்ந்த இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டன. 

Industrialisation in the Colonial Period

  • There are two sets of factors that have contributed to the process. 
  • The introduction of cotton cultivation in western and southern Tamil Nadu by the colonial government led to the emergence of a large-scale textile sector in these parts.
  • Second, increase in trade during this period led to industrial development around two of the most active ports in the region, Chennai and Tuticorin. 
  • Match factories too emerged during the colonial period in the Sivakasi region, which later on became a major centre for fireworks production and printing. 
  • Port-related activity too contributed to the growth of the region. 
  • Leather production was also taking place in Dindigul, Vellore and Ambur areas.
  • In Western Tamil Nadu, the emergence of textiles industries also led to demand and starting of textile machinery industry in the region. 
  • This textile machinery industry in turn led to the rise of a number of small workshops for repair and producers of machinery components. 
  • Another major development in the western region is the introduction of electricity from hydro-electric power in 1930s. 
  • Availability of electricity allowed for use of oil engines for drawing ground water. 
  • This led to both expansion of agriculture as well as increase in demand for oil engines. 
  • In turn, it led to emergence of workshops for servicing engines and also for addressing the demand for spare parts. 
  • Foundries began to be set up and agricultural machinery began to be produced.
 
சுதந்திரத்திற்குப் பின் 1990களின் முற்பகுதியில் தொழில்வளர்ச்சியானது 
  • சுதந்திரத்திற்குப் பிறகு நடுவண் மற்றும் மாநில அரசுகளால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பல பெரிய நிறுவனங்கள் நிறுவப்பட்டன. 
  • சென்னையில் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும் தொழிற்சாலையும் திருச்சிராப்பள்ளியில் கொதிகலன் மற்றும் விசையாழிகள்தயாரிப்பதற்காகபாரதகனரக மின்சாதன நிறுவனத்தை (Bharat Heavy Electricals Limited (BHEL) மத்திய அரசு நிறுவியது. 
  • BHEL நிறுவனம் அதனுடைய உள்ளீட்டுப் பொருள்கள், தேவைகள் தொடர்பாக பல சிறிய நிறுவனங்களின் தொழில் தொகுப்புகளின் தோற்றத்திற்கு வழிவகை செய்தது. 
  • சென்னை புறநகரில் உள்ள ஆவடியில் போர் தளவாடங்கள் தயாரிக்க கனரக வாகனத் தொழிற்சாலை அமைக்கப்பட்டது. 
  • ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் நிறுவனமும் சென்னையில் மகிழுந்துகளை உற்பத்திச் செய்யத் தொடங்கியது. 
  • அசோக் மோட்டார்ஸ் (பின்னர் அசோக் லேலண்ட்) ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ் இணைந்து சென்னை வட்டாரத்தில் வாகனத்தொழில்துறை தொகுப்புகள் வளர்ச்சிக்கு உதவியது. 
  • மேலும் இது வாகன உதிரி பாகங்களின் நகரமாக மாறியது. 
  • 1950களில் இப்பகுதியில் உள்ள பெரிய நிறுவனங்களுக்கு வாகன கூறுகளை வழங்குவதற்கு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கு உதவியாக ஆவடியில் தொழில் தோட்டங்கள் நிறுவப்பட்டது. 
  • மாநிலத்தில் அதிக நீர் மின்சக்தி திட்டங்கள் மூலம் மின்மயமாதலை பரவலாக அதிகரிக்க வலியுறுத்தப்பட்டது. இந்த அனைத்து நடவடிக்கைகளிலும் அரசு பெரும் பங்கு வகித்தது. 
  • 1973ஆம் ஆண்டில் எஃகு உற்பத்தி செய்வதற்காக சேலத்தில் இரும்பு எஃகு ஆலை அமைக்கப்பட்டது. 
  • 1970 மற்றும் 1980களில் கோயம்புத்தூர் பகுதியில் விசைத்தறி நெசவுத் தொழில் தொகுப்புகள் அதேபோல் திருப்பூரில் பின்னலாடைத் தொழில் தொகுப்புகள் விரிவாக்கம் மற்றும் கரூரில் வீட்டு அலங்காரப் பொருள்கள் தொழில் தொகுப்புகள் இக்காலகட்டத்தில் உருவாகியது. 
  • மாநில அரசின் மூலம் பல்வேறு பகுதிகளில் தொழில்துறை தோட்டங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஊக்கப்படுத்தப்பட்டது. 
  • மாநிலத்தில் பின்தங்கிய வட்டாரங்களில் தொழில்துறைகளை மேம்படுத்துவதற்கு இத்தகைய கொள்கை முயற்சிகளை பயன்படுத்தி வெற்றி பெறச் செய்வதற்கு ஒரு உதாரணமாக தமிழகத்தில் ஓசூரில் விரிவாக்கப்பட்ட தொழில் தோட்டங்களை சான்றாகக் கூறலாம். 
Post-Independence to early 1990s 
  • Soon after independence, several large enterprises were set up by both the central and state governments in different segments such as the Integral Coach Factory in Chennai to make railway coaches and the Bharat Heavy Electricals Limited (BHEL) in Tiruchirapalli manufacture to boilers and turbines. 
  • BHEL in turn led to the emergence of an industrial cluster of several small firms catering to its input requirements. 
  • Heavy Vehicles Factory was set up to manufacture tanks in Avadi on the outskirts of Chennai. 
  • Standard Motors too started manufacturing cars in Chennai. 
  • Ashok Motors (later Ashok Leyland) and Standard Motors together helped form an automobile cluster in the Chennai region. 
  • The Avadi industrial estate was established in the 1950s to support the small and medium companies supplying to the large firms in the region. 
  • More hydro-electric power projects in the state were also initiated to increase the spread of electrification. The government played a major role in all these processes. 
  • The Salem Steel Plant was set up in 1973 to produce stainless steel.
  • The 1970s and 1980s saw the setting up of emergence of powerloom weaving clusters in the Coimbatore region as well as expansion of cotton knitwear cluster in Tiruppur and home furnishings cluster in Karur. 
  • This period also saw more encouragement of the small and medium sector with setting up of industrial estates by the state government in different parts. 
  • The Hosur industrial cluster is a successful case of how such policy efforts to promote industrial estates helped to develop industries in a backward region.

தமிழ்நாட்டில் தொழில்மயமாதல் - தாராளமயமாதல் கட்டம் 
  • 1990களில் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு பிந்தைய காலகட்டம் தொழில்மயமாதலின் இறுதி கட்டம் ஆகும். 
  • இந்த சீர்திருத்தங்கள் மாநில அரசாங்கங்கள் வளங்களை திரட்டுவதற்கு பொறுப்பேற்கச் செய்தன. 
  • மேலும் அவை தொழில்மயமாதலுக்கு தனியார் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஒருவருக்கொருவர் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மலிவான நிலம், வரிச்சலுகைகள் மற்றும் மானியங்கள் போன்ற சலுகைகள், முதலீட்டாளர்களை கவர்ந்திழுத்தன. 
  • வர்த்தக தாராளமயமாக்கல் மற்றும் நாணய மதிப்பிறக்கம் ஆகியவை ஏற்றுமதி சந்தைகளைத் திறக்க உதவியன. 
  • இது இரண்டு பெரிய முன்னேற்றங்களுக்கு வழிவகுத்தது. தமிழகத்தில் மிக நீண்ட காலமாக இருந்த முக்கிய தொழில்கள் சர்க்கரை, உரங்கள், சிமெண்ட், விவசாயக் கருவிகள், இரும்பு மற்றும் எஃகு ரசாயனங்கள், மின்மாற்றிகள் மற்றும் காகிதங்கள் போன்றவைகளாகும். 
  • இந்தக் காரணிகளின் விளைவாக தற்போது இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும்விட தமிழ்நாடு அதிக தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. 
  • மேலும் உற்பத்தித் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களின் மிகப் பெரிய பங்கினையும் பெற்றுள்ளது. 
  • முக்கியமாக மகாராஷ்டிரா மற்றும் குஜராத் போன்ற முன்னேறிய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது இது அதிக உழைப்பு மிகுந்ததாகும். 
  • வாகன தொழில்கள், தானியங்கி கூறுகள், இலகுரக மற்றும் கனரக பொறியியல், இயந்திரங்கள், பருத்தி, ஜவுளி, ரப்பர், உணவுப் பொருள்கள், போக்குவரத்து உபகரணங்கள், இரசாயனங்கள் மற்றும் தோல் பொருள்கள் போன்றவைகள் முக்கியத் தொழில்களாகும். 
  • மற்ற மாநிலங்களைப் போல் அல்லாமல் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் (13 மாவட்டங்களில் 27 தொழில் தொகுப்புகள்) தொழில்துறைகள் பரவியிருக்கின்றன.
  •  மேலும் அவற்றுள் பல தொழில்கள் ஏற்றுமதி சார்ந்தவையாகும். 
  • மாநிலத்தின் சாலைகள், ரயில் போக்குவரத்து, வான்வழிப் போக்குவரத்து மற்றும் முக்கிய துறைமுகங்கள் அனைத்தும் போக்குவரத்து இணைப்பினால் நன்கு வளர்ச்சி அடைந்து காணப்படுகிறது.

Industrialisation in Tamil Nadu – Liberalization Phase

  • The final phase of industrialisation is the post-reforms period since the early 1990s. 
  • The reforms made the state governments more responsible for resource mobilisation and they were forced to compete with each other to attract private investments for industrialisation. 
  • Incentives such as cheap land, tax concessions and subsidised but quality power were all offered to woo investors. 
  • Trade liberalisation and currency devaluation also helped open up export markets. This led to two major developments. 
  • The important industries in the state that evolved over a much longer period include sugar, fertilizers, cement, agricultural implements, iron and steel, chemicals, transformers and paper. 
  • Because of all these factors, Tamil Nadu at present has the largest number of factories among all states in India and also has the largest share of workforce employed in manufacturing. 
  • Importantly, it is more labour intensive compared to other industrially advanced states like Maharashtra and Gujarat. 
  • The major industries are automobiles, auto-components, light and heavy engineering, machinery, cotton, textiles, rubber, food products, transport equipment, chemicals, and leather and leather goods. 
  • Unlike other states, the industries are spread across all regions of the state (there are 27 clusters in 13 districts) with many of them being export oriented as well. 
  • The state has a well-developed network of roads, rail, air and major ports.

No comments:

Popular Posts